தோழிகளின் கவனத்திற்கு... பகுதி 3.

தோழிகள் இங்கே தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்,சந்தேகமிருந்தால் கேட்கவும் முன் பகுதிகளின் தொடர்ச்சியான இப்பகுதிக்கு அன்புடன் அழைக்கிறேன்.

நன்றி
உமா.

அன்புள்ள அட்மின் அவர்களுக்கு,
என‌ பெய‌ர் உமா என்ப‌தும்,உட‌ற்ப‌யிற்சி,ஆரோக்கிய‌ம் ம‌ற்றும் அழ‌கு குறித்து குறிப்புக‌ளை கொடுத்துவ‌ருகிறேன் என‌ப‌தும் தாங்க‌ள் அறிந்த‌தே.
ப‌குதிக‌ள் 1 ம‌ற்றும் 2 ன் தொட‌ர்ச்சியாக‌ 3 தொட‌ங்கியுள்ளேன்.நான் விரும்புவ‌தெல்லாம் இப்ப‌குதியில் சில‌ உட‌ற்ப‌யிற்சிக‌ளின் பட‌ங்க‌ள் சேர்க்க‌ வேண்டும்.தாங்கள்,முன் ஏதோ ஒரு ப‌குதியில் இந்த‌ ஃபார‌மில் ப‌ட‌ங்க‌ளை இணைத்திருப்ப‌தை அறிந்தே நான் இந்த‌ வேண்டுகோளை விடுத்துள்ளேன்.

இது சாத்திய‌மென்றால் என‌க்கு சில‌ பதில்க‌ளை கொடுங்க‌ள்.எப்படி அனுப்ப‌வேண்டும்? எந்த‌ மின்னஞ்சல் முக‌வ‌ரிக்கு அனுப்ப‌ வேண்டும்? அப்ப‌டி முடியாதென்றாலும் என‌க்கு தெரிய‌ப்ப‌டுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புட‌ன்
உமா.

வாவ் மூன்றாவது இழை.. றைவர் உமாவுக்கு வாழ்த்துக்கள்.. மற்ற இழைக்கான லின்க்ஸ் குடுத்துடுங்க... புதுசா வரவங்க படிக்க உதவியாயிருக்கும்... இன்னும் பழைய இழை ல கடைசியில் உள்ள பதிவுகளை படிச்சு முடிக்கலை... படிக்க ரொம்ப கவனம் தேவைன்றதால அப்படியே வச்சிருக்கேன் ... :-) சீக்கிரமா வந்து மற்ற கேள்விகளையும் கேட்கிறேன்..

ஆஹா.. என் கணவர் காதை இப்படி காப்பாத்திட்டீங்களே... மிக்க நன்றி இலா அண்ட் சுஸ்ரீ .... நல்ல தகவல்... இது புது விஷயந்தான் எனக்கு... அப்ப இதையே கொஞ்ச நாட்களுக்கு கண்டினியு பண்ணறோம்...

சுஸ்ரீ, என் பதிவு தான் உங்களை குழப்பிடுச்சுன்னு தெரியும் :-) அதான் அர்த்த ராத்திரியில் நெட்டை தேடிப்பார்த்தேன்.. தகவல் கிடைத்ததும் ஓடோடி வந்து சொன்னேன்... எப்படியோ எனக்கு ஒரு நல்ல விஷயம் தெரிந்தது...

உங்க வலியெல்லாம் கண்டதும் எனக்கும் கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நடந்தது ஞாபகம் வருது... என் கணவர் வாங்கியிருந்த dumb bells ஐ இந்த பலசாலி எடுத்து தூக்கி பாத்தேன் (20 kg) (ரெண்டு கையாலும் தான் :-) )... exercise பண்ணும் நோக்கம் இல்ல.. சும்மா ரவுசுக்கு... தூக்க முடிஞ்சதும் அப்படியே அதை அந்த பக்கம் இந்த பக்கம் என்று... ஹி ஹி.. அப்புறம் வலது shoulder மூட்டு வலி.. எனக்கு இது எதனால் என்று புரிந்ததால் விட்டு விட்டேன்... இரண்டே நாட்களில் சரியாகிவிட்டது ...

