பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இப்பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொள்ளப்போகும், மற்றும் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கப்போகும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், நடுவர் என்ற முறையில் அதிராவின் அன்பு வணக்கங்கள்.

இம்முறைத்தலைப்பு "வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பதுதான். இத் தலைப்பைக் கொடுத்திருப்பவர் சகோதரி தாஜ்பாஃரூக். சகோதரிக்கு என் நன்றி.

அதாவது வெளிநாட்டுக்கு வருவதால் மக்கள் நிறைய விஷயங்களை இழக்கிறார்களா? அல்லது அதனால் நன்மைகளையே அடைகிறார்களா என்பதுதான் தலைப்பு.

அனைவரும் வாங்கோ, உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கோ. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப, நான் உங்கள் கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பேன். எனவே, என்னைத் தாவ விடாமல் ஒருபக்க கட்சியில் நிறுத்தி, தீர்ப்பைச் சொல்ல வைக்கவேண்டியது, உங்கள் வாதங்களிலேயே தங்கியிருக்கிறது.

வழமைபோல் நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்போம்.

பி.கு: "தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்றொரு பழமொழி எங்கள் நாட்டில் உண்டு. அதுபோல, அறியாத நடுவர் பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறேன், உங்கள் அனைவரினதும் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.

வனிதா, கோ பைலட் என்று இருப்பதைப்போல, இதுக்கும் கோ நடுவர் என ஒருவரை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி யோசித்து என்ன செய்வது. சமைத்து அசத்தலாமில்கூட, ரேணுகா துணைக்கு வந்தார். இது எப்படித்தான் நடத்திமுடிக்கப்போறேனோ தெரியேல்லை தனியா. இருப்பினும் சந்தனா சொன்னதுபோல் பூஷைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, குத்துவிளக்கேற்றிவிட்டேன்...

அவர்களுக்கும் நன்றாக தெரிந்து இருக்கும் அதனால் கவலை இல்லை தீர்ப்பு நம்பக்கம் தான் தோழிகளே (அவர்களும் வெளிநாட்டில் வாழ்பவர் தானே :) பூஷ் வென சொந்தங்கள் புடைசுழ அதேநாட்டு கலாச்சாரத்தில் வளர்த்திருக்கும் :) ஆனால் நம் நடுவர் !!!!!!!

இது எல்லாமே என்னுடைய personel வாழ்கையில் இருந்து கூறியதே தவிர மற்றவர்களை பற்றி அதிகம் எனக்கு நியானம் இல்லை :( இது எல்லாமே சிறுபிள்ளை தனமாக இருக்கும் ஆனால் இழ்ந்ததை நினைத்து பார்க்கும் பொது தெரியும் வலியும் வேதனையும்.

// அம்மா அப்பாவின் நடுவில் படுத்து தூங்கும் தூக்கம். மனதில் எந்த ஒரு நெனைப்பும் இல்லாமல் secured ஆன தூக்கம். இப்பொது தூங்கும் நேரம் மிகவும் குறைந்து விட்டது.// இது குழந்தைல பண்றது. இப்ப ஊருல இருந்தாலும் இத பண்ண முடியாது. இங்க இருந்தும் என் புள்ள இதத்தான் பண்ணிக்கிட்டு இருக்கு.//
நமக்கு 60 வயது ஆனாலும் நம் அம்மா அப்பா உயிருடன் இருந்தால் நாம் குழைந்தைகள் தான்.

//கல்யாண வீட்டு கலாட்டா முக்கியமாக கல்யாண சாப்பாடு// இது மிகப்பெரிய இழப்புதான் (சிலருக்கு)// சிலருக்கு என்று நீங்கள் நழுவ பார்காதீர்கள் எல்லோருக்குமே!!!!!! நாம் ஒன்றும் தினமும் கல்யாண சாப்பாடு சாபிடுவதில்லையே!!!

//கடவுளே எப்பதான் ஊறுக்கு போவேனோ!!!!!!!!!!!!!!!!!!!!// கடவுள் எல்லாம் டிக்கெட் வாங்கி அனுப்பமாட்டரு. உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லுங்க. சந்தோசமா அனுப்பி வைப்பாரு. ரெண்டே மாசத்தில அங்க உள்ளவங்க உங்கள இங்க அனுப்பிச்சு வச்சிடுவாங்க// கணவரையும் தாங்க கூப்பிடுறேன். உங்கள் காதில் விழுந்து விட்டது அவர் காதில் எப்போது விழுமோ?????

என்னை பொறுத்தமட்டில் பணத்தை தவிர வேறு எதையும் பெறவில்லை வெளிநாட்டில் அது ஓன்றுகாக தான் பல்லை கடித்துக்கொண்டு இங்கு இருக்கிறேன்.
ஏனஎன்றால் நம் வாழ்கையில் அதுவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது (இதை
நான் என்றும் மறுக்கவில்லை)

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

பெரிய நடுவர் பூஸ் & சின்ன நடுவர் அதிரா, (பூஸுக்கு சந்தோஷமா இப்ப?)

3 நாளா ரொம்ப பிஸி, அதான் வரமுடியல. அதுக்குள்ள எத்தன பதிவுகள்!

ஆஹா, மீண்டும் ஒரு அனுபவஸ்தர் (மனோ அகா) எங்கள் அணியில்!!

