இங்க அரட்டை 96 ஓடிவாங்க ஓடிவாங்க

இங்க வந்து அரட்டை பதிவு பண்ணுங்க. அப்பா..... பூர்வஜென்ம பலன அடங்சுட்டேனுங்க :)))))

Hi அனைவருக்கும் காலை வணக்கம்

அம்முலு நான் ந‌ல்லா இருக்கேன்ப்பா... உங்க‌ அன்புக்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி....

சுபத்ரா நான் ந‌ல‌ம்... நீங்க‌ ந‌லமா?

வாணி ந‌ல‌மா? குழ‌ந்தைக‌ள் ந‌லமா?

இமா அம்மா ந‌ல‌மா?

ஜீனோ ந‌ல‌மா?

சோனி நல‌மா?

கவிசிவா நீங்க‌ள் ப‌தில‌ அளித்த‌துக்கு ச‌ந்தோஷ‌ம்ப்பா.... உங்க‌ வீடு நீங்க‌ இருக்கும் இட‌ம் ஏதேனும் சேத‌ம் ஏர்ப‌ட்ட‌தாப்பா..... உயிர் ப‌லி எண்ணிக்கை அதிக‌மாகிட்டே இருக்கே அதான் கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மா இருக்கு....

இய‌ற்க்கை அன்னைக்கு அப்ப‌டி என்ன‌ கோப‌ம் தெரிய‌ல‌?

safi_na1 உங்க‌ பேரு என்ன‌ப்பா? நீங்க‌ ந‌ல்மா? உங்க‌ கிட்ட‌ நான் இப்ப‌தான் பேருரேன். உங்க‌ வ‌ர‌வு ந‌ல்வ‌ர‌வு ஆகுக‌....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய்.... தோழிகள் அனைவரும் நலமா? புதுவரவுகள் அனைவரையும் வரவேர்க்கிறேன். என்னை யாரெல்லாம் விசாரிச்சிருக்கீங்கன்னு தெரியலயே..... நிறைய பதிவாயிடுச்சு, அதான் முழுதும் படிக்க முடியல. யாரும் கோச்சிக்ககூடாது. கோச்சிக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும், ஏன்னா நீங்களாம் "ரொம்ப நல்லவங்க". :) என்னை விசாரிச்ச எல்லாரும் என் நன்றிகள். அதிரா சொல்ற மாதிரி நம்மை காணோம்'ன ஒரு பூஸும் விசாரிக்காதுன்னு வருத்த பட விட மாட்டீங்கன்னு தெரியும். :D விசாரிக்காத தோழிகள் எல்லாம் வழக்கம் போல் இன்று முழுக்க பென்ச் மேல நில்லுங்கோ. நானும் குழந்தையும் நலம். நீங்க எல்லாரும் நலமா இருக்கீங்கன்னு நம்பறேன். ரொம்ப நாளா இந்த பக்கம் வர முடியாம போச்சு.... உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றா வனிதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிரா,
இனிக் கலைக்க மாட்டன். அதுதான் ரெசிப்பி எல்லாம் தேடி முடிஞ்சுதே.
//கைகளைப் பார்த்தே அலுக்கப்போகுது:)// இனிமேலும் குறிப்புப் பார்த்து முயற்சி செய்யுங்கோ எண்டு கேப்பினம் எண்டு நினைக்கிறீங்களே?

இன்னொரு ஆள் 'மெஹெந்தி சுமாராகப் போடத் தெரியும்,' எண்டு ப்ரொஃபைல்ல எழுதி இருந்தவ. பிறகு கலக்கிப் போட்டா. :) உங்கட ஐசிங் குறிப்பும் கெதியா வரும் எண்டு நினைக்கிறன்.
//கழுவியபின் படம் எடுக்காமல்// நான் நினைச்சன் படம் எடுத்த பிறகுதான் இருட்டு அறையில வைச்சுக் கழுவுறது எண்டு. இப்ப முறைகள் மாறிப் போச்சுது போல.

