சும்மா ஜாலிக்குதாம்ப்பா! ( யார் மனசையும் நோகடிக்கும் நோக்கம் இல்லை)- 1

ஜாலியா அரட்டை அடிக்க வாங்க - 150
"இப்படிக்கு அரட்டை ஓப்பனர்- உங்கள் தனிஷா"
கீதா: ஹாய் தனிஷா வழக்கம்போல் நீங்களே இந்த த்ரெட்டையும் ஓப்பன்
பண்ணிட்டீங்களா?
தனிஷா: ஆமா கீதா என்ன பண்றது, இப்ப கொஞ்ச நாளா ஜெயா, ஹரியை ஸ்கூலுக்கு அனுப்பற பிஸியில் இருக்காங்க, அதான் நான் வந்திட்டேன். அதுவுமில்லாமல் அரட்டை த்ரெட் ஓப்பனர்னு பட்டம் வேற கொடுத்திட்டாங்க. அதை வேற காப்பாத்திக்க வேண்டியதா இருக்கு!
கீதா: சரி தனிஷா, அஃப்ராக்குட்டி நல்லா இருக்காங்களா?
தனிஷா: இங்க பாருங்க, அரட்டை த்ரெட் ஓப்பன் பண்றது மட்டும் தான் என் வேலை. அதுக்குமேல உங்ககூட அர்த்தராத்திரியில் அரட்டை அடிக்க தாமரையும்,சுகன்யாவும் வருவாங்க,அவங்ககிட்டே உங்க கச்சேரிய வெச்சுகுங்க வேணா ஒண்ணு பண்ணுங்க 100 பதிவுகளுக்கு மேல போனதும் சொல்லி அனுப்புங்க, "வாங்கப்பா ஜாலியா அரட்டை அடிக்கலாம்- 151 ஓப்பன் பண்ணிட்டு போய்ட்றேன்

கீதா: ஹாய், ஜெயா,சுகன்யா,தாமரை,வனிதா,மேனகா,ப்ரபாதாமு,உத்தமி,மஹா, கவிஎஸ்,உத்ரா, வினு,செல்விக்கா,செல்வி(சவூதி), இன்னும் பெயர் விபட்ட தோழிகள் யாராவது வாங்கப்பா, தனியா நின்னு பேச பயமா இருக்கு!
பயமா இருக்கு!!!!!!
பயமா இருக்கு!!!!!!!!!
அடக்கொடுமையே யாருமே இல்ல போல தெரியுது. நான் பேசினது எனக்கே எக்கோ ஆகுதே!!!
யாராச்சும் வந்தா எனக்காக பதிவு போட்டு வைங்க நான் அதுக்குள் அறுசுவையை ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வர்றேன்!

காட்சி - 1
அவசர விளக்கம் - ஜெயந்தி மாமி!
என்ற போர்டு தொங்கிக்கொண்டிருக்க, யாரோ ஒருவர் அதன்கீழ் அமர்ந்து அவசர,அவசரமாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
கீதா: ஹாய்! நீங்க அறுசுவைக்கு புதுசா? எங்க என்ன பண்றீங்க?
புதியவர்: ஆமாங்க, இப்பதான் உள்ளே நுழைஞ்சேன். ஒவ்வொரு பக்கமா போய் பதிவு போட்டுட்டு இருக்கேன். அவசர விளக்கம்னு கேட்டிருந்தாங்க, அதான் அவசரமா பதிவு போட்டுட்டு இருக்கேன்!
கீதா: அய்யோ பாவம், ஜெயந்தி மாமி அவசர விளக்கம் கேட்டு ஆறு மாசம் ஆச்சு, அவங்க பையன் ஆய்வை முடிச்சு பட்டம் கூட வாங்கியாச்சு.
புதியவர் காதிலேயே வாங்காமல் அவசரமாக எழுதிக்கொண்டு இருக்க,
ஹூம், ஏற்கெனவே பதிவு போட்டவங்களோட கருத்துக்கள் அவங்க மகனுக்கு உபயோகமா இருந்திச்சா,இல்லியான்னு ஜெயந்திமாமி இன்னும் சொல்லி முடிக்கல, இதுல நீங்களும்மா? நடத்துங்க, நடத்துங்க,
அச்சச்சோ, இதுக்கு மேல இங்க நின்னா, ஜெயந்தி மாமி வந்து என் சமையலை செய்து மூக்கு பிடிக்க தின்னுட்டு பின்னூட்டமே கொடுக்காம திரியறேன்னு கழுத்தை பிடிச்சிட போறாங்க, நான் ஓடிட்றேன்ப்பா!

