இளமை இதோ! இதோ!

என் அன்பு தோழிகளே.

இங்க நிறைய மக்கள் காதல் கல்யாணம் பண்ணி இருப்பாங்க. ஒரு சிலர் பெற்றோரை எதிர்த்து, ஒரு சிலர் பெற்றொர் அனுமதியோட. அப்புறம் பெற்றோர் முடிவு பண்ண கல்யாணம். ரெண்டுலேயும் காதல் இருக்கும் இல்லயா. அதனால உங்கள் காதல் அனுபவங்களை (தப்பா எடுத்துக்காதீங்க!!!) நான் சொல்ல வரர்து, கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம ஹஸ் கூட பேசினதுக்கும் , இப்ப இருக்கறர்த்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் இல்ல. அப்ப நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் இங்க உரையாடலாம்.

1. முதல் முதலில் சந்தித்த இடம்.
2. முதலில் பேசிய டயலாக்
3. முதல் முதலாய் சந்தித்த போது அணிந்த ஆடைகள், அவற்றின் நிறங்கள்.
4. முதல் முதலில் திருட்டு தனமாய் சந்தித்த இடங்கள்.
5. முதல் முதலில் ஃபோன் பண்ணி பேசியது.
அப்புறம் எத்தனை மணி நேரம் பேசினீங்க. பில் எவ்வளவு வந்தது.
6. முதல் பரிசுப்பொருள் (பிடிச்சிருந்ததா, இல்லையா)
7. முதலில் மாட்டிக்கொண்ட அனுபவம்.
8. முதல் வண்டி ரைடு.
9. தேனிலவு
10. முதல் முதலில் கணவ்ருக்காக சமைத்தது.
11. முதல் திட்டு (கோபம்), அடி.
12. முதலில் வாங்கி கொடுத்த ட்ரெஸ்
13. முதல் குழந்தை (பிறந்த போது இருந்த அந்த நினைவுகள்)
குழந்தை பிறந்ததும் நிச்சயம் மகா சந்தோஷம் இருக்கும். எந்த குழந்தை எதிர்பார்த்தீர்கள் (ஆண், பெண்). எந்த குழந்தை பிறந்தது. உங்க ஃபீலிங் என்ன அப்பொ.
14. இப்ப எத்தனை குழந்தைகள்(ஆண், பெண் எத்தனை குழந்தைகள்).
15. பேரன் பேத்திகள் எத்தனை(அடிக்காதீங்கோ, பாட்டிகளும் இருக்கலாம் இல்ல, நம்ம டீம்ல).

இப்படி இன்னும் நிறைய இளமைக்கால நினைவுகளை பகிர்ந்துக்கொண்டு புத்துணர்ச்சியோட இளமையா இருப்போம்.

கடைசில என்னப்போல சின்ன பசங்களுக்கு(???!!!), பெரியவங்க டிப்ஸ் கூட கொடுங்க, கொடுக்கலாம்.

ஆளாளுக்கு ஏதாவது கேள்வி கேட்டுட்டு என்னை பதில் சொல்ல கூப்பிடறீங்க நானும் வந்து சமர்த்தா சொல்றேன். ஆனா நான் கேட்டா மட்டும் யாரும் வர்றது இல்ல, அப்படியே வந்தாலும் அங்க வேற ஏதாவ்து தான் ஓடுது :-( எ.கொ.ச.இ?

என்னோடது பக்க்க்க்க்க்க்க்க்க்க்க்கா அரேஞ்ஜ்ட் மேரேஜ். இந்த காலத்துல யாரும் இப்படி செய்துப்பாங்களான்னு கூட எனக்கு தெரியல.

