தேதி: September 12, 2009
சிடி - 1
ஃபேப்பரிக் பெயிண்ட் - ப்ரவுன், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்
ஸ்பூன் வடிவில் உள்ள ஐஸ்க்ரீம் குச்சிகள்
கம்
பெவிக்கால்
கடிகாரத்தின் மிஷின் மற்றும் முள்
ஃபேட்டரி
ப்ரஷ்
கருப்பு ஸ்கெட்ச் பேனா
சன்ஃப்ளவர் கடிகாரம் செய்வதற்கு தேவையானப் பொருட்களை தயாராக எடுத்துக் வைக்கவும். சிறிய அலராம் கடிகாரத்தின் மிஷின் மற்றும் சின்ன முள், நிமிட முள், நொடி முள் ஆகியவற்றை தனித்தனியாக கழற்றி எடுத்துக் கொள்ளவும்.

முதலில் நான்கு ஐஸ்க்ரீம் குச்சியின் நுனிப்பகுதியில் முக்கால் பாகம் அளவிற்கு பெவிக்கால் தடவி வைத்துக் கொள்ளவும்.

பிறகு சிடியின் பின்பக்கத்தில் நடுவில் உள்ள ஒட்டைக்கு மேலும், கீழும் பெவிக்கால் தடவிய இரண்டு ஐஸ்க்ரீம் குச்சியை ஒட்டி விடவும். அதேப் போல் வலது மற்றும் இடது புறத்திலும் மீதமுள்ள இரண்டு ஐஸ்க்ரீம் குச்சியை ஒட்டி நன்கு காயவிடவும்.

ஒட்டி வைத்திருக்கும் ஐஸ்க்ரீம் குச்சிகள் காய்ந்தவுடன் மேலும் இரண்டு ஐஸ்க்ரீம் குச்சிகளில் பெவிக்கால் தடவி வைத்துக் கொள்ளவும். ஒட்டிய இரண்டு ஐஸ்க்ரீம் குச்சிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் சரிசமமான இடைவெளிவிட்டு இந்த ஐஸ்க்ரீம் குச்சியை ஒட்டிக் கொள்ளவும்.

இதேப்போல் சுற்றிலும் உள்ள இடைவெளிப் பகுதிகளில் இரண்டிரண்டு ஐஸ்க்ரீம் குச்சிகளாக ஒட்டி காய விடவும். (இடைவெளி உள்ள பகுதியில் ஒட்டுவதற்கு மொத்தம் 8 ஐஸ்க்ரீம் குச்சிகள் தேவைப்படும்).

ஐஸ்க்ரீம் குச்சியில் ஸ்பூன் வடிவில் இருக்கும் நீள்வட்டத்தை மட்டும் குரடை பயன்படுத்தி அல்லது கையால் உடைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை சிடியில் ஒட்டியிருக்கும் ஒவ்வொரு குச்சிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியில் பெவிக்கால் தடவி ஒட்ட வேண்டும். ஒட்டும் பொழுது சிடியின் வெளிப்பக்கம் நீட்டிக் கொண்டிருக்கும் ஐஸ்க்ரீம் குச்சியின் உயரத்தில் பாதியளவு இருக்கும்படி ஒட்டிக் கொள்ளவும்.

மொத்தம் 12 குச்சிகள் உடைத்துக் கொண்டு சிடியை சுற்றிலும் மேற்சொன்ன முறையில் ஒட்டிக் காயவிடவும்.

ஐஸ்க்ரீம் குச்சிகள் நன்கு காய்ந்ததும் சிடியின் வழவழப்பான பக்கத்தை எடுத்துக் கொண்டு அதன் நடுவில் உள்ள ஓட்டையை சுற்றிலும் 2 செ.மீ அளவில் ப்ரவுன் கலர் ஃபேப்பரிக் பெயிண்டை வட்ட வடிவமாக அடித்துக் கொள்ளவும்.

பிறகு ஒவ்வொரு முறை பெயிண்ட் செய்யும்பொழுது முதலில் அடித்த பெயிண்ட் காய்ந்தவுடன் மற்றொரு நிற பெயிண்டை பயன்படுத்த வேண்டும். இப்போது ப்ரவுன் நிற பெயிண்ட் காய்ந்தவுடன் சிறிய ப்ரஷில் மஞ்சள் பெயிண்டை தொட்டுக் கொண்டு சூரியகாந்தி பூ போன்று வரைந்துக் கொள்ளவும்.

வரைந்தப்பகுதி முழுவதும் மஞ்சள் பெயிண்டை அடிக்கவும். பிறகு சிடியின் இடைவெளி உள்ள பகுதியில் ஆரஞ்சு நிற பேப்பரிக் பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.

அதனை தொடர்ந்து ஒட்டி வைத்திருக்கும் ஐஸ்க்ரீம் குச்சிகளிலும் மஞ்சள்நிற பெயிண்டை அடித்துக் நன்கு காயவிடவும்.

ஐஸ்க்ரீம் குச்சியில் அடித்த பெயிண்ட் காய்ந்தவுடன் கருப்புநிற ஸ்கெட்ச் பேனாவால், பெரியதாக நீட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஐஸ்க்ரீம் குச்சியிலும் கடிகார எண்களை எழுதிக் கொள்ளவும்.

கடிகார மிஷினின் முன்பக்கம் முழுவதும் நன்கு கம் தடவிக் கொள்ளவும். சிடியின் பின்பக்கத்தில் ஐஸ்க்ரீம் குச்சிகள் ஒட்டிய இடத்தில் இந்த கடிகார மிஷினை நடுவில் இருக்கும்படி பொருத்தி விட்டு நன்கு காயவிடவும்.