//சின்ன ஸ்ரிஞ்...// :) இலா வந்து 'ஆம்ப்லிஃபை பண்ணீட்டீங்கள்' எண்டு சொல்லுறதைக் கேக்க விருப்பமா இருக்கே? :)

//துன்பம் வரும்போது சிரி.... // சரி. அதுக்காக 'காலை மிதிக்காதைங்கோ அண்ணா.' எண்டு சொல்லாமல் பொறுத்துக் கொண்டு இருந்தீங்களோ!! இதில ஏதோ விஷயம் இருக்கு. :)

//நீண்ட பதில்// 'சர்வர் லோட்' ஏத்துறமோ எண்டு பயமா இருக்கு. :)

மற்ற எல்லாருக்கும் பின்னேரம் வந்து பதில் போடுறன், யோசிக்காதைங்கோ.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அனைவருக்கும் ஜீனோவின் வடிவான வவ்..வவ்..வவ்..வணக்கம்! எல்லோரும் ஜீனோவின் புண்ணியத்தில்:) சுகமாய் இருக்கீங்கள் தானே? ஜீனோவும், ஜீனோவிண்ட:)டோரா புஜ்ஜியும் மிகவும் நலமாய் இருக்காங்கள்..எங்களை நலம் விசாரித்த அன்புள்ளங்களுக்கு ஜீனோவின் நன்..நன்..நன்றி!

அன்புத்தோழி மகேஷ்யுவா,உங்களுக்கு ஜீனோவின் தாமதமான பதில்..ஜீனோ இருப்பது இந்தியாவில் இல்லை..ஜீனோவிண்ட அலுவலகமும் சென்னையில் இல்லை..ஜீனோ இருக்குமிடத்தில "வொர்க்கிங் ப்ரம் ஹோம்" ஆப்ஷன் உண்டு..வீட்டிலே படு வேகமான வலை [இன்டர்நெட்] மற்றும் மடிக்கணினியும் உண்டு..இத்தனையும் சொன்ன பிறகு ஜீனோ எவ்வாறு நீள-நீள பதிவுகள் பதிக்கிறார் எண்டு உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும்! :)

வாணி அக்கா,நீங்களும் இந்த பதிவைப் படிக்கரீங்கள் தானே? கண்ணிலே மண்ணைத் தூவுவதோ? அதெப்படி? ஜீனோக்கு கொஞ்சம் ட்ரைனிங் தாரீங்களா?:):)

அன்புத்தோழி சுபத்ரா, ஜீனோவிண்ட பெயரே ஜீனோ தான்:) ரொம்பக் குழம்பிட்டீங்களோ? :) {சந்தானம் நலமா இருக்கீங்களா?} -----> யாருங்கோ சுபத்ரா இந்த சந்தானம்? :D x 20
சந்தனா,இதைக் கண்டும் இப்படி கமுக்கமாய் இருந்தால் எப்படி? வாங்கோ,வந்து கொஞ்சம் பேசுங்கோ!

தேன் அக்கா, கஷ்டமான வேலையெல்லாம் வீட்டில் ஜீனோ செய்வதில்லை! உங்களுக்கு மங்குஸ்தீன் மரம்-அப்டேட் வேணுமெனில் நீங்கள் டோராவைக் காண்டாக்ட் செய்யவும். :)

"மயில்":) புகழ் சோனியா அக்கா, //எப்போது இருக்கும் இந்த ஜினோ எங்க// நீங்கள் பேசும் தமிழ் பல சமயம் ஜீனோக்கு புரியல்ல..இப்பம் நீங்கள் என்ன கேக்கரீங்கள்?
// ஜினோ எங்க போங்க. வாங்க// அய்யகோ.. ஜீனோவின் தலை மணிக்கு 420 மைல்:) வேகத்தில் சுத்துதே!! யாரேனும் ஜீனோவின் மர மண்டையில் ஏறுகிற மாதிரி சொல்லி உதவுங்கோ!

