பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இப்பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொள்ளப்போகும், மற்றும் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கப்போகும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், நடுவர் என்ற முறையில் அதிராவின் அன்பு வணக்கங்கள்.

இம்முறைத்தலைப்பு "வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பதுதான். இத் தலைப்பைக் கொடுத்திருப்பவர் சகோதரி தாஜ்பாஃரூக். சகோதரிக்கு என் நன்றி.

அதாவது வெளிநாட்டுக்கு வருவதால் மக்கள் நிறைய விஷயங்களை இழக்கிறார்களா? அல்லது அதனால் நன்மைகளையே அடைகிறார்களா என்பதுதான் தலைப்பு.

அனைவரும் வாங்கோ, உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கோ. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப, நான் உங்கள் கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பேன். எனவே, என்னைத் தாவ விடாமல் ஒருபக்க கட்சியில் நிறுத்தி, தீர்ப்பைச் சொல்ல வைக்கவேண்டியது, உங்கள் வாதங்களிலேயே தங்கியிருக்கிறது.

வழமைபோல் நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்போம்.

பி.கு: "தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்றொரு பழமொழி எங்கள் நாட்டில் உண்டு. அதுபோல, அறியாத நடுவர் பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறேன், உங்கள் அனைவரினதும் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.

வனிதா, கோ பைலட் என்று இருப்பதைப்போல, இதுக்கும் கோ நடுவர் என ஒருவரை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி யோசித்து என்ன செய்வது. சமைத்து அசத்தலாமில்கூட, ரேணுகா துணைக்கு வந்தார். இது எப்படித்தான் நடத்திமுடிக்கப்போறேனோ தெரியேல்லை தனியா. இருப்பினும் சந்தனா சொன்னதுபோல் பூஷைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, குத்துவிளக்கேற்றிவிட்டேன்...

அதிரா நானும் வந்துவிட்டேன்,வெளிநாட்டு வாழ்க்கையால் மக்கள் பெற்றது அதிகம் என்ற தலைப்பின் பக்கம் இருப்பேன்,ஆனால் வாதாட நேரமில்லை,அப்ப அப்ப வருவேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நடுவர் அவர்களே வணக்கம் வெளிநாட்டு வாழ்க்கையால் மக்கள் இழந்ததுதான் அதிகம் என்று வாதாட வந்திருக்கிறேன்.

உங்களுக்கு தெரியாத பழமொழியா அகத்தி 1000 காய்த்தாலும் புறத்தி புறத்திதான்.
உதாரணத்துக்கு இங்கு ஒரு காட்சியகத்தில் ஆசிய நாட்டு மரங்கள் பல நிக்கிறது.நீண்ட நாட்களுக்கு பின் எங்கள் ஊர் அலரி, தேக்கு, பாப்பா எல்லாத்தையும் பார்த்தேன் எல்லா மரங்களும் ஓகோ என்று எங்கள் ஊரில் பார்த்ததை விட நிறைய பூ பிஞ்சு காய்களூடன் கொழு கொழு என்று நிக்கிறது.அதாவது வழக்கத்துக்கு அதிகமான பூக்கள் காய்கள் செழிப்புகள்.

ஆனால் அந்த மரங்கள் பெரிய கண்ணாடிக்கூண்டால் அடைக்கப்பட்டு அதற்கேற்ப வெப்பநிலை செயற்கை முறையில் ஊட்டப்பட்டு அதிக பூக்கள் காய்களுக்காக அதிக மெருகூட்டலுக்காக மருந்து மாத்திரைகள் எல்லாம் பாவிக்கப்ப்ட்டு மொத்தத்தில் கூண்டுக்குள் வாழும் பணக்காரக்கிளியாக வளர்க்கப்படுகிறது.

நமக்கு பார்வைக்கு இந்த மரங்கள் சிறப்பாய் வாழ்வது போல் தெரிந்தாலும் ஊரில் வளரும் மரங்களை விட இந்த மரங்கள் அதிகம் நன்மைகளை பெற்று விட்டது ஊட்டச்சத்துகளை பெற்றுவிட்டது என்றெல்லாம் சொல்ல முடியுமா?

அதிகம் பெற்றதாகவே வைத்துக்கொள்வோம் எதை எதையெல்லாம் பெற்றோம்.

பகட்டாய் வாழ வசதிகளை பெற்றோம்.சுத்தமான நாட்டில் வாழப்பெற்றோம்.கலர்கலராக கிரடிட் காட்டுகளை பெற்றோம்.குண்டக்க மண்டக்க என்று குழந்தையிலேயே அதிகரிக்கும் உடல் எடைகளை பெற்றோம்.வங்கிப்பணத்தில் வீட்டைப்பெற்றோம்.

