பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இப்பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொள்ளப்போகும், மற்றும் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கப்போகும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், நடுவர் என்ற முறையில் அதிராவின் அன்பு வணக்கங்கள்.

இம்முறைத்தலைப்பு "வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பதுதான். இத் தலைப்பைக் கொடுத்திருப்பவர் சகோதரி தாஜ்பாஃரூக். சகோதரிக்கு என் நன்றி.

அதாவது வெளிநாட்டுக்கு வருவதால் மக்கள் நிறைய விஷயங்களை இழக்கிறார்களா? அல்லது அதனால் நன்மைகளையே அடைகிறார்களா என்பதுதான் தலைப்பு.

அனைவரும் வாங்கோ, உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கோ. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப, நான் உங்கள் கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பேன். எனவே, என்னைத் தாவ விடாமல் ஒருபக்க கட்சியில் நிறுத்தி, தீர்ப்பைச் சொல்ல வைக்கவேண்டியது, உங்கள் வாதங்களிலேயே தங்கியிருக்கிறது.

வழமைபோல் நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்போம்.

பி.கு: "தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்றொரு பழமொழி எங்கள் நாட்டில் உண்டு. அதுபோல, அறியாத நடுவர் பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறேன், உங்கள் அனைவரினதும் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.

வனிதா, கோ பைலட் என்று இருப்பதைப்போல, இதுக்கும் கோ நடுவர் என ஒருவரை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி யோசித்து என்ன செய்வது. சமைத்து அசத்தலாமில்கூட, ரேணுகா துணைக்கு வந்தார். இது எப்படித்தான் நடத்திமுடிக்கப்போறேனோ தெரியேல்லை தனியா. இருப்பினும் சந்தனா சொன்னதுபோல் பூஷைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, குத்துவிளக்கேற்றிவிட்டேன்...

ஆஹா.... இத்தனை பதிவு இருக்கேன்னு சந்தோஷமா நேற்று இரவு நுழைந்தேன்.... கடைசியில் எல்லாரும் வரலன்னு சொல்ல போட்டிருந்தாங்க.... பார்த்து கஷ்டமா போச்சு!!! :( அதான் பதிவு கூட போடாம போயிட்டேன். இப்போ இலா பதிவை பார்த்ததும் தான் சந்தோஷமா இருக்கு. :D

இலா.... இலா.... வாழ்த்துக்கள். அடுத்த கிழமையும் உங்களுக்கு செவ்வாய் தான் வர முடியுமானால் தாராளமா செவ்வாய் கூட ஆரம்பிங்க. உங்களுக்காக சலுகை..... காரணம் யாரும் வராத நேரத்தில் வந்து எங்களுக்கு கை குடுத்திருக்கீங்க.... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க எனக்கு எதிரா தீர்ப்பு சொன்னா கூட நான் இப்போ வருத்தப்பட மாட்டேன்..... ;) ரொம்ப நன்றி இலா.... நல்ல தலைப்போடு வாங்க. காத்திருக்கோம்.

அதிரா.... சந்தடி சாக்கில் மீண்டும் நான்னு என் தலையை உருட்டி இருக்கீங்க.... என்னோடு சேர்ந்து நடுவர் தேடும் பொறுப்பை செவ்வனே செய்து வருகிறீர்கள். :D ரொம்ப சந்தோஷமா இருக்கு அதிரா, அறுசுவையில் நமக்கும் கை குடுக்க தோழிகள் இருக்காங்கன்னு.

வந்து பதிவு போட்டு உங்கள் நிலையை சொல்லிட்டு போன அனைத்து தோழிகளுக்கும் என் நன்றிகள். ஆனா கண்டிப்பா இன்றில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் நீங்க நடுவர் பொறுப்பு ஏற்று தான் ஆகனும். ;) அது சீக்கிரம் முடிஞ்சா நான் சந்தோஷ படுவேன். சரியா????

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடுத்த வார நடுவர் அன்பு சகோதரி திருமதி சேகருக்கு வாழ்த்துகள், அதற்கு அடுத்த நடுவர் அன்பு சகோதரி இலாவிற்கு என் வாழ்த்துகள்.

எனக்கு அலுவலக வேலைகளும், அதிகமாக அலுவலக டூர் இருப்பதாலும் அடிக்கடி காணாமல் போகிறேன். அதனால்தான் மபொர -5 மற்றும் விமானம் இழைகளுக்கு கூட அன்றாடம் பதில் போட முடியவில்லை என வருந்துகிறேன்.

பட்டி மன்றம் தினமும் வந்தால்தான் சிறப்பாக இருக்கும் அல்லவா? அதனால் ”செய்வன திருந்த செய்” என நினைப்பவன் நான். பட்டி மன்றங்களில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஞாயிறு அன்று திடீர் விருந்தினர் வருகை ஏற்ப்படும் போல தெரிகிறது.. அப்படியாகும் பட்சத்தில், சனிக்கிழமை மாலையே வந்து ஆரம்பித்து விடுகிறேன்.. இல்லையென்றால், அப்புறம் திங்கட்கிழமை மாலை தான் வர முடியும் போல தெரிகிறது.. குழப்பத்துக்கு மன்னித்து விடுங்கள் - எதிர்பார்க்கவில்லை.. முடிவு வழக்கம் போல அடுத்த வார ஞாயிறு அன்றே போட்டு விடலாம்.. உங்களுக்கு ஏற்பு தானே??

