"செல்வி(ESMS-4)" "கவிசிவா"சமையல்கள் அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி, 15 பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 16 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ

தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "செல்வி(ESMS-4)" "கவிசிவா"சமையல்கள் அசத்த போவது யாரு???
முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

அசத்தல்ராணி அம்மு,அசத்தல் இளவரசிகள் ஸ்ரீ,ஸ்வர்ணா மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்த சமைத்து அசத்தலாம்பகுதியை இவ்வளவு வாரங்களாக வெற்றியுடன் நடத்திச்செல்லும் அதிரா,ரேணுகா உங்கள் இருவருக்கும் நன்றி!நன்றி!நன்றி!

இதில்பங்கு கொண்டு சமைத்து சுவைத்துப்பார்த்த அனைத்துத்தோழிகளுக்கும் நன்றி.

வனிதா உங்கள் பதிவு படித்து சிரித்துவிட்டேன்.எல்லோருக்கும் எடை அதிகரித்து இருக்காது ஏன்னா எல்லோரும் சாப்பிட்டுவிட்டு நன்றாக எக்ஸைஸ் செய்திருப்பாங்க.
பின்னூட்டம் குடுக்கமுடியவில்லை என்று மன்னிப்பெல்லாம் எதற்கு.இப்பொழுது உடம்புக்கு பரவாயில்லையா?

மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் நன்றி

சவுதி செல்வி

சவுதி செல்வி

அசத்தல் ராணி அம்முவுக்கும், மற்றும் அசத்தல் இளவரசிகள் திருமதிகளான சிறி, ஸ்வர்ணா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்:) நீங்கள் சமைப்பதை சாப்பிடுவது நீங்களா அல்லது உங்கள் வீட்டுக்காரரா??. எதற்கும் எடையை பார்த்துக்கொள்ளுங்கள். நல்ல சுறுசுறுப்பாகத்தான் இருக்கின்றிர்கள். தொடரட்டும் உங்கள் சேவை. ரேணுகா பட்டியல் அற்புதமாக தயாரித்து இருக்கின்றிர்கள்.நேரமும் நல்லாய் செலவு செய்திருப்பிர்கள். ( சம்பளம் இல்லாத உத்தியோகம் தானே) அறுசுவைக்கு நல்ல சேவை அது எங்களுக்கு தேவை. இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் அதிரா ரேணுகா மற்றும் தோழிகள்
அசத்தல் ராணி, மற்றும் இளவரசிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
திறம்பட நடத்தி வரும்அதிரா, ரேணுகா'வுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் குறிப்புகள் தந்து உதவிய சவுதி செல்வி, கவி சிவா இருவருக்கும் நன்றிகள்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அசத்தல் ராணியாகவந்த அம்முவுக்கும்,இளவரசிகளாக வந்த ஸ்ரீ.,க்கும், ஸ்வர்ணாவுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை திறமையான முறையில் நடத்தும் ரேணுகாவிற்கும்,அதிராவிற்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும். அன்புடன் அம்முலு.....

அசத்தல் ராணியாக வந்த அன்பு சகோதரி அம்முவுக்கும், இளவரசிகளாக வந்த அன்பு சகோதரி ஸ்ரீ.,க்கும், அன்பு சகோதரி ஸ்வர்ணாவுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த புல்லட் ரெயினை திறமையான ஓட்டும் றெவர் அன்பு தங்கை அதிரா மற்றும் நடத்துனர் / கணக்காளர் அன்பு தங்கை ரேணுகாவிற்கும், எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்.

அன்பு சகோதரன்

பி.கு: நான் இருக்கும் ஊரில் வேப்ப மரமே இல்லையே??? எல்லோர் பேரையும் டைரியில் கவனமா நோட் பண்ணிகொண்டேன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ட்ரைவருக்கும் , டிக்கெட் கலெக்டருக்கும் வாழ்த்துக்கள். மேலும் இதே போல தொடர ரேணு டிக்கெட் கலெக்டர்& அதிரா ட்ரவர்
இருவருக்கும் வாழ்த்துக்கள். கவி,செல்வி இருவரும் மேலும் குறிப்புகள் கொடுத்து நம்ம அருசுவை சார்பில் நன்றி.

அடுத்த சமைக்கலாம் தொடரில் தொடருகிறேன்.

நன்றி.

வாழ்த்துக்கள்...
நம்பித்தான் ஆக வேண்டும்!! இம்முறை 29 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள்... ஆகா எங்கட ரெயின் எங்கேயோ போகுது....

அதிகம் குறிப்புக்களை மிக ஊக்கமாகச் செய்து, அசத்தல் ராணிப்பட்டத்தை தட்டிச்சென்றுள்ள "அம்மு" விற்கு வாழ்த்துக்கள். இரண்டாம் மூன்றாம் இடங்களை.. ஊக்கமாகப் போட்டிபோட்டுப் பிடித்துள்ள "சுஸ்ரீ" க்கும், "சுவனர்ணா" விற்கும் வாழ்த்துக்கள்.

மற்றும் மூக்கைசிந்தியும் சிந்தாமலும்.. தடக்கிவிழுந்தும்... ஓடி ஓடி வந்தும்.. அமைதியாக வந்தும்... எல்லோரையும் தம் அழகு வார்த்தைகளால், கவர்ந்து உற்சாகமூட்டி, ரெயினையும் அறுசுவையையும் கலகலப்பாக்கி எம்மோடிணைந்து குறிப்புக்கள் செய்த,(பிளேனால் இறங்கிய களைப்பையும் மறந்து... சமைத்த) அருமைச் சகோதர சகோதரிகளுக்கு.. வாழ்த்துக்களும் மிக்க மிக்க நன்றிகளும்.

