மஸ்கட்

தேதி: April 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

மைதா - 500 கிராம்
சீனி - 500 கிராம்
நெய் - 300 கிராம்
தண்ணீர் - 1 1/2 போத்தல்
ஏலம் - 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
திராட்சை - 2 மேசைக்கரண்டி
கேசரிப் பவுடர் - ஒரு சிட்டிகை


 

மைதாவை ஒரு துணியில் கட்டி 1 1/2 போத்தல் தண்ணீரில் 8 மணித்தியாலம் ஊறவைக்க வேண்டும்.
பின்பு அதனை எடுத்து பிசைந்து பால் போல் எடுக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு சீனியையும் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
கலவை இறுகி வரும் போது சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
கேசரிப் பவுடரையும் சிறிதளவு நீரில் கரைத்துவிடவும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, ஏலக்காய்த்தூளையும் சேர்த்துப் போடவும்.
இக்கலவையில் சிறிதளவு உருட்டிப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.
அப்பொழுது இறக்கி ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, அழுத்தி விரும்பிய வடிவில் வெட்டிப் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் வ‌ற்ச‌லா இது என்ன‌து பா ம‌ஸ்க‌ட், ம‌ஸ்கோத் ஹ‌ல்வா?
ஜ‌லீலா

Jaleelakamal

வத்ஸ் மஸ்கட் செய்து பாத்தேன் கொஞ்சமாத்தான்.சூப்பர்.மிக்க நன்றி.
சும்மா இருங்கோ ஜலீலாக்கா மஸ்கோத் ஹல்வாவா?
இது ஒரிஜினல் பேரா இருக்கும்.இதை நாங்களெல்லாம் செல்லமா மஸ்கட் எண்டுதான் கூப்புடுவோம்.

சுரேஜினி

சுரேஜினி நலமா? மஸ்கட் செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி. ஜலீலா கொஞ்ச நாள் பொறுங்கோ யாரும் சமைக்கலாம் பகுதிக்கு மஸ்கட் செய்து அனுப்புகிறேன்.அப்பொழுது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"