இமா ஆன்ட்டி, என்ன இது மெஹந்தி கதையை சிந்துபாத்-ன் கன்னித்தீவு ரேஞ்சில் தொடர்கிறீங்கள்!:):) ஜீனோக்கு இப்ப உங்கள் கோலம் போடும் திறனில் முழு நம்பிக்கையும் வந்துவிட்டது! ஜீனோவின் நாலு காலும் ரெடி! நீங்க ரெடியா?? :)
ஆன்ட்டி, வடிவாய்=அழகாய் , பின்னேரம் = மாலை இதுதானே பொருள்?:):)

பிரபாக்கா,அம்முலு அக்கா,ஸ்வர்ணா,அறுசுவையின் மூத்த சகோதரி அதிரா அக்கா, இன்று எல்லோரையும் பென்ச்சில் ஏற்றிய வனிதா அக்கா, காணாமல் போனதாய்ச் சொல்லி அமுக்கமாய் அரட்டையைப் படித்துக் கொண்டு [மட்டும்] இருக்கும் தோழமைகள் எல்லோரும் இந்தநாள் இனிதாய் இருக்க ஜீனோவின் வாழ்த்துக்கள்.

ஹும்..எவ்ளோ நீண்ட பதிவு..ஜீனோ ஜஸ்ட் நீட்ஸ் எ பிரேக் மேன்..பை!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

பிரபா, நலமா? நாங்கள் நலமே. காலை வணக்கம். என்ன மெனு.

ஜீனோ, நலமா? நீங்கள் தானே முன்பு ஒரு முறை மானேஜர் வந்தால் சிண்டை பிச்சு போடுவார் என்று சொன்னீர்கள். வீட்டிலிருந்து வேலை செய்தால் எப்படி ......உங்கள் மானேஜரின் கைகள் அவ்வளவு நீள.....மா?. போங்கள் ஜீனோ உங்கள் மெமரியே சரியான மோசம். நல்லா தட்டி விடுங்கோ. இல்லாவிட்டால் டோராவிடம் தடியை குடுத்து 4 அடி அடிக்க சொல்லுங்கள். சரியா?

சுபத்ரா, நலமா? ஜீனோ ஒரு anonymous . சும்மா நோண்டி நோண்டி கேள்விகள் கேட்க கூடாது. சரியா?
கலா, அனாமிகா, ஸ்வர்ணா, இலா, இமா, மற்ற தோழிகள் நலமா??
வாணி

அறுசுவை உறவுகள் அனைவரும் நலம்தானே?

மகேஸ்வரி, என்ன வழக்கம் போல் ஏதாவது குழறுபடியாக கேட்டுவிட்டேனா? பிழையாகக் கேட்டிருந்தால் மன்னிக்க வேண்டும். நீங்கள் நலம்தானே?

வாணி, இமா நலம். ஒவ்வொரு ஆளாகப் பிடிச்சு வாருறீங்கள். :))))) என்னிடம் எங்கேயோ ஒரே ஒரு கேள்வி கேட்டிருக்கிறீங்கள். தேடிப் பாருங்கோ. அதுக்குக்கு பதில் 'ஒன்றும் இல்லை.' :))

கலா, எனக்கும் இப்ப எல்லாம் "பிறிங்கில்ஸ்" டின் பார்த்தால் சிரிப்பு வருது. :)

சுபத்ரா, கவிசிவா, பிரபா, வனிதா, ப்ரியா, விக்காத தேன் அனைவரும் நலம்தானே?

ஜீனோ,
எனக்கும், சந்தனா இதைப் பார்க்க வேணுமே எண்டு இருக்கு. :))))))))))))

சோனியா சொன்னதை மொழி பெயர்க்கிறேன், புரியும் பாருங்கள்.

//எப்போது(ம்) இருக்கும் இந்த ஜி(ஜீ)னோ எங்க(?)//
// ஜினோ(!) எங்க போ(னீ)ங்க.(?) வாங்க//.

//வடிவாய்=அழகாய்// சரிதான். //மாலை// சங்கிலி இல்லையோ!!!

என்ன ஜீனோ, 'ப்ரேக்' பழுதாப் போச்சா? புது 'ப்ரேக்' வாங்க வேணுமா? இப்ப ப்ரேக் இல்லாட்டால் 'ஸ்பேர் பார்ட்ஸ்' கடை முன்னால போய் எப்பிடி நிற்பீங்க!!!??? எந்தக் கடை என்று சொல்லுங்க, நான் வாங்கி வந்து தருகிறேன். //மேன்..// 'மான்' தானே? அது கொஞ்...சம் புரியுது. புரியாதது.. அரட்டைல தற்போது அப்படி ஜீனோ என்று ஒருத்தர்தான் இருக்கிறார். பிறகு யாருக்குச்சொல்லுறீங்கள்!?