"எப்படி ஹுஸேனம்மா எப்படி இப்படி? அது எப்படி க்ரெக்டா பெரியவங்க மாதிரியே நீயும் யோசிக்கிற??" என்று நானே என்னைக் கேட்டு ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அதிராவின் பூஸ் வந்து "உனக்கும் வயசாயிடுச்சுன்னு புரியலையா இன்னும்??" என்று கேட்டு என் சந்தோஷத்தைப் புஸ் என்றாக்கிவிட்டது!!

ஹூம்!! ஆனாலும் இதுக்கெல்லாம் அசருவேனா நான்??

இன்னும் எத்தனை பேர் எங்கள் அணியில்!! சில பேர் எப்பவுமே நான் இருக்கும் அணியில்!! சந்தோஷம்!!

வெளிநாடு வரும் எல்லாரும் ஒரு காரண‌த்தோடே வருகிறார்கள். வந்துவிட்டு, எப்பப் பாத்தாலும் இது இல்லை, அது இல்லைன்னு புலம்புறதை விட, இருக்கும் இடத்தில் இன்பம் காண்பதே சிறப்பு. அத விட்டுட்டு, கத்தரிக்கா, வாழக்காவுக்கெல்லாம் புலம்பினா என்ன மிஞ்சும்? எப்பவும் "இக்கரைக்கு அக்கரை பச்சை"யாத்தான் தெரியும். ஆனா அத நம்பி, புலம்பிகிட்டே இருந்தா “அரசனை நம்பி புரிஷனைக் கைவிட்ட” கதயாயிடும்!!

இன்றைய உலகமயமாக்கல், நகரமயமாக்கல்களின் நடுவில், வெளிநாட்டு வாழ்க்கைக்கும், இந்திய நகர/ கிராம வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை. இருக்கும் வித்தியாசங்களும் இன்னும் சில நாட்களில் இல்லாது போய்விடும்!!

தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் சமய, சந்தர்ப்ப, சூழ்நிலைகளை வைத்து யாருக்கும் வரும். சிலருக்கு அப்படிபட்ட சமய, சந்தர்ப்ப, சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தந்தது அயல்நாட்டு வாழ்வு!! நமக்கு "முறத்தால் புலியைத் துரத்திய" கதை என்றால், பக்கத்து மாநிலத்துக்கு/நாட்டுக்கு வேறொரு கதை இருக்கும்.

எல்லாருமே சொந்த ஊர்/நாடு பெருமை பேசி இந்தியாவிலேயே இருந்துட்டா, வேலைவாய்ப்பு?? முக்காவாசி ஜனம் வெளிநாடுன்னு போனப்புறமே வேலையில்லாத் திண்டாட்டம் தலவிரிச்சு ஆடுது அங்க? அட, வெளிநாடு போறதுக்கு முக்கிய காரணமே அதுதானே?

வெளிநாடு கிளம்புற எல்லாரையுமே கேளுங்க, எல்ல்லாரும் இந்தக் கதயத்தான் சொல்வாங்க "2 வருஷம் அல்லது 4 வருஷம் மட்டும் இருந்து கையில கொஞ்ச‌ம் காசு சேத்துட்டு வந்துடுவேன்". ஆனா, வரமாட்டாங்க, ஏன்? அங்கு கிடைக்கும் வசதிகள், அதனால் செய்யக் கூடிய நல்ல விஷயங்கள், இன்னும் பல..

கலாசாரச் சீரழிவுன்னெல்லாம் இப்ப கத விட முடியாது. மெட்ராஸ்ல இல்லாத அழிவா?

இன்னும் சொல்லப்போனா, என் மகன் இங்கு படிப்பதனால்தான் ஜாதி அரசியல் என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கிறான். திருநெல்வேலியில் பள்ளிக்கூட லெவல்லயே இப்பல்லாம் ஜாதிச் சண்டை நடக்குது!! (கல்லூரிகள்ல நான் படிக்கும்போதே நடந்துது!!)

பல்லாங்குழி, பாண்டி, ஐஸ்பால் இந்த மாதிரி விளையாட்டெல்லாம் நம்ம காலத்துல விளயாடினதுதான்; இப்பல்லாம் இந்தியாவில கூட யாரும் இத வெள்ளாடுறதில்ல. அங்க உள்ள பசங்களுக்கு இதுக்கெல்லாம் ஏது நேரம்? ஸ்கூலுக்குப் போன மிச்ச நேரத்துல ட்யூஷன், ஸ்பெஷல் கிளாஸ் போறாங்க. அதுவும் போக மீதி நேரம் இருந்தா, இருக்கவே இருக்கு டி.வி.!! அம்மா, பாட்டிக்களோடு சேர்ந்து அவங்களும் சீரியல் பாக்கிறாங்க!!

இந்தியாவில் இப்ப இருக்கும் விலைவாசி ஏற்றத்துக்கும், நிலங்களின் விலையேற்றத்துக்கும் என்.ஆர்.ஐக்கள்தான் காரணம் என்பதுபோல் எதிரணித் தோழிகள் பேசுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இன்னிக்கு, நேத்திக்கா மக்கள் வெளிநாட்டுக்குப் போறாங்க? பல தலைமுறைகளாக இது நடந்து வருகிறது. இப்ப, யூ.எஸ், வளைகுடா நாடுகள் என்றால், அந்த காலத்தில் சிலோன், பர்மா, சிங்கப்பூர், மலேசியா என்று போகவில்லையா? ஏன் அங்கெல்லாம் இருக்கும் தமிழர்களே இதற்கு சாட்சி.

