டிஷ் வாஷர் பற்றி யாருக்காவது தெரியுமா?

நான் டிஷ் வாஷர் வாங்கலாம் என்று கடைக்குப் போனேன். அவர்கள் IFB ஒரு கம்பெனி தான் உள்ளது. விலை 23,000-28,000 வரை மாடல் பொறுத்து என்றார்கள். ஆனால் எந்த கடையிலும் பீஸ் இல்லை. ஆர்டர் பண்ணினால், வாங்கித் தருவோம் என்றார்கள். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாததால், தெரிந்தவர்கள் சொல்லுங்களேன், ப்ளீஸ்.

1.எப்படி உபயோகிப்பது?
2.நன்றாக கழுவுகிறதா?
3.என்ன டிடெர்ஜண்ட் போடணும்?
4.குக்கர் போன்ற பெரிய பாத்திரங்கள் கழுவ முடியுமா?

வாங்கலாம் என்று இருப்பதால், சரியான நேரத்தில், சரியான பதில் தந்தால் உபயோகமாக இருக்கும்.

சுமஜ்லா

ஹாய் சுஹைனா,
நாங்களும் போன வருடம் இங்கு இருக்கும் அல்கானீமில் டிஷ் வாஷர் வாங்கும் முடிவோடுதான் போனோம் அங்கு இருக்கும் தமிழ் ஆள் ஒருவரே, அது நம் இந்திய, அதுவும் தமிழ் ஸ்டைல் குக்கிங்கிற்கு அது ஒத்துவராது என்று அடித்து சொல்லிவிட்டார்.
குக்கர் எல்லாம் கழுவும். ஆனால், டிஷ் வாஷ்ரில் போடும் முன்பு ஒரு தடவை கழுவிவிட்டுதான் போடனுமாம்.
பால் பாத்திரம் எல்லாம் ப்ரஷ் பன்ணிட்டுதான் போடனும். அதற்கென்று தனியாக சோப் பவுடர் கிடைக்கிறது அதைத்தான் யூஸ் பண்ணனும்.
எனக்கு தெரிந்தவர்கள் அனைவருமே இதே கருத்தைத்தான் சொன்னார்கள். யாரும் வாங்கினால் யூஸ் ஆகும் என்று சொல்லல.

அதனால்தான் திரும்பிவிட்டோம். இங்கு மற்றவர்களின் கருத்துக்களையும் பார்ப்போம். எனக்கு தெரிந்து இது அமெரிக்கன்,பிரிட்டிஷ் ஸ்டைல் குக்கிங்கிற்குதான் சரியென்று தோன்றுகிறது.

அமெரிக்காவில் இருக்கும் என் நாத்தனாரிடமும் கேட்டேன். அவர் " உள்ளே போடும்முன் ஒருதடவை கழுவிட்டுதான் போடனும். பாதி கஷ்டம் தீரும், அதன் பலன் 50% தான் கிடைக்கும். ஆனா ஆசை இருந்தா கண்டிப்பா வாங்கி யூஸ் பண்ணி பாருங்கன்னு சொன்னாங்க.
என் தோழியின் தோழி ஒருவர் வாங்கி அதை யூஸ் பண்றதே இல்லை. பாத்திரங்களை அடுக்கி வைக்கும் ஸ்டேன்ட் ஆகத்தான் யூஸ்
பண்றாங்க. என்ன காரணம்னு தெரியலை. யாராவது சொல்லட்டும்னு நானும் வெயிட் பண்றேன்!

டிஷ் வாஷர் நம்முடைய சமையல் பாத்திரம் clean பண்ணுவதற்கு
ஏற்றதல்ல நாம் ஒரு முறை clean
ப்ண்ணிவிட்டு தான் அதில் போட வேண்டும் அல்லது போட்டு பிறகு நாம் clean பண்ண வேன்டும் குக்கர், பால் பாத்திரம்
எண்ணை பாத்திரம் சுத்தமாக இர்க்காது spoon,tumbler,cup,plates ok
இங்கு என்னிடம் உள்ளது நான் use
பண்ணுவது இல்லை

டிஷ் வாஷர் குறித்து தோழிகள் கூறிய கருத்துகள் சரியானதே.பாத்திரங்களைக் கண்டிப்பாகக் கழுவித்தான் இடவேண்டும். அதுவும் ஒவ்வொன்றாகப் பொறுமையாக அதனதன் இடத்தில் அடுக்கி வைக்கணும். ஒரு வேலைக்கு இரு வேலை செய்யவேண்டுமா?

ஒரு செட் பாத்திரங்கள் போட்டால் உடனே கிடைக்காத். கழுவி வர 1 மணி நேரம் வரை ஆகலாம் (சரியாகத் தெரியவில்லை.)

மேலும் தண்ணீர் மிக மிக அதிகம் செலவழியும். நம் நாட்டு தண்ணீர் தட்டுப்பாடு தெரிந்ததே. இந்நிலையில் இவ்வளவு தண்ணீர் வீணாக்குவது நம்மால் செய்ய முடியாதது.

வெந்நீர் உபயோகித்து கழுவுவதனால் மின்சார செலவும் கூடலாம்.