சரி, ஒரு முக்கியமான விஷயம்... கை கால் மூட்டு x - ரே எடுப்பது எலும்பில் ஏதும் ப்ரோப்லேமா என்று பார்க்க, மற்றும் மூட்டு சரியாயிருக்கா என்று பார்க்க... தசைகளில் ஏற்ப்பட்ட சிறிய மாற்றங்கள், மற்றும் sprain, strain எல்லாம் அதில் தெரியாது... :-)

மிக்க நன்றி உமா உங்க தெளிவான பதிலுக்கு... பிற்காலத்தில் உடற்பயிற்ச்சி செய்ய ஆரம்பித்தாலும் நான் fitness சென்டெர் சென்றே ஆரம்பிக்கிறேன் (வாக்கிங், வீட்டில் செய்யும் உடற்பயிற்ச்சி தவிர்த்து)...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

உமா த்ரெட் 2-ல் என்னுடைய கேள்வியை நீ படிக்கலியா அதற்கு பதில் சொல் உனக்கு நேரம் கிடைக்கும் போது. 3 வது இழையும் வெற்றிகரமாக செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை. உன்னுடைய சேவைக்கு வாழ்த்துக்கள். போட்டொகளை அறுசுவைஅட்மின் @ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு அனுப்பு. அப்படி இல்லையெனில் போட்டோ பக்கெட் அல்லது கூகுள் போட்டோஸ் இப்படி எதிலாவது போட்டு அந்த லிங்கை இங்கே கொடுக்கலாம்.

சந்தனா ரொம்ப நல்ல தகவலை உங்க மூலமா தெரிஞ்சுகிட்டேன். பால் பற்றி, ப்ரெட் பற்றி நல்ல தகவல் கொடுத்திருந்தீங்க. சந்தனா நான் இப்போ ஒரு மாதமாக லோஃபேட் மில்க்தான் எடுக்குறேன். பழைய த்ரெட்டில் உங்க கிட்ட நான் மனு கொடுத்திருந்தேன். அதை பரீசீலிக்கவே இல்லை நீங்க. போய் பாருங்க. படிச்சீங்களா என்னானு தெரியல. உங்களுக்கு தெரிந்த தகவலை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இரண்டு நாளா வென்னீர் ஊற்றியதால் மூட்டு வலி கொஞ்சம் குறைந்தமாதிரி தெரியுது. உசேன் நானும் வாக்கிங் ட்ரை பண்ணுகிறேன். உங்களுக்கு வலி குறைஞ்சிருக்கா. உசேன் நீங்க ஸ்கிம்டு மில்க் யூஸ் பண்ணுவீங்களா இல்லை லோஃபேட்டா. மகளுக்கு ஃபுல்ஃபேட் எடுப்பேன் எனக்கு மட்டும் லோஃபேட் யூஸ் பண்ணுவேன். ஆனாலும் தினமும் எனக்கு பால் சேர்க்க மாட்டேன். தினமும் ப்ளாக் காபிதான் குடிப்பேன் எப்பவாவது பால் சேர்க்கத்தோன்றினால் சேர்ப்பேன். ஓட்ஸ் கஞ்சினா அதில் சேர்ப்பேன். பால் தினமும் உணவில் சேர்க்கனுமா உமா. அதனால் கூட எனக்கு கால் வலி வருதோ?

சுஸ்ரீ கல்யாணநாள் ரொம்ப சந்தோஷமா போச்சுப்பா. அன்னிக்கு பிரியாணி, சிக்கன் ப்ரை, நைட் டின்னர் அவுட்டர்னு ரொம்ப ஜாலியா போச்சு. அன்னிக்கு மட்டும் டயட்டை கட்டுப்படுத்திக் கொண்ட்டேன். உங்களுக்கும் மஸுல் பெயினாகத்தான் இருக்கும்ப்பா. அதனால் ஏதாவது ஆயின்மெண்ட் போட்டு பாருங்க. நான் பெயின் கில்லர் போடுவதை நிறித்தி விட்டு, ஆயின்மெண்ட் போட்டு நல்ல சூடான வென்னீர் ஊற்றி கொண்டே இருந்தேன். இன்னிக்கு கொஞ்சம் நல்லாயிருக்கு. நீங்களும் ட்ரை பண்ணுங்கப்பா.