இன்னும் நிறைய நல்ல கருத்துக்களை மனோ அக்கா, இஷானி, தாமரை, தளிகா, இலா எல்லாம் அழகா சொல்லிட்டாங்க. இனி தீர்ப்புப் பார்க்க வர்றேன்!!

சுவர்ணா... ///பூஷ் வென சொந்தங்கள் புடைசூழ அதேநாட்டு கலாச்சாரத்தில் வளர்த்திருக்கும் :) ஆனால் நம் நடுவர் !!!!!!!/// கவலையை விடுங்கள், நடுவர் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும்... வாழ்பவர் தான்...

///இது எல்லாமே சிறுபிள்ளை தனமாக இருக்கும் ஆனால் இழ்ந்ததை நினைத்து பார்க்கும் பொது தெரியும் வலியும் வேதனையும்./// இங்கே எதுவும் சிறுபிள்ளைத்தனமான வாதங்களாக இல்லை, எனவே தயங்காமல் எதையும் சொல்லுங்கள்.

///நமக்கு 60 வயது ஆனாலும் நம் அம்மா அப்பா உயிருடன் இருந்தால் நாம் குழைந்தைகள் தான்/// இதை யாராலும் மறுக்கமுடியாதே...

/////கல்யாண வீட்டு கலாட்டா முக்கியமாக கல்யாண சாப்பாடு// இது மிகப்பெரிய இழப்புதான் (சிலருக்கு)// சிலருக்கு என்று நீங்கள் நழுவ பார்காதீர்கள் எல்லோருக்குமே!!!!!! நாம் ஒன்றும் தினமும் கல்யாண சாப்பாடு சாபிடுவதில்லையே!!!///// அப்படிக் கேளுங்கோ சுவர்ணா... இதுக்கு என்ன சொல்லப்போகிறார்கள் எதிரணியினர்..

////கணவரையும் தாங்க கூப்பிடுறேன். உங்கள் காதில் விழுந்து விட்டது அவர் காதில் எப்போது விழுமோ?????//// கவலைப்படாதீங்க சுவர்ணா.... பட்டிமன்றம் முடிவதற்குள் அவர் காதிலும் விழுந்துவிடும்.

//// //// //// //// //// //// //// //// //// //// ////
திருமதி ஹூசைன்... ////பெரிய நடுவர் பூஸ் & சின்ன நடுவர் அதிரா, (பூஸுக்கு சந்தோஷமா இப்ப?)//// எப்பவுமே ஒருவர் முகம் கறுக்கப்பண்ணுவதே தொழிலாப்போச்சு:), இப்போ பூஷுக்குச் சந்தோஷம்தான், ஆனால் இனியும் என்னை பூஷ் மதிக்குமோ?, சும்மாவே, பூஷார் கதிரையில், நான் பின்னால் நிற்கிறேன்... இனி இன்னும் கொஞ்சம் தள்ளி நில் எனச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..:).

///"எப்படி ஹுஸேனம்மா எப்படி இப்படி? அது எப்படி க்ரெக்டா பெரியவங்க மாதிரியே நீயும் யோசிக்கிற??" /// ஆகா பூஷ்தான் அதிபுத்திசாலியாயிற்றே.....:), யாரையும் தற்பெருமை கொள்ள விடாது... தன்னைத்தவிர:).

////எப்பவும் "இக்கரைக்கு அக்கரை பச்சை"யாத்தான் தெரியும். ஆனா அத நம்பி, புலம்பிகிட்டே இருந்தா “அரசனை நம்பி புரிஷனைக் கைவிட்ட” கதயாயிடும்!!//// நல்ல புத்திதான் சொல்லிக்கொடுக்கிறீங்கள் எதிரணிக்கு. பூஷுக்கொரு சந்தேகம் முடிந்தால் தீர்த்து வையுங்கோ... "அரசியை நம்பி, மனிஷியைக் கைவிட்ட கதை எங்கேயும் இல்லையா?":).

///இன்றைய உலகமயமாக்கல், நகரமயமாக்கல்களின் நடுவில், வெளிநாட்டு வாழ்க்கைக்கும், இந்திய நகர/ கிராம வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை. இருக்கும் வித்தியாசங்களும் இன்னும் சில நாட்களில் இல்லாது போய்விடும்!!/// அழகாகச் சொல்லிட்டீங்கள், புரியவேண்டியவர்கள் புரிந்துகொண்டால் சரி. ஆனாலும் பூஷார் குழம்பிட்டார்.... அதாவது கிராமம் வெளிநாடாகிவிடுமோ?? இல்லை வெளிநாடு கிராமமாகிவிடுமோ?? எனக் கேட்கிறார் என்னிடம்.

///எல்லாருமே சொந்த ஊர்/நாடு பெருமை பேசி இந்தியாவிலேயே இருந்துட்டா, வேலைவாய்ப்பு?? முக்காவாசி ஜனம் வெளிநாடுன்னு போனப்புறமே வேலையில்லாத் திண்டாட்டம் தலவிரிச்சு ஆடுது அங்க? அட, வெளிநாடு போறதுக்கு முக்கிய காரணமே அதுதானே?//// நல்லாக் கேட்டீங்கள் ஒரு கேள்வி, எதிரணியினர் என்ன சொல்லப்போகிறார்களோ???