காட்சி - 2
யு.எஸ்ஸில் வாழும் தோழிகளே அரட்டை அடிக்க இங்கே வாருங்கள்!
பஹ்ரைன் தோழிகளே இங்கே ஓடி வாங்கோ.....,
சவூதி தோழிகளே இங்கே வாங்க அரட்டை அடிக்க........,...,
யு.கே தோழிகளே...................,
துபை,அபுதாபி,ஷார்ஜா தோழிகளே..............,
நாகர்கோவில் தோழிகளே.......,
திருச்சி வாழ் சகோதரிகளே...................,,
என்று கூவி கூவி, ஆளாளுக்கு அழைத்துக்கொண்டிருக்க,
கீதா: என்ன கொடுமை சரவணன் சார் இது,
அறுசுவைக்குள் நுழையறப்ப, யாதும் ஊரே, யாவரும் கேளிர் நு டயலாக்கெல்லாம் விட்டுட்டு, இப்ப பாருங்க, தனித்தனியா சங்கம் வெச்சு, செட்டில் ஆகறாங்க
நாடு நாடா பிரிஞ்சாங்க, அப்பறம் இப்ப ஊர்,ஊரா பிரிஞ்சு கிடக்காங்க, அடுத்து தெருத்தெருவா பிரிஞ்சு நின்னு கும்மி அடிப்பாங்களோ?????
'பேசாம நாமும் " குவைத வாழ் தோழிகளே கூடி நின்னு கும்மி அடிக்க இங்கே ஓடிவங்கன்னு தனியா ஒரு த்ரெட்டை போட்டு, சிம்பிளா ஒரு கெட்-டு-கெதரும் நடத்தி, அதை அறுசுவையில் போட்டு நாலு பேர்கிட்ட சண்டை போட்டுடவேண்டியதுதான்.
அச்சச்சோ, இப்பவ்வே என்கிட்டே சண்டை போட யாரோ வர்றாமாதிரி இருக்கே, எஸ்கேஏஏஏப்!

