பாசுமதி அரிசி சாப்பிடுவதால் உடம்பு எடை கூடுமா ?

பாசுமதி அரிசி சாப்பிடுவதால் உடம்பு எடை கூடுமா ? பச்சரிசி,பொன்னி அரிசி சாப்பிடுவதற்கும் பாசுமதி அரிசி சாப்பிடுவதற்கும் சுவை தவிர வேறு வித்தியாசம் உண்டா ? எனக்கு தெரிந்தவர் ஒருவர் பாசுமதி அரிசி சாப்பிடுவதால் உடம்பு எடை கூடும் என்று சொன்னார்கள். அருசுவை தோளிகள் யாருக்காவது தெரிந்தால் கொஞ்சம் help பண்ணுங்க please...

பாஸ்மதி அரிசி சாப்பிடுவதால் எடை கூடும்னு நானும் கேள்விப்பட்டிருக்கேன். அதைவிட அது ரொம்ப சூடுன்னு என் மாமியார் சொல்வாங்க.
ஒருசிலர் வயிறு பெரிசாய்டும்னு சொல்வாங்க. இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மைன்னு எனக்கும் தெரியலை.
யாராவது இதுபற்றி நன்றாக தெரிந்தவர்கள் வந்து பதில் சொல்வார்கள்.

பாஸ்மதி அரிசி சாப்பிட்டால் கண்டிப்பாக எடை கூடும்.புழுங்கல் அரிசியை விட பச்சரிசிக்கு இன்னும் எடை கூடும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் Shamu
பாசுமதி அரிசிக்கு நிச்சயம் எடை கூடும்..அதோட வயிறு வலி கூட சிலருக்கு வரும்...அவங்க சொன்னது உண்மைதான்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அப்படியா?!! அடக்கடவுளே, இது தெரியாதே எனக்கு இவ்வளவு நாளா! நான் தினமும் பாசுமதி சமைக்கும் ஆள் இல்லை, ஆனால் கலந்த சாதம், பிரியாணிக்கு எல்லாம் எப்பவும் பாசுமதி யூஸ் பண்ணுவேன். இனி இன்னும் கொஞ்சம் குறைச்சிக்கவேண்டியதுதான்... அப்புறம், சோனா மசூரி அரிசி பற்றி உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் சொல்லுங்க பிரெண்ட்ஸ். இதுவும் எடை கூட வைக்குமா?! அப்ப‌டின்னா புழுங்கல் அரிசி மட்டுமே உடம்புக்கு நல்லதா?! கொஞ்சம் எல்லாம் சொல்லுங்கப்பா.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

தவராக நினைக்க வேண்டாம் நீங்கள் அருசுவைக்கு புதியவங்களா இல்லை ஸ்ரீ ஆ?எனக்கு ஸ்ரீ தெரியும் அவங்களான்னு சந்தேகம் இப்பலாம் சிலர் பெயரை மார்றிடுராங்க சொல்லிக்காம அதனால்தான் கேட்கிறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

கடவுளே...இது தான் என் உடம்பின் ரகசியமா நான் ஒவ்வெரு நாலும் பசுமதிதான் சமைப்பான்.நன்றி தோழிகளே இந்தகுரிப்பு குடுத்ததுக்கு.நன்றி சுஸ்ரீஇப்படி ஒருகேல்விகேட்டத்துக்கு.எனக்கு புளுங்கள் அரிசி பிடிக்காது.வேற என்ன அரிசி பாவிக்கலாம் ப்ளிஸ் சொல்லுங்களேன் யாராவது தெரிந்தால்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் மர்ழி,
எப்படி இருக்கிங்க?! மரியமும், அவள் குட்டி தம்பியும் நலம்தானே?! போன வருடம், நீங்க முதலில் வரவேற்ற அதே ஸ்ரீ தான் நான். அப்புறம் யாரோ ஒரு ஸ்ரீ (Shree28) என்று அறுசுவைக்கும் வரவும், இப்ப‌ நான் என் முழு யூசர் நேம் (Susri) போட்டு பதிவுகள் போட்டுட்டு இருக்கேன் மர்ழி! மத்தப்படி, நான் அதே, உங்களுக்கு தெரிந்த அந்த ஸ்ரீ‍யே தான்!! :-)

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

எப்படி இஉர்க்கீங்க நாங்க எல்லோரும் நலம்..பொண்ணு நலமா?நல்ல வேலை டவுட் கிளியர் செய்தது இல்லைனா நான் யாரோன்னு நினைத்து மேலோட்டமா பேசி இருப்பேன்..நீங்க மர்ழி மறந்துட்டாங்களேன்னு நினைத்து இருப்பீங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அச்சச்சோ..........சுஸ்ரீ...........ஆமா...ஆமா...குண்டாகிடுவீங்க.........பயந்து ஓடிவராதீங்க........

உங்களைப்போல் தான் நானும் தினமும் சோனா மசூரி,புலாவ்,பிரியாணிக்கு பாசுமதி அரிசி....

ஒன்று சொல்லட்டுமா........அரிசியில் அதிகளவு கார்போஹைட்ரேட்டு உள்ளது.இது பற்றி நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்.சோனாமசூரி,பாசுமதி எல்லாமே பச்சை அரிசிகள் தான்.புழுங்கள் அரிசியில் அவிக்கப்படுவதால் சிறிதளவு ஃபைபர் உள்ளது.அது பச்சை அரிசியில் இல்லை,சுத்தமாக தீட்டிய வெறும் சக்கை தான் அது.என்ன செய்வது? வேறேதாவது மற்ற அட்ஜஸ்ட்மென்ட்ஸ் தான் செய்து இதை பேலன்ஸ் செய்யனும் .

உமா.

உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி. நான் தினமும் சோனா மசூரி அரிசியில் தான் சமைப்பேன். பொன்னி அரிசி சாப்பிட்டால் உடம்பு எடை கூடுமா? தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்

மேலும் சில பதிவுகள்