மனித வாழ்க்கைக்கு தேவையான மேலதிக வசதி வாய்ய்ப்புக்களைத்தான் பெற்றோமே தவிர இதையெல்லாம் பெற வேண்டி மனிதன் மனம் நிறைந்து சந்தோசமாய் வாழ தேவையான சுற்றம் சூழல் ,பிறந்த மண்,தானாக வந்து மோதும் மனதோடு பேசும் காற்று,காலில் சுடும் மணல்,எங்கும் கேட்கும் தமிழ்,ஓங்கி ஒலிக்கும் கோயில் மணி,வயது முதிர்ந்தோர் காட்டும் நேரடி அன்பு
எல்லாவற்றையும் விற்றோமே
இபோ மனம் திறந்து சொல்லுங்கள் நடுவரே நாங்கள் விற்ரது அதிகமா பெற்றது அதிகமா?

வேருக்கு வென்னீர் ஊற்றிவிட்டு கிளைகளூக்கு காத்திருக்கும் நாங்கள் வெளிநாட்டு வாழ்க்கையில் இழந்ததுதான் அதிகம் பெற்றதெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால் வாழ்ந்ததில் நட்டம் தான் வருது.

பஞ்சு மெத்தையில் உறங்க பாயை விற்றால் பருவாயில்லை நாம் தூக்கத்தை அல்லவா விற்றோம்.

ஆசியா, ஷரொன்....
ஆசியா, எங்கே நீண்ட நாளாகக் காணவில்லையே எனப் பார்த்தேன். பட்டிமன்றத்துக்கு முதலாவது ஆளாக வந்து உங்கள் கட்சியையும் தைரியமாகச் சொல்லிவிட்டீங்கள். தொடருங்கள்.

ஷரொன், ஒவ்வொரு பட்டிமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் தாமதமாகத்தான் யோசித்து வருவார்கள், இதிலும் அப்படித்தானோ ஆசியாவை யாரும் எதிர்க்கமாட்டார்களோ என நினைத்தேன், சுடச் சுட வந்து, எதிர்க்கட்சியில் நின்று முழங்கிவிட்டீங்கள்... முழக்கம் பார்த்து நான் நடுங்கிய நடுக்கத்தில், என் பூஷே என்னைப்பார்த்துச் சிரிக்கிறது:).

அகத்தி 1000 காய்த்தாலும் புறத்தி புறத்திதான்/// சரியாகச் சொன்னீங்கள்,நீங்கள் சொன்னபின்னரே என் மண்டையிலும் உறைக்கிறது, நானும் இங்கே புறத்திதானே(இந்த நாட்டில்).

இபோ மனம் திறந்து சொல்லுங்கள் நடுவரே நாங்கள் விற்ரது அதிகமா பெற்றது அதிகமா?////
உங்கள் கேள்வியால் என் "கிட்னி" இயங்க மறுக்கிறது:) பதிலைச் சொல்ல:).

///பஞ்சு மெத்தையில் உறங்க பாயை விற்றால் பருவாயில்லை நாம் தூக்கத்தை அல்லவா விற்றோம்/// ஆகா ஆகா... என்ன அழகான வாக்கியம்... இதுக்கு மேலும் இதை எதிர்க்க யாரும் வருவார்களா என எனக்குத் தெரியவில்லை. மீண்டும் தொடருங்கள்..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு நடுவர் அதிராவிற்கு வணக்கம். நான் நினைத்த தலைப்பையே போட்டு இருக்கீங்க. இதுதான் டெலிபதியோ அதிரா. போன ஜென்மத்தில் ஒருவேளை நாம் இரட்டையர்களோ! எம் தோழிகளுக்கும் வணக்கம். அதிரா நானும் உங்கள் பூஸை பிடித்துக் கொண்டு யோசித்துக் கொண்டு இருந்தேன் எந்த பக்கம் சாயலாம் என்று. இன்னும் குழப்பமான மனநிலைதான்.

இங்குள்ள ஹைஜீனிக் ஃபுட், அழகான சாலை, அதில் கடைபிடிக்கப்படும் ஒழுங்குமுறை, சுத்தமான சுற்றுபுற சூழ்நிலை, குழந்தைகளுக்கு நல்ல கல்வி முறை இவை எல்லாமே நல்ல விஷயம்தான். ஆனாலும் ஷெரோன் சொல்வது சரியெனப்படுகிறது. என்னதான் இங்கு எல்லா வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும் என் மனம் என் உற்றோரின் அருகில் இருக்கும் அந்த வாய்ப்பிற்காகத்தான் தினமும் ஏங்குகிறது. நான் என்னபண்ணுகிறேனோ என்று என் பெற்றோரும், அவர் பெற்றோரும், அவர்கள் எப்படியிருக்கிறார்களோ என்று நாங்களும் இப்படியே வாழ்நாள் ஓடிக் கொண்டு இருக்கிறது. என்னதான், போனிலும், நெட்டிலும் பார்த்து பேசிக் கொண்டாலும் அருகில் இல்லாமை பெரிய இழப்புதானே தலிவரே.