காட்சி - 3
கர்ப்பிணிப்பெண்கள், உடற்பயிற்சி, குழந்தைகள் ஆரோக்கியம் என்ற தலைப்புகளின் கீழ் 3 பெண்கள் கையில் கேள்வி எழுதிய போர்டுடன் நின்று கொண்டிருக்க,
தளிகா மூன்று பேரிடமும் மாறி மாறி ஓடி ஓடி ஆலோசனைகள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்!
பெண் 1: எனக்கு 2 குழந்தையுமே சிசேரியன், உடம்பை விட தொப்பை பெரிசா தெரியுது அதை எப்பிடி குறைக்கறதுன்னு தோழிகள் யாராவது சொன்ன எனக்கு உபயோகமா இருக்கும்!
தளிகா: இங்க பாருங்க, இது உங்களுக்கு மட்டும் வர்ற பிரச்னை இல்லை, உலகத்தில் நிறைய பேர் இப்பிடித்தான் இருக்காங்க, இதையெல்லாம் நினைச்சு கவலைப்பட்டா தொப்பை இன்னும் பெரிசாத்தான் போகும், எனக்கு இந்த உடற்பயிற்சி, யோகா இதலயெல்லாம் நம்பிக்கையே இல்ல, அடுத்தவங்க சொல்றத காதிலேயே போட்டுக்காதீங்க,
அந்த காலத்துல நம்ம பாட்டி,தாத்தா காலத்துல அம்மிக்கல், ஆட்டுக்கல்தான் யூஸ் பண்ணீனாங்க, அதனாலதான் அவங்க ரொம்ப ஆரோக்கியமா இருந்தாங்க,
இப்ப நாமதான் கொழுப்பெடுத்து போய் மிக்ஸி, கிரைண்டர், வாசிங்மெசின் வாங்கி வெச்சிட்டு உடம்பையும் வீணாக்கிகிறோம்,பேசாம அதையெல்லாம் தூக்கி போட்டுடுங்க அப்பறம் பாருங்க சிம்ரனையும், ஸ்ரேயாவையும் பிசைஞ்சு செஞ்ச பொம்மைன்னு உங்களையும் எல்லாரும் புகழ்ந்து தள்ளுவாங்க!
கேள்வி கேட்ட பெண்ணோ ஒருபக்கம், மிக்சி, கிரைண்டரையும், இன்னொரு பக்கம் சிம்ரன், ஸ்ரேயாவையும் யோசிச்சு முடிவெடுக்க முடியாமல் பேந்த பேந்த விழிக்கிறார்!
பெண் 2 : எனக்கு கல்யாணம் ஆகி 10 நாட்கள் ஆகுது, இன்னும் நான் கர்ப்பம் ஆகல எனக்கு ஒரே கவலையா இருக்கு!
தளிகா: அடப்பாவி கல்யாணம் ஆகி 10 நாட்கள் தான் ஆகுதா? மனச நல்லா திடப்படுத்திக்குங்க, ஏன்ன இப்ப நான் உங்கள கன்னாபின்னான்னு திட்டி, அறுசுவையை விட்டே வெளீயில் தள்ளப்போறேன்.
அவனவன் கல்யாணம் ஆகி 10 வருஷமா, இருவது வருஷமா குழந்தைக்காக ஏங்கிட்டு இருக்காங்க,
போனாப்போகுது, சகோதரின்னு வேற சொல்லிட்டீங்க, இங்க பாருங்க இந்த 12வது நாள், 15 வது நாள் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்ல, இதுக்கெல்லாம் நேரம்,காலம், ஜாதகம், ஜோஸ்யம் எல்லாம் பாத்திட்டு இருக்க கூடாது, உண்மயச்சொல்லனும்னா எனக்கு கணவன் மனைவி சந்தோஷம் இருந்தாதான் குழந்தை உண்டாகுன்ற விஷயத்திலேயே நம்பிக்கை இல்ல, உண்மையான அன்பிருந்தா போதும்.................,,,,,,, என்று பேசிக்கொண்டே போக கேள்வி கேட்ட பெண் பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஓடிப்போகிறார்!
பெண் 3: என் குழந்தைக்கு 5 மாசம் ஆகுது எதை சாப்பிட்டாலும் உடனே என் மேலேயே வாமிட் பண்ணிட்றான். எனக்கு என்ன பண்றதுன்னெ தெரியல. யாராவது யோசனை சொன்ன நல்லாயிருக்கும்.
தளீகா: இங்க பாருங்க, 5 மாசக்குழந்தைக்கு வயிறு ரொம்ப சின்னது, சாஃப்ட்டா இரூக்கும். அதனால இஷடத்திற்கு போட்டு திணிக்காம, கொஞ்சம் கொஞ்சமா கொடுக்க பாருங்க, சாப்பிட வெச்சதும், கொஞ்ச நேரம் நடக்க விடுங்க,
பெண் 3 : என்னது நடக்க விட்றதா?????????
தளீகா: சாரி, நீங்க 5 மாசக்குழந்தைன்னு சொன்னத நா சரியா கவனிக்கல, தூக்கிட்டு நீங்க நடந்து கொடுங்க, வயிறை அமுக்கறமாதிரி ட்ரெஸ் போட்டு விடாதீங்க,
இதெல்லாம் பண்ணியும் குழந்தை உங்கமேலேயே வாமிட் பண்ணினா, ஒண்ணு பண்ணுங்க,
சாப்பாடு கொடுத்து முடிச்சதும், குழந்தையை நைசா உங்க மாமியார்கிட்டெ கொடுத்திடுங்க, அவங்கதான சீக்கிரமா ஒரு பேரக்குழ்ந்தையை பெத்துக்கொடுன்னு கேட்டூட்டே இருந்தாங்க.!
பெண் 3 : ரொம்ப நன்றி தளீகா அக்கா, நீங்க சொன்ன மாதிரியே செய்யறேன்!

