முதல் நாள் பள்ளி சென்ற குழந்தை

தோழிகளே புலம்பி புலம்பி ஒருவழியாக சன்டே முதல் என் 3 வயது மகளும் ப்ரீஸ்கூல் போகிறாள்...ரெண்டு நாளா இதை நினைத்து எனக்கு தூக்கமும் இல்லை எதிலும் கவனமும் இல்லை பித்துபிடித்தது போல உள்ளது.
கெ ஜி 1 சேர்க்க சொன்னார்கள் எனக்கு விருப்பம் இல்லை 4 வயதில் கெஜி போனால் போதும் என்று நர்சரி விட முடிவு செய்தேன்.
பலபல டென்ஷனும் வந்து மண்டையெல்லாம் வெடிக்கிறது
1)ட்ரான்ஸ்போர்டேஷன் ஸ்கூல் vanல் தான் செல்ல வேண்டும்..சின்ன பிள்ளையை ஏற்றி விட்டு எப்படி பார்க்கநிம்மதியா இருக்க போகிறேனோ கடவுளுக்கு வெளிச்சம்..கொண்டு விட என் கணவரால் சில நாட்களே முடியும் மற்ற நாள் டேக்சியில் தினசரி கொண்டு விடுவதும் சாதியமில்லை
2)ஸ்கூளில் பிள்ளைகள் முரண்டு பிடித்தால் எதுவும் செய்துவிடுவார்களோ என்று ஒரே பயமாக உள்ளது..என் மகள் யார் அடித்தாலும் கூட என்னிடம் சொல்ல மாட்டாள் அதான் பயமே ..வீட்டில் இங்கு வா என்றால் வந்ததாக சரித்திரமே இல்லை வா என்றால் அதற்கு எதிர்திசையில் ஓடத் தான் செய்வாள் அவர்கள் இது போல் செய்தால் பொறுமையாக பார்த்துக் கொள்வார்களா
எல்லாத்துக்கும் பதிலும் யோசித்து நானே சமாதானப்பட்டாலும் திரும்ப திரும்ப இதே யோசனை.ஸ்கூலுக்கு போகிறேன் எஙிறாள் ஆனால் தனியாக தான் போக வேண்டும் நான் வரமாட்டேன் என்றால் முழித்துக் கொண்டு அப்போ நான் கத்துவேன் என்று பயமுறுத்துகிறாள்..எங்கிருந்தோ கற்றுக் கொண்டாளோ தெரியவில்லை டீச்சர் என்னை அடிப்பாங்க எங்கிறாள்
இதெல்லாம் வேண்டாத பயம் தான் இருந்தாலும் என்னைப் போல எல்லா தாய்மார்களும் இப்படி தான் தவித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..உங்கள் பிள்ளையை முதன்முதலாக அனுப்பின அனுபவம் அதன்பிறகு நீங்கள் நிம்மதியாக இருந்தது எப்பொழுது எல்லாம் சொல்லி என்னை தேற்றி விடுங்கள்:-)..அதிரா சொன்னது இன்னும் வரிவரியாக என் மனதில் நிற்கிறது

உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது..பேசாமல் பால் சேர்த்து காய்ச்சிய ஓட்ஸ் ராகி போன்ற எதுவாவது கொடுத்து விட்டு அனுப்ப வேண்டும்.
மகளுக்கு வீட்டில் சாப்பிட கொடுக்க எனக்கு ப்ரச்சனை இல்லை ஆனால் நான் இல்லாமல் தனியே என்றால் அதை வீசி விளையாட தான் செய்வாள் அதனால் காலை நீங்கள் சொன்னபடி எதுவாவது கொடுத்தனுப்ப போகிறேன்

