வெங்காய கூழ் வடகம்

தேதி: February 5, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி(இட்லி அரிசி) - 500 கிராம்
பச்சை மிளகாய் - 11
பெருங்காயத் தூள் - 1 ஸ்பூன்
கல் உப்பு - 2.5 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 25


 

புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு களைந்து, பின் கிரைண்டரில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
மறு நாள் காலையில், அடிகனமான பாத்திரத்தில் 6 - 7 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் மூன்றையும் மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், மாவை ஊற்றி, ஒரு மரக் கரண்டியால், கை விடாமல், கட்டி தட்டாமல், நன்கு கிளறவும்.
தீயைத் தணித்து வைத்து, ஒரு அகலமான தட்டால், கொதிக்கும் வடக மாவை மூடி வைக்கவும்.
மாவு கெட்டியான பதமாக வரும் வரை, அவ்வப்போது திறந்து, கிளறவும்.
சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரியவும். அரிந்த வெங்காயத்தை, வடக மாவில் கலக்கவும்.
பிறகு மாடியில், பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து, சின்ன சின்னதாக, கிள்ளி வைக்கவும்.
மாலை வரை நன்கு காய விடவும். பிறகு அதை உரித்து எடுக்கவும்.
மேலும் இரண்டு - மூன்று நாட்களுக்கு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
சுத்தமான டப்பாவில் பத்திரப் படுத்தவும்.
தேவைப் படும்போது, ரீஃபைண்ட் ஆயிலை, வாணலியில் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின்னர், வடகத்தைப் பொரிக்கவும்.
சாதத்துக்குத் தோட்டுக் கொள்ள சுவையான வெங்காய கூழ் வடகம் தயார்.


வெயில் காலம் வந்து விட்டது. வடக ஸீசன் தொடங்கி விட்டது. இது புழுங்கல் அரிசியை அரைத்து செய்யும் முறையாகும். வெயில் காலத்தில் செய்து எடுத்து வைத்துக் கொண்டால் ஒரு வருடம் முழுவதற்கும் பாதுகாத்து வைக்கலாம். தேவைப் படும்போது எண்ணெயில் வறுத்து சாதத்துக்குத் தொட்டு கொள்ளலாம். அதிலும் கலந்த சாத வகைகளுக்கு சூப்பர் காம்பினேஷன். இந்த வடக மாவு, பிழியும் வடக மாவை விட சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மேடம், இன்னைக்குத்தான் முதன்முதலில் உங்களோடு பேசுகிறேன். இந்த வடகம் எனக்கும், என்னவருக்கும் ரொம்ப பேவரிட். இரண்டு வருடமாக நான் வடகமே போடவில்லை, இன்றுதான் ஜெயந்தி மாமியின் ஜவ்வரிசி தக்காளி வடகம் போட்டேன்.

இங்க, எங்களுக்கு இப்ப பீக் சம்மர், வீக்கென்டில் 44/45டிகிரிக்கு போகப்போகுதாம். அதனால் தான் வடகம் போடும்பொழுதே, நாளையிலிருந்து வெங்காய வடகம், கூழ்வடகமெல்லாம் போட ஆரம்பிக்கலாம் என யோசித்துக் கொண்டே போட்டேன், முடித்துவிட்டு வந்து அறுசுவை ஓபன் பண்ணியதும் பார்த்தால் உங்கள் வடகக் குறிப்பு கண்ணில்பட்டது, (என் மனதைப் படித்தது போல) அதுதான் உடனே "உங்களோடு பேசவேண்டும் என்று தோன்றியது" பேசுகிறேன்.

உத்தமி:-)

நலமா,

உங்கள் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி. நானும் இன்னும் ஓரிரு வாரங்களில் வடகம் போடுகிற வேலையை ஆரம்பிக்க வேண்டும். நீங்களும் வடகம் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். நீங்கள் விரும்பினால் வடக மாவில் சீரகம் சேர்த்துக் கொள்ளலாம். வாசனையாக இருக்கும். எங்கள் வீட்டில் வெறும் வடக மாவையே சிற்றுண்டி மாதிரி விரும்பி சாப்பிடுவோம். அதுவும் தவிர, வடகம் பாதி காய்ந்து கொண்டிருக்கும் போது அதையும் எடுத்து சாப்பிட்டு விடுவார்கள்.

