ஆலோசனை தேவை தோழிகளே குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை எந்த வயதில் பள்ளியில் சேர்க்கலாம்? அதுவரை வீட்டில் என்னவெல்லாம் சொல்லிகொடுக்க்லாம்? என்ன வயதில் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கவேண்டும்? எப்பொழுது எழுதுவதற்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்? தோழிகளே தங்களுடைய கருத்துக்களை வந்து சொல்லுங்கோ.

என்னுடைய குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது. இதே ஒரு வயது ஒத்த குழந்தைகள் ஊர்ல இன்னும் மூன்று பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தன்னுடைய குழந்தை 10 மாதம் இருக்கும்போதே புத்தகத்தில் Hippopotamus கேட்டால் சரியாக காண்பிப்பாள் அப்படின்னு சொன்னாங்க. எனக்கு இந்த பேர வாசிக்கவே கஷ்ட படறேன் அதுவேற விஷயம் :) இதமாதிரி இன்னும் சொல்லிக்கொடுத்து இருக்காங்க இன்னொரு குழந்தைக்கு பக்தியாக கிருஷ்ணர் படம் தினமும் காண்பித்து சொல்லிகொடுத்து அதுவும் சரியாக காண்பிக்கிறது. எல்லாமே 10 மாதத்தில் இருந்து. என்னையும் எல்லோரும் சொல்லிகொடுக்க சொல்கிறார்கள்
இன்னொரு தோழி அவர்களின் குழந்தைக்கு இப்பொழுது 31/2 வயது ஆகிறது அந்த குழந்தையை நான் முதலில் பார்க்கும்போது சுமார் 11/2 வயது இருக்கும் அப்பொழுதில் இருந்தே அவர்கள் A-Z,1-10 மற்றும் புத்தகத்தில் படங்களை பார்த்து சொல்லிக்கொடுத்து அதில் கேள்வி கேட்பது என்று செய்தார்கள் இப்பொழுது வீட்டில் இருந்துகொண்டே 1-100 , A-Z எழுதுவது படங்கள் வரைந்து கலர் அடிப்பது போன்றவை அந்த குழந்தைக்கு சொல்லிக்கொடுத்து அந்த குழந்தையும் செய்கிறாள். இதில் இன்னுமொன்று என்னவென்றால் சமிபத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது அந்த குழந்தையுடைய அப்பா சொன்னார் நான் அந்த குழந்தைக்கு 6 மாதத்திலிருந்து A-Z சொல்லி கொடுக்க ஆரம்பித்துவிட்டேன் என்று....
அதனால் தோழிகளே நீங்க உங்க மேலான கருத்துக்களை இங்க வந்து சொல்லுங்கோ எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்

அனாமிகா, நலமா?? சொல்கிறேன் என்று தப்பாக எண்ண வேண்டாம். மற்றவர்களின் குழந்தைகளோடு உங்கள் குழந்தையை ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அது வீணான டென்ஷன், பயம், மனழுத்தம் என்று நீங்கள் தான் பாதிக்கப்படுவீர்கள். நிறைய கலர் புல்லான புத்தகங்கள் வாங்கி, மெதுவாக சொல்லி கொடுங்கள். எதையும் திணிக்க வேண்டாம். அவர்களுக்கு வெறுப்பு வந்துவிடும். மற்றவர்கள் அவர்கள் குழந்தைகளை பெருமையாக சொன்னால் சும்மா கேட்பதோ நிறுத்து விடுங்கோ. ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்ப்பது நலம்.
see the link below. May be it will help you.
http://www.arusuvai.com/tamil/forum/no/12983
வாணி

வாணி,

தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி கண்டிப்பாக நான் ஒப்பிட மாட்டேன் ஏன் என்றால் எனக்கு ஒப்பிடுவது பிடிக்காது அவங்க சொன்னாலும் நான் இதுவரை கவலைப்பட்டதும் இல்லை. இன்னும் எதுவும் சொல்லிக்கொடுக்க
ஆரம்பிக்கவும் இல்லை
எனக்கு என்ன சந்தேகம் என்றால் நான் மட்டும்தான் இப்படி சொல்லிக்கொடுக்காமல் இருக்கிறேனா என்றுதான். தாங்கள் கொடுத்த லிங்கும் பார்க்கிறேன் நன்றி.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

எப்படி இருக்கீங்க? நல்ல இருக்கீங்களா? உங்களுக்கும் சந்தேகம் வந்தாச்சா? பொதுவா இது பத்தி பேச எனக்கு அவ்வளவு தெரியாது இருந்தாலும் உங்களுடைய கடைசி வரிதான் என்னை எழுத சொல்லியது..