காட்சி 4
அறுசுவையின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து மேனகா, கையில் பேப்பரும், பேனாவுமாக மேலே வானத்தை பாத்து யோசிப்பதும், பிறகு ஏதோ அவசரமா எழுதுமாக இருக்க,
கீதா: என்ன மேனு, இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? உங்களை அரட்டைப்பக்கத்தில் தேடிட்டு வர்ரேன்.
மேனகா: வாங்க கீதா உங்களத்தான் தேடிட்டு இருந்தேன். எல்லாம் உங்களால வந்த வினைதான்,
கீதா: என்னது என்னால வந்த வினையா?????
மேனகா: பின்ன, நீங்க பாட்டுக்கு அரட்டைப்பக்கத்தில், என்கிட்டே,"எனக்கு கல்யாணம் ஆகறப்ப இத்தினி வயசு, இப்ப கல்யாணம் ஆகி இத்தினி வருஷம் ஆச்சு, என் வயசு என்ன? என் மகன் வயசு என்ன? என் மகள் வயசு என்னனு கேட்டு நானும் சரியா பதில் சொல்லி தொலைச்சிட்டனா,]
இப்ப பாருங்க ஆளாளுக்கு அவங்கவங்க கல்யாணத்தப்ப இருந்த வயசச்சொல்லி, என் வயசென்ன, என் மகன் வயசென்னனு கண்டுபிடிங்கன்னு பெரிய லிஸ்ட்டே கொடுத்திட்டாங்க,
அதுகூட பரவாயில்லை கீதா, ஒருசிலர் என் மாமியார்,நாத்தனார் வயசெல்லாம் என்னனு கேட்டு ஒரே டார்ச்சரா இருக்குப்பா!
பதில் சொல்லாம விட்டா,நீங்க கொடுத்த கணிதமேதை ராமானுஜி பட்டத்தை பிடிங்கிடுவாங்களோன்னு பயமா இருக்குப்பா!
கீதா: அச்சச்சோ மேனு அழாதிங்க, இங்க பாருங்க கண்ணைத்தொடச்சுக்குங்க, நான் கொடுத்த பட்டத்தை திரும்ப பிடுங்கற ரைட்ஸ் எனக்கு மட்டும்தான் இருக்கு.
வேணா, ஒரு ஐடியா தர்றேன், பேசாம எல்லார் உண்மையான வயசுடன் ஒரு 20, 30 வயசு சேர்த்து போட்டு அரட்டையில் சொல்லிடுங்க, அப்பறம் பாருங்க யாரும் உங்ககிட்டே வயசு கணக்கு கேட்டு மட்டுமல்ல வேற எந்த கணக்கு கேட்டும் வரமாட்டாங்க!
மேனகா: அட , இதுகூட நல்ல ஐடியாவா இருக்கே, ரொம்ப தேங்க்ஸ் கீதா,
வனிதாவிற்கு 80 வயசு,
ஜெயாவிற்கு 90 வயசு,
சுகன்யாவிற்கு 60 வயசு
என்று மேனகா எழுதிக்கொண்டே போக அந்த வழியாக வந்த தாமரை இதுபற்றி எல்லாரிடமும் சொல்லி, கையில் குச்சியுடன் மேனுவை தேடி வர, கீதாவும், மேனுவும் க்ரேட் எஸ்கேஏஏஏஏஏஏப்!