ஹாய் ஜலீலக்கா
எனக்கும் ரொம்ப ஆசை மகள் எல்லாம் பழக வேண்டுமென்று..
.எல்லா பிள்ளைகளும் சுலபமாக சாப்பிடும் சான்ட்விச் எல்லாம் கொடுத்தால் உள்ளே இருப்பதை உருவி உருவி சாபிட்டு ப்ரெட் பன் அப்படியே கிடக்கும் அதை கண்டால் ஏதோ சாப்பிட தெரியாதோ என்பது போல இருக்கும்..ஆனால் மற்ற பிள்ளைகள் சாப்பிட திணறும் சிதறும் வகை அரிசி கஞ்சி,கூழ் வகைகள்,கார்ன் ஃப்லேக்ஸ் ,இட்லி தோசை சாம்பார் சட்னி போன்றவை எங்கயும் ஒரு துளி சிந்தாது.அதென்ன அதிசயமோ
நேத்தே டெஸ்டுக்கு சேன்ட்விச் கொடுத்தேன் ப்ரெட்டை தலை உயரத்துக்கு கொண்டு வந்து உள்ளே என்னவென்று ப்ரெட்டை தூக்கி தூக்கி பார்க்கிறாள்
நீங்கள் சொன்ன குறிப்பையும் நோட்பன்னி வைத்திருக்கிறேன்.
நீங்கள் போட்ட பதிவு இன்னொரு காரணமும் கூட எல்லாரும் சொன்னார்கள் ஸ்கூளுக்கு போனால் கொஞ்ச நாளைக்கு இன்ஃபெக்ஷன் வந்து கொண்டே இருக்குமாம் அதான் இப்பவே சேர்த்தால் தனியாக சமாளிக்க எனக்கு ஈசி .அதிக கவனம் எடுத்துக் கொள்ளலாம்.நன்றி ஜலீலக்கா

ஹாய் தளிகா இன்னும் பயம் தீரவீல்லையா,இப்ப தான் இங்கு வந்தேன்,பயப்படமல் அனுப்புங்க,நோகாஸ் ஆர்க் தானே,கே.ஜி 1 எடுத்துக்குவாங்களா?என்ன சொன்னார்கள்,ரீமா முன்னால் அவளுக்கு பிடிக்காது சாப்பிடமாட்டாள் என்று எதும் சொல்லாதீர்கள்,எனக்கு இந்த காய் பிடிக்கும் நான் நிறையா சாப்பிடூவேன் என்று சொல்லுங்கள்,அவள் அப்பாவையும் அப்படியே சொல்ல சொல்லுங்கள்,அவளும் சொல்லி கொண்டே சாப்பிடுவாள்,ஆலு சப்பாத்தி,காய்கறி சப்பாத்தி என்று போட்டு கொடுங்க,வெறும் சப்பாத்தி போட்டாலும் லேசா குழம்பில் பிரட்டி சூடா மூடி வைங்க,சாப்ட்டாவே இருக்கும்,ப்ப்ரோஸன் ஐட்டம்ஸ் வேனாம்,அதை தவிர்த்தால் நல்லது,உங்க பொன்னு நெகட்ஸ் சாப்பிட மாட்டா தானே,அப்பாடியே கேட்டாலும் நீங்க வீட்டில் செய்து கொடுத்து அனுப்புங்க,ஸ்கூலில் உங்களுக்கு பயம் வேனாம் அவங்க பார்த்துக்குவாங்க,பிள்ளைகள் வீட்டில் இருப்பது போல் வெளியே இருக்க மாட்டாங்க,ஸ்கூல் போன புதுசில்,அவங்க பேசறது கொஞ்சம் புரியாது,புது இடம் என்பதால் பயத்தில் அமைதியா இருப்பாங்க,செல்லம் வாலு எல்லாமே நம்மளை பார்த்தால் தான்,அதனால் டென்ஷன் வேனாம்,கொஞ்ச நாள் நைட் சீக்கரமே தூங்க வைத்து காலையில் சீக்கரம் எழுப்பி பால் கொடுத்துடுங்க,எழுந்தவுடனே ஸ்கூல் போறமாதிரி இல்லாமல் கொஞ்ச நேரம் விளையாடிட்டு போற மாதிரி பார்த்துக்கோங்க,என் குறிப்பில் சன்ன சான்விச் இருக்கு டேஸ்ட்டும் நல்லா இருக்கும்,அதை கொடுத்து பாருங்க,பிடித்தால் நல்லது,அவள் அதை வீரும்பி சாப்பிடுவாளோ அது உள்ள போட்டு இருக்கு என்று சொல்லுங்கள்,அப்பதான் உள்ள போகும்,ஏன்ன குடுத்துவிட்டாலும் சாப்பிடாமல் வந்தால் அதற்க்காக அதை நிறுத்த வேண்டாம் திரும்ப திரும்ப குடுங்கள்,சாப்பிடுவார்கள்,பையனை 10 நாள் தான் ஸ்கூலுக்கு அனுப்பினேன்,எத்தனை தைரியம் எனக்கு வந்திட்டது பார்த்தீங்களா?:)அதே போல் உங்களுக்கும் தைரியம் வந்திடும்,2 நாள் அழுகையே வரும் பிள்ளைவீட்டில் இல்லாமல் அப்பறம் சரியாகிடும்,புளு வேக்சின் அவளுக்கு போடவில்லை என்றால் டாக்டரிடம் கேட்டு போடுங்கள்,ஸ்கூல் போனால் அவ்வள்வாக பாதிக்காது,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தளிகா அதிரா சொல்வது போல் முகத்தை பார்த்து பேச பழக்குங்கள்,நானும் அப்படிதான் தப்புசெய்தால் சாரி சொல்ல என் கண்ணை பார்த்து தான் சொல்ல சொல்லுவது,நான் இது செய்ய மாட்டேன் என்று அவன் சொன்னால் என் கண்ணை பார்த்து சொல் என்பேன்,மீண்டும் அந்த தவறை செய்ய மாட்டார்கள்,