இன்னும் ஒரு நாளே இருக்கு. உங்கள் மனதில் உள்ளதையெல்லாம் வந்து கொட்டிப்போடுங்கோ. என்னை யாருக்காவது திட்டவேணுமென்றிருந்தாலும் வந்து திட்டித்தீர்த்திடுங்கோ, இதைவிட்டால் வேறு நல்ல சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்குமோ தெரியாது. எனவே இனியும் தாமதிக்காமல் எல்லோரும் வாங்கோ. கட்சியைக் காப்பாற்றவேண்டியது உங்கள் பொறுப்பு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அப்பப்பா அதிராவா கொக்கா?பின்னி பெடல் எடுத்துட்டீங்க,துணைக்கு பூஸ் வேறு.பெற்றது பற்றியும் இழந்தது பற்றியும் எல்லோரும் விளக்கிவிட்ட நிலையில் நான் பெற்ற ஈடு இணையற்ற ஒன்றை பற்றி மட்டும் சொல்லிவிடுகிறேன்.இங்கு என் மாமாவை கவனிக்க என் மகளும் நானும் நிறைவாக இருந்து வந்தாலும்,என் மகன்,கணவரை பற்றிய கவலை இருந்து கொண்டே இருந்தது.விடுமுறைக்கு இப்பதான் வந்து சென்றார்கள்,நிஜமாகவே என் மகனின் மாற்றம் பார்த்து மெய் சிலிர்த்து போனேன்.எல்லாவற்றிற்கும் என்னையே சார்ந்து நின்ற அவனிடம் அத்தனை மாற்றம்,ஒவ்வொன்றையும் அவனே செய்யும் நேர்த்தியை கண்டு வியந்துபோனேன்.நான் அவர்களை கவனித்ததை விட அவர்கள் எங்கள் மீது காட்டிய பரிவும் பாசமும்,வீட்டில் அனைத்து வேலைகளிலும் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு செய்ததும் அப்பப்பா யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும்.பணம்,மதிப்பு,அந்தஸ்து ஒரு புறம் இருக்கட்டும்.இதைப்போல் இன்னும் எத்தனையோ ! வெளிநாட்டு வாழ்க்கையால் இழந்தது என்று பார்த்தால் பெற்றது தான் எடையில் தராசு உயர்கிறது.பார்ப்போம் பூஸார் என்ன சொல்கிறார் என்று.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா,
இதுக்கொரு முடிவு காணாமல், எம் கட்சி மேடையை விட்டுப் போகப்போவதில்லையென நிற்கிறீங்கள்போல இருக்கு. இதுவரை நீங்கள் பட்டிமன்றங்களில் பேசியதைவிட, இம்முறை பூஷாரைக் கண்ட சந்தோஷத்தில் அதிகம் அள்ளி வீசுறீங்கள்(எதிரணிக்கு), பூஷார் நிலைமை இப்போ தர்ம சங்கடம்!!!, தனக்கு பசிக்கவும் இல்லையாம்.... பதட்டமாக இருக்கிறார்... முடிவிலே பிளேன் வந்துவிடுமோ என அடிக்கடி வானத்தையும் பார்க்கிறார், பிளேன் வந்தாலும் குருவி ரொட்டிதான்:) வரும், பயப்படாமல் தீர்ப்பைச் சொல்லுங்கோ என சொல்லி வைத்திருக்கிறேன்.

இன்னும் தீர்ப்பெழுதவில்லை. அணியினரே இன்னும் சொல்ல இருப்பின் வாங்கோ.... கட்சிக்கு வலுச் சேருங்கோ.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஏன் முறைக்கிறீங்க? பட்டிமன்றத்தீர்ப்பு.. இன்னும் வெளியாகவில்லை என சொல்லிட்டுவரச்சொல்லிப் பூஷார் சொன்னார், அதுதான் சொல்ல வந்தேன். இப்போதான் தீர்ப்புச் சொன்னார், நான் எழுதிக்கொடுத்தேன், "புரூவ் ரீடிங்" செய்கிறார்... விரைவில் வெளிவந்துவிடுமாம்... அதுவரை பொறுமையாக இருக்கட்டாம், "ஆக்கப்பொறுத்தவர்கள், ஆறப்பொறுக்கமாட்டினமோ" எனச் சொல்லச்சொன்னார் சொல்லிட்டேன்....:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா வந்துட்டேன்... சீக்கிரம்.. ப்ளேனில் வரப் போவது யார், என்ன கொண்டு வரப் போறாங்க, என்னவென்று தீர்மானிக்கணும்... :)) நானும் கணித்து வைத்திருக்கிறேன்.. ஆரம்பிக்கும் போதே இது தான் எனத் தோன்றியது.. பார்ப்போம் என் கணிப்பு பலிக்கிறதா என்று?? :))

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

இது ஆண்டவன் தீர்ப்பல்ல.....
அதிராவின் தீர்ப்புத்தான், எனவே யாரும் தீர்ப்பையிட்டு, மனம் நோகக்கூடாது.