சரியான நேரத்துக்கு கணக்கெடுத்துப் போட்டு எம்மை அசத்திய ரேணுகாவுக்கும் நன்றி.

நல்ல நல்ல குறிப்புக்களைத் தந்து, எம்மோடிருந்து நாம் குறிப்புக்கள் செய்ய உதவிய சவூதி செல்விக்கும், கவிசிவாவிற்கும் மிக்க நன்றி.

மாலி, அநாமிகா... குழல்புட்டு இளவரசிப்பட்டம் தான் வேண்டும் என்று பெற்றுக்கொண்டீங்கள்:).. அடுத்த முறை இன்னும் முயற்சிக்க வேண்டுகிறேன்.

இலா, ஹைஷ் அண்ணன், இரு எழுத்துப்பெயருக்கு ஏற்றமாதிரி இரு:) குறிப்புக்கள் மட்டும் செய்து ஒரு மாதிரி, ஏசி சீற்றைப் பார்த்து இருந்திட்டீங்கள்:) அடுத்த முறை குறையச் செய்தவர்களுக்கெல்லாம்... 3ம் வகுப்புப் பெட்டிதான் தரப்படும்:)..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அசத்தல் அம்மு, சுஸ்ரீ, ஸ்வர்ணா - பிடியுங்கள் வாழ்த்துக்களை.. ஸ்வர்ணா - உங்களுக்காக ஸ்பெஷல் பார்சல் அனுப்ப ஏற்ப்பாடு நடந்து கொண்டிருக்கிறது.. கவனம்....

(அதிரா அண்ட் ரேணு - ஒன்னும் சமைக்காமலேயே வந்து இந்த இழையில பதிவு போட்டா பனிஷ்மென்ட் எதுவும் இல்லை தானே.. )

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

நன்றி.. நன்றி...
விஜி நாங்கள் வக்கேஷன் விடுவதே.. கொஞ்சம் ஒதுங்கி இருக்கலாம் என்றுதான்:), நீங்கள் என்னவென்றால் இனித்தான் கதைக்கவருவேன் என்கிறீங்களே... வாங்கோ... வாங்கோ..

சுவர்ணா!! இப்ப கை நடுக்கம் எப்படி இருக்கு:)?.

சுஸ்ரீ பத்திரமா ஏறி பட்டமும் வாங்கிவிட்டீங்கள் பத்திரம் பட்டம்:)... அதைப் பறிக்கவென்றே சிலர் காத்திருக்கிறார்கள்:).

இமா... செய்ததே மூன்று அதுக்குள் முப்பது பதிவுகள் போட்டு கணக்குச் சரியா என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் வேறு:) ஐயோ ஐயோ...:).

வனிதா நன்றி.
///பங்கு கொண்டு அனைவரையும் ஊக்கப்படுத்திய தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் (இந்த லிஸ்ட்'ல வனியும் இருக்கா)./// ஐயையோ தற்பெருமை தாங்க முடியவில்லையே:)... இனியும் என்னால உயிரோடிருக்க முடியாது.:). ஆராவது, ஆறு, குளம் கிட்ட இருந்தா சொல்லுங்கோ கோடி புண்ணியம் கிடைக்கும்... நான் குதிப்பதற்கு:), ஆனால் குளிராத தண்ணியாப்பார்த்துச் சொல்லுங்கோ... எனக்குக் குளிர் தண்ணிபட்டால் உடனே ஜலதோஷம் பிடிச்சிடும்:).

சவூதிசெல்வி மிக்க நன்றி. என்னையும் பொறுத்தருள்க... இனித்தான் பின்னூட்டம் தந்து உங்களை இன்ப வெள்லத்தில் திளைக்க வைக்கப்போகிறேன்:).

ராணி ரேணுகாவுக்காக நான் நன்றி சொல்கிறேன்:) அதென்ன எல்லோரும் எடையைச் சொல்லிப் பயமுறுத்துறீங்கள்:)?, எங்கட ரெயினில் ஏறினாலே பாதி எடை குறைந்துவிடும்:), வேணுமெண்டால் அடுத்தமுறை வாழைத்தண்டு யூஸுக்கு ஏற்பாடு செயிகிறோம்:) பயப்படாமல் வாங்கோ.

ரேணுகா வாழைத்தண்டு யூஸ்:) அதேமாதிரிச் செய்வோம்:) என்ன:)?.

சுகா, அம்முலு மிக்க நன்றி.

ஹைஷ் அண்ணன் மிக்க நன்றி. ஐயையோ புகை, புல்லட் என்றெல்லாம் சொல்லி எம்மை, ரெயினை ஓட்ட விடாமல் சதி எல்லாம் நடக்குதே:)...
என்ன அங்கு வேப்பமரமே இல்லையோ:)?, ஆனால் புளியமரம் நிட்சயம் இருக்குமே:) நாங்கள் அதிக நேரம் இருப்பதே அந்த புளியிலதானே:).... ஐயையோ... இதுக்குமேல என்னால முடியவில்லை.... ஹா...ஹா...ஹா....

மிக்க நன்றி விஜி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹா.. ஹா... ஹா... சந்தனா..
உங்களுக்கு விஷயமே தெரியாதோ:)?. இந்த இழையில், கால் வைத்தாலே அடுத்த முறைக்கு கட்டாயம் அதிகம் குறிப்புக்கள் செய்யவேண்டும் அதுதான் எங்கட ப.....:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்