எனக்கு கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சப்போ வந்த முதல் சில ஜாதகங்கள்ல ஒண்ணை பார்த்த உடனே மட்டும் அதான் என் கணவருடைய ஜாதகம்னு தோணிடுச்சு. எப்படி இருக்கு? இத்தனைக்கும் அந்த ஜாதகத்துல பையன் பத்தின எந்த விவரமும் இல்ல, ஃபோட்டோவும் இல்லை. வெறும்ன அப்படி ஒரு இண்ட்யூஷன். எனக்கு என்னோட இன்ஸ்டிங்ட்ஸ் மேல ரொம்ப நம்பிக்கை, ஏன்னா நான் பல சமயம் நினைக்கிறது ரொம்ப கரெக்டா இருக்கும். அவ்வளவு தான் அன்று முதல் அந்த ஜாதகத்தோட குடித்தனம் தான் செஞ்சேன்.

இதை பத்தி யார் கிட்டயும் சொல்லவும் முடியல, சொன்னா திட்டு/பைத்தியக்காரி பட்டம் எல்லாம் கிடைக்குமே? அப்புறம் ஒவ்வொவொரு ஸ்டேஜா கடந்து போக போக என் நம்பிக்கை கூடிட்டே போச்சு. அப்புறம் ஒரு வழியா இவர் வந்து என்னை பார்த்து அடுத்த 2 நாள்ல கல்யாணமே முடிஞ்சு போச்சு!! :-) இது எப்படி இருக்கு? அந்த ஜாதகம் வந்ததுல இருந்து இவர் என்னை பார்க்க வரும் வரை ஒரு 4 மாசம் கேப்- அப்போ எந்த அளவு நான் பைத்தியமா இருந்தேன்னு என்னால நம்ப முடியவில்லை வில்லை இல்லை!

என் கல்யாணம் நாங்க நினைச்ச அளவு சூப்பரா நடக்கலை, ஏன்னா டைமே இல்லியே. இருந்தாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை, ஏன்னா நான் கற்பனை பண்ண அதே காரெக்டர் தான் என் கணவர். இப்போ கூட இவரோட ஜாதகம் பொருந்தாமலோ இல்லை இவருக்கோ ஒவர் குடும்பத்தினருக்கோ என்னை பிடிக்காமல் போயிருந்தால் என்னாகிருக்கும்னு என்னால யோசிக்க முடியல. ஏன்னா அவரு கிட்ட தட்ட 3 வருஷமா பொண்ணு தேடி ஏகப்பட்ட பேரை ஏதேதோ காரணத்துக்கு அவங்க வீட்டுல வேண்டாம்னு சொல்லிருக்காங்க.

வேற பசங்க ஜாதகம் வர்றதை கூட என்னவொ இவருக்கு செய்யற துரோகம்னு எல்லாம் நினைச்சேன்னா பாருங்க. இவருக்கு இதை கேட்டு ஆச்சரியமோ அச்சரியம் தான். இப்போ காதலில் யாரை யார் மிஞ்சறதுனு போட்டி ;-)

அவ்ளோ தான் கதை, யாருக்காச்சும் பைத்தியம்னு தோணுச்சுனா, உங்களோட வெச்சுக்கோங்க, என் கிட்ட சொல்ல கூடாது சரியா?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

1. முதல் முதலில் சந்தித்த இடம்- என் வீடு, ஆனா இப்போ அந்த ஊரிலேயே என் குடும்பத்தினர் யாருமில்லை.
2. முதலில் பேசிய டயலாக்- "உங்களுக்கு மேல படிக்கற ஐடியா ஏதும் இருக்கா?" (கஷ்ட காலம்)
3. முதல் முதலாய் சந்தித்த போது அணிந்த ஆடைகள், அவற்றின் நிறங்கள்- எனக்கு தான் இருக்கு அவருக்கு அவர் பிறந்த நாளே பெரிய விஷயம் கிடையாது.
6. முதல் பரிசுப்பொருள்- பொக்கே (அதே கஷ்ட காலம்)
{4. முதல் முதலில் திருட்டு தனமாய் சந்தித்த இடங்கள்
5. முதல் முதலில் ஃபோன் பண்ணி பேசியது
7. முதலில் மாட்டிக்கொண்ட அனுபவம்
8. முதல் வண்டி ரைடு}- எல்லாமே லைசன்ஸ் வாங்கினதுக்கு அப்புறம் தான்.