திருமதி,ஹுசைன் நானும் காலையில் சாப்பிட வைக்க பார்க்கிறேன்,ஆனால் பால் தவிற வேறு எதும் வாங்குவதில்லை,கொஞ்ச நாள் போகட்டும் என்று இருக்கிறேன்,அதற்க்கு எதாவது டிப்ஸ்ஸ் தாங்கோ

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வணக்கம் நல்ல பயனுள்ள குறிப்புகள் தளிகா இது எல்லதய்மருக்கும் ஒரு கஸ்ரமானகாரியம் தான் அனல் போகப்போக சரியகிடும் கவலைபடதிர்கள்.பாடசாலைகளில் நலபடிகுழந்தைகளா ரிட்பனுவங்க அதபத்தி வேரிபன்ன தேவையில்ல.என் பொண்ணு முதல்நாள் மட்டும் அழுத பிறகு விரும்பி போன எனக்குதான் உங்களபோல கஷ்ரம இருந்துது.இங்கு பாடசாலை 8:30துவங்கி 11:20முடிதிரும் இடைவேல இல்லை அதல சப்படுகுடுத்துவிர்ற பிறைசனயில்ல.எனக்கு ஒரு உதவி தோழிகளே என் மகள் காலைல பால் மட்டும் தான் குடிக்கிற சாப்பிட எதாவது குடுத்த சத்திஎடுக்கிற இதுக்கு எதாவது வழி சொல்லுங்கள் ப்ளீஸ்.