எல்லாரும் பொறுப்பா பேச வந்துடுங்க.. இல்லாட்டினா அப்புறம் நானே இறங்கி பேசிடுவேன்.. ;))

வனிதா டென்ஷன் வேணாம், ரிலாக்ஸ்.. இலா வந்துருவாங்க.. இன்னும் மூணு வாரம் டைம் இருக்கு அடுத்த நடுவர் தேட :)).. ஸ்மைல் ப்ளீஸ் :)) உடனே வந்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இலா..

எல்லோருடைய வாழ்த்துக்களுக்கும் நன்றி.. அரட்டை இழையில் பிறகு அனைவரையும் சந்திக்கிறேன்.. இனிய வார இறுதி நாட்கள் அனைவருக்கும்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஆகா இதுவும் நல்லா இருக்கே...
ஜஜ்சம்மா.... இலா.
ஹேமா நல்ல கண்டுபிடிப்பு. நல்லவேளை உங்கள் கிட்னி தாமதமாகத்தான் இதைக் கண்டுபிடித்திருக்கென்பதால் நான் தப்பிவிட்டேன்:).

திவ்யா.... எதுக்கு இதுக்கெல்லாம் மன்னிப்பு, நேரமுள்ளபோது வந்து கலந்துகொள்ளுங்கோ. வந்தாலும் வராவிட்டாலும் வைத்த அன்பு குறைந்திடுமா என்ன?...., எல்லாவற்றிலும் எல்லோரும் கலந்துகொண்டால் அறுசுவையும் கலகலப்பாக இருக்கும்.

வனிதா இனி நிம்மதிதானே (2கிழமைக்கு), பின்னர் பழையகுருடி கதைதானாக்கும்...

ஹைஷ் அண்ணன்... இப்படியெல்லாம் சாட்டு சொல்லப்படாது.. எனக்கும் பழமொழியாக வருகுது வாயில்... "முடக்குதிரைக்கு....",, சீ.. சீ... நான் பெரியவர்களுக்கு பழமொழி எல்லாம் சொல்வதில்லை, ரொம்ப நல்ல பொண்ணு.

இருப்பினும் எனக்கு உண்மை தெரிஞ்சு போச்சு.... எங்களோடு மோதி வெல்லமுடியாதென நினைத்து "இருவர்" இப்போ வருவதில்லை... பட்டிமன்றத்துக்கு.. 1.பை...., 2. பேச்சு...
கடவுளே எனக்கெதுக்கு ஊர் வம்பு..

மோதினால் விடமாட்டோமில்ல............

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சந்தனா,இலா வாழ்த்துக்கள்,திறமைசாலிகள் எப்படியும் மாட்டிக்கொள்வார்கள்.சந்தனா,இலா உங்கள் வாதத்திறமையை கேட்க ஆவலாக உள்ளேன்.எப்படியும் நான் ஓட்டுப்போடும் அணி தான் ஜெயிக்கும்.நடுவர்களை தேடித்தந்த அதிரா,வனிதாவிற்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வனிதா,

ஒரு நாலஞ்சு நாளா அறுசுவை பக்கமே வரமுடியல, அதனாலத்தான் இதுக்கு பதில் போட முடியல!! பயங்கரமா கூவி கூவி அழைச்சுருக்கீங்க போல!

பாருங்க, இதுக்குத்தான் நான் பயப்படுறது, வர்றேன்னு சொல்லிட்டு இப்படி அப்ஸ்காண்ட் ஆக வேண்டி வந்துடுமோன்னு!!

அதனால, நான் சொல்லிக்கிறது என்னன்னா: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது.(எனக்கே தெரியாது). ஆனா வரவேண்டிய நேரத்துல கரக்டா வந்துடுவேன்!!

வெளி நாட்டு வாழ்க்கையில் உள் நாட்டு வாழ்க்கை இது எல்லாத்திலும் அதிகமா பெருவ்து இழப்பது எல்லாத்தையும் விட் கணவனை வெளிநாட்டில் விட்டு பிரிந்து வாழ்வ்து தான் பெரிய் இழ்ப்பு கணவன் தன் குழ்ந்தையை மனைவியை பார்க்காம்ல் பிரிந்து வாழும் வாழ்ககை பெரிய் இழ்ப்புதான் எவ்வள்வு கஷ்ட்ம் வ்ந்தாலிம் த்ன் குழ்ந்தையின் சிரிப்பை பார்த்த்வுட்ன் எல்லாமே மற்ந்து போகும் இன்ப்மோ துன்ப்மோ க்ணவ்னுட்ன் சேர்ட்ந்து வாழும் வாழ்க்கை தான் இழ்ப்பிலலா வாழ்க்கை

nice

வாழ்க வளமுடன்

nice

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்