காட்சி 6
தூரத்தில் இலா தோளீல் ஹாண்ட்பாகும், இரண்டு கையில் இரண்டு ஜோடி செருப்புகளுடனும் தலைதெறிக்க ஓடிவந்துகொண்டு இருக்கிறார்!
கீதா: அட, நம்ம இலா மாதிரி தெரியுதே, அச்சச்சோ கையில் செருப்பு வேற இருக்கு, ஒருவேளை இவங்களும் மேனுகிட்ட அவங்க வயசுக்கணக்க கேட்டிருப்பாங்களோ,
இப்ப என்ன பண்றது? இந்தப்பக்கம் போனா ஜெயந்திமாமி பின்னூட்டம் கேட்பாங்க, அந்தப்பக்கம் போலான்னா தளிகா தடியோட நிக்கறாங்க , பேசாம இலா கிட்ட வந்ததும் ஸ்ட்ரெய்ட்டா காலில் விழுந்திட வேண்டியதுதான்.
இலா: அபிஅம்மா, அபிஅம்மா, உங்களப்பாக்கதான் அரட்டப்பக்கம் போனேன், நீங்க இங்க சுத்தறதா சொன்னாங்க,
கீதா: ஹி...ஹி அதுவந்து இலா, மேனுதான்...... வந்து.... வயசு..... கணக்கு..........,
இலா: என்ன உளர்றீங்க, நீங்கதானே ஹைஹீல்ஸ் போட்டுட்டு நடக்க டிப்ஸ் கேட்டீங்க, இங்க பாருங்க உங்களுக்காகவே யுஎஸ்ஸி; இருந்து ரெண்டு ஜோடி ஹைஹீல்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன்.
அதுமட்டுமல்ல, ஹாண்ட்பாக் நிறைய வாஸ்லினும், நெயில்பாலீசும் இருக்கு. சீக்கிரம் வாங்க, வாஸ்லினை தடவிட்டு, நெயில் பாலீஷ் போட்டுட்டு ஏணிப்படிகள் படத்தில் வர்ற "பூந்தேனில் கலந்து, பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன" ந்னு பாட்டு பாடிட்டே நடக்க கத்துக்கலாம்!
கீதா: போச்சுடா! நான் தடுக்கி விழுந்து மூஞ்சிய கிழிச்சிட்டு நிக்கறத
பாக்கணும்னு எவ்வளவு நாளா கனவு கண்டாங்களோ தெரியலியே????
இலா: அங்க என்ன முணுமுணுப்பு?
கீத: அதெல்லாம் ஒண்ணுமில்ல இலா, இப்ப அவசரமா செல்வியை தேடிட்டு இருக்கேன். இந்த ஹைஹீல்சையெல்லாம் எடுத்திட்டு அரட்டைப்பக்கம் போங்க, அங்க வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.
இலா: அப்பிடியா, சரி, மறந்திடாதீங்க,அரட்டைப்பக்கம் உங்களுக்காக செருப்போட காத்திட்டு இருப்பேன்!
கீதா: அய்யோ, இலா சத்தம் போடாதீங்க, யாராவது கேட்டா தப்பா நினைக்கப்போறாங்க!
(மெதுவாக: இன்னும் ஒரு வாரத்திற்கு அரட்டைப்பக்கத்துக்கு லீவ் போட்டுட வேண்டியதுதான்).

காட்சி - 7

ப்ரபா தாமுவும், உத்தமியும் கையில் பெரிய பெரிய மினரல் வாட்டர் கேன்களுடன் வந்துகொண்டிருக்கிறார்கள்.
கீதா: என்னது நம்ம ப்ரபாவும், உத்தமியும் கையில் ஏதோ வாட்டர் கேனோட வந்திட்டு இருக்காங்க. ???
ப்ரபாதாமு: ஹாய் கீதாஅக்கா நல்லாயிருக்கீங்களா?
கீதா: நல்லாயிருக்கேன்பா, ஆமா இது என்ன கையில்?/??
உத்தமி: என்ன கீதா தெரியாத மாதிரி கேக்கறீங்க? நீங்கதான் ஏதோ உயரமாகனும்னு ஆசையா இருக்கிறதா ப்ரபாகிட்ட சொன்னீங்களாமே. என்கிட்டேயும் சொன்னாங்க.
நாங்க ரெண்டு பேரும் தண்ணீ குடிச்சுதான் இவ்வளவு உயரமா வளர்ந்தோம் தெரியுமா?
கீதா: போச்சுடா, வாணலிக்கு தப்பின வடை அடுப்புக்குள்ளே விழுந்தாமாதிரி ஆய்டுச்சே என் நிலைமை. இப்பதான் இலாவை சமாளிச்சு அனுப்பினோம், இவங்கள என்ன சொல்லி அனுப்பறதுன்னு தெரியலியே?
ப்ரபா: அக்கா அங்க என்ன முணகறீங்க???
கீதா: ஒண்ணும் இல்ல ப்ரபா, நீங்க ரெண்டுபேரும் சொல்றது உண்மையா? இதுக்கு முன்னாடி கேள்விப்பட்ட மாதிரியே தெரியலையே?
உத்தமி: கீதா, சொன்ன நம்ப மாட்டீங்க, நாங்க ரெண்டுபேரும் தண்ணி குடிக்கிரதுக்கு முன்னாடி வாழைமரத்தில் பாதிதான் இருந்தோம். இப்ப பாருங்க பனைமரத்தில் பாதி இருக்கோம்.
நான் நேத்து சிட்னி ஜூவுக்கு போய்ட்டு, ஒட்டகச்சிவிங்கிகிட்ட நேருக்கு நேரா பாத்து ஹாய் சொல்லிட்டு வந்தேன் தெரியுமா?
ப்ரபா: ஆமா அக்கா, நான்கூட நேத்து சிங்க்ப்பூர் ஜூவுக்கு போய் ஒட்டகச்சிவிங்கிகிட்ட முகத்துக்கு நேரா பாத்து ஹவ் ஆர் யூ? கேட்டேன் தெரியுமா?
கீதா : (மெதுவாக,) அடக்கொடுமையே! நேத்து சிட்னியிலும், சிங்கப்பூரிலும் ரெண்டு ஒட்டகச்சிவிங்கி யாரையோ ரொம்ப கிட்டக்க பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்திட்டதா பிபிசியில் சொன்னாங்களே அது இவங்க வேலைதானா????