எனக்கும் இந்த த்ரெட் ரொம்ப யூஸ் புல்லா இருக்கு தாங்க்ஸ் டூ உமா,சுஸ்ரீ, சந்தனா, மிஸஸ் உசேன். தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆஹா! 3வது தொடங்கியாச்சா.நான் இதை கவனிக்காமா பகுதி 2ல் பதிவு போட்டுட்டேன். தனிஷா உங்க கால் வலி குறைந்தது மகிழ்ச்சி.எங்க பாட்டி கூட மூட்டு வலிக்கு வெந்நீர் ஊற்றிக்குவாங்க.பெயின்கில்லர் அதிகமா வலி இருந்தா மட்டும் எடுப்பது நல்லது.தனிஷா உங்க கல்யாண நாள் விருந்து எங்களுக்கு எல்லாம் இல்லையா?

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாய் உமா
முன்றாவது திரட்டும் துவங்கியயிர்று உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

Pop-Eye சந்தனா!!! ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தான் பரிசோதனை எலி பழக்கம். இந்த மாதிரி ஃப்ரீவெயிட்ஸ் எல்லாம் முதலில் யாராவது சொல்லி கொடுத்த பின் தான் செய்யனும் . அதிலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கனும். இல்லைன்னா பாப்-ஐ த செயிலர் வுமன் ஆகிடுவிங்க :))

சரியா செய்தால் மிஷல் ஒபாமா மாதிரி கவர்ச்சியான கைகள் கிடைக்கும் :)

உமா!! வீட்டிலே செய்யக்கூடிய டான்ஸ் ஏரோபிக்ஸ் வீடியோ எதாவது சஜஸ்ட் செய்ய முடியுமா?

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா... பட்டால் தானே தெரியுது... நீங்கள் சொல்வது சரி தான்... இனி அப்படி செய்யமாட்டேன்... மிக்க நன்றி...
(என்னை என் தம்பி சின்ன வயசுல இந்த பேர் கொண்டு தான் கூப்பிடுவான்... :-) )

தனி தனி - உன் கேள்வியை பார்த்தேன் ஹி ஹி ... இன்னும் ஒரு பதிவு போடனும்ன்னு நெனச்சிருந்தேன்.. சோம்பேறித்தனம்... சாரி... கண்டிப்பா சீக்கிரம் எழுதறேன்... (நீ மறந்துடுவே ன்னு நெனச்சேன் :-) )

மாத்திரை தேவையில்லாம போடக்கூடாது தான்... பக்க விளைவுகள் உண்டு... ஆனால் வலி ரொம்ப அதிகமாயிருக்கும் போது டாக்டர் prescription ஓட மிக குறுகிய காலத்துக்கு எடுத்துக்கறது தப்பில்லைன்னு நினைக்கிறேன்... ஏன்னா அது வெறும் pain கில்லெர் மட்டும் இல்ல.. anti inflammatory யும் கூட...வீக்கத்தை குறைக்க உதவி பண்ணும்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் தோழிஸ்,

தோழிகள் முதன் முதலாகவோ,இல்லை முன் இழைகளை பார்வையிடவோ அவர்களின் வசதிக்காக முதல் 2 இழைகளின் லின்க் கொடித்துள்ளேன்.
தங்களின் சந்தேகம் ஏற்கெனவே கேட்கப்பட்டதா? இதற்கான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளதா? என தீர ஆராய்ந்து விட்டு கேள்விகளை கேளுங்கள்.

PART 1:
http://www.arusuvai.com/tamil/forum/no/11771
PART 2:
http://www.arusuvai.com/tamil/forum/no/12650

தனிஷா,ஹுசேனம்மா,இலா,
சுஸ்ரீ,திவ்யா அனைவரும் நலமா?
தொடர்ந்து ஆதரவுடன்,மறக்காமல் வாழ்த்துகள் சொல்லும் சுகா,சந்தனாவிற்கும்(றைவர் தான் கொஞ்சம் ஓவருங்கோ!) எனது நன்றிகளும்,விசாரிப்புகளும் சேரும்.

சந்தோஷம்,அனைவரின் பங்களிப்பும் வரவேற்கத்தக்கது.எனக்கு நிறைய எழுத வேண்டும் போல் உள்ளது. இன்று வேலைகள் கொஞ்சம் அதிகம் உள்ளதால் இன்றைய பதிவை மட்டும் தற்போது கொடுத்துவிட்டு நேரமிருக்கும் பொழுது விவரமும் விளக்கமும் கொடுக்கிறேன்.