ஏதாவது சண்டை வந்தா, "நான் தான் உங்களை 4 மாசம் முன்னாடியே உருகி உருகி காதலிச்சேன், ஆனா நீங்க? ஊரெல்லாம் போய் பொண்ணு பாத்துட்டு இருந்தீங்க. நீங்க பேசாதீங்க"னு சொல்லி நான் தான் ஜெயிப்பேன் ஜாலி!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

முதன்முதலில் சந்தித்த இடம் - கல்யான மேடை
முதல் டயலாக் -
அவர் --- (ஃபோனில்)ஐ டோன்ட் நோ ஹவ் டொ ஸ்டார்ட் அன் வாட் டு டாக்
நான் - என் கை கால் எல்லாம் உதறுது ..இப்ப ஒண்ணும் பேச வேன்டாம்

ஆனா இப்ப அவர் கேப்பார்..கை உதறுதுன்னெல்லாம் சொன்னப்ப ரொம்ப அப்பாவின்னு நெனச்ச்சா இப்ப என்னல்லாம் லொள்ளு பன்ற ம் பார்.

முதன் முதலில் சந்தித்தபோது ஆடை --- இருவரும் மணக் கோலத்தில்

மற்றதுக்கெல்லாம் எனக்கும் லைஸென்ஸ் கெடச்சப்ரம் தான்னாலும் அப்பவும் வீட்டுக்கு தெரியாமல் திருத்துத் தனமாய் தான் எல்லாம்...அவர் 5 வயதிலிருந்து பட்டப் படிப்பு வரை போர்டிங்கில் படிச்சுட்டு அப்ரம் இங்கே வந்து 10 வருஷமா இன்தியாவுல காலை வெக்கவே இல்ல...திருமனாத்துக்காக 10 வருடத்திற்கப்ரம் வந்ததால் இடம்,பேர் எல்லாம் மறந்து போனதால் அவர் வீட்டில் அவரை வெளியே தனியாக விட பயம்..அதனால் எங்கயும் போக வேன்டாம்தனியே...குடும்பத்துடம் போலாம்னு சொல்லி இருந்தாங்க..சரின்னு தலை ஆட்டிட்டு எங்கள் வீட்டுக்கு போய்ட்டு அவங்கள்க்கு தெரியாம ஊட்டி,குன்னூர் போனோம்....அப்ப சொந்தத்தில் ஒருவர் இதை அவர் வீட்டில் எப்படியோ தெரிந்து ஒளர மாமனார் அங்கே ஃபோன் பன்னி எனக்கு கெடச்ச டோஸ் இருக்கே...அங்க இருந்து அடுத்த நிமிஷம் கிளம்பாட்டி ஆர்பாட்டம் பன்வேன்..எல்லாம் உங்களாலன்னு அவரை கொடுமை படுத்திட்டு ஊர் வந்து சேந்தோம்
அது தான் மாட்டிக் கொன்ட அனுபவம்
முதல் பரிசு - பென்டன்ட்
முதல் வண்டி ரைட் - ஊட்டிக்கு போனது ட்ரெயின்ல..அப்ரம் ரைட் போனது குதிரையில
ஹேமா சொன்னதுபோல எனக்கும் திருமனம் கனவு போல நடந்தது...என்னுடைய தூஊஊரத்து உரவிணர் அவர்...பெண் கேட்டார்கள் என்னை ஃபோனில்..மாமனார் என்னிடம் கேட்டார்...தெரியல அப்பட்ட கேளுங்கன்னேன்..அப்ப என்னிடம் கேட்டார் நீஙக்ளே முடிவு பன்னிங்கன்னேன்.
அடுத்த வாரம் ஃபோனில் திருமனம் நிச்சயிக்கப் பட்டது..அடுத்த நாள் அவர் பேசினார் ..அப்ரம் திருட்டுத் தனமா தான் ஃபோன் பன்னி பேசிட்டு இருந்தோம்..வீட்டில் ஃபோன் பன்ரது தெரியும்னாலும் அந்தளவுக்கு பேசுரோம்னு யார்கும் தெரியாது....அந்த 2 மாதத்தில் அவர் ஃபோன் பேசி தொலச்ச காசு 50,000 ரூபாய்...அது அவர் விடிடில் தெரிஞ்சிருந்த அன்னக்கே என்னை வேன்டாம்னு வெச்சிருப்பாங்க..அதனால் அது ரகசியமாவே நடந்தது...அப்டி என்ன பேசினீங்கன்னு தான கேள்வி...ஒன்ன்னுமில்ல மேல்படிப்பு, அவர் ஆஃபிஸ் விஷயம்னு பேசுவோம்...இப்ப நெனச்சா என்ன ஒரு விவரக் கேடு ந்னு தோனுது.