இப்பட்டிமன்றத்தைப் பொறுத்தவரை எனக்குத் தீர்ப்பு என்பது சொல்லியே தீரவேண்டும் என்ற ஒன்றாக இருப்பதால் சொல்கிறேன், மற்றபடி எல்லோருடைய வாதங்களையும், என்னால் அதிகம் படித்து ரசிக்க முடிந்தது. எவ்வளவு அழகான ஆழமான கருத்துக்களை எல்லோரும் சொன்னீங்கள், மிகவும் விரும்பி வரிவரியாகப் படித்து ரசித்தேன். உடனேயே நான் ரசித்த வரிகளை அங்கேயே மேற்கோள் காட்டிப் போட்டுவிட்டபடியால் அவற்றைத் திரும்பவும் இங்கே சொல்லவில்லை.

இது தீர்ப்பல்ல.... படியுங்கள்...

வெளிநாட்டுக்கு வந்தமையால், நாம் இழந்தது அதிகம்தான்.....
நீங்கள் எல்லோரும் சுட்டிக்காட்டியதுபோல, சில நேரங்களில் தனிமையை உணர்கிறோம். வேலைக்குப் போவது வருவது, கதவு ஜன்னலெல்லாம் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து, ரீவியையும் ரெலிபோனையும் இன்ரநெற்றையும் எத்தனை தரம்தான் தடவ முடியும். அப்படியுள்ள நேரங்களில், எம் மண்ணிலுள்ள அருமை தெரிகிறது, சின்ன வயதில் ஓடிவிளையாடியது, அயலவர்களோடு பேசி மகிழ்ந்ததெல்லாம், மனதில் பழைய ஞாபகங்களாக வந்து, ஏதோ எல்லாம் இழந்துவிட்டோம் என்பதனைக் காட்டுகிறது.

அதேபோல், ஊரிலே நாம் உண்ட உணவுகள், இலை, காய், பழவகைகள் எதுவுமே நினைத்தவுடன் பெற முடியாமல், இங்கு கிடைப்பதைக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் போதும் ஏதோ இழந்துவிட்டோம் என்ற உணர்வுதான் வருகிறது.

அங்கு நாம் எத்தனை வகை ஆடைகளை உடுத்திருப்போம், தலையை அலங்கரித்திருப்போம், ஆனால் இங்கு, ஊருக்கேற்ற தோற்றம், விரும்பினால் கூட அணிய முடியாத நிலைமை என எண்ணும்போதும் எதையோ இழந்துவிட்டோமே...

வெளியே போகும்போது, இங்குள்ளவர்கள், தம் உறவுகளைக் கண்டும், சின்ன வயதுத் தோழர்களைக்கண்டும் வழி வழியே பேசிக்கொண்டிருப்பதைக் காண, எம்மையறியாமல் பெருமூச்சு வந்து, நாமும் எம் ஊரிலென்றால் இப்படித்தானே... போகப்போக தெரிந்தவர்களாக, உறவுகளாக இருக்குமே... என மனம், இழந்ததை எண்ணி ஏங்குகிறது.

இழந்ததுதான் அதிகம் எனச் சொன்ன, என் உடன் பிறப்புக்களே, நீங்கள் சொன்னதத்தனையும் உண்மையே அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.. இருப்பினும்..

வெளிநாட்டால் நாம் பெற்றது அதிகமே.......
இங்கே வாதாடிய அனைவரும் தன்னம்பிக்கை பற்றி அதிகம் கதைத்தார்கள். அது நூறு வீதமும் உண்மையே. நம் நாட்டில் இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழல், வெளிநாட்டிலே அதிகம். நம் நாடுகளில் இரவானால் தனியே போகமுடியாது. நாம் துணிந்து போனாலும், சமூகம் விட்டுவிடுமோ?. பெண்பிள்ளை இரவிலே தனியே போகலாமோ எனக் கேட்டே எம் தன்னம்பிக்கையைக் குறைத்துவிடுவார்கள். எல்லா நாட்டிலும் எல்லாப் பிரச்சனைகளும் உண்டு. களவு, போதைப்பொருள், இப்படியானவை.

ஆனால் வெளிநாட்டில் அதுக்கேற்ற பாதுகாப்பு அதிகம். நாம் போனைக் கையில் வைத்திருந்தாலே போதும், ஒரு பிரச்சனையென்றால் பொலிஷோடு கதைக்காவிட்டாலும் நம்பரை அடித்துப்போட்டு, போனை ஓவ் பண்ணாமல் பிடித்தாலே... அதைவைத்து இடத்தைக் கண்டுபிடித்து, எம்மிடம் போலீஷ் வந்துவிடும்.

அடுத்ததாக நாம் தன்னம்பிக்கை பெற இன்னொரு காரணம், இங்கு சுகந்திரம் அதிகம் கிடைக்கிறது. யாருக்கும் பயப்படத்தேவையில்லை. எம்மை நாமே கட்டுப்பாடாக பாதுகாத்தால் போதும். ஒரு அலங்காரமாகட்டும், உடையாகட்டும் எம் விருப்பத்துக்கு அணியலாம். ஊரில் என்றால் பக்கத்துவீட்டுக்காரருக்கும் பயந்துதான் உடை அணிய வேண்டும். அதிகமான நாடுகளில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படுகிறதே.

எம் நாடுகளில், நல்ல தொழிலில் இருப்பவர்கள் அல்லது நல்ல வருமானத்தோடு இருப்பவர்களுக்கே மதிப்புக் கொடுப்பார்கள். ஏனையவர்களை சமனாக எங்காவது மதிக்கிறார்களா?.