அட்மினிடமிருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை.நானும் பல காலமாக என் வெப்சட்டை டிசைன் செய்கிறேன்...செய்கிறேன்...செய்துகொண்டேயிருக்கிறேன்,இன்னும் முடியவில்லை,சரி பிளாக்ஸ்பாட்டாவது எளிதில் போடலாம்ன்னு பார்த்தா அந்த வேலையும் பாதியில தான் நிக்குது.அதனால தான் இப்படியெல்லாம் உங்களுக்கு தேவையானதை சரியாக இப்பகுதியில் கொடுக்க முடியவில்லை.எல்லோரையும் அங்கே பார்வையிட சீக்கிரம் அழைக்கலாம் என்று நினைக்கிறேன்...நினைக்கிறேன்...நினைத்துக்கொண்டேயிருக்கிறேன்.
இதற்கிடையில் அடுத்த மாதம் வேறு வீடு மாற வேண்டும்...ஆகஸ்ட்டில் இந்தியா வெக்கேஷன் செல்ல முடிவு...க்ளையன்ட்ஸ் வேலைகள்...அப்பப்பா!!! இந்த வீகென்ட்(சனிக்கிழமை)ஃபிரண்டோட பொண்ணுக்கு 2 ஆவது பிறந்தநாள் விழா,பார்ட்டி இருக்கிறது போக வேண்டும்.

சரி,இன்று கொஞ்சம் ஜெனரலாக உள்ள விஷயங்களும் அதன் பயன்களையும் கூற விரும்புகிறேன்.

இன்றைய தகவல்கள்:

1)நாம் சாப்பிடும் சாப்பாடு மட்டுமே நம் பிரச்சனைகளின் முழு காரணமாக முடியாது, இது பரம்பரை,ரேஸ் பொருத்தும் அமைகிறது.

2)எவ்வளவு தான் ப்ரீக்காஷனாக இருந்தாலும் வரவேண்டியது வந்துவிடுகிற‌து,இதற்கு காரணங்கள் ஒரு கேள்விக்குறியாகவும் உள்ளது.

3)இன்றைய நவீன கால மாற்றங்களும்,முக்கியமாக அதிகரித்துள்ள செடன்ட்டரி(உட்கார்ந்தே வேலை செய்தல் மற்றும் எதையும் செய்தல்)லைஃபும் மக்களிடம் அதிகளவு ஸ்ட்ரெஸை அதிகரித்துள்ளது.இந்த ஸ்ட்ரெஸ் பற்பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.

4)இதனால் முக்கியமாக கம்பியூட்டரில் வேலை செய்யும் போது 1 மணிநேரத்திற்கொரு முறையாவது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வது நல்லது.(அபாயம் எதையும் நான் தற்போது சொல்ல விரும்பவில்லை).

5)இடுப்பிலும்,வயிறிலும் உள்ள அளவுக்கதிகமான சதைப்பகுதி(தொப்பை)தொடர்ந்து நீடிக்கும் பொழுது பலவகையான வியாதிகளுக்கு காரணமாகிறது.

6)இவையெல்லாம் தவிர்க்கும் வண்ணம் செய்யக்கூடிய வாக்கிங்,ஜாகிங்,ரன்னிங்,ஸ்விம்மிங்,ஸ்கிப்பிங் அனைத்தும் எவ்வளவு நன்மை தரும் ஏரோபிக்ஸ் எக்ஸர்ஸைஸ் தெரியுமா!!!

7)சாதாரண லோ‍இன்டென்சிட்டி ஏரோபிக்ஸ் எக்சர்சைசும்,சில ஸ்ரெட்ச்சுகளும் போதும் வார்ம் அப்பிற்கு இது தான் வார்ம் அப்.இது உடலை ஹைஇன்டென்சிட்டி என்டுர‌ன்ஸுக்கு தயார் படுத்தும்.அதாவது மஸூல்ஸ்,பிளட் வெப்பத்தை அதிகப்படுத்தி இதய ஓட்டத்தை தயார் நிலைக்கு வேகமாக துடிக்க தயார்படுத்தல்,இது 10 லிருந்து 15 நிமிடம் வரை செய்து விட்டு தான் கடும்பயிற்சிகள்(ட்ரெட்மில்,எளிப்ட்டிகல்,அப்ஸ்...)மேற்கொள்ள வேண்டும்.