ஹர்ஷு எங்கள்ட்ட கேட்டுட்டு ஏன் உங்க பதிவைக் கானோம்?
தளிகா:-)

ஹாய் ஹர்ஷ்,

ரொம்ம்ம்ம்ம்ப.. நல்ல டாபிக்.
எங்களோடது சுத்தமான காதல் திருமணம்ன்னு சொல்ல ஆசைதான் ஆனால் இது அக்மார்க் முத்திரை குத்தின பெரியவர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம்.
1.முதன் முதலில் சந்தித்த இடம் -- ஏர் போர்ட்
2.முதன்முதலாய் பேசிய டயலாக் -- சென்னிங்க இந்தரவா (இது கன்னடம் நாங்க கன்னடம் தான் பேசுவோம் (தாய் மொழி)) அப்படின்னா நல்லாஇருக்கீங்களா? .ன்னு அர்த்தம்.
3.முதன் முதலாய் சந்திதபோது அணிந்த ஆடைகள் -- மஞ்சள் கலர் சுடிதார், அவர் ஃப்ளு ட்ரஸ்
4. திருட்டுத்தனமாய் சந்திக்க வில்லை அதற்குபதிலாக திருட்டுத்தனமாக ஃபோன் பேசினோம்.
5.முதன் முதலில் போன் பேசியது பெண் பார்த்த அன்று வாய்ஸ் சேட் பண்ணினோம்.
6.முதல் பரிசுப் பொருள் -- நான் - திருமண உடை அணிந்த இரு பொம்மைகள், லவ் போட்ட புக், அவர் -- செல் ஃபோன்.
7.வண்டி ரய்ட் -- திருமணத்திற்குப் பிறகு டூ வீலரில் பெசண்ட் நகர் பீச்சுக்கு.
திருமணத்திற்கு பிறகு அன்றே அவர் வீட்டுக்கு 100 கிலோ மீட்டர் டாடா சுமோவில் பயணம்.
பெண் பார்த்து விட்டு சென்ற அடுத்த மாதம் அதே நாள் பதிவு திருமணம் ஒரு வாரம் கழித்து மணமேடையில் திருமணம்.
அந்த ஒரு மாதநேரத்தில் தினமும் 4 ல்லிருந்து 5 மணி நேரம் சேட் பண்ணுவோம் . நல்ல அனுபவம்.

தேங்க்ஸ் . மறுபடி பழைய நினைவுகளை கிளறியதற்கு

மே 1 2008 எங்களுக்கு 25 வது திருமண நாள்
பின்னோக்கிப் போகிறேன் 00000000 ப்ளாஷ் பாக் சினிமா போல் சுற்ற முடியவில்லை

1. எங்க வீட்டில் பெண் பார்க்க வந்த போது
2. பெண் பார்க்க வந்த போது என்னிடம் ஒன்றுமே பேசவில்லை.
மறு நாள் அவரும் அவர் நண்பருடன் நேரே என் ஆபீஸுக்கு வந்து விட்டார். எங்கே பேசினேன். பேந்தப் பேந்த விழித்தேன்.
3. பிங்க் பார்டர் போட்ட கிளிப் பச்சைப் புடைவை.
4.திருட்டுத்தனமாக இல்லை. 'பாயும் புலி' படம் இரு வீட்டு சம்மதத்துடன் சென்றோம்.
5.கணக்கே இல்லை.
6. அவர் - புடைவை நான் - என்னையே கொடுக்கப்போகிறேனே என்று ஒன்றும் கொடுக்கவில்லை.
7. சான்ஸ் இல்லை.
8. திருமணத்திற்குப் பின் ஒரு சைக்கிளில் ஒரெ மாதத்தில் லூனாவில். இன்று இருக்கும் பைக், காரை விட அதுதான் மிகவும் சுகமாக இருந்தது.