அப்படிப் பார்க்கும்போது சனத்தொகையில் எத்தனை வீதத்தினர் நம் நாட்டில் வசதியாக இருக்கிறார்கள்? எத்தனை வீடுகளில் இன்ரநெற் இருக்கிறது? வாகன வசதிகள் இருக்கிறது? எல்லோராலும் முடிகிறதா? ஏன் முடியவில்லை?.

வெளிநாட்டிலே பணக்காரனென்றாலும், பெரிய பதவியிலிருப்பவரென்றாலும், கியூவில்தான் நிற்கவேண்டும் எதுக்கும். எல்லோருக்கும் சம உரிமைதான். இன்ரநெற் இல்லாத வீடுகளுண்டா?

ஊரிலே கொம்பியூட்டரைக் கண்ணாலே காணாத வயோதிபர்களெல்லாம் இப்போ வெளிநாட்டிலே, இன்ரநெற்றிலே நியூஸ் படிக்கிறார்களே. ஊரிலே ஒரு சைக்கிள் வாங்கவே எத்தனை மாதம் சேமிக்க வேண்டும், இங்கே நினைத்தவுடன் கார் வாங்குகிறார்களே... அதுவும் அடிக்கடி மாத்திக்கொண்டிருக்கிறார்களே.. ஊரிலே சைக்கிள் ஓடாதவர்கள்கூட இங்கே கார் ஓடுகிறார்களே.

வெளிநாட்டிலே நாம் பிறத்திதான். ஆனால் அதனால்தான் எம்மால் அதிக சுகந்திரமாக இருக்க முடிகிறது. ஊரிலென்றால் அடுத்த வீட்டுக்காரருக்கும், உறவுக்கும் பயப்படுவதிலும், பிணக்கைத் தீர்ப்பதிலுமே காலம் கழிந்துவிடுகிறது. நாமுண்டு நம்பாடுண்டு என இருக்க முடியாதே, இருக்கவும் விடமாட்டார்களே.

இங்கே எத்தனை இன மக்களோடு பழகுகிறோம், வெவ்வேறு நாட்டினரோடு பழகுகிறோம், இதனால் எமக்கு வெவ்வேறு மதங்கள், மொழி, கொள்கைகள், பழக்கவழக்கங்கள் எனத் தெரிய வருகிறது, அதிலிருந்து எங்குபோனாலும் எதையும் சமாளிக்கும் திறமை வந்துவிடுகிறது. இங்கே என் தோழிகள், மற்றும் சீதாக்கா சொன்ன எல்லாக் கருத்துக்களோடும், மனோ அக்கா சொன்ன ஒவ்வொரு கருத்தும் என் மனதிலுள்ள கருத்துக்களாகவே இருக்கிறது. அதனால் திரும்பவும் எல்லாவற்றையும் சொல்லிக்காட்ட விரும்பவில்லை.

ஊரிலே பெற்றோருக்கு ஒரு ரீ ஊத்திக்கொடுக்காத மகன், வெளிநாட்டிலே பெற்றோரைக் கூப்பிட்டு, தானே சமைத்து சாப்பிடக் கொடுக்கிறார் என்றால்... பெற்றது அதிகம்தானே. ஊரிலே இருப்பவர்கள் செய்ய மாட்டார்கள் என்றில்லை, செய்ய, பழக விடமாட்டார்களே.

உணவுமுறையை எடுத்துக்கொண்டாலும், இப்போ நம் நாட்டில், வெளிநாட்டு உணவுகளைத்தானே அதிகம் விரும்பி உண்கிறார்கள். நமது பண்டைய உணவுகள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதே. அப்போ வெளிநாட்டில்தானே என்னவோ அதிகம் இருக்கிறது.

ஊரிலே எவ்வளவு வசதியானவர்களாக இருந்தாலும் பக்கத்து நாட்டுக்குப் போவதற்கே விசாவுக்கு கஸ்டம். வெளிநாட்டுக்கு வந்துவிட்டால் எம் விருப்பத்துக்கு முடிந்தவரை விசாவாவது கிடைக்குமே. சிற்றிஷன் எடுக்காதவர்களுக்குகூட. எம் ஆசைக்கு எங்கேயும் போய் வரலாமே.

பிள்ளைகளை எடுத்துக்கொண்டாலும், ஊரிலே 1ம் வகுப்புப் பிள்ளை, தன் ஹோம் வேர்க்கெல்லாம் முடிக்கவே 9,10 மணியாகிவிடுகிறதாம். ஆனால் இங்கே பள்ளிக்கூட ஹோம்வேர்க்காக 10 நிமிட வேலை கொடுத்தாலே, பெற்றோர் ஸ்கூலுக்குப் போய்விடுகிறார்கள் பிள்ளைக்கு அதிகம் வீட்டு வேலை வழங்கப்படுகிறதென. அதனால், போதுமான படிப்பை ஸ்கூலிலேயே கற்பித்துவிடுகிறார்கள். இதில் பிள்ளைகளும் பெற்றது அதிகம்தானே.

