"செல்வி(ESMS-4)" "கவிசிவா"சமையல்கள் அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி, 15 பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 16 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ

தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "செல்வி(ESMS-4)" "கவிசிவா"சமையல்கள் அசத்த போவது யாரு???
முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

ஹாய் ரேணுகா
உங்களுடைய ஊர்ருக்கு போரிங்களா உங்களுடைய பயணம் நன்றாக சந்தோசமா அமைய வாழ்த்துக்கள்.நங்கா எல்லோரும் உங்கள மிஸ் பன்னபோரம் ஒரு மதத்துக்கு.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

நன்றி..

என்ன ரேணு நான் கூட நினைத்தேன் என்னோட முறை வருகிறது அதற்க்கும் கணக்கு எடுத்து முடிப்பிங்க என்று நினைத்தேன், என்னங்கோ இப்படி பை சொல்றிங்க எப்ப் உருக்கு கிளம்பறிங்க?
பார்த்திங்களா என்னோட ட்ரேன் வரும் போது நைஸா கிளம்பிட்டிங்க, எங்கடா இந்த விஜிக்கிட்ட மாட்டிக்க போறோம் என்றா? ( கேலி தான்ப்பா டோன் டேக் சிரியஸ்)

நானும் உங்களுக்கு ஒரு நல்ல ஸ்டராபெர்ரி மில்க் ஷேக் தரேன். சாப்பிட்டு விட்டு போங்க அப்ப தன் ஊர்ல தெம்பா எல்லாரையும் பார்த்து பேச முடியும்.
என் பென்னும் வெக்கெசனுக்கு இந்தியா போகனும் என்று சொல்கிறாள். நிங்க எப்ப போறிங்க எப்ப வற்றிங்க மீட் பன்ன முடியுமா என்று?

ஹாய் ரேணு,
நலமா? கோகுல் என்ன சொல்றார்? ஊருக்கு கிளம்பியாச்சா?! கோகுல் பயங்கர எக்சைட்டா இருப்பாரே?! ஆல்ரைட்... நல்லா ஜாலியா போயிட்டு வெக்கேஷன் எஞ்ஜாய் பண்ணிட்டு வாங்க! Have a nice trip!

///என்ன ஸ்ரீ நீங்க சொல்வதை பார்த்தல் அடுத்த முறை பட்டம் வாங்க மாட்டீங்கன்னு இப்பவே முடிவு பன்னிட்ட மாதிரி தெரியுது,இதுதெல்லாம் தப்பு,முடியும் வரை சமைத்து சொல்லனும்///

ஆமாம் ரேணு, அடுத்த வாரம் வரும் ச‌மைத்து அச‌த்த‌லாம் ப‌குதிக்கு நான் அவ்வளவா வ‌ர‌முடியாது என்றே நினைக்கிறேன். வ‌ரும் வார‌ம் இறுதி கிள‌ம்பி, அண்ணன் (இங்கத்தான் இருக்கார்) வீட்டுக்கு போய்ட்டு, அப்ப‌டியே ப‌க்க‌த்தில் எல்லாம் கொஞ்ச‌ம் ஊர் சுத்திட்டு வ‌ர‌லாமென்று ப்ளான்! : ) ஒரு 10,12 நாட்க‌ள் காணாம‌ போக‌ப்போறேன்!. ஆனாலும் நீங்க‌ சொன்ன‌மாதிரி, கட்டாயம் முடிந்தபோது முடியும்வ‌ரை ச‌மைத்து சொல்கிறேன்! ஹேப்பி?!!! : )

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சுகா உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி,நான் ரெம்பவே மிஸ் பன்னுவேன் எல்லாத்தையும்,எனக்கு இங்கிருந்து கிளம்பும் போதே இங்க இருக்கிற பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லும் போது அழுகை வரும்,எல்லாம் கிண்டல் பன்னுவாங்க,எப்படியும் திரும்ப இங்க தானே வர போற அதுக்கு ஏன் அழற என்பார்கள்,இருந்தாலும் ஒரு மாதம் எல்லாரையும் பிரிந்து இருக்கனுமே என்ற கவலை,அதே தான் இப்பொழுதும் என்னவர் கிண்டல் செய்து கொண்டு இருக்கார்,இன்னும் ஒரு மாதம் நீங்கள் எல்லாரும் நிம்மதியாக இருப்பீங்களாம் நான் இல்லாமல்,

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

விஜி ஸ்டராபெர்ரி மில்க் ஷேக் குடிச்சாச்சு,ஊரில் போய் வேலையா செய்ய போறேன்,போய் பேசி கிட்டே இருப்பது தான் வேலையே:)

நான் ஜூன் 27 ஊருக்கு போகிறேன் மீண்டும் ஜூலை 25 வருகிறேன்,நீங்க வறிங்களா?
நான் திருச்சி,நீங்க எந்த ஊரு?பக்கம் என்றால் நிச்சயம் மீட் பண்ணலாம்,நான் எவ்வளவு கவலை பட்றேன் தெரியுமா?இந்த முறை இல்லாமல் போறமேன்னு பாருங்கள் ஆனாலும் நான் சமைத்துவிட்டு தான் போறேன்

பின் குறிப்பு:இரண்டு நாளா இங்க பதில் போட போராடி இன்று போட்டுட்டேன்,.லேட்டா போடுவதற்க்கு மன்னிக்கவும்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஸ்ரீ நலமா ?கோகுல் ரெம்பவே ஜாலியா இருக்கார்,அதைவிட அவங்க அப்பா தான் ஜாலியா இருக்கார்,அப்பாவும் பிள்ளையும் முதல் முறை பிளைட்டில் சேர்ந்து போவதால் என்னை பாடாய் படுத்துகிறார்கள்,எது எப்படியோ இந்த முறை பிளைட்டில் நான் நிம்மதியாய் இருப்பேன்:)

நீங்களும் ஊர் சுற்றா:)விடுமுறையே அதுக்கு தானே ஆனால் கட்டாயம் 2 குறிப்பாவது சமைத்து சொல்லவேனும்
சரியா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சந்தோஷமாகப் போய்விட்டு வாருங்கள் ரேணுகா. உங்கள் பயணம் நீங்கள் விரும்பியவாறு அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ரேணு.. இனிய பயணம் உங்களுக்கும் குடும்பத்துக்கும்..!!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் ரேணுகா
இதில் போட்ட பதிவை படித்திருக்க மாட்டிர்கள் எண்டு திருப்பியும் அங்க பதிவு போட்டுட்டேன்.இந்த பதிலை இப்போது தான் பாத்தேன்.பிரிவை நினைத்து கவலைபடாமல் பார்க்க போகும் உறவுகளை நினைத்து சந்தோசமாக போய்வாருங்கள்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

மேலும் சில பதிவுகள்