நான் கடவுள் - ஒரு சிறு அனுபவம்

நான் கடவுள்

(இது திரை விமர்சனம் அல்ல... திரை பார்வையும் அல்ல... ஒரு சிறு அனுபவம்)

போன வியாழக்கிழமை மதிய நேரம், நான் கடவுள் - படம் பார்க்கிறதுக்கு நானும், அருண் அண்ணனும் (நம்ம சீனியர் தாங்க...) போனோம்... கவுன்டர் மூடி இருந்தது...
ஆரம்பமே இப்படியா-னு??? சொல்லிக்கிட்டோம்... இருந்தாலும் பார்க்க வந்து இருப்பது பாலா படம்..... இதுல சின்ன விஷயத்துக்கு எல்லாம் சென்டிமென்ட் பாக்க கூடாது-னு, ஒரு வழியா நைட் ஷோ-க்கு போய் விட்டோம்....(ஒரேடியா என்னோட சொந்த கதையை சொல்றேன் என்று கோவிச்சுக்காதீங்க....)

படத்தை எல்லாரும் பார்த்து இருப்பீங்க-னு நம்புறேன்.... எல்லாருடைய வாக்குப்படி, அடித்தட்டு மக்களின் நிலையை முதன் முறையாக தொட்டு இருக்கும் தமிழ் படம்....

காசி, ஆர்யா, அகோரி, சமஸ்க்கிருத உச்சாடனங்கள், பெற்ற தகப்பனின் அறியாமை, தங்கை, அம்மா-வின் பாசம், கோவில் வாசலில் பிச்சை எடுக்க பயிற்சி கொடுக்கப்பட்ட - ஒதுக்கப்பட்ட மனித குல நல்ல ஆத்மாக்கள், போலி சாமியார்கள், தாண்டவராயன், பூஜா - என காட்சிகள் மாறி மாறி அழுத்தமாக நகர்கிறது....

அடுத்தவர் நம்பிக்கைகளை காயப்படுத்தாமல், அதே சமயம் உண்மை நிலையை உரக்க சொல்லும் தகுதி ஒரு சிலருக்கே உண்டு... இதை ஏன் சொல்கிறேன் என்றால், நாத்திகம், ஆத்திகம் இரு வேறு பிரிவுகள் உண்டு என்பதை நாம் அறிவோம்.... இதில் சில ஆத்திகர்கள் நாத்திகர்களை எப்போதும் குறை கூறி கொண்டு இருப்பர்....சில நாத்திகர்கள் ஆத்திகர்களை எப்போதும் குறை கூறி கொண்டு இருப்பர்....
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், உதாரணத்துக்கு, அடுத்தவரின் மத நம்பிக்கையை குறை சொல்லி மட்டம் தட்டி, வெளியே பார்ப்பதற்கு அருமையான கலாச்சார படம் என்று சொல்லி படம் எடுக்கும் கேடு கெட்ட ஜென்மங்களும் (இந்த வார்த்தையை உபயோகிப்பது மிக நெருடலாக இருந்தாலும், இவர்களுக்கு இது சரியான பெயர் தான்) இங்கு உண்டு....

ஆத்திகமோ, நாத்திகமோ உன் வரையில் நீ சரியாக உறுதியாக இரு.... அடுத்தவர் நம்பிக்கையை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை....

இவ்வளவுக்கும் நடுவில், பாலா ஒரு தரமான படத்தை கொடுத்து இருக்கிறார்....(அடுத்தவர் நம்பிக்கையை சிதைக்காமல்)

பாலா என்று இல்லை... இந்த படத்தில் அனைவரும் அவர் அவருக்கு உரிய வேலையை மிக சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.... அது இசை ஆகட்டும், நடித்தவர்கள் ஆகட்டும், எடிட்டிங், கேமரா, பாடல்கள்... எல்லாமே...