நம் நாடுகளில் பெரும்பாலான குடும்பங்களில், பெண்பிள்ளை பருவமடைந்துவிட்டால், தாம் இனி தம் விருப்புவெறுப்புக்களைக் குறைத்துவிட வேணுமென்றே தாய் நினைக்கிறார், ஆடை, அலங்காரத்திலிருந்து, கணவனோடு பழகுவதைக் கூட குறைக்கப் பார்ப்பவர்கள்தான் அதிகம். இதனாலேயே கணவன் மனைவிக்குள்ளும் சிக்கல்கள் தோன்றப்பார்க்கிறது. இதுக்கு யார் காரணம், சுற்றமும் உறவுகளும்தானே, அவர்களுக்குப் பயந்துதானே மனைவி தன் ஆசைகளை அணைபோடுகிறார். வெளிநாட்டிலே(நம்மவர்களைத்தான் சொல்கிறேன்) 70 வயதில்கூட கணவன் மனைவி தனி அறையில்தான் வாழ்கிறார்கள். இதனால் அவர்களால் மனம் விட்டுப்பேச, பழக முடிகிறது. வயதாகிவிட்டதை உணர முடிவதில்லை. எம் நாட்டில் ஏன் முடிவதில்லை? சுற்றம் சூழல், வசதிக்குறைவு இவைதானே காரணம். இங்கேயும் வயதானவர்களும் பெற்றது அதிகமே.

விஞ்ஞான, மற்றும் அகழ்வாராச்சிகளின் ஆதாரங்களின் படி (National Geography -In Search of Human Kind) மனிதனின் ஆரம்ப ஊர் ஆபிரிக்கா கண்டம் எனவும்,அங்கிருந்துதான் கடல்வழியாகவும், தரைவழியாகவும் குடி பெயர்ந்து இருக்கிறார்கள் என்றும், ஒரு கதை கூறப்படுகிறது. இடபெயர்ச்சி பல காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டாலும் அது மனிதவர்க்கத்தின் வளர்ச்சிக்காகவே அன்றி, வேறு ஏதும் இல்லை. அன்றைய மனிதன் இடம் பெயர்ந்திருக்காவிட்டால், இன்றைய மனிதனின் பரிணாம வளர்ச்சியை மனித வர்க்கமாகிய நாம் அடைந்து இருப்போமா என்பது கேள்விக் குறிதான். வளர்ந்த நாடுகளுக்கும் ஆபிரிக்காவிற்கும் உள்ள, இன்றைய வித்யாசமே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
"இடப் பெயர்ச்சி என்பது வளர்ச்சிக்காக மட்டுமே" (In any efficient machinery there is always internal loss but benefits are more than the loss).

ஒரு உதாரணத்திற்கு நம் சமையலையே எடுத்துக் கொள்வோம், விறகு, மின்சாரம், ஹாஸ், மைக்ரோ வேவ் இப்படி எதன் மூலமாகவும், அதில் இருக்கும் வெப்ப சக்தியை உபயோகப்படுத்திதானே நமது உணவுகளை சமைக்கிறோம், ஆனால் அந்த ஆற்றல் மாற்றத்தில் இழப்பு இருந்தாலும் ,நமக்கு கிடைக்கும் வெப்பத்தின் சக்தி அதிகம் தானே. இது இயற்கையின் அடிப்படை விதி என்பதை நாம் அறிவோமே.

ஒரு பட இயக்குனர் கூறியிருந்தார், "நான் லண்டனுக்குப் போயிருந்தேன், அங்கே ஒரு கார் கோன்கூட என் காதில் கேட்கவில்லை, சூரியன் மறைய பத்துமணிக்குமேலானது....." என்றெல்லாம்............,
என் நண்பி திருமணமாகி வெளிநாட்டுக்கு வந்திருந்தார், அப்பொழுது அவருக்கு, குழந்தை கிடைக்கும் மாதம், திடீரெனக் குத்தத் தொடங்கிவிட்டதாம், வலி தாங்க முடியாமல் கணவருக்கு போன் பண்ணினாராம், அப்போ கணவர் சொன்னாராம் வெளியே எட்டிப்பார் என. நண்பி பார்த்தாராம் ஸ்நோ கொட்டுகிறதாம், எனக்குச் சொன்னார்... அதிரா நாங்கள் படத்திலே பார்த்த ஸ்நோவை நேரிலே பார்த்ததும் நான் வயிற்றுக்குத்தையும் மறந்துபோனேன் என்று..... சிறிய சிறிய சந்தோஷங்கள் என்றாலும் கொஞ்சக் காலமாயினும் வெளிநாட்டுக்கு வந்து போபவர்கள் பெறுவது அதிகமே. வெள்ளையர்களை விட, நம்மவர்கள்தான் அதிகமாக இங்கே கைகோர்த்து நடப்பதைக்:) காணமுடிகிறது... இதிலிருந்து தெரிகிறது எவ்வளவு சுகந்திரமாக இங்கே இருக்கிறார்களென்று. 40 வயதானால் ஊரிலே இருப்பவர்களில் பெரும்பாலானோர்(எல்லோரையும் அல்ல), ஏதோ வயதாகிவிட்டவர்கள்போல தம்மை மாற்றிக்கொள்கிறார்களே, ஆனால் 60 வயதிலும் வெளிநாட்டில் இருப்பவர்கள்(நம்மவர்களைத்தான் சொல்கிறேன்) 40 வயதுக்காரர்போல இருக்கிறார்களே ஏன்? அதிக சுகந்திரம், மகிழ்ச்சி... இருக்கிறது, தம்மை தாமே அலங்கரித்து இழமையைப் பேண முடிகிறதனால்தானே.

நம் நாட்டில் பத்துவருடமாக சேமிக்கும் பணத்தை இங்கே ஒரு வருடத்திலேயே பெற்றுவிடலாமே.