நல்ல வேளை வெளிநாட்டுக்காரங்களுக்கு விபரம் தெரியல. இதே இந்தியாவா இருந்தா ப்ளூகிராஸ் மெம்பர்ஸ் வந்து மிருகவதை தடுப்புச்சட்டத்தில் கைது பண்ணியிருப்பாங்க!
உத்தமி: என்ன கீதா ரொம்ப யோசிக்கிறீங்க???
கீதா: ஒண்ணுமில்ல குவைத் ஜூவில் இருக்க ஒட்டகச்சிவிங்கியோட நிலைமையை யோசிச்சுப்பாத்தேன்.
ப்ரபா: அக்கா ரொம்ப யோசிக்காதீங்க, மூளை குழம்பி போய் அப்பறம் இன்னும் குள்ளமா போய்வீங்க அப்பறம் உங்களை ஸ்டெய்ட்டா மினரல் வாட்டர் கம்பெனிக்கு தள்ளீட்டு போய்டுவோம்???
கீதா: வேணாம் தாயி எனக்கு இதுவே போதும், நீங்க நடையக்கட்டுங்க!

காட்சி- 8
கையில் குட்டிப்பாப்பா மீராவை தூக்கி பிடித்தபடி வினு வந்துகொண்டு இருக்கிறார்கள்.
கீதா: ஹாய் வினு, என்ன பாப்பாவை இப்பிடி தூக்கி பிடிச்சிட்டு இருக்கீங்க?
வினு: அதுவா, குட்டிப்பாப்பாவுக்கு ட்யாப்பர் போட்டா சேரலை. அதான் அதுக்கு பதிலா என்ன போடலான்னு ஆலோசனை கேட்க வந்தேன். அதுக்குள் குட்டிப்பொண்ணு பாத்ரூம் போய்ட்டா, அதான் இங்க தண்ணி எங்ககிடைக்கும்னு தேடிட்டு இருந்தேன்.
கீதா: அப்பாடா ரொம்ப நல்லதா போச்சு. இந்தாங்க ரெண்டு வாட்டர் கேன் நிறைய மினரல் வாட்டரே இருக்கு யூஸ் பண்ணிக்குங்க.
வினு: அட, மினரல் வாட்டரா? ஏது இவ்வளவு?
கீதா: அதுவா, அந்த கதையை கூகுல் மெயிலில் அனுப்பறேன். நீங்க பாப்பாவை பாருங்க!

காட்சி - 9
அர்ஜூன் அம்மா யாரு? அர்ஜூன் அம்மா யாரு????? என்று ஆளாளுக்கு முகவாயில் கைவைத்து கேட்டுக்கொண்டிருக்க ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து உமாராஜ் தோளில் அர்ஜூன் குட்டியுடன் இறங்குகிறார். கார் டிரைவர் டிக்கியில் இருந்து இரண்டு பெரிய வாழைத்தாரை இறக்கி வைக்கிறார்.
கீதா: ஹாய் உமா நலமா? என்னங்க இது அதுக்குள்ளே அறுசுவைக்குள்ளே என்டர் ஆயாச்சா?
உமா: ஆமா கீதா, நேத்து நம்ம அர்ஜூன்குட்டியை பாக்க எங்க பெரியப்பா வந்திருந்தாரு. கையோட ரெண்டு தார் மலைப்பழத்தையும் கொண்டு வந்திட்டாரு. கண்முன்னாடி வெச்சிட்டு சாப்பிடாம இருக்கவும் முடியல. அதான் அளவா சாப்பிடலாமா?அளவில்லாம சாப்பிடலாமானு கேட்டுட்டு போலான்னு வந்தேன்.
கீதா: (மெதுவாக) அடடா, கரகாட்டக்காரன் வாழைப்பழத்துக்கு அப்பறம் இதுதான் பெஸ்ட் காமெடியா இருக்கும்போல தெரியுதே!
அதாவது உமா, இந்த குழந்தை பிறந்தப்பறம் என்ன சாப்பிடனுன்ற விஷயமெல்லாம் நம்ம செல்விக்காவுக்குதான் தெரியும். எதுக்கும் நீங்க பாண்டிச்சேரிக்கு ஒரு போனப்போடுங்க!
உமா: ஹலோ நாந்தான் உமா பேசறேன், நேத்து பெரியப்பா ரெண்டு வாழைத்தார்...........,,