அப்புறம்... பாலா என்ற இயக்குனரின் மூலம் நமக்கு கிடைத்த நல்ல நடிகர்கள் விக்ரம், சூர்யா, ஆர்யா என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது....மேற்கூறிய நடிகர்கள், யாரும் அவர்களது முந்தைய படங்களில் அழுத்தமான நடிப்பை கொடுத்தது இல்லை.... அவர்களுக்கும் நடிக்க தெரியும் என்று நாம் அவர்களை, பாலா படங்களில் பார்த்த பின்பு தான் தெரிய வந்தது....அப்படி தங்களுக்கு நல்ல நடிப்பை சொல்லி கொடுத்து வெளிப்படுத்த உதவிய, இயக்குனர்களுக்கு நடிகர்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்...
பாலா போன்ற இயக்குனர் கையில் ரித்தீஷ் போன்ற மாஸ் ஹீரோ (?????) கிடைச்சா கூட சூர்யா அளவுக்கு நல்ல நடிகர் ஆக்கி விடுவார்.... (ஹி... ஹி....)

இந்த படத்திற்கும் ஏகப்பட்ட எதிர் மறையான விமர்சனங்கள், கருத்துக்கள்.... தன்னை மற்றவற்றில் இருந்து வித்தியாசப்படுத்த எடுக்கும் பிரயத்தனங்கள் தான் அவை.... அதை நாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை....

மாஸ் ஹீரோ நடிச்சாலும் மேற்சொன்ன கூட்டம் குறை சொல்லும்...நல்ல படம் வந்தாலும் அது சொத்தை இது சொத்தை என சொல்லும் மேற்சொன்ன கூட்டம்....அப்போ எப்படி தான்டா எடுக்கணும்-னு நினைக்கிறீங்க-னு நாம் கேட்டால்...SMS-னு சொல்லி, புக் முழுவதும் அந்த பட விவரங்களை கொடுத்து, நம்மலை கொலையா கொன்னு எடுப்பாங்க...

ஒரு விமர்சனத்தை கூட தாங்கி கொள்ள முடிய வில்லையா???-னு எதிர் கேள்வி கேட்பதை விடுத்து...... ஆரோக்கியமான தமிழ் சினிமா வளர ஆதரவு கொடுங்கள்....பாராட்டி விழா நடத்தா விட்டாலும், வித்தியாசமான பார்வை என்ற வெற்று பேச்சுக்காக உங்களை நீங்களே மற்றவர்களிடம் இருந்து அந்நியப்படுத்தி கொள்ளாதீர்கள்...

மொத்தத்தில், நான் கடவுள் படம் எப்படி இருக்கு-னு உங்களுக்கே தெரியும்....நல்ல முயற்சி...

என் வரையில், சினிமா மனிதனுக்கு சிந்தித்து பார்த்து முடிவு எடுக்கும் அறிவை கொடுக்க போவது இல்லை... ஏனென்றால் "நாம் எல்லோரும் கடவுளே"...

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

அருண் அண்ணா எப்படி இருக்கிங்க. உங்கலுக்கு காலை வணக்கம். (நான் இதை படிக்கும்போது காலை 9 மணி) நானும் என்கணவரும் நலம். அதே போல் நீங்கலும் நலம் என நம்புகிரேன். டிபன் சாப்புடுடரிங்கலா. எங்க வீட்டுக்கு வாங்க.

"நான் கடவுள்" படம் பார்த்தேன் மிக அறுமை. நாங்கள் திரைஅரங்க சென்று பார்த்தேம் ( பாலா படம் என்பதால்). எங்கள் மனதை நெகிழ வைத்தது உடல் ஊனம் உற்றவர்கள். அவர்களை வில்லன் கொடுமை படுத்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது.
ஒவ்வரு நடிகரும் தனது தனித் திறமையை காட்டி விட்டனர்.

இயகுனர் பாலா வைரம் (நடிகர் நடிகர்களை) தீட்டுவதில் திறமை வாயிந்தவர். அதே போல் இப்படத்தில் செய்து உள்ளார்.