//ஜீனோவின் நாலு காலும் ரெடி!// அப்பிடி எண்டால் 'ப்ரேக்' இல்லை எண்டு சொல்லி எதுக்குக் குழப்புறீங்கள்? ஒண்டும் விளங்கேல்ல. :(
//ரெடியா?? :)// லைட் பத்தி விட்டுது. :) பொறுங்கோ, எல்லாம் ரெடியாக எடுத்து வச்சுக் கொண்டு வாறன். :)

ஹாய் சோனியா,
நலமா? வீட்டில் எல்லோரும் நலம். அம்மாவிடமும் நீங்கள் கேட்டதாகச் சொல்கிறேன். ஜீனோவுக்கு என் மொழி பெயர்ப்பு சரிதானே?

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா, நலமா?.

//என்னிடம் எங்கேயோ ஒரே ஒரு கேள்வி கேட்டிருக்கிறீங்கள். தேடிப் பாருங்கோ. அதுக்குக்கு பதில் 'ஒன்றும் இல்லை.' :))///

பதில் "ஒன்றுமில்லை". ஒன்றுமே விளங்கவில்லை இமா. நான் எங்கே போய் தேடுவேன். அறுசுவையின் கூகிள் எங்கே?
யாராவது உதவுங்களேன்??
இப்படி சந்தனாவுக்கும், சுபத்ராவுக்கும் சிண்டு முடிவதில் என்ன ஆனந்தமோ?? ( கடவுளே சந்தனா இதை பார்க்க வேண்டும்).
வாணி

வாணி நலமா??
//இமா, நலமா? தொடர் கதை எழுதப் போகின்றீர்களா? வாழ்த்துக்கள். கடை ஏழு வள்ளல்கள் சரி. ஆனால், கடை எட்டு வள்ளல்கள் என்று தேன்மொழி பெயரையும் ஏன் சேர்த்தீர்கள். உங்களுக்கு இலவசமாக என்ன கொடுத்தார்?? //

இந்த கேள்விக்கான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அறுசுவையின் கூகிள் வாழ்க.. வளர்க. :))))))))

‍- இமா க்றிஸ்

லஷ்மீ,வள்ளல் கதை முழுதும் நீங்க படிக்கல்ல போலருக்கே? முன்னுரை முதல் முடிவுரை வரை, இதோ...

1.தேன் அக்கா பிரபாக்காவுக்கு மங்குஸ்தீன் பழம் கொடுத்தவர்... அதைப் படித்து, .
2.ஜீனோவும் தனக்கும் பழம் வேணுமென தேன் அக்காவிடம் கேட்டவர்.
3.தேன் அக்கா ஜீனோவுக்கு ஒரு மங்குஸ்தீன் மரத்தையே கொடுத்தவர்..அதனாலே,
4.ஜீனோ தேன் அக்காவை கடையேழு வள்ளல் லிஸ்ட்லே சேர்த்தவர்.அப்போது,
5.ஏழு வள்ளல் பேர் ஜீனோக்குத் தெரியாததாலே யாரிடமாவது உதவி கோரினவர்...வழக்கம் போலே,
6.இமா ஆன்ட்டி எல்லா வள்ளல்கள் பேரையும் சட்டென்று கூறி ஜீனோக்கு உதவினவர்..அப்போது,
7.நம்ம வாணி அக்கா கடைசி பதிலை மட்டும் படித்துவிட்டு குழம்பினவர்.அதன்பின்னர் சில நாள் கழித்து,
8.ஆன்ட்டி வாணி அக்காவுக்கு பதில் சொன்னவர்..ஆனால்,
9.வாணி அக்கா தான் கேட்ட கேள்வியை மறந்து மீண்டும் குழம்பினவர்..அப்போது,
10.லஷ்மி வந்து உதவினவர்.
அம்புட்டு தான் கதை! :):):):)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்