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

இல்லை மகளை வேற பள்ளியில் சேர்த்தேன் உங்க பைய்யன் ஸ்கூள் ரொம்ப பிடிச்சு போச்சு ஆனால் கெஜி அங்கு சேர்க்கமுடியாதாம் இப்பவே புக்ட் அதனால் நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை இந்த ஸ்கூலில் அங்கேயே கன்டினியூ பன்னிக்கலாம்(ஃபோனில் எந்த ஸ்கூல் என்று சொல்லுகிறேன் என்னவோ ஸ்கூல் பேரை எழுத கூட பயமா இருக்கு)
நீங்க சொன்னது கூட நல்ல ஐடியா இனி மேல் அப்படி தான் ட்ரை பன்ன போறேன்..நானும் அதான் விரும்புதோ இல்லையோ கொடுத்து விட போகிறேன்.பழகட்டும்.இன்று போய் நல்ல பஸ்ஸில் எப்படி ஏற்றி எப்படி இறக்குகிறார்கள் என்று பார்த்துக் கொண்டு வந்தேன் செம்ம டயர்ட் இருங்க மெல்ல மெல்ல மற்ற பதிவுகளுக்கும் பதில் போடுகிறேன்
அபுதாபியில் நம்ப மதினா சாயித் எம்கே பக்கத்தில் ஒரு எ எ ப்ரதர்ஸ் கடை உண்டு அங்கு தான் என் பக்கத்து வீட்டு பெண் எல்லா புதனும் மாலை ஒரு 6 மணி அளவில் போய் வாங்கி வருவாள்..நல்ல நம்ம ஊர் பூ போல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் வாங்கி பாருங்கள்..ரெண்டு நாள் வைத்தாலும் வாடாது

ஹாய் ஜெயந்தி எல்லாரும் இப்படி தான் டென்ஷன் ஆவார்கள் போலிருக்கு..சில வருடங்கள் முன்பு இப்படி சொல்பவர்களை நான் புரிந்து கொள்ளவில்லை இப்பொழுது என் மகள் போவதால் புரிகிறது
சாப்பாடு விஷயம் எனக்கு பெரிசா ப்ரச்சனை இல்லை ஸ்கூளில் இன்று கேட்டேன் சொன்னார்கள் ட்ரெஸில் கொட்டாத வகை உணவு குழந்தைக்கு பிடித்தமானது கொடுத்து அனுப்புங்கள் என்று..இட்லி வேண்டுமாம் எனக்கும் செய்ய சுலபம் ..எப்படி சமாளிப்பேனோ ஒரு தைரியமே வருவதில்லை