இங்கு வசதிகள் நமக்கு நம் நாட்டில் கிடைக்காதுதான் ஆனால் அங்கிருக்கும் நிம்மதி இங்கு கிடைப்பதில்லை. இது எவ்வளவு பெரிய இழப்பு. கணவர், குழந்தையுடன் தனியாகத்தானே வாழுகிறோம். இதை விட என்ன வேண்டும் என எதிரணியினர் கேட்காதீர்கள். தங்க கூட்டிற்குள் வாழ்வது எவ்வளவு நாள்தான் மகிழ்ச்சி தரும்?

வசதிகள் மட்டும்தான் நம் வாழ்க்கையா? குடும்பத்தில் நடக்கும் ஒரு சுபகாரியம், இழப்பு இவற்றில் எல்லாம் கலந்து கொள்ள முடியாமை. இன்றைய சூழ்நிலையில் ஒருவரை அடிக்கடி பார்த்துக் கொள்வது இந்த மாதிரி நிகழ்ச்சியில்தானே இவற்றை எல்லாம் மிஸ் பண்ணுவது எவ்வளவு இழப்பு. நமக்கு கிடைத்த சிறு வயது அனுபவங்கள் நம் பிள்ளைகளுக்கு எங்கே கிடைக்கிறது. தாத்தா, பாட்டியின் அன்பு, அவர்கள் கூறும் கதைகள். ஊரில் தம் சிறார்களுடன் விளையாடும் விளையாட்டு. நம்ம ஊர் பல்லாங்குழி ஆட்டம். இது எல்லாமே அவர்களுக்கு கிடைக்காது என்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது.

குடும்பத்தினருடன் எவ்வளவுதான் பிரச்சனை இருந்தாலும், ஒரு உடம்பு சரியில்லை என்றால் உடனே எல்லோரும் ஓடி வந்து விடுவார்கள். ஆனால் இங்கே யார் வருவார். ஒரு ஆத்திர அவசரத்துக்கு கூட யார் கிட்டயும் போக முடியாது. இங்கு நாம் பெறும் வசதிகளை விட நாம் இழந்தவைதான் அதிகம் என்று கூறி என் முதல் சுற்று வாதத்தை முடிக்கிறேன்.

தலைவர் அவர்களே சொந்த நாட்டின் அருமையை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? நீங்கள் மகா புத்திசாலி அதனால் தீர்ப்பு எங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். இந்தாங்க நான் எப்பவும் கொடுக்கும் மிரிண்டா....

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அதிராநடுவரான உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.நல்லதலப்பு தான் தெர்தேடுத்திருக்கிரிர்கள்.
"வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?"
என்னை நிங்கள் நித்திரையில் எழுப்பி கேட்டலு சொல்லுவேன் இழந்தது தான் அதிகம்.
என்னதான் தாங்ககரண்டியால சாப்பிட்டாலும் அம்மா கைப்பிடி சோறு போல் வருமா அதுபோல் என்னதான் வெளிநாட்டில் வசதியா இருந்தாலும் நம்நாட்டை போலவருமா நடுவர் அவர்களே?
அதை போல் நம் குழைந்தகள் படும்பாடு நம்பன்பட்டை கடைப்பிடிப்பதா அல்லது தங்கள் பிறந்தனட்டு பண்பாட்டை கடைபிடிப்பத எண்டு தெரியாமல் முளிக்கின்ரர்கள்.
இப்படி நிறைய சொல்லிக்கொண்டேபோகலாம்...... மிண்டும் வருகிறேன்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

நடுவரே இது ஏற்கனவே "வெளிநாட்டு வாழ்க்கையா சொந்த நாட்டு வாழ்க்கையா - எது சிறந்தது" அப்படிங்கற தலைப்புல எல்லரும் பேசி - திட்டி தீர்த்த தலைப்பு தானே?! இது எந்த விதத்துல வித்தியாசமானது?!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

தனிஷா, அதிரடியாகக் களமிறங்கிவிட்டீங்கள். அதுவும் என் பூஷையா ஆலோசனை கேட்டீங்கள்? அது குழப்பிப்போடும் எல்லோரையும்..:).

///தங்க கூட்டிற்குள் வாழ்வது எவ்வளவு நாள்தான் மகிழ்ச்சி தரும்?/// எவ்வளவு நியாயமான கேள்வி, பார்ப்போம் எதிரணியினர் என்ன சொல்கிறார்களென.