////அதனால் தோழிகளே நீங்க உங்க மேலான கருத்துக்களை இங்க வந்து சொல்லுங்கோ எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்/////

எனக்கு தெரிஞ்ச வரை(அனுபவிச்சவரை) குழந்தைங்க எப்பவும் நம்மைவிட ரொம்ப ரொம்ப அறிவாளி புத்திசாலி..அவங்களுக்கு எந்த நேரத்துல என்ன தேவைபடும்னு நம்மவிட அவங்களுக்கு நல்லாவே தெரியுது..அது நீங்க சொல்றபடி வெளியுலக அறிவா இருந்தாலும் சாப்பிடும் சாப்பாடு, விளயாட்டு எதுவா இருந்தாலும் இதுதான் அவனுக்கு தேவைனு நாம நினைக்கும் முன்னால குழந்தைங்க செய்துப்பாங்க..நம்மோட வேலை நல்ல செயல் ஊக்குவிப்பதும், கெட்டதா இருந்தால் எடுத்து புரிய வைப்பதும் மட்டும் தான்..

என் பையன பத்தி நிறைய சொல்லி இருக்கேன்..ஆனால் சொல்லாத விஷயங்கள் நிறைய இருக்கு..அதாவது என் பையன்கிட்ட ஃபிசிக்கல் ஆக்டிவிட்டீஸ் எல்லாம் மெதுவாதான் பண்ணினான்..அதாவது அவன் திரும்பி படுக்க 10மாசம் ஆச்சு..இவ்வளவுக்கு அவனுக்கு உட்கார தெரியும் ஆனால் எழுந்து உடகார தெரியாது..எனக்கு கூட சரி கவலையாதான் இருந்தது..ஆனால் எதுக்கும் அவன நான் ஃபோர்ஸ் பண்ணினதில்ல..அதனால அடுத்தடுத்த அதாவது நிற்கிறது,நடக்கிறது எல்லம் லேட்..ஆனாலும் எல்லமே பண்ணினான்..பேச்சு கூட சரியாவரல.. 1 1/2 வயசு வரை அம்மா அப்பா கூட சரியா சொல்ல தெரியாது..ஆனால் அடுத்த ஒரே வருஷத்துல(2 1/2 வயசுல) பதில் சொல்ல முடியல...இதுல நான் சொல்ல வரது குழந்தைங்க எந்த விஷயத்தையும் லேட்டா பண்ணினாலும் வேகமாக பிக்கப் பண்ணிருவாங்க..

இப்போ உங்கலோட கேள்வி எந்த வயதில் குழந்தைக்கு சொல்லி கொடுக்கலாம்? இதுதானே?

ஒவ்வொருத்தருக்கும் ஒரு வளர்ப்பு முறை பிடிக்கும்..அதாவது சில பேர் இப்போ குழந்தைக்கு சொல்லி கொடுத்தால் பின்னால அவனுக்கு ஈஸியா இருக்கும்னு நினைச்சு இப்போ சொல்லி தருவாங்க..சில பேர் இந்த வயசுல எல்லாம்தெரிஞ்சு என்ன பண்ணபோறான் எல்லாம் காலம் வந்தால் தானா தெரியும்னு நினைப்பாங்க..சில பேருக்கு என் பையன் இப்படி பண்றான் இந்த வயசுலனு சொல்லிக்கிறதுல பெருமை, சிலபேர் அந்த பெருமைக்காவே நிறைய சொல்லி தராங்க...எப்படியும் எதும் தப்பு இல்ல, ஏன்னா அவங்க அவங்க குழந்தை பற்றி அவங்களுக்கு நல்லா தெரியும்..உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் எது விருப்பமோ அப்படி பண்ணுங்க..