ஹாய் திவ்யா மகள் நலமா
ஆமாம் திவ்யா கவலை என்றால் என்னவென்று சொல்ல பயந்து சாகிறேன்..இப்படியே ப்ரெஷர் வந்து போய் சேந்துடுவேனோ தெரியலை அப்படி ஒரு நடுக்கம்.சந்தோஷமா போனால் எனக்கும் சந்தோஷமா இருக்கும்..அழுவ கூடாது அது தான் ப்ராத்தனை
அதிரா இந்த பதிவை அடிக்கடி நினைத்து பார்க்கும்போதெல்லாம் எனக்கும் கண்ணில் நீர் எட்டிப் பார்க்கும்..என் கணவரும் இருந்தால் டென்ஷனை ஷேர் பன்னிக் கொள்வேன் அவர் என்னை விட டென்ஷன் ஆவார் என்பதால் முழுக்க நானே தனியாக தான் அட்மிஷன் முதல் ட்ரேன்ஸ்போர்டேஷன் வரை நடந்து செய்தேன்..அதனால் எல்லா டென்ஷனும் தனியே அனுபவிக்கிறேன்..அவருக்கு முன் ரொம்ப தைரியசாலி போல் நடிக்க வேண்டியதா இருக்கு அது அதை விட கொடுமை
டென்ஷனானால் ஸ்கூலுக்கு விட வேண்டாம் என்று திட்டவட்டமாக சொல்லிவிடுவார்.ஸ்கூளுக்கு போவது கூட ஓ கே ட்ரேன்ஸ்போர்டேஷன் ரொம்ம்ம்ப பயமாக உள்ளது...ப்ஸ்ஸில் பிள்ளைகள் ஏறி போவதை கண்டால் எனக்கு திக் திக் என்று அடிக்கிறது..இவ்வளவு நாளும் காரில் பின்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன் முன்னால் குதிக்காமல் இருக்க..இனி எப்படி தைரியமாக ஏற்றி விடுவேனோ என்ற பயம்..ஸ்கூளில் இருந்தே கொண்டு போய் சேர்த்தால் கூட எனக்கு சந்தோஷம் அவர்கள் வேற ட்ரான்ஸ்போர்டேஷன் கம்பெனிக்கு கொடுத்து அவர்கள் தான் நம் பிள்ளைகளுக்கு பொறுப்பு..ஆண்கள் தான் அசிஸ்டன்ட்ஸ்.அதெல்லாம் ரொம்ப பயமா இருக்கு..நான் ரொம்ப பயந்த காரியங்கள் எல்லாம் முன்பு சுலபமாக முடிந்திருக்கிறது..அது போல் மகளும் சிரித்துக் கொண்டே ஏறி போய்விட வேண்டும்...3 நாளாக ஏ சி நல்ல குளிரில் வைத்தும் நாம் மட்டும் வியர்த்து ஊத்திக் கொண்டு இருக்கேன்..பிறகு இனி ஸ்கூல் அனுப்பி விட்டு வந்து பேசுகிறேன்
ஹாய் சுகா நீங்கள் எல்லாம் சொல்லும்போது ஒரு தெம்பு வருது அப்றம் ஒரு அரை மணிநேரம் தான் திரும்ப பயம் வருது.என்னை முதன்முதலில் ஸ்கூளில் விட்ட நியாபகம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கு அதை நினைத்துப் பார்க்கவே பிடிக்கவில்லை.
எல்கெஜியில் ஒருவருடனும் ஒட்ட மாட்டேன்..அப்படியே யு கெ ஜியில் வேறு ஊரில் வேறு பள்ளியில் சேர்த்தார்கள் அன்று 4.5 வயது சித்தப்பாவுடன் முதல் நாள் அனுப்பினார்கள் ஸ்கூளில் அசெம்ப்லி ஆரம்பித்து ப்ராத்தனை நடந்து கொண்டிருந்தது சித்தப்பா அழகாக யு கெ ஜி செக்ஷன் பிள்ளைகளின் கியூவிற்கு பின்னால் என்னை நிறுத்தி விட்டு போய் விட்டார்..கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் நின்று விழித்ததும் நடுங்கினதும் யோசித்தால் இப்பவும் பயமா இருக்கு.அங்கிருந்த நல்லதொரு டீச்சர் தான் என் மனநிலை புரிந்து கூடவே 1 வாரம் இருந்து பக்கத்திலேயே உட்கார வைத்து எல்லோருடனும் என்னை பழகவும் வைத்தார்.என் வாழ்க்கையில் எனக்கு தன்னம்பிக்கையை முதன்முறை ஊட்டிவிட்டதே அவர் தான்..ஒரு ஆசிரியர் ஒரு மனிதனின் வாழ்வில் எவ்வளவு முக்கிய இடம் வகிக்கிறார் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு..எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டதுஇன்றும் அவர் சொன்ன வார்த்தைகள் தான் என் மனதில் ஆழமாக நிற்கிறது.
என் மகளுக்கு முதல் பள்ளி சென்ற அனுபவம் இனிமையான நினைவாக அமைய வேண்டும் என்பது எனது ஆசை
என்ன இவ ரொம்ப பில்ட் அப் விடுரா என்று நினைப்பவர்கள் கொஞ்சம் சஹித்துக் கொள்ளுங்கள்:-D

