மீன் குழம்பு - 2

தேதி: January 28, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

(குழம்பு) மீன் - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 3,
பூண்டு - 10 பல்,
தக்காளி - 3,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு,
உப்பு - தேவையான அளவு,

வதக்கி அரைக்க:-
------------------------
சீரகம் - 2 தேக்கரண்டி,
மிளகு - 1/4 தேக்கரண்டி,
சோம்பு - 1 தேக்கரண்டி,
தனியா - 3 மேசைக்கரண்டி,
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி,
மிளகாய் - 10.

தாளிக்க:
------------
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
சீரகம் - 1/4 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.


 

மீனை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து, கழுவி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டை நசுக்கி வைக்கவும்.
புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும்.
வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், சோம்பு, மிளகாய், தனியா சேர்த்து வறுக்கவும்.
வறுத்தவற்றை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அத்துடன் நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அரைத்து வைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்.
மீன் வெந்ததும் இறக்கவும். மணக்கும் மீன் குழம்பு தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி... நேற்று நம்ம ஆசியா அயிர மீன் குழம்பு வைக்க குட்டி மீன் வாங்கினேன். கொஞ்சம் எடுத்து உங்க இந்த குறிப்பும் செய்து பார்த்தேன். மிகவும் அருமைன்னு என் கணவர் சொன்னார். நான் இப்போது மீன் சாபிடுவதில்லை, அதனால் எனக்கு தெரியாது. அவர்கிட்ட நல்லா இருக்குன்னு பேர் வாங்குறது ரொம்ப கஷ்டம். வாங்கிட்டேன், ;) உங்க புன்னியத்திலும், ஆசியா புன்னியத்திலும். இரண்டு வகை குழம்பும் செய்து. இன்னைக்கும் அதை தான் சாப்பிட்டு போனார். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி,
நலமா? யாழினி நலமா?
இந்த மீன் குழம்பும் நல்லா இருக்கும். நான் மீன் போடாமல் கொஞ்சம் எடுத்துப்பேன் எனக்காக (நானும் மீன் சாப்பிட மாட்டேன்). கணவருக்கு பிடிச்சாலே சந்தோஷம் தானே! அயிரை மீன் அங்கே கிடைக்குதா? எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு. ஒருமுறையாவது அயிரை மீன் குழம்பு வைக்கணும்னு. இங்க கிடைக்காது. திருவாரூரில் இருக்கும் போது இரவு 12 மணிக்கு வந்து விற்கும். அந்த நேரத்தில் வாங்கி குழம்பும் அப்பவே வைப்பார்கள். அப்ப வேடிக்கையா இருக்கும். அப்பல்லாம் எங்க வீட்டில் யாரும் மீன் சாப்பிட மாட்டாங்க.
பாராட்டுக்கு நன்றிப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா இன்று உங்களுடைய இந்த மீன் குழம்பு தான் வைத்தேன்.மிகவும் நன்றாக வந்தது. சுவை அருமையாக இருந்தது.என் கணவருக்கு மிகவும் பிடித்திருந்தது.விரும்பி சாப்பிட்டார்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாய் திவ்யா,
நலமா? பாப்பா நலமா? சாரிப்பா, ரெண்டு நாளா உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடல், டாக்டர், ஊசி, டெஸ்ட்னு போனதில் பதில் போட முடியலை. இங்கு வந்த போது போன் செய்திருக்கலாமில்ல? பேசி இருக்கலாமே. சரி, பாப்பாவை கவனமா பார்த்துக்கோ. இனி தான் கவனமா கண்காணிக்கணும். கண்டதை பொறுக்கி வாயில் வெச்சுடுவாங்க.
மீன் குழம்பா? நல்லா சாப்பிடு. உடம்புக்கு நல்லது. பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இன்னும் இந்த மீன் குழம்பு வைத்து பார்க்கலை,நான் எங்க ஊர் பொதுவான மசாலா தான் உபயோகித்து வைப்பேன்.இனிமேல் மீன் குழம்பு உங்களோடது செய்யனும்.ஏன்னா மீன் குழம்பு ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே.ஸாதிகா சத்தமே காணோம்.பிள்ளங்க எக்ஸாம் பிசியா?30 - ம்தேதி முடிந்த பின்பு கொஞ்சம் நிம்மதி.பார்ப்போம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா,
செய்து பார்த்துட்டு சொல்லுங்க. குழம்பு வைக்க மட்டும் தான் தெரியும். சாப்பிட தெரியாது (முடியாது).
நானும் ஸாதிகாகிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு. நாளை பேசிப் பார்க்கிறேன்.
ஆமாம், பசங்களுக்கு எக்ஸாம் முடிஞ்சாதான் நிம்மதியே.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.