நீங்க இப்போவே கூட ஏன் 2மாசம் முன்னால கூட சொல்லி கொடுத்திருக்கலாம்..ஆனால் உங்க குழந்தைக்கு ஆர்வமும் விருப்பமும் இருக்கனும்..இதுக்கு என்னால வயசு சொல்லமுடியாது..எப்படியும் நீங்க சும்மாவே இருந்திருக்க மாட்டீங்க..கண்டிப்பா குழந்தையோட பேசி இருப்பீங்க இல்லையா?அதுவே போதும் தான்..ஏதோ நம்ம ஆசைக்கு ABCD சொல்லி கொடுக்கலாம்..அவனுக்கு ஆர்வம் இருந்தால் தொடருங்கள் இல்லன்னா விட்டுவிடுங்கள்..இன்னும் ஒரு வாரம் 10நாள் அப்புறம் திரும்ப ஆரம்பிங்க..இது எல்லாமே உங்களுக்கும் ஆசை இருந்தால் மட்டுமே!!!எல்லாம் ட்ரை பண்ணி பார்த்தால் தானே தெரியும்? குழந்தைக்கு எது விருப்பம்னு?ஆனால் எதுக்கும் பையன ஃபோர்ஸ் பண்ணாதீங்க(உங்களூக்கே தெரியும்)..

உங்களுக்கு எங்க வீட்டுல நடந்த கதை சொல்றேன் கேளுங்க..சந்தோஷ் எவ்வளவு பேசுறானு உங்களுக்கே தெரியும்? ஆனால் நேற்று அவனுக்கு நைட்,மார்னிங் சொல்லிகொடுத்தேன்..காலைல சூரியன் வரும், அதான் வெளிச்சமா இருக்கு..நைட்ல சூரியன் போய்டும் அதான் இருட்டா இருக்கு..இருட்டுல தான் நிலா ஸ்டார் எல்லாம் தெரியுவாங்கனு சொன்னேன்..இத்தனைக்கும் நிலா சூரியன் ஸ்டார் எல்லாமே அவனுக்கு ரொம்ப தெரிஞ்ச பிடிச்ச விஷயம்தான்...ஆனால் என்னதான் எளிமையா திரும்ப திரும்ப விளக்கினாலும் அவனுக்கு புரியவைக்க முடியல..ஏன்னு எனக்கே தெரியல..அவங்க அப்பாவும் வந்து சொன்னார், ஆனால் நேரம் தான் வேஸ்ட்டா போச்சு..மத்தபடி அவனுக்கு புரியல..எவ்வளவோ கேள்வி கேட்பவன் இதுல எதும் கேட்க்கல..

அதனால தான் குழந்தைங்க எப்போ எப்படி என்ன பண்ணுவாங்கனு தெரியல...உங்க குழந்தைய பத்தி உங்களுக்கு நல்லா தெரியும்..சில நேரம் எதும் புரியாமல் இருந்தால் கூட மெல்ல மெல்ல நீங்களே அவன கவனிச்சு தெரிஞ்சுக்கங்க..அதுக்கு தகுந்தாற்போல நீங்க சொல்லி கொடுங்க..பிள்ளைங்களுக்கு நாம சொல்லி கொடுக்கலன்னா வேற யாரு சொல்லி தருவாங்க? ஆனால் அவசரபடாதீங்க பொறுமையும் நிதானமும் ரொம்ப முக்கியம்..

அடகடவுளே ரொம்ப எழுதிட்டேன்போல..முதல்ல மன்னிச்சிருங்க ஏதாவது போர் அடிச்சிருந்தால்..தேவையான விஷயத்த மட்டும் எடுத்துக்கங்க பிளீஸ்..உங்களுக்கு ரொம்ப பொறுமைதான் இத படிச்சதுலயே தெரியுது...