காட்சி - 10
கணவன் -மனைவி அன்யோன்யம்- என் தோழிக்காக பதிவு போடுங்கள்!
என்ற போர்டுடன் ப்ரபாதாமு நின்று கொண்டிருக்க, எதிரில் நின்று ஒருவர் பினாத்திகொண்டிருக்கிறார்.
நபர்: அதாவது கணவன் - மனைவி அன்யோன்யம் அப்பிடின்னா, ஒருத்தருக்கு ஒருத்தர் "விட்டு" க்கொடுத்து வாழனூம்.
உதாரணத்துக்கு, கணவனுக்கு கோபம் வந்தா மனைவி கன்னத்தில் ஓங்கி ஒண்ணு "விட்டு" கொடுக்கணும்.
கணவன் மட்டும் அப்பிடி இருந்தா அது நல்ல இல்லறமா இருக்காது.
அதனால, மனைவிக்கு கோபம் வந்தாலும் கணவன் கன்னத்தில் அதேபோல் ஓங்கி ஒண்ணு "விட்டு" கொடுக்கணும்.
இந்த விஷயம் மட்டுமில்லை.,கணவன் மனசில் இருக்கிறதை மனைவி புரிஞ்சு வெச்சிருக்கனும், அதேபோல் மனைவி மனசில் என்ன இருக்குன்றதை கணவனும் புரிஞ்சு வெச்சிருக்கனும்,
உதாரணத்துக்கு, மனைவி மனசில், " ச்சே எப்பப்பாத்தாலும் இவருக்கு அம்மா, அப்பா, அக்கா, அண்ணன்னு அவங்கதான் முக்கியம, இந்த ஆளுங்கள்ளாம் எதுக்குதான் கல்யாணம் பண்ணிக்கிறாங்களோ தெரியலை.
கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு நிம்மதியா, சந்தோஷம இருந்தேன். எல்லாம் என் தலையெழுத்து"
அப்பிடின்னு அவங்க நினைக்கிறதை புரிஞ்சு வெச்சிருக்கனும்"
அதேபோல்தான் கணவன் மனசில், " சே! என்ன பொம்பளை இவ, எப்ப பாத்தாலும் என் பெத்தவங்களையும் கூடப்பிறந்தவங்களையும் எதிரியாவே பாக்குறா! இவ சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தா மட்டும் உருகி உருகி கவனிக்கிறா. இருக்கட்டும் கவனிச்சுகிறேன்"
அப்பிடின்னு கணவன் நினைப்பதை மனைவி புரிஞ்சுக்கனும். இப்பிடி ஒருத்தர் ஒருத்தர புரிஞ்சு வாழற ஜோடிதான் கணவன் - மனைவி அன்னியோன்யத்துக்கு மிகச்சிறந்த உதாரணம்............., என்று பேசிக்கொண்டே இருக்க,
ப்ரபாதாமு போர்டை கீழே போட்டுவிட்டு மயங்கி விழுகிறார்!

நல்லா உத்து உத்து வாசிச்சுப் பாத்துட்டேன், நல்ல வேளை என் பேர் இதில் இல்லை.

அருண்தான் எல்லரையும் ஒரு பிடி ப்டிக்கிறார்னு பாத்தா, சாய்கீதா "லேடி அருண்" ஆ இருக்காங்களே?

அருண் உங்களுக்கு நல்ல ஒரு கம்பெனி கிடச்சிருக்கு வந்து பாருங்க.