இந்த மாதிரி படம் எடுத்த "பாலாவுக்கு எங்கலுடைய பாராட்டுகள்"

இதற்கு மேல் எனக்கு வேலை இருப்பதால் நான் செல்கிரேன். பிறகு பார்ப்போம்

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் அருண் மா(பையனு தெரியும்) எப்படி இருக்கீங்க? உங்கள ஒரு நகைச்சுவையான நபர்னு தான் நினைச்சிருந்தேன்,உங்க பார்வைல நான் கடவுள் படத்த பத்தி படிச்சதும் ம்ம் ரசனையான ஆள்தான் நீங்கனு தோணுது..படம் நானும் பார்த்தேன்..நல்லா இருந்தது,பார்த்து முடிச்சதும் நிறைய வலிச்சது,பாலாவ நினைச்சு பெருமையா இருந்தது..இளையராஜா சார் சூப்பர்ர்!!!நீங்க சொன்ன மாதிரி எல்லா கலைஞர்களும் அவங்க அவங்க வேலையை அவங்க மிகையில்லாம பண்ணிருக்காங்கனு நினைச்சேன்,ஆனால் இன்னொருதரம் பார்க்கனும்னு தோணல..காரணம் அவ்ளோ வலிமையான மனசு எனக்கில்லையோ? இல்ல வேற காரணமானு தெரியல..

வாங்க சிங்கப்பூர் பிரபா, காலை சாப்பாடு என்ன???, நான் காலை சாப்பாடு என்ன... விருந்து சாப்பாடு சாப்பிடவே வர்றேன்... சரியா??? வீட்டுக்கு வர சொல்லி அழைச்சு இருக்கீங்க.... ரொம்ப சந்தோஷம் பிரபா....நான் கடவுள் பார்த்தாச்சு... ம்ம்ம்ம்.. சிங்கப்பூர் பிரபா வீட்டு வேலை பாக்குறதுல பம்பரமா சுத்துவாங்க-னு கேள்விப்பட்டேன்... உண்மையா????... சரி நீங்க மெதுவா வாங்க...

வணக்கம் தாமரை செல்வி.... கலக்கலா இருக்கு உங்க பேரு...அட நிஜமா நல்லா இருக்கு.... நான் நல்லா இருக்கேன்... நீங்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்....
அப்புறம் ரொம்ப ரசனையான ஆளு எல்லாம் இல்லை தாமரை செல்வி... நினைச்சதை எழுதினேன்... அவ்வளவு தான்... மத்த படி.... நமக்கு அடால்ப் ஹிட்லர், ஷேன் வார்னே, மார்டினா ஹிங்கிஸ், சிலம்பரசன், ரஜினி, சீவலப்பேரி பாண்டி, Papillon எழுதிய ஹென்ரி ஷாரியர் இப்படி சம்பந்தமே இல்லாமல் ஆளுங்களை பிடிக்கும்....(ஏன்டா, ரசனை இருக்கிற பார்ட்டி-னு சொன்னோம்-னு நினைக்கிறீங்களா??? ம்ம்ம்ம்) என்ன பண்ண... ஆனா அந்த லிஸ்ட் இன்னும் பெரியது... அதை எல்லாம் சொல்லணும்-னா தனியா பதிவு போடணும்....

சரி பாசமா "மா"-னு போட்டு கூப்பிட்டு இருக்கீங்க... ரொம்ப சந்தோஷம்.... உங்களை பத்தி சொல்லுங்க.... சரி.... நேரம் இருக்கும் போது பதில் மொழி போடுங்க... நல்லது.....

மீண்டும் சந்திக்கலாம்...

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

ஹாய் அருண் பிரசங்கி....,, எப்படி இருக்கீங்க?நான் நலம்.நானும் என் கணவரும் நான் கடவுள் படம் பார்த்தோம் வித்தியாசமான ஒரு அனுபவம். பெரும்பாலான படங்கள் மசாலா கலந்த திரை கதை தரும் நேரத்தில் முற்றில்லும் வேறு பட்ட கதை, நம்ம எல்லோருக்கும் படைத்திருக்கிறார் நமது இயக்குனர் பாலா. இது ஒரு நல்ல துவக்கம் இதை பார்த்த பிறகு மற்ற இயக்குனர்கள் இப்படியும் படம் எடுக்கலாம் என நினைபார்கள். ஆர்யா, பூஜா மற்றும் அனைவரின் நடிப்பும் மிகவும் பிரமாதம். ஊனுமுற்றோர் மற்றும் அனாதைகள் படும் கஷ்டம் நெஞ்சை பதய வைக்கிறது..ஒகே....பிறகு சந்திப்போம்...