மொத்தத்திலே பார்க்கப்போனால், பணமாகட்டும், தன்னம்பிக்கையாகட்டும், சந்தோஷமாகட்டும், சுகந்திரமாகட்டும்.... வெளிநாட்டிலே நாம் பெற்றதுதான் அதிகம் என தீர்ப்புக்கூறி விடைபெறுகிறார் பூஷார். தீர்ப்பை எழுதிப் பேனாவையும் உடைத்துவிடுகிறேன் நான்.

இதில் பங்குபற்றிய அனைவருக்கும் "எமது"(நானும் பூஷாரும்) சார்பில் மிக்க மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நடுவர் எஸ்கேப்...
இழந்ததுதான் அதிகம் என வாதிட்ட, என் உடன்பிறப்புக்களே!!!! என்னோடு கோபித்திட வேண்டாம். எல்லாவற்றுக்கும் காரணம் பூஷ்:) தான், எனவே தான் அவரை மேடையிலே விட்டுவிட்டு, நான், வேறு நாட்டுக்குத் தப்பி ஓடுகிறேன்:), உங்கள் கோபமெல்லாம் தீர்ந்தபின்னரே திரும்பி வருவேன். பார்த்தீங்களா, வெளிநாட்டுக்கு வந்ததால் இதுவும் ஒரு நன்மை, நினைத்தவுடன் நாடு மாறிவிடலாம்:).

நீங்கள் உங்கள் கோபத்தை பூஷில் காட்டுங்கள். அவர்தானே தீர்ப்புச் சொன்னார், ரைப்பண்ணியதுமட்டுமேதான் நான். இப்போ சொல்லுங்கோ என்னில் தப்பிருக்கோ?.

இருப்பினும் எனக்கு உறுதுணையாக மேடையிலே நின்ற பூஷாரை அம்போ என விட்டுவிட்டு ஓட மனம் வராத காரணத்தால்... ஒரு பாடலை இணைத்திருக்கிறேன்... தயவுசெய்து கேளுங்கள். இதைக் கேட்ட பின்னரும் பூஷாரோடு உங்களுக்குக் கோபமாக இருக்கோ எனச் சொல்லுங்கள்.

பாடலைக் கேட்கும்போது, "அன்னம்" போல மாறிவிடுங்கள், நல்லதை மட்டும் பிரித்தெடுத்துக்கொள்ளுங்கள்.

http://www.youtube.com/watch?v=1ek7kUZRfIA

(அடுத்த நடுவர்... சந்தனாவை வருக வருக என வரவேற்கிறேன்..... ).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மீன் வர கொக்கு காத்திருந்ததாமே.. (பழமொழி மறந்து போச்சு.. ) அது போல காத்திருந்தேன், உங்களை பிடிக்க...

என் கணிப்பு சரியே..

அதிரா.. இத்தீர்ப்பு தான் வரும் என்று எதிர்பார்த்தது தான் :)) எமக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால் - உங்களுக்கு கண்டிப்பாக அதே அதே பரிசு தான் - மணி மணி... கட்டுவதற்கு நான் ரெடியாக இருக்கிறேன்.. :)) யாரங்கே, இமாவிடம் சொல்லி ஏற்ப்பாடு பண்ணித் தரச் சொல்லுங்கோ.. இம்முறை நானே நேரடியா ப்ளேனில் வரலாம் என்றிருக்கிறேன்... ஹைஸ் இடமும் சொல்லி வைத்தாயிற்று...

எம் பக்கம் இல்லையென்றாலும், நன்றாக சொல்லியிருக்கீங்கள்.. எம் போன்ற அமெரிக்க புதியவர்களுக்கு இது போன்ற அறிவுரைகள் ரொம்பவே அவசியமாக இருக்கிறது.. நன்றி..

//ஆனால் 60 வயதிலும் வெளிநாட்டில் இருப்பவர்கள்(நம்மவர்களைத்தான் சொல்கிறேன்) 40 வயதுக்காரர்போல இருக்கிறார்களே ஏன்?//

அப்படியா அதிரா? உங்களுக்கு நாப்பது என்றல்லோ நினைத்திருதோம், உண்மையில் அறுபதோ?? :))

//தம்மை தாமே அலங்கரித்து இழமையைப் பேண முடிகிறதனால்தானே.//

இஷானி - ஓடியாங்கோ.. இழமை யாமே?? :))

அடடா - இப்படியொரு பாட்டை நம்ம பூஷாருக்கு டெடிகேட் பண்ணிவிட்டு போயிருக்கீங்களே.. ;)) எப்படியோ, உங்களைத் தேடி வந்தோம், பூஷாரையாவது கைப்பற்றி போறோம்.. அதிரா அதிரா - போனை கையிலே பிடித்தவாறே ஓடுறீங்களே.. அதை வைத்துத் தான் இப்போ உங்களையும் நாங்கள் ட்ரெஸ் அவுட் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.. :)) விரைவில் பிடித்துவிடுவோம்.. :))

பிகு: இது எம் அணித் தோழியருக்கு மட்டும்.. "கவுத்துப்போட்டாங்களே அதிரா" என்ற அறைகூவலுக்கு பதில் இம்முறை, "எல்லோரும் ஓடியாங்கோ - அதிராவே நம்மை கவுத்துப்போட்டாங்க"..

இனிமே பாட்டை மாத்தி பாட வேண்டியது தான்.. "சொர்க்கமே என்றாலும், வெளிநாட்டை போல வருமா??"

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்