அரட்டை அரட்டை அரட்டை - 73

ஹாய் தோழிகளே.... உங்க அரட்டையை இங்க தொடருங்க.

ஜலீலா, மிசஸ் சேகர், சோனியா, ஜெயா, திரு ஹைஷ், வின்னி, விஜி, லக்ஷ்மி, ஸாதிகா, ஜயந்தி(jayanthivinay), karthickvdm எல்லாருக்கும் ரொம்ப நன்றி. குழந்தைக்கு இப்போ தும்மல் இல்லை. கர் கர்ன்னு சத்தம் மட்டும் இன்னும் இருக்கு. நல்லா தூங்கறா, சாப்பிட தான் அடம். டாக்டர் சொன்ன மருந்து தான் குடுக்கறேன். நல்ல பலன் இருக்கு. பக்கதுலயே இருக்கனும்'னு அடம் பிடிக்கறா, அதான் அறுசுவை பக்கம் வர முடியல. குளிக்க வைக்கல, டவல் பாத் தான் 3 நாளா. நீங்க சொன்ன வைத்தியம் எல்லாம் மூக்கடைப்புக்கு இன்னைக்கு செய்து பார்க்கிறேன். மீண்டும் நாளை வந்து ஒரு பெரிய பதிவா போடறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போ தான் உங்களுக்கு ஒரு பதிவு போட்டேன், நீங்களே வந்துட்டீங்க போல.... சரி நான் எழுதியது போல் செய்யவா, அல்லது உங்களுக்காக காத்திருக்கவா?

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வனிதா பாப்பாவுக்கு உடம்பு சரியில்லாம இருந்ததா,இப்ப பரவாயில்லையா,பாப்பாவ நல்லா கவனிச்சுக்கோங்க.

எப்படி இருக்கீங்க, பேசி ரொம்ப நாளாச்சு.....

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

என்ன இது அரட்டை இப்படி தூங்குது,தட்டி எழுப்ப நம்ம வனிதா இல்லனா இப்படியா!!!

சரி இதெல்லாம் இருக்கட்டும்,ஒரு மனுஷி (நாந்தான் வேற யாரோனு நினைச்சுகாதிங்க‌)2 நாளா வரலையே யாராவது..யாராவது கேட்டீங்களா:( (veryyyyyyyyyyyy bad)

அப்படின்னா காணாமல் போனவங்க இழையில போயி உங்க வருத்தத்தை கொட்டுங்க, அங்க வந்து ஆறுதல் சொல்லுறோம்

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மிசஸ் சேகர் நீங்க சொன்ன பிறகு தான் அங்க போய் பதிவுகள் படிச்சேன். தாராளமா போடுங்கோ. உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. அங்க எல்லாருக்கும் பதில் போட நேரம் இல்லை. குழந்தை கையில் இருந்துகிட்டு ஆட்டம் போடுறா.

கவி... நானே 2 நாளா வரல... அதான் எனக்கு தெரியல. காணாம போனவங்க பக்கத்தில் கூட உங்களை தேடலயா??? அச்சோ பாவம்.... ;) (தொல்லை விட்டுச்சுனு நினைச்சுட்டாங்களோ??? இல்ல.... ஏன் கூப்பிட்டு வம்பு வைக்கணும்'னு .... ஹிஹிஹி... சும்மா சொன்னேன்.... கோச்சிக்காதிங்க)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழந்தைக்கு நன்றி தான் சொல்லணும், ஆட்டத்தை போட்டு உங்கள அடக்கி வச்சிருக்கா. ஹி ஹி.எதோ எங்களால முடியாததை அவளாச்சும் செய்யட்டுமே !!

இப்ப சமைக்க ஆரம்பிச்சிருக்கேன், கொஞ்ச நேரம் கழிச்சு போயி அந்த வேலை செய்யறேன்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஆமா சந்தனா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் ஆச்சு:)

வனிதா,எங்க வீட்டு பக்கம் 2 நாளா பயங்கர காத்து என்ன இப்படி காத்து அடிக்குதுனு நினைச்சுட்டு இருநந்தேன், இப்பதான் காரணம் தெரிஞ்சது,நீங்க 2 நாளா அறுசுவை பக்கம் வராதனால,நம்ம அறுசுவைக்காரங்க விட்ட பெருமூச்சுதான் இப்படி பெரும்காற்றா அடிச்சிருக்கு:)

கார்த்திகேயன் இப்ப நீங்க எப்படி தமிழில் எழுதுனீங்க? :) ok, கீழே எழுத்தவி'னு இருக்கு பாருங்க அதை கிளிக் செய்து தமிழில் எழுதுங்க.

அப்புறம் சுலபமான சமையல் குறிப்புகளுக்கு மேலே கூட்டாஞ்சோறு'னு இருக்கு பாருங்க, அதில் நிறைய சமையல் வல்லுனர்கள் நிறைய சுலபமான குறிப்புகள் கொடுத்திருக்காங்க‌,அவைகள் உங்களுக்கு உபயோகமாக இருக்குமென்று நினைக்கிறேன்:)

மேலும் சில பதிவுகள்