Mb

வாங்க மைதிலி நமக்கு எல்லாம் நல்ல படியா போகுது... உங்களுக்கு அங்க எப்படி??? மசாலா படங்கள் அது ஒரு வகை... நல்ல முயற்சி இந்த படம்....சரி... அப்புறம் சந்திக்கலாம்-னு சொல்லி இருக்கீங்க... அதனால வேலையை முடிச்சுட்டு வாங்க... நல்லது....

எப்படி மா இருக்கீங்க? இப்படி மா என்று சொல்றதுல உங்களுக்கு நிஜமாவே ஒன்னும் வருத்தம் இல்லையே? கண்டிப்பா நல்ல ரசனையான ஆளுதான் நீங்க.இப்படி எல்லாத்தையும் ரசிக்க ஒரு தனி ரசனை வேணும்தான்..என் பெயர் தாமரைச்செல்வி தான், நீங்க மட்டும் தான் முழு பேர் சொல்லி கூப்பிடுறீங்க,எனக்கே என் பேர் வித்தியாசமா இருக்கு..எல்லோரும் தாமரை,தாமி,தாமு,செல்வி இப்படி விதவிதமா என்னெல்லாம் தோணுதோ அப்படி கூப்பிடுவாங்க..என்னபத்தி சொல்ல எதுமே இல்ல மா..நான் ஹவுஸ்வொய்ஃப்,எனக்கு ஒரு பையன் சந்தோஷ்குமார் 2 3/4 வயசு..இப்போ USAல இருக்கோம்,சொந்த ஊரு தேனி மாவட்டம்..

ஆமா உங்ககிட்ட பேசவரணும்னா எல்லாத்தையும் சொன்னால் தான் பேசுவருவீங்களோ? ம்ம் சரி சரி உங்கள பத்தி சொல்லுங்க..(இன்னொரு பிரசங்கம் கேட்க தயாராகிட்டேன்,ஆரஞ்சு ஜூஸோட..)

வாங்க தாமரைச்செல்வி, மா-னு சொன்னா வருத்தமா??? ம்ம்ம்ம்.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கு-னு (அட உங்க பையன் பேரு.... நல்லா இருக்கு)... சொல்லி விட்டேன்...மீண்டும் என்ன... வருத்தம் அப்படி இப்படி-னு...ம்ம்ம்ம்..தேனி-ல இருந்து அமெரிக்கா போய் கலக்குறீங்க... பெரிய ஆளுங்க... நல்லது....

எல்லாத்தையும் சொன்னால் தான் வருவேனா??? யாரு சொன்னது.... நல்லா கிளப்புறாங்கய்யா பீதியைய்யிய்ய்ய்.....
ம்ம்ம்ம் இன்னொரு பிரசங்கமா??? அம்மா மனைவி முக்கியம் பதிவுல இன்னைக்கு கொடுத்த பிரசங்கம் போதும்.... நாளைக்கு மீதத்தை வச்சுக்கலாம்.... ஒரேடியா மொக்கை போட்டா.. அப்புறம் தாமரைச்செல்வி நீங்க கூட பதில் மொழி போட மாட்டீங்க...சரி...நீங்க வேலையை எல்லாம் முடிச்சு விட்டு பதில் போடுங்க... நல்லது.... சந்தோஷ் என்ன ப்ரீ கேஜி படிக்கிறாங்களா??? ம்ம்ம்ம் அது சரி....பாக்கலாம்... மீண்டும்...

