தக்காளி சட்னி

தேதி: November 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிந்த தக்காளி- 3 கப்
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்- 1 கப்
கீறிய பச்சை மிளகாய்-2
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லொஇ- கால் கப்
பூண்டு இதழ்கள் [சிறியது]- 10
சோம்பு- 1 ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
தேங்காய்த்துருவல்- அரை கப்
தேவையான உப்பு
எண்ணெய்- 4 மேசைக்கரண்டி


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகைப் போடவும்.
அது பொரிந்ததும் உளுத்தம்பருப்பைப் போட்டு அது இலேசாகசிவந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பூண்டையும் சோம்பையும் நசுக்கிச் சேர்த்து இலேசாக வதக்கவும். தக்காளியை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்து மஞ்சள் தூளுடன் மிளகாய்த்தூளும் சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணெய் தெளிந்து தக்காளி கெட்டியானதும் தேங்காயை கெட்டியாக மசிய அரைத்து சேர்க்கவும்.
குழம்பாய் கொதித்து வரும்போது கொத்தமல்லியைக் கலந்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ ஆன்டி,
எப்படி இருக்கிங்க?
இன்று உங்களுடைய தக்காளி சட்னியினை செய்தேன்..மிகவும் அருமையாக இருந்தது..என்னுடைய குழந்தை கூட கொஞ்சமா சாப்பிட்டாள்.
உங்களுடைய சில குறிப்பில் டால்டா சேர்க்க வேண்டும் என்று எழுதி இருக்கிங்க. அதற்கு பதில் வேறு எதனை உபயோகிக்கலாம்? நான் இதுவர டால்டா வாங்கியது இல்லை.
உங்களுடைய பல குறிப்புகளை நான் பெயர் கூட கேட்டது இல்லை..ஆனால் செய்முறையை பார்த்த உடன் செய்ய வேண்டும் போல இருக்கின்றது.
அன்புடன்,
கீதா ஆச்சல்

மேடம் தக்காளி சட்னி தோசையுடன் சாப்பிட சுவையாக இருந்தது.நன்றி
சவுதி செல்வி

சவுதி செல்வி

அன்புள்ள கீதா!

உங்களின் அன்பான விசாரிப்பு சந்தோஷத்தைத் தந்தது. நான் நலமே. உங்கள் இல்லத்தில் உங்களுடன் அனைவரும் என்றும் நலமாக இருக்க பெரிதும் விரும்புகிறேன்.

தக்காளி சட்னி அருமையாக இருந்தது எனக்கு மிகவும் மகிழ்வைத் தந்தது. தங்களுக்கு என் நன்றி!!

பொதுவாய் சில பலகாரங்களுக்கு மட்டும் டால்டா என எழுதியிருப்பேன். அவற்றுக்கு டால்டா உபயோகித்தால் மட்டுமே நன்ராக இருக்கும். முடியாத பட்சத்தில் வெண்ணெயை நீங்கள் உபயோகிக்கலாம்.

என் குறிப்புகள் எல்லாம் சில நான் மற்றவர்களிடம் பல வருடங்களுக்கு முன் கற்றவை. சில நானே புதியதாக கற்பனையுடன் செய்து பார்த்தவை. எல்லாமே எனக்கு பாராட்டுக்களை வாங்கித் தந்தவை. நான் பல வருடங்களாக ஒரு ஆங்கில இணைய தளத்தில் எழுதிக்கொண்டிருப்பதால் அவற்றிலிருந்தும் சில சுவையான குறிப்புகளை இங்கே தந்திருக்கிறேன்.

இன்னைக்கு காலையில உங்க தக்காளி சட்னி செஞ்சேன், அருமையாக இருந்தது. அடை கூட சாப்பிட்டோம். நன்றி !!

இப்படிக்கு,
சந்தனா

அன்புள்ள திருமதி.சேகர்!

தக்காளி சட்னி அருமையாக இருந்ததறிய மிக்க மகிழ்ச்சி! உங்களுக்கு என் அன்பான நன்றியும்கூட!!

மனோமேடம் இன்னைக்கு காலையில் தோசைக்கு உங்க தக்காளி சட்னி செய்தேன்,தோசைக்கு நன்றாக இருந்தது நன்றி மேடம்.

மனோ ஆன்டி, இப்போ தான் இப்போ தான் உங்க இந்த தக்காளி சட்னி வச்சு இட்லியோடு சாப்பிட்டு வரேன். சூப்பரோ சூப்பர் டேஸ்ட்,என் கணவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. உங்க எல்லா குறிப்புகளுமே ரொம்ப நல்லா டேஸ்டியாக இருக்கிறது. ரொம்ப நன்றி.

தக்காளி சட்னியை செய்து பார்த்து நன்றாக இருக்கிறது என்று எழுதியிருப்பது கண்டு மிக்க மகிழ்வாக இருந்தது. உங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு என் அன்பு நன்றி!!