தாமரை ரொம்ப நன்றி உங்களோட கருத்துக்களை சொன்னதற்கு. எதுக்குப்பா மன்னிப்பு எல்லாம் கேக்கிறிங்க இந்த மாதிரி உங்களோட அனுபவங்களை வந்து சொல்லுங்க அதுதான் எனக்கும் உதவியாக இருக்கும் நீங்க சொல்றமாதிரி எதையும் குழந்தைக்கு திணிக்கவேண்டாம் என்றுதான் இதுவரை ஆரம்பிக்கல. இனிமே கொஞ்சம் ட்ரை பண்ணலாம் அப்படின்னு நினைக்கிறேன். எனக்கு பொண்ணு பையன் இல்லை.
.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

வாணி நீங்க சொன்ன லிங்க் முழுவதுமாக படித்தேன். அதில் நீங்கள் கூறியிருந்த
Draw a line up, then down, again up and down". It was very simple and sounded very funny to my son. He smiled and followed his instructions and drew his first "M".நல்ல ஐடியா அதற்க்காக ஸ்பெஷல் நன்றி
இந்த லிங்க் கொடுத்ததற்கு நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

லஷ்மிஷங்கர், நன்றி எல்லாம் வேண்டாம். மற்றவர்களுக்கு உதவும் என்று தான் எழுதினேன். என் மகன் இந்த முறையில் தான் நிறைய எழுத்துகள் பழகினார்.Fridge இல் ஒட்டும் (magnetic)எழுத்துகள், நம்பர்ஸ் வாங்கி ஒட்டி விடுங்கள். விளையாட்டாக அவர்களே பழகிவிடுவார்கள். முதலில் shapes சொல்லி குடுங்கள். அது மிகவும் ஈஸி.
வாணி

ஹாய், எல்லாரும் எப்படி இருக்கீங்க?

லக்ஷ்மிஷங்கர், இந்த தலைப்பு ஆரம்பிச்சதுக்கு ரொம்ப நன்றி.

நிறைய பேர் சாந்த்தோ(உங்க பேர் தாமரையா?)சொன்னதுபோல ‍‍‍compare பண்னி பாப்பாங்க. அது நல்லது இல்ல. அப்படி நீங்க பண்ணும் போது அது உங்க குழந்தை மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லனு அர்த்தம். அதுவும் அம்மா எப்பவும் இப்படியே சொல்றாங்களேனு எந்த ஒரு முயட்சியும் எடுக்காதுங்க. ஆர்வம் இல்லாட்டியும் நல்லா ஆர்வம் (encourage)குடுங்க கண்டிப்பா அடுத்த நாளே முயட்சி பண்ணிப்பாப்பாங்க.

என் விஷயத்த எடுத்துகிட்டா என் மகளுக்கு (கனிமொழி) 3 வயது. எல்லா விசயத்திலயும் ரொம்ப சீக்கிரம். ஏன், டெலிவரி பண்ணும்போது கூட ரொம்ப சீக்கிரம். இன்னமும் எந்த ஒரு விஷயத்தயும் சீக்கிரமா கப் னு புரிஞ்சுக்குவா.2 1/2 வயதுல இருந்து nursery போறாங்க. நல்லா படிப்பா. சந்தோசமா போறாங்க.

குழந்தைகளுக்கு இசைதான் முதல் பாடம். நிறய பாடுங்க. தேவாரம், ரைம், சினிமா பாட்டு... ஏதாவது பாடுங்க. சீக்கிரமா புடிச்சிகுவாங்க.

அவங்க கிட்ட பேசும்போது குழந்தை மொழியில் பேசாதிங்க. நல்ல மொழியில் (தமிழோ/ ஆங்கிழமோ)பேசுங்க. அவங்களும் உங்க மாதிரியே பேசுவாங்க.

அடுத்தது உணவு, ஆரோக்கியமானதா குடுங்க.அறிவு நல்லா வளரும்.இனிப்பு வகை உணவு கொடுக்காதீங்க. என் மகளோட காலை சாப்பாடு beans, lady fingers, cabbage, carrot (all in raw) இந்த மாதிரியான உணவுகளை கொடுத்து பழக்க படுத்துங்க.

ரொம்ப பேசிட்டேன். இப்ப உங்க கருத்து...