எப்படி இருக்கீங்க மா? அடடா உங்களுக்கு பதில் போடாமல் இருப்பேனா? என்ன இது எங்க குடும்பத்துல எல்லாரோட பேரும் உங்களுக்கு பிடிக்கும் போல இருக்கே? முதல்ல என் பேர் கலக்கலா இருந்தது,இப்போ என் செல்லம் பேரு நல்லா இருக்காமா? ஓ சரி என் ஹஸ் பேரு முத்து,இதுக்கு என்ன சொல்ல போறீங்க? சந்தோஷ் இன்னும் ப்ரீ கேஜி அனுப்பலமா..இங்க 3வய்சுக்கு மேல தான் ஸ்கூல் சேர்ப்பாங்க,,டே கேர்ல தான் விடனும்,வீட்டுல நம்ம வெட்டியாதானே இருக்கோம் எதுக்கு விடனும்னு இன்னும் அனுப்பல,,3வயசு முடிஞ்சதும் இந்தியா போய்டனும்,அங்க தான் ஸ்கூல் சேர்க்கனும்,எந்த நாட்டிலும் எனக்கு 1 வருசத்துக்கும் மேல இருக்க பிடிக்காது,இங்கதான் 1 1/4 வருஷம் ஆகிடுச்சு..எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் போய்டனும்..கலக்கிறேனா? அய்யோ கலங்கி போய் இருக்கேன்,,நடந்தேதான் இந்தியா போகமுடியும்னு சொன்னால் கூட பொடிநடையா போய் சேர்ந்திருவேன்..வெறுத்து போச்சு,,சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா? உங்க பிரசங்கம் படிச்சேன்,,கலக்குங்க..பகவத்கீதை பத்தியும் பேசுவீங்கலா? எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிறது நல்லதுதான்..

எஸ் வாங்க தாமரைச்செல்வி, உங்க பதில் மொழி பாத்தேன்... நல்லது... ம்ம்ம்ம்...ஆமாம்... சோ சந்தோஷை இந்தியாவில் தான் படிக்க வைக்குற திட்டம்... அது தான் சரியாய் இருக்கும்... நல்ல விஷயம் தான்... சரி முத்து... முத்து மட்டும் தான் பேரா??? அதனுடன் இணைந்த பெயர் எதுவும் உண்டா.???? நம்ம பசங்களில் முத்து-னு ரெண்டு பேரு இருந்தாங்க... ரெண்டு பெரும் நல்ல பெரிய ஆளுங்க... உங்களை மாதிரி... ம்ம்ம்ம்.. சரி.... முத்து நல்ல பெயர் தானே.... சரி... சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு மாதிரி வருமா-னு சொல்றது ஒரு வகை-ல சரி தான்... நீங்க சொன்ன மாதிரி அடிக்கடி நாடுகள் மாறினா ஒரு சலிப்பு வராது.... சரி... நீங்க மட்டும் தான் கலங்கி போயீ இருக்கீங்களா??? நானும் தான்.. எப்போ வேலை போகுமோ-னு ஒரு தவிப்பு.... இங்கே எல்லா கம்பெனிகளிலும் இதே நிலைமை தான்... இன்னைக்கு வேலை இருக்கு... நாளை கேள்விகுறி தான்... பாக்கலாம்.... எவ்வளவோ பார்த்துட்டோம்... இதை பாக்க மாட்டோமா-னு சொல்லிக்கிட்டு போக வேண்டியது தான்... சரி... நீங்க என்ன சாப்பாடு??? நமக்கு ஒண்ணும் கிடையாது.... ஆமாம்.... என்னோட இன்றைய gtalk quote இது தான்... "வாரத்தில் ஏதாவது ஒரு நாள் மட்டும் சாப்பிடாமல் இருந்து பாருங்கள் (பழங்கள், குடி நீர் சேர்த்துக்கலாம்)... உங்களுக்கே உங்களை பிடிக்கும்...கண்டிப்பாக..." நினைச்சா சாப்பிடாம இருக்கிறது.... சில நேரம் சாப்பிடுறது.... அப்படி அப்படி ஓடுது.... விரதம்-னு இல்லை.. டயட்-னு இல்லை... (நமக்கு டயட் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.. ஏன் என்றால் கராத்தே-ல பிளாக் பெல்ட்... பசங்க போடுற சாதாரண கருப்பு பெல்ட் இல்லை... நிஜ கருப்பு பட்டை....அப்பாடி ஒரு வழியா சுய தம்பட்டம் அடிக்காம எளிதா முடிச்சுகிட்டேன்.. ஹி ஹி...)... சரி நீங்க நல்ல சாப்பிடுங்க.... அப்புறம் பாக்கலாம் தாமரைச்செல்வி... நல்லது.... பகவத் கீதையை தெரிஞ்சு வச்சு என்ன பண்ண... நடைமுறை படுத்தனுமே... அதான் முக்கியம்... என்ன சொல்றீங்க...???