ஒரு கொசுறு விஷயம் - எங்கள் மு.இ. அவர் நாங்கள் இருவரும் குடியிருக்க வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில்.

அன்புடன்
ஜெயந்தி

நான் செய்தது தற்கொலை..சாரி காதல் திருமணம்..எங்களோடது வழக்கமான கல்லூரி காதல் கதை...அவர் என்னோட சீனியர்..

சந்தித்த இடம்...மெக்கனிக்கல் லேப்(அன்றிலிருந்து சரஸ்வதிக்கு என் மேல் கோவம்..)
ஆடை.. நான்: காக்கி அன்ட் காக்கி அவர்: பார்க்கவில்லை
பேசிய வார்த்தை..பேர் என்ன?(ராகிங் பண்றாங்களாம் பா..)
எங்க ஊருல சந்திக்கரதெல்லாம் ரொம்ப கஷ்டம். அதனால எங்க ஓட்டு பி எஸ் என் எல் மற்றும் ஏர்டெலுக்கு தான்.. (நாங்க ரொம்ப நல்லவங்க!)
காதலிச்சதால நான் புதுசா கத்துக்கிட்டது......பொய்!!

உலகத்திலயே ரொம்ப மோசமான சிச்சுவேசன்,காதலை பெற்றோறிடம் சொல்வது..அத விட கொடுமை அதை அவர்கள் நம்பாதது..ரெண்டும் எனக்கு நடந்தது..வேற வழியில்லாம 10 மாசத்துக்கு முன்னாடிதான் கல்யாணம் நடந்தது..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

ஹேமா எப்படி இருக்கீங்க ..ரொம்ப நாளா சொல்ல நினைத்தேன்..உங்களோட எழுத்து நடை எனக்கு ரொம்ப பிடிக்கும்...உங்க கருத்துக்களை படிக்கும் போது ஏனோ அடிக்கடி சுஜாதா நினைவுக்கு வருகிறார்.
எனக்கும் சுஜாதா படைப்புகள் ரொம்ப பிடிக்கும்..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

எங்களது திருமணம்பெற்றோர்நிச்சயித்திருமணம் மு.மு.ச.இடம்; வாடகை வீட்டில்த . மு.மு.பேசிய வார்த்தை: என்னை பிடித்திருக்கா?(அவர் தான் கேட்டார்.) அணிந்த உடை: அவர்: நீல நிற பான்ட்,சேட். நான் மஞ்சள் நிற புடவை. நிச்சயம் முடித்து அவர் வெளிநாடு போய்விட்டார். இதில் கொடுமை என்னவென்றால் தொலைபேசியில் பேசவில்லை. கடிதம் போடவில்லை நாலு மாதமாக. பின்பு திருமணம். முதல் பரிசு, வாட்ச். மு.மா.அ .இல்லை. முதல் வண்டி சவாரி; வீட்டில் இருந்து விமானநிலையம். இப்பொழுது நாங்கள் இருவரும் வெளிநாட்டில் வசிக்கிறோம். அவர் வேலை விடயமாக வெளிநாடு சென்றால் தொலைபேசி,கடிதம்,மின்னஞ்சல், கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமாக தொடர்பு கொள்கிறார்.(வட்டியும் முதலுமாக) அன்புடன் அம்முலு.

அன்புடன் பாபு அண்ணா அறுசுவை பக்கம் வரவில்லை என்றதும் என் மனம் மிக கவலை அடைந்ததற்கு அளவேஇல்லை.மீண்டும் அறுசுவை இணையதளத்தை பார்க்க முடிந்ததற்கு மிகவும் நன்றி. நன்றி. அன்புடன் அம்முலு

மேலும் சில பதிவுகள்