கீதா போதும் என்னால் இதுக்கு மேல சிரிக்க முடியல.சாய் கீதா இதை பார்க்கமா 2வது பதிவில் பரவாயில்லை கொஞ்ச பேரை மட்டும் ஓட்டியிருக்கீங்கன்னு பதிவு போட்டுட்டு வரேன்.
ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்க.

சாய்கீதா ரொம்ப நல்லாயிருக்குப்பா.என்னை,இலா ப்ரபா,உத்தமி,உமா,வினு,தளிகா,தனிஷான்னு எல்லார் பெயரையும் போட்டு சூப்பர் காமெடி செய்திட்டிங்க.5 தடவைக்கு ம்மேல் படித்து நல்லா சிரித்தேன்.என் பொண்ணு வேற என்னை முறைக்கிறாங்கா,நான் சிரிக்கிறத பார்த்து அழுகிறாங்கா...நம்ம வானதிக்கு பிறகு சூப்பரா காமெடி பண்ணிருக்கிங்க.இந்த மாதிரி எழுதி எங்களை அடிக்கடி சிரிக்க வைங்கப்பா.என்னால் நம்பவேமுடியல நீங்களா இப்படி காமெடி செய்திருக்கிங்கன்னு..இந்தாங்க உங்களுக்கு வெள்ளை ரோஜாவை ஆரஞ்சுகலர் பெயிண்ட் அடிச்சு ஆரஞ்சு ரோஜா தரேன்[எனக்கு ஆரஞ்சு கலர் ரோச் கிடைக்கலப்பா]பிடிங்க கீதா,நல்லாயிருக்கா....

சாய்கீதா!! இப்ப தான் இந்த பாகம் படித்தேன். சூப்பர் போங்கோ!! இப்ப தான் அருசுவை களை கட்டுது மறுபடியும்!!!!!!!!!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

காட்சி 3 கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது. (எல்லாம் சிரிச்சு சிரிச்சுதான்..:-)

அதுவும் அந்த "நடக்க விடுங்க.." அதில ஹைலைட். ரொம்ப சூப்பர்.. :-0

சிரித்து சிரித்து ,ரொம்ப நாளைக்கு அப்புறம் மனசு நிறைஞ்சு போச்சு.காமெடி குயின் சாய் கீதா மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இதுக்கு மேல சிரிக்க முடியாது. :-)
அட்மின், பாத்து. சிரிச்சு சிரிச்சுத் திரும்ப முதுகு பிடிச்சுக் கொள்ளப் போகுது. :-)

‍- இமா க்றிஸ்

என்னால் அந்த தளிகாவின் காட்சியையும்,பிரபாதாமு உத்தமி காட்சியையும் படித்ததில் ரொம்பவே சிரிச்சுட்டேன்...யப்பா என்னமா காமெடி பண்ணியிருக்கீங்க.நல்லவேளை என்னை ரொம்ப வம்பிழுக்கலை.வனிதா,ஜெயாவை விட என் வயசு கொஞ்சம் கம்மியா போட்டதில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சந்தோஷம்.ஆமா இந்த கவியை ஏன்பா விட்டு வச்சீங்க..

உதாரணத்துக்கு, கணவனுக்கு கோபம் வந்தா மனைவி கன்னத்தில் ஓங்கி ஒண்ணு "விட்டு" கொடுக்கணும்.
கணவன் மட்டும் அப்பிடி இருந்தா அது நல்ல இல்லறமா இருக்காது.
அதனால, மனைவிக்கு கோபம் வந்தாலும் கணவன் கன்னத்தில் அதேபோல் ஓங்கி ஒண்ணு "விட்டு" கொடுக்கணும்.

அடடே இதுதானா அது.ஐயோ சாய்கீதா என்னால் தாங்கமுடியவில்லை.அப்பிடி சூப்பரா சிரிப்பா இருக்கு.
பிறகு வாறன்.

சுரேஜினி

சாய் கீதா இது நீங்கள்தானா? அவசரமாகப் படித்து அவசரமாக பதில் போடுகிறேன்,, நல்லாச் சிரிக்க வச்சிட்டீங்க, அதிலும் தளிகாவை வைத்து ரொம்பவும் நல்லாவே விளக்கிட்டீங்க, தளிகா இப்ப ஹை கீலுடன் உங்களைக் கலைக்கப்போகிறா, எதுக்கும் ரெடியா இருங்கோ:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்