எப்படி இருக்கீங்க மா? சந்தோஷ் ஸ்கூல்ல சேர்க்கனும் இந்தியாவுலங்கிறது அவங்க அப்பாவோட விருப்பம்..அவரோட முழுப்பேரே முத்து மட்டும் தான்..அப்படியா உங்க ஃபிரண்ட்ஸ் முத்துனு இருக்காங்களா? என்ன மாதிரியே பெரியா ஆளுங்களா? அடடா உங்களுக்கு உதாரணம் சொல்ல வேற யாருமே இல்லையா? நான் தான் கிடைச்சேனா? சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமாங்கிறது எனக்கு மட்டும் தான்,உங்களுக்கெல்லாம் திரைகடல் ஓடியும் திரவியம் தேடுனு சொல்றது தான் சரி..அடிக்கடி நாடுகள் மாறினதுனால தான் சலிப்பே வருது, இந்த 8வருசத்துல இந்தியாவையும் சேர்த்து 4நாடு ஆச்சு..ஒரே நாடோடி வாழ்க்கையா இருக்கு,,ஒரு வருசம் சுவிட்சர்லாந்து, அப்புறம் இந்தியா, அப்புறம் யூகே,அப்புறம் திரும்ப இந்தியா இப்போ யூஎஸ்..திரும்ப இந்தியா தான் போகனும்.,,உலகத்துல இருக்குற பாதி பேரு இப்போ கலங்கிதான் போய்ருக்காங்க..எங்களுக்கும் அதே கலக்கம் தான்,,அதான் ஊருக்கு போகனும்ங்கிற ஆசை எல்லாம் கஷ்டபட்டு கிடப்புல போட்டுவிட்டு இங்கயே இருக்கோம்..சாப்பிடாமா இருக்கிறது எப்பவும் நல்லது இல்ல,பழம் மட்டும் சாப்பிட்டாலும் கூட,, கேட்க ஆளில்லாமல் தான் நீங்கல்லாம் இப்படி பண்றீங்க? நாங்க கண்டிப்பா நல்லா தான் சாப்பிடுவோம்,அப்புறம் சின்ன குழந்தையும்(சந்தோஷ்) பெரிய குழந்தையும்(என் ஹஸ்) எப்படி சமாளிக்கிறது?கராத்தே ல பிளாக்பெல்ட் வாங்கியாச்சா? உங்ககிட்ட இனி கொஞ்சம் தள்ளியே இருக்கனும்..இன்னும் என்ன திறமை மறைச்சு வச்சிருக்கீங்க? கீதை பத்தி தெரிஞ்சுக்கலாம்,உடனே நடைமுறை படுத்தனும்னு அவசியம் இல்ல..முதல்ல தெரிஞ்சு வச்சதுக்கே பாராட்டலாம்,ஏன்னா இப்போ எத்தன பேருக்கு தெரியும்? சரி மீதி நாளைக்கு பேசலாம் மா, சமைக்க போகனும்..கல்யாணம் ஆனதும் 2பேரும் சாப்பிட வாங்க,அதுவரை உங்களுக்கு அழைப்பு இல்ல(சீக்கிரம் பொண்ண பாக்க சொல்லுங்க)..அதுவரை நானும் கொஞ்சம் சமையல நல்லா கத்துக்கிறேன்..

மேலும் சில பதிவுகள்