அன்புடன்,
நளினி குமரா

அன்புடன்,
நளினி குமரா

ஓ உங்களுக்கு பொண்ணா? எனக்கு தெரியலப்பா..மறந்துட்டேன் போல..ஆமாம்ப்பா ட்ரை பண்ணி பாருங்க..அப்புறம் கொஞ்ச நாளில் நீங்களே இன்னும் சில பேருக்கு ஐடியா சொல்ற அளவு வந்திருவீங்க..நளினி சொல்ற மாதிரி இசை பிடிக்காத யாரும் இருக்க முடியாது..கார்ட்டூன் தமிழ் ஆங்கிலம் இருக்கும் நெட்ல போட்டு காட்டுங்க..சும்மா படிக்கிட்டே சாப்பாடு ஊட்டுங்க..குளிக்கும்போது ஒரு பாட்டுனு நல்லா பாடுங்க..குழந்தைகூட நீங்க பேசும் போது தயக்கம் இல்லாமல் நிதானமா பேசுங்க..கலர்,தினமும் லஃப்ல இருக்கும் ஆப்பிள்,பூனை,நாய்,சாதம்,பூ இந்த மாதிரி சின்னதா சட்டுனு மனசுல பதியுறத சொல்லி கொடுங்க....vany சொன்ன மாதிரியும் மேக்னட்ல ABCD வாங்கி கொடுக்கலாம்..இதுல கலரும் தெரிஞ்சுக்கலாம்(நிறைய கலர்ல இருக்கும்)..விளையாட்டுபோலவே பழக்க ஈஸியா இருக்கும்...வாழ்த்துக்கள் எல்லாம் ட்ரை பண்ணுங்க..

நளினி என் பேர் தாமரைச்செல்வி..என் பையன் பேர் சந்தோஷ்குமார்(3), அவனோட பேர்தான் என் ஐடி..உங்களோட ஐடியாவும் நல்லா இருக்குங்க..முடிந்தால் வந்து இன்னும் சொல்லுங்க..

வாணி ரொம்ப ----------------நீங்க தான் சொல்ல வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டிங்க அதான் --------- போட்டுட்டேன் :) நீங்க சொல்ற மாதிரியும் முயற்சி பண்றேன் கண்டிப்பாக நீங்க போட்டது எல்லோருக்கும் உதவும்.

நளினி உங்க கருத்தை சொன்னதற்கு மிக்க நன்றி நீங்க எதுக்கு நன்றி சொல்றீங்க தான் எனக்கு புரியல :) அழகா சொல்லி இருக்கீங்க நான் கண்டிப்பாக ஒப்பிட்டு பார்க்க மாட்டேன் ஒப்பிட்டு பார்ப்பதால் தாழ்வு மனப்பான்மை வரும் ஏன் என்றால் ஒரு ஒரு குழந்தைக்கும் தனித்தன்மை இருக்கிறது. நான் மேல எழுதியது ஒரு எடுத்துக்கட்டுக்க்காகதான்.உணவு பத்தியும் அழகாக சொல்லிஇருக்கிங்க
இன்னும் உங்க கருத்துக்களை வந்து சொல்லுங்க.

தாமரை உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி.
//பொதுவா இது பத்தி பேச எனக்கு அவ்வளவு தெரியாது இருந்தாலும் அப்படின்னு சொல்லிட்டு சூப்பர் ஆக சொல்லி இருக்கீங்க

//எனக்கு தெரிஞ்ச வரை(அனுபவிச்சவரை) குழந்தைங்க எப்பவும் நம்மைவிட ரொம்ப ரொம்ப அறிவாளி புத்திசாலி..அவங்களுக்கு எந்த நேரத்துல என்ன தேவைபடும்னு நம்மவிட அவங்களுக்கு நல்லாவே தெரியுது..அது நீங்க சொல்றபடி வெளியுலக அறிவா இருந்தாலும் சாப்பிடும் சாப்பாடு, விளயாட்டு எதுவா இருந்தாலும் இதுதான் அவனுக்கு தேவைனு நாம நினைக்கும் முன்னால குழந்தைங்க செய்துப்பாங்க..நம்மோட வேலை நல்ல செயல் ஊக்குவிப்பதும், கெட்டதா இருந்தால் எடுத்து புரிய வைப்பதும் மட்டும் தான்
அதனால இன்னும் வந்து சொல்லுங்கோ

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்