டிஷ் வாஷரில் நானும் பாத்திரம் மட்டும் தான் அடூக்க use பண்ணுறேன் அதில் தான் நான் onion,potatos போட்டு வைத்து உள்ளேன் so i think dishwasher waste of money

ஒரே வரியில் சொன்னா... நம்ம ஊர் சமையலுக்கும், நம்ம சுத்தத்துக்கும் இது சரி வராது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டிஷ்வாஷர்! இங்க நானும் பயன்படுத்திக்கொண்டு இருக்கேன். ஆனால் பருப்பு வைத்த குக்கர் இல்லை நான்ஸ்டிக் அல்லாத பாத்திரங்கள் முக்கியமா கடாய்/வாணலி இதெல்லாம் நல்லா தேய்த்து போட்டா கூடுதலா பளபளக்கும். தட்டுகள்/காபி கப்/ஜூஸ்டம்ளர் எல்லாம் ஒழுங்காக கழுவும். ரொம்ப எரிபொருள் செலவாகும். அதிலும் அது காய வேற வைக்கும் இல்லியா அதனால். தனியா இருக்குன்னே இருக்கும் டிஷ்வாஷிங் சொலூஷன் இல்லை பொடி போடனும். தினமும் பயன்படுத்தும் டிஷ் சோப் போட முடியாது.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

டிஷ்வாஷர்! நம்ம ஊரு காசு 28 ஆயிரத்துக்கு தனியா பாத்திரம் விளக்க மட்டும் ஆள் போட்டா நம்ம குழந்தைகளுக்கு கல்யாணமாகினாலும் ஆள் இருக்கும். என் ஐடியா.. சும்மா சேன்விச் /சேலட்/சூப் இல்லை பர்கர் சாப்பிடறவங்கள்ன்னா இது ரொம்ப உபயோகம். இல்லைன்னா இருக்கறதினால போடுறேன். நம்ம ஊரு வருவல் பொரியல் கெட்டி குழம்பு எல்லாம் வச்சா இது நல்லா இருப்பதில்லை.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஏன் 28 ஆயிரத்தோட விட்டீங்க... இன்னும் இதுக்கு ஊதர டிஷ் வாஷிங் சோப் மட்டும் கம்மியாவா விக்குது??!!! மாசா மாசம் அதுக்கு போடும் காசையும் சேருங்கோ. ;) சும்மா சொல்ல கூடாது இலா.. ஜோக்கா சொன்னாலும் சரியா சொல்லிட்டீங்க.

நான் இதுக்கு முன் இருந்த வீட்டில் டிஷ்வாஷரை மைக்ரோவேவ் வைக்கும் டேபில் மாதிரி பயன்படுத்தினேன். வீட்டு ஒனர்க்கு தெரிஞ்சா.... ஒதச்சிருப்பான். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டிஷ் வாஷர் .பொட்டட்டோ, ஆனியன் வைத்து வெட்ட பயன்படுத்துவது நன்றாகத்தானே இருக்கிறது.

ஆனால் நீங்கள் நம்மூர் பாத்திரங்கள் அதிகம் பாவிப்பவர்களாக இருந்து அதை வாங்கினால் உங்கள் வேலையை அதிகரிக்கிறீர்கள் என்று அர்த்தம் ஒன்றுக்கு 2 வேலை செய்யவேண்டி இருக்கும்.

அதிகமாக பாத்திரம் கழுவுதல் என்பது பெரிய சிரமத்தை கொடுக்கும் வேளை என்றால் பெரிய விருந்து வைத்து ஓய்ந்து உடம்பும் நோக பாத்திரமும் குவிந்திருக்க ஒரு மூலையில் இருந்து சிரித்துக்கொண்டு மட்டுமே இருக்கும் இந்த டிஷ் வோஷர் இப்போ விலை கொடுத்து வேண்டிய உங்களுக்கு எப்படி இருக்கும்.
நம் அண்டா குண்டாவுகளை கழுவுமளவு பெரிய மெசினைக்கண்டுபிடித்தார்களென்றாலும் பருவாயில்லை.
அதாவது சின்ன பாமிலிக்கும் அதிகம் பேருக்கு விருந்தாயின் வெளியே அழைத்துச்செல்பவராக இருந்தாலும்,நம்மூர் பாத்திரங்கள் அதிகம் பாவிக்காதவர்களாக இருந்தாலும் மட்டுமே இதன் முழுமையான பலனை நீங்கள் பெறமுடியும்.
சமையல் பாத்திரங்கள் விட பரிமாறும் பாத்திரங்களைத்தான் சுலபமாகக் கழுவிக்கொடுக்கும்.அதாவது பாதியை மெசின் கழுவுமாம் பாதியை நாங்களே கழுவ வேணுமாம்.
எனக்குத்தெரிந்து நிறையப்பேர் வாங்கி இடத்தையும் அநியாயம் பண்ணி பாரத்துக்கு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் நான் என்னமோ என்னுடைய குட்டி மூளையைப்பாவித்து பாத்திரங்களூக்காக டிஷ் வோஷர் வாங்காமல் டிஷ்வோஷருக்காக பாத்திரங்களை வாங்குவதால் எனக்கு நல்ல பயனாக இருக்கு.விரும்பினா இந்த ஐடியாவை பிடியுங்கோ.

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்