8)இதே கூல் டவுன் என்பது அதிகப்படுத்திய அனைத்தையும் சராசரி நிலைக்கு கொண்டு வருதல்,இதுவும் 10 நிமிடம் செய்தல் வேண்டும்.

9)தாய்மார்களே!...அனைவரும் தொடர்ந்து 1 மணி நேரம் வாக்கிங் மற்றும் கட்டுப்பாடான உணவுகளை மேற்கொள்ளுங்கள்,இதுவே பெண்களுக்கு பெருமளவு போதுமானது.

10)முக்கியமாக மனதையும் உடலையும் தளர்வாகவும் சந்தோஷமாகவும் வைத்திருங்கள்.இது மிகவும் உதவும் விஷயம்.மனக்குழப்பமே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிற‌து.முத‌ன் முத‌லாக‌ உட‌ற்ப‌யிற்சி செய்ய‌ தொட‌ங்குவோர் நிறைய‌ க‌ருத்தில் கொள்ளவேண்டும்.பிகின‌ர்ஸ்க்கு ம‌ஸ்குலோஸ்கெலிட்ட‌ல் பெரும் பாதிப்ப‌டையும்(சுளுக்கு,மூட்டுவலிகள்...)வாய்ப்புள்ளது.

த‌னிஷா(வேலை இருக்குன்னு இவ்ளோ எழுதியிருக்கியேன்னு கேட்காதே!),உன் கேள்விக்கு ப‌தில் கிடைத்துவிட்ட‌தா?... இலா க‌ண்டிப்பாக‌ அனைவ‌ருக்கு ப‌ய‌ன்ப‌டும்ப‌டியான‌ லின்க்கோ அல்ல‌து விளக்கமோ கொடுக்கிறேன்.திவ்யா அருண் இது அனைத்தும் உங்க‌ளுக்கும் பொருந்தும்.

இவைப‌ற்றி ஏதாவ‌து ச‌ந்தேக‌மானால் கேளுங்க‌ள் தோழிக‌ளே...மீண்டும் ச‌ந்திப்போம்,
ந‌ன்றி
உமா.

தொழிகளே! இன்று அட்மின் எனக்கு இமெயிலில் பதில் அனுப்பியிருந்தார்.இப்பகுதியில்(மன்றத்தில்)படங்களை சேர்க்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் திங்கள்கிழமையன்று படங்களுடன் விளக்கமும் இடம் பெறும் என பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது என‌க்கும் நீண்ட‌ நாள் க‌ன‌வுதான்.

மீண்டும் ச‌ந்திப்போம்
அன்புட‌ன்
உமா.

வணக்கம் உமா,நலமா? இப்போதான் உங்கள் அனைத்துப் பதிவுகளையும் ஒரு சுற்று பார்வையிட்டு வந்தேன்.
உங்கள் படங்களுடன் கூடிய விளக்கங்களை கூடிய சீக்கிரமே எதிர்பார்க்கின்றேன்.
என் கணவர் தினமும் காலையில் 1.30 மணித்தியாலங்கள் திரட்மில்லில் ஓடிவிட்டு சிறிது நேரம் தலை கீழாக நின்று பின் வயிறு குறைவதற்குரிய பயிற்சிகளைச் செய்வார். அவருக்கு உடலில் எங்கும் தசைப் பகுதி இல்லை. நன்கு இறுகிய உடல். ஆனால் வயிற்றுப் பகுதிதான் அடிக்கடி கூடுவதும் குறைவதுமாக உள்ளது. அவரிடம் உள்ள கெட்ட பழக்கம் நேரத்திற்குச் சாப்பிடுவதில்லை. வேலைப் பளு அதிகரித்தால் ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்து வேலை செய்வார். கூடுதலாக ஒவ்வொரு காரணம் சொல்லி பட்டினி கிடந்து வயிற்றைக் குறைக்கப் பார்க்கின்றார். நான் "அது தவறு" என்று எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. இப்படி அடிக்கடி வயிறு கூடிக் குறையாமல் நிரந்தரமாகக் குறைப்பதற்கு அவர் என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

பிருந்தா

மேலும் சில பதிவுகள்