பிறகு கடிகார முள் ஒவ்வொன்றையும் வரிசையாக மாட்டிக் கொள்ளவும். கடிகார மிஷின் பின்பக்கத்தில் ஃபேட்டரியை பொருத்தி கடிகாரத்தை ஓடவிடவும்.

இப்பொழுது அழகிய சன்ஃப்ளவர் சிடி கடிகாரம் ரெடி. கடிகார மிஷின் பொருத்தப்பட்டிருக்கும் இடத்தில் இரண்டு ஐஸ்க்ரீம் குச்சிகளை ஸ்டாண்டு போல் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.

அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த சன்ஃப்ளவர் சிடி கடிகாரம் செய்முறையை வடிவமைத்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

Comments
சுப்பர்..
சுப்பர்.. என்னடா இது சன் ப்ஃளவர் மாதிரி இருக்கேன் இரண்டாம் முறை பார்த்தேன்.. நல்ல கைவண்ணம்...
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
பாராட்டுக்கள் பாப்பி
நல்ல ஐடியா. வெகு நேர்த்தியாக இருக்கிறது உங்கள் கைவண்ணம்.
மிக மிக அழகாக இருக்கிறது பாப்பி.பாராட்டுக்கள்.:)
அன்புடன் இமா.
- இமா க்றிஸ்
sunflower
வித்தியாசமான சிடி உபயோகம்.அவ்வளவு அழகு+நேர்த்தியாக செய்திருக்கிறீர்கள்.
Patience is the most beautiful prayer!!
அழகான கைவேலை.
சன்ஃப்ளவர் கடிகாரம் மிக நேர்த்தியாக இருக்கிறது.
பாராட்டுக்கள்.
அன்புடன்,
செபா.
ஆகா,களம் இறங்கியாச்சா?
பாப்பி,உன் முகத்தின் பூரிப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.சன் ஃப்ளவர் சிடி கடிகாரம் சூப்பர்.இனி அதிக படைப்புக்களை எதிர் பார்க்கலாம் தானே!நானே உனக்கு சுற்றி போட்டு விட்டேன்.கண்ணுபடப் போகுதம்மா.:)
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
பாப்பி
பலே.நலமா?அருமையாக அசத்துகின்றீர்கள்.இப்படி கைவேலைப்பாட்டில் முன்பு அதிகம் ஈடுபாடு இருந்தது.நாளாவட்டத்தில் குறைந்து கொண்டே போய் விட்டது.இந்த சன் ஃபிளவர் சிடி கடிகாரம் செய்முறையைப்பார்க்கும் பொழுது மீண்டும் ஆசை துளிர் விடுகின்றது.வாழ்த்துக்கள்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
சன்ஃபிளவர் கிளாக்
பாப்பி,உங்கள் சன்ஃபிளவர் கிளாக்கை பார்த்ததுமே சகோதரி ஜலீலா உங்களை பாராட்ட விரும்பி பதிவு போட்டால் எரர் வருகின்றதாம்.என் பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் உங்கள் பதிவு மூலம் சொல்லி விடுங்கள் என்று ஜலி சற்று முன் என்னிடம் கேட்டுக்கொண்டார்.ஜலியின் வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் வாங்கிக்கொண்டு பின்னூட்டத்திற்கு அவசியம் பதில் போடுங்கள் .எழுத்துப்பிழை இருந்தால் கோபித்துக்கொள்ள மாட்டோம்.
இதோ ஜலீலா எனக்கு அனுப்பிய மெசேஜ்ஜை அப்படியே காப்பி பேஸ்ட் செய்கின்றேன்.
jaleela: பாப்பி ரொம்ப அருமையா இருக்கு,எப்படி இருக்கீங்க
அருசுவை சரியாக கிடைக்காததால் யாருக்கும் பதில் போட முடியல.
வாழ்த்துக்கள், உங்கள் வீட்டு சமையல் குறிப்பையும் எதிர் பார்க்கிறேன்.
இதை அப்பப்டியே சாதிகா அக்கா நான் சொன்னதா போஸ்ட் பண்ணுக்னக்ள்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
சன்ஃபிளவர் கடிகாரம், சூப்பர்!
சூப்பர் ஐடியா, பாப்பி! ரொம்ப அழகா இருக்கு உங்க சிடி சன்ஃபிளவர் கடிகாரம். வெகு நேர்த்தியாக செய்து காட்டியிருக்கிங்க.
நான் இதை காண்பித்ததுமே என் பொண்ணு சொல்லிவிட்டாள். 'ஐய்ய்ய்.., வெரி ப்ரிட்டி. அம்மா, நான் இதை ட்ரை பண்ணிப்பார்க்கப்போறேன்' என்று! செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
தொடரட்டும் உங்கள் படைப்புகள்! வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
செண்பகா அண்ணி,
செண்பகா அண்ணி,
உங்கள் சன்ப்ளவர் கடிகாரம் அருமை. கண்ணைக் கவர்கிறது. தேவையற்ற சிடிக்களை உபயயோகமாக்க நல்ல வழி.
மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!
ithula irukura vesayam romba
ithula irukura vesayam romba use fulla irukku aana chellathu print edukka varamadengethu atha eppadi print edukurathunu theriyala plese ennakku konjam help pannunga
sun flower CD Watch
Hai Paappi,
Realy Super
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta