புளிக்காய்ச்சல்

தேதி: January 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

புளி - 100 கிராம்
நல்லெண்ணெய் - 100 -150 மில்லி
மிளகாய் வற்றல் - 10
முழுமல்லி - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - பாக்களவு
உப்பு - தேவைக்கு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
வேர்க்கடலை - (விருப்பப்பட்டால்)
கறிவேப்பிலை - 4 இணுக்கு
உப்பு - தேவைக்கு


 

புளியை நன்கு ஊறவைத்து கெட்டியாக சாறு எடுத்துக்கொள்ளவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
மல்லி, வெந்தயம், பெருங்காயம் வறுத்து பொடி செய்யவும்.
புளிக்கரைசலில் வறுத்த பொடியை மிக்ஸ் செய்யவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல் கிள்ளி போட்டு, கறிவேப்பிலை வெடிக்க விட்டு வறுத்த பொடி மிக்ஸ் செய்த புளிக்கரைசல் விடவும்.
நன்றாக வற்றி எண்ணெய் தெளியும். இதனை ஆறவைத்து ஒரு பாட்டிலில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும் போது எடுத்து சுடு சாதத்தில் மிக்ஸ் செய்தும் சாப்பிடலாம், கட்டுசாதம் கட்டி செல்லவும் இதனை பயன்படுத்தலாம்.
சுவையான புளிக்காய்ச்சல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஆஸியா அக்கா,
குறிப்புக்கு மிகவும் நன்றி. மிகவும் சுவையாக இருந்த்து. புளி காய்ச்சல் நிறைய செய்து வைத்துள்ளேன்(குறைந்த்து 2 – 3 நாட்கள் சாப்பிடலாம்..) அப்படியே அம்மா செய்வது போல சுவையாக இருந்த்து..(எங்கள் வீட்டில் அம்மா கடைசியில் தான் பொடி சேர்ப்பாங்க..ஆனாலும் சுவை அப்படியே தான் இருக்கும்)
அன்புடன்,
கீதா ஆச்சல்

மிக்க நன்றி பா,ஹஜ் செய்யப்போகும் போது என் மாமாவிற்கு செய்து அனுப்பினேன்,அதன் நினைவாகத்தான் இந்த ரெசிப்பி கொடுத்தேன்,எனக்கு சரோஜான்னு என் கணவருடன் தூத்துக்குடியில் வேலை பார்த்தவங்க சொல்லி கொடுத்தாங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா
புளி காய்ச்சல் செய்தாச்சு
இன்று உம்ரா செல்பவர்களுக்கு இரவு கட்டி கொடுக்க தான் போய் தான் சாப்பாடு கிளறனும்.

ஜலீலா

Jaleelakamal

செய்து பார்த்தமைக்கு மிக்க நன்றி.மைல்டாக இருக்கும்.டேஸ்ட் செய்தீங்களா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா டேஸ்ட் பார்த்தேன் நேற்று இரவு அவர்களுக்கு கட்டி கொடுத்தேன், நல்ல இருந்தது எட்டு பேர் சாப்பிடும் அளவிற்கு செய்தேன் ஒன்றும் மிஞ்சல எனக்கு டேஸ்ட் பார்க்க மட்டும் கிடைத்தது.

கூட என் பாம்பே டோஸ்டும்,(குழந்தைகளுக்கு) வருத்த கறியும் செய்து கொடுத்தேன்.
ஜலீலா

Jaleelakamal

மிகுந்த சுவையாக இருந்தது ஆசியா. என்னவருக்கு சற்று காரம் குறைவா இருந்தா பிடிக்கும். இது அவருக்கு பிடித்தது. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா,
நேற்று இந்த புளிக்காய்ச்சல் செய்தேன். சூப்பரா இருந்தது. எங்கம்மாகூட எதோ பொடித்து கடைசியில் போட்டு செய்வார்கள். ரொம்ப நன்றாக இருக்கும். நானும் அப்பப்ப, அடுத்தமுறை அம்மாவிடம் பேசும்போது கேட்டுக்கனும்னு நினைப்பேன். அப்புறம் மறந்திடுவேன். இன்று உங்க ரெஸிப்பிபடி செய்தது அதே டேஸ்ட்டில் ரொம்ப அருமையாக இருந்தது. குறிப்புக்கு நன்றி!
p.s.கொஞ்சம் தாமதமான பின்னூட்டம்தான், தவறா நினைக்கவேண்டாம்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

பின்னூட்டம் பார்த்து மகிழ்ச்சி.பரவாயில்லைபா.எப்ப கொடுத்தாலும் பார்க்கலாம் தானே.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

புளிக்காய்ச்சல் அருமை! ஜுரம் வந்து நாக்கில் எந்த சுவையும் தெரியவில்லை. உங்களின் புளிக்காய்ச்சல் சுள்ளென்று நல்ல வாசனையோடு இருந்ததில், அன்றைக்கு கொஞ்சம் ஒழுங்கா சாப்பிட வந்துச்சு :) நன்றி ஆசியாக்கா!

நல்ல இருந்ததா?மிக்க மகிழ்ச்சி.என் சமையலில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த புளிக்காய்ச்சலின் படம்

<img src="files/pictures/aa152.jpg" alt="picture" />

படம் எடுத்து அனுப்பி அசத்தீட்டீங்க.மிக்க மகிழ்ச்சி,நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.