உதவி ப்ளீஸ்.. "soft toys " எப்படி clean பண்ணுவது

உதவி ப்ளீஸ்.. "soft toys " எப்படி clean பண்ணுவது தெரிஞ்சவங்க எனக்கு சொல்லி உதவி பண்ணுங்க நன்றி

அனாமிகா, நலமா? சின்ன குழந்தைகள் வாயில் வைத்து விளையாடும் விளையாட்டு பொருட்களை ஈரத்துணியால் துடைத்து, ஜன்னலில் வெய்யிலில் படும் இடத்தில் பேப்பர் வைத்து காயவிடுங்கள்.Strong cleaning agents கள் பாவிக்க வேண்டாம்.
வாணி

நான் நலம் வாணி நீங்களும் உங்க குழந்தைகளும் நலமா?? தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி வாணி " plastic toys" இத மாதிரி பண்ணின்னா அழுக்கு பொய் விடுகிறது ஆனா "soft toys " அழுக்கு போகல அதனால தான் கேட்டேன் மீண்டும் தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

சாஃப்ட் டாய்ஸ்!! என்கிட்ட இன்னும் இல்லை. என் பிரெண்ட்ஸ் வாஷிங்மெஷினில் போட்டு துவைப்பார்கள். ஆனால் நானும் தலகாணி அப்படித்தான் துவைப்பேன் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நானும் வாஷிங் மெஷினில்தான் "wool wash"ல் போட்டு வாஷ் செய்வது வழக்கம். கலர் போகுமா என்று பார்த்துப் போடுங்கள்.

நலமா? நானும் வாஷிங்மெசின் தான் போட்டு துவைப்பேன்..quick wash பண்ணுவேன்.. இல்லன்னா கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ஒரு ஷாம்பூ குளியல் தான் பொம்மைக்கும், அட ஆமாங்க பிள்ளைய குளிப்பாட்டுற மாதிரியே ஒரு குளியல் போட்டு முடிஞ்ச அளவு பிழிந்துவிட்டு வெயில்ல வச்சிருவேன்..

இலா மிக்க நன்றி தங்கள் பதிலுக்கு கூடவே இன்னொரு டிப்சும் சேர்த்து சொல்லி இருக்கீங்க நன்றி
ஹுசைனம்மா தங்களுடைய விளக்கமான பதிலுக்கும் மிக்க நன்றி
தாமரை நன்றி உங்களுக்கும் நீங்களும் நல்ல ஐடியா கொடுத்து இருக்கீங்க

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

இப்ப இன்னொரு சந்தேகம் வந்து இருக்கு. நீங்க எல்லாரும் சொல்ற மாதிரி வாஷிங் மெஷின் இல்லன்னா சாம்பு குளியல் 'soft toys' கொடுத்துட வேண்டியதுதான்.
ஆனா சில 'soft toys' la electronic உள்ள இருக்கு அதாவது அந்த toys press பண்ணினா சவுண்ட் அல்லது பாட்டு வரும் இந்த மாதிரி 'soft toys with electronic" eppadi clean பண்றது தெரிஞ்சவங்க இதுக்கும் சொல்லி உதவி பண்ணுங்க
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்