ஹாய் தோழிகளே மகள் பள்ளீ செல்ல தொடங்கி 4 நாட்கள் ஓடிவிட்டது..நான் பயந்தது போல் எல்லாம் இல்லாமல் அவள் முதல் நாள் முதலே சந்தோஷமாக போய் விட்டாள்.ஆனால் இப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம்
தினமும் ஒரு நாள் முழுக்க அவள் துள்ளி கொண்டே இருப்பாள் வீட்டில் ..ஆனால் ஸ்கூள் போக தொடங்கின பின் காலை 7 மணிக்கு எழுந்து 8.30 க்குள் ஸ்கூள் போய் சேர்ந்து மதியம் 1 மணிக்கு வீடு திரும்பி சாப்பிட்டதும் தூங்கி விடுவாள்..பிறகு 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணிக்கு தூங்க வைத்து விடுவேன்...ஆனால் இந்த மாலை நேரத்தில் தான் அட்டஹாசம் எப்பவும் தாங்காது ஒரு பக்கம் நிற்காமல் ஓடிக் கொண்டே இருப்பாள் எல்லாத்திலும் ஏறுவாள் குதிப்பாள்.அப்பவெல்லாம் நான் மண்டையை பிய்த்ததுண்டு ஆனால் இப்பொழுது திடீரென இந்தமாற்றம் எனக்கும் சற்றி கவலையாக உள்ளது..ஆனால் பள்ளி சென்ற பின் இதெதுவும் இல்லை ஈஓரளவு அமைதியாக இருக்கிறாள்..படுக்கும் முன் தான் ஒரு 30 நிமிடம் ஆடுவாள்.என் கணவருக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது என்கிறார்.
இப்படி தான் பிள்ளைகள் சோர்ந்து விடுமா..போக போக சரியாகிவிடுமா
சாப்பாடு விஷயத்தை பொறுத்தவரை கொடுத்ததை சாப்பிட்டு விட்டு வருகிறாள்..வயிறெல்லாம் வரும்போது நிரம்பி தான் இருக்கிறது
இரண்டு நாளாக ஜலதோஷம் உள்ளது அதனால் கூட சோர்ந்து போயிருக்கிறாளோ?
மற்றபடி ஸ்கூளை பொறுத்தவரை தினசரி உஷாராக ரெடி ஆகி டாடா சொல்லி விட்டு சந்தோஷமாக போய் விடுகிறாள்

ரேணுகா,

தாமதமான‌ பதிலுக்கு சாரி.

பால் இஷ்டப்பட்டு குடித்தால் நல்லது. அதோடு அரை இட்லி, அரை தோசை என்று கொடுக்க ஆரம்பியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாகப் பழக்குங்கள்.

சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போனால்தான் நல்லா சுறுசுறுப்பாக, ஸ்ட்ராங்காக‌ இருக்க முடியும் என்று சொல்லி புரிய வையுங்கள்.

தளிகா,

ஆரம்பத்தில் இப்படித்தான் சோர்ந்து இருப்பார்கள். பிறகு பாருங்கள், புதுப்புது சேட்டைகளெல்லாம் படித்து விட்டு வந்து வீட்டில் செய்து காமித்து, ஏண்டா ஸ்கூலுக்கு அனுப்பினோம் என்று நம்மையே நொந்து கொள்ள வைப்பார்கள்!!

நீங்கள் அவளிடம் பள்ளியில் என்ன செய்தாள், யார் யார் இருக்கிறார்கள், என்ன டாய்ஸ் இருக்கின்றன, டீச்சர்ஸ், பஸ், எல்லாம் பற்றி கேளுங்கள். எதாவது அவளுக்குப் பிடிக்காதது இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளலாம்.

தளிகா பிள்ளைகள் ஸ்கூல் போனால் கொஞ்சம் அசதி ஆவார்கள்,ஸ்கூல் போய்வந்தால் படுத்தவுடன் தூங்குவார்கள்,வீட்டில் இருந்தால் தூக்கம் கொஞ்சம் அதிகம் இருக்கும்,விளையாட்டு குறைவுதான்,ஆனால் ஸ்கூலுக்கு போகும் போது காலையில் சீக்கரம் முழிக்கனும்,வேனில் போய்வர என்று அவர்கள் கொஞ்சம் அசதி இருக்கும்,ஸ்கூல் பிடித்துவிட்டால் நார்மல் ஆகிடும்,அப்பறம் சேட்டைகள் அதிகரிக்கும்,அழாமல் போறாளா?எதாவது சொல்கிறாளா

ஹுசைன்,பால் ஒரு டம்ளர் குடிப்பான்,அவ்வளவுதான்,மற்ற படி வேறு எதும் இல்லை,ஸ்கூலில் தண்ணிதான் குடிப்பதே இல்லை,சொல்லி சொல்லி நேற்றுதான் 1/2 பாட்டில் குடித்திருந்தான்,இப்படியே வந்தால் டைரியில் எழுதிதான் குடுத்துவிடனும்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்