///நீங்கள் மகா புத்திசாலி அதனால் தீர்ப்பு எங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். இந்தாங்க நான் எப்பவும் கொடுக்கும் மிரிண்டா..../// பூஷ் பக்கத்தில் இருப்பதால், புகழ்ச்சிக்கெல்லாம் என்னை மயங்கவிடாது தெரியுமோ? நான் ஸ்ரெடியாக இருக்கிறேன்.:).

சுகா!!! ///என்னை நிங்கள் நித்திரையில் எழுப்பி கேட்டலு சொல்லுவேன் இழந்தது தான் அதிகம்/// வந்திட்டீங்களோ? இம்முறை திங்களுக்கு முன்பே பட்டிமன்றம் அமர்க்களப்படுகிறதே... ஆனாலும் எல்லோரும் ஒரே கட்சியிலேயே இருப்பதைப் பார்த்ததும், பூஷ், வாயில் தன் கையை வைத்து, என்னைப்பார்த்துச் சிரிக்கிறது...

///அதை போல் நம் குழைந்தகள் படும்பாடு நம்பன்பட்டை கடைப்பிடிப்பதா அல்லது தங்கள் பிறந்தனட்டு பண்பாட்டை கடைபிடிப்பத எண்டு தெரியாமல் முளிக்கின்ரர்கள்/// நன்றாகச் சொன்னீங்கள் பார்ப்போம் எதிரணியினர் எதிர்க்கிறார்களா அல்லது பெட்டிப்பாம்பாகிவிட்டார்களோ என்று.

ஹேமா... இத்தலைப்பு இதுவரை நடந்த பட்டிமன்றங்களில் வரவில்லையே, நான் பட்டிமன்றத் தலைப்பெல்லாம் பார்த்துத்தான் இதைத் தெரிவுசெய்தேன். நீங்கள் எதைச் சொல்கிறீங்களெனத் தெரியவில்லை.

///"வெளிநாட்டு வாழ்க்கையா சொந்த நாட்டு வாழ்க்கையா - எது சிறந்தது/// இருப்பினும் நீங்கள் சொல்வது எந்த வாழ்க்கை சிறந்தது என்பதுதானே?

ஆனால் இத் தலைப்பை நான் எடுத்துக்கொண்டது, வெளிநாட்டால் எமக்கு கிடைத்தது நன்மையா தீமையா இப்படித்தான் அர்த்தம் கொள்கிறது, என்பதால் நீங்கள் சொல்வதிலிருந்து வித்தியாசமானதாகத்தானே இத்தலைப்பு இருக்கிறது. ஒவ்வொருவரின் எண்ணங்கள் கருத்துக்கள் ஒவ்வொருவிதமாக அமையும் என்பதால் பிரச்சனை இருக்காது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த பட்டிமன்றம் கோடைவெய்யிலில் இன்னும் அனல் பறக்கவைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. யார் எந்த அணின்னு பார்த்துட்டு முடிவு பண்ணிக்கிறேன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நடுவருக்கு வணக்கம்!!!!

தோழிகளுக்கு வரவேற்பு :)

என்னுடைய வாதம் கண்டிபாக இழந்தது தான் அதிகம்???

1. அம்மா அப்பாவின் நடுவில் படுத்து தூங்கும் தூக்கம். மனதில் எந்த ஒரு நெனைப்பும் இல்லாமல் secured ஆன தூக்கம். இப்பொது தூங்கும் நேரம் மிகவும் குறைந்து விட்டது.

2. அண்ணாவின் நகைசுவை பேச்சு, பாசமான கவனிப்பு. நினைத்த பொது Ice crème சாப்பிடும் எண்ணம். அக்காகளின் அன்பான போதனைகள். + எலோரிடமும் போடும் சண்டை மிகவும் முக்கியமானது.

3. கல்யாண வீட்டு கலாட்டா முக்கியமாக கல்யாண சாப்பாடு :)

4. நண்பர்கள். அவர்களுடன் சேர்ந்து அடிக்கும் அரட்டை.

5. விளையாட்டு indoor game எடுத்து கொள்ளுங்களேன், இப்போது மறந்தே விட்டது.

6.மாமியாரின் பாசம் + சமையலின் மணம். அவர்களுடன் 1 1/2 வருடம் தனியாக இருந்தேன்.

கடவுளே எப்பதான் ஊறுக்கு போவேனோ!!!!!!!!!!!!!!!!!!!!

நன்றி
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

அதிரா.. என் அணி "இழந்தது அதிகம்".. வாரயிறுதியில் வந்து பேசுகிறேன்.. அதுவரை உங்களுக்கும் இதிலே பேசிக்கொண்டிருக்கும், பேசப் போகும் தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்