இன்னும் ஒரு 10 நாட்களில் வெங்காய கறி வடக குறிப்பும் தரலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மேடம், இங்கும் அதே கதைதான், அம்மா புலம்பிக் கொண்டேயிருப்பார்கள், "போதும்டி வெறும் வயிற்றில் அளவாகச் சாப்பிடுங்கோ சேராமல் போயிடப் போகுதுன்னு," நாங்கள் (என் 2 அக்காவும், நானும்) கேக்கவே மாட்டோம். இப்போ எங்க குட்டீசும் அதேதான் செய்கிறதுகள்.
ஆஸ்ட்ரேலியா வந்த பிறகு நான் அதெல்லாம் ரொம்ப மிஸ்பண்றேன். இங்கே தனி ஆளா நான் மட்டுந்தான் செய்யனும், வீக்கென்டா இருந்தாத்தான், எடுத்துச் சாப்பிடுவதற்கு இவரும்,
மகனும் வந்துவிடுவார்கள்.

தேங்க்ஸ் மேம், நானும் சீரகம் போட்டுத்தான் செய்வேன், இன்று காலை தக்காளி வடகத்திற்கும் கூடப் போட்டேன். போன 2வருடங்கள் வெய்யில் அவ்வளவாக இருக்கவில்லை அதனால் தான் போடவில்லை.

இவர் தான் கேலி செய்வார் "இங்கு எல்லோரும் ஹாட்டாயிருந்தா பீச்சுக்கு ஓடிருவாங்க, உங்க அம்மா மட்டும்தான் எஞ்ஜாய் பண்ணுவா வடகம் போட சான்ஸ் கிடைச்சிருன்னு," சொல்வார். சாரி, சாரி மலரும் நினைவுகள் இந்த பக்கத்தை அரட்டையாக மாத்திடுச்சு, நீங்கள் திட்டும் முன் ஓடிவிடுகிறேன்.
நன்றி:-)

உத்தமி:-)

சீதாலஷ்மி,
வடகம் இன்னமும் காய்ந்து கொண்டு இருக்கிறது. பிறகு பொரித்துச் சாப்பிட்டு விட்டு மீண்டும் வருகிறேன்.
இமா

‍- இமா க்றிஸ்

ஐயோ
என்னகு வடக கூழு என்றல் பயங்கர இஷ்டம்.அனால் இங்கே வெளியே காய வைக்க முடியாது.எங்க apartmentla ரொம்ப ஸ்ட்ரிக்ட்.என்னாகும் வடகம் செய்யணும் போல உள்ளது.வீட்டின் உள்ளேயே காய வைக்கலாமா.இங்கு அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம் எப்படி வடகம் காய வைகிறார்கள்?

Anbe Sivam

Anbe Sivam

இமா,

பின்னூட்டதுக்கு மிக்க நன்றி. பொரித்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருந்தது என்று.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சுடர்

வடகம் பிழிய முடியவில்லை என்றால் என்ன? பேசாமல் கொஞ்சமாக வடக மாவு மட்டும் செய்து டிஃபன் மாதிரி சாப்பிடலாமே! மழை நேரத்துக்கு சூடாக சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சுடர் ,
இங்கும் வெளியே காய வைக்க முடியாது. வெயில் இருக்கும் போது யன்னல் வழியே வெயில் விழும் இடத்தில் வைத்து எடுத்தேன். இல்லாத போது 'கிச்சன் ரேன்ஞ் வார்மர்'-ல் வைத்து எடுக்கிறேன்.
டீஹைட்ரேடரில் வைத்து எடுக்கலாம் ஆனால் நேரம் எடுக்கும், சில சமயம் வீட்டில் வெண்காய வாடையும் வீசும்.
முயன்று பாருங்கள்.
இமா

‍- இமா க்றிஸ்