பட்டிமன்றம் 9 - வரலாறு

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க வந்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நிறைய தலைப்புகள் பார்த்தேன் ஆனால் அவை இதற்கு முன்னால் வாதாடியதாகவும், முன்றைய தலைப்புகளுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் இருக்கிறது... அதனால் எனக்கு பிடித்த இன்னும் சொல்ல போனால் நானும் என் கணவரும் அடிக்கடி வாதாடும் தலைப்பான திருமதி.ஆயிஸ்ரீ அவர்கள் கொடுத்த தலைப்பில் இந்த பட்டிமன்றத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

தலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?”

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா? தேவைதான் எனில் அதன் அவசியம் என்ன என்பதை இந்த பட்டிமன்றத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

சின்ன குழந்தைகளுக்கு நிறைய பாடசுமை இருக்கிறது இதில் தேவையில்லாத சில பகுதிகளை நீக்குவதும் அவசியம் எனும் போது வரலாறு தேவையில்லை என்று பலர் கூற நான் கேட்டு இருக்கிறேன்...இதில் தங்கள் அனைவரின் கருத்தை கேட்கவே இந்த பட்டிமன்றம்..

இந்த பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரையும் வருக வருக என் அனைவரையும் வரவேற்கிறேன்..

அன்புடன்
தாமரை

இதற்கு முன்னால நடந்த பட்டிமன்றத்தில் சிறப்பாக,திறமையாக வாதாடிய அனைவரையும் இங்கும் வரவேற்கிறேன்..எவ்வளவு வேலை இருந்தாலும் கொஞ்சம் இந்த பக்கமும் வந்து போங்க...

அதிரா, வனிதா, ஆசியா மேடம், சீதா மேடம், இலா, தேன்மொழி, கவிசிவா, மனோகரி மேடம், உமா(pops) மற்றும் பெயர் விட்டு போன அனைவரும் வந்து இந்த பட்டிமன்றம் நன்றாக நடக்க உதவி செய்ய வேண்டும்..

நாளைக்கு தான் தலைப்பு போட வேண்டும், ஆனால் என்னால் குறித்த நேரத்தில் தலைப்பு போட முடியுமா என்று சின்ன சந்தேகம்..அதனால தான் இப்போவே போட்டுவிட்டேன்...மன்னிக்கவும் வாதங்கள் எப்போ தொடங்கினாலும் எனக்கு சந்தோசமே..

தேவை ! தேவை ! தேவை!!!
என்னால தினமும் வரமுடியலைன்னாலும் என் கருத்தை சொல்லிட வந்து இருக்கிறேன்... வரலாறு தெரியலைன்னா அப்புறம் என்ன இருக்கு.. அய்ய்... எனக்கு ரொம்ப பேசணும்ன்னு இருக்கு பாயிண்ட் தேடி எடுத்து வருகிறேன்... எதோ வரலாறுன்னு இருக்கறதால அசோகர்... சந்திர குப்தர்.. யுவாங் சுவாங் பத்தி எல்லாம் தெரிஞ்சு இருக்கு... இந்து சமவெளி நாகரீகம்... மெசபட்டோமிய ( இக்கால இரான்/இராக் பக்கம்) எல்லாம் தெரிஞ்சு இருக்கு நமக்கு... அப்படியே எல்லா பாடமும் ஹெவியா இருந்தா இது கதை போல இருகுமில்ல அப்போ இது கொஞ்சம் ஃப்ப்ஃபராக( Buffer) இருக்கும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாழ்த்துக்கள்.
நான் வரலாற்றில் புலி....எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றாலும் இந்த பாடம் மட்டும் ரொம்ப இடி...முடியாது என்று இல்லை பிடிக்காது என்றுதான் சொல்ல வேண்டும்...அன்றைய சூழ்நிலையில் தேவையில்லை என்றுதான் கூறியிருப்பேன்....
இன்று யோசித்தால் அவசியம் என்றே படுகிறது...
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி " என்று பெருமைப் பட்டுக் கொள்ள உதவுவது இந்த வரலாறுதான் என்று கட்சியை முடிவெடுக்கிறேன்...

இன்னும் வாதங்களுடன் மீண்டும் வருகிறேன்.....நன்றி....

நடுவர் அவர்களே

நடுவருக்கும், பங்கு பெறும், பார்வையிடும், அனைத்து தோழிகளுக்கும் வணக்கம்.

வரலாறு அவசியம் தேவை. வரலாறு இல்லாமல் வாழ்க்கை இல்லை. வரலாற்றில் இடம் பெற்ற மனிதர்களின் வாழ்க்கைதானே - இன்றைய மனிதர்களை நாளைய வரலாற்றில் இடம் பெறச் செய்ய்யும் கிரியா ஊக்கியாக விளங்குகிறது!

பாடமாகப் படிக்கும்போது எதுவுமே சிறிது சிரமமாகத்தான் இருக்கும். பாடத்தின் மூலம் அடிப்படை கட்டப்படும், பின்னாளில் இந்த வரலாற்று அறிவு என்பது - கலாசாரம், வாழ்க்கை நெறி, அனுபவ அறிவு, இப்படி எல்லாவாற்றையும் கட்டிக் காக்கும் பெட்டகமாக ஆகி விடும்.

22ஆம் தேதிக்கு பின் தான் அறுசுவைக்கு வர முடியும். அதனால்தான் இந்த அவசரப் பதிவு.

மீண்டும் வர முயற்சிக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நடுவர் அவர்களுக்கு வணக்கமும், வாழ்த்துக்களும்...

அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்து விட்டு, அங்கே என்னையும் அழைத்து விட்டு, ஒரே அணிக்கே ஆள் சேர்த்துவிட்டு காணாமல் போன நடுவர் அவர்களே!!!

வரலாறு பாடம் படிக்கும் பொழுது நான் பல முறை மெய் சிலிர்த்ததுண்டு, அவ்வளவு அற்புதமான பாடம்!!!

இன்றைய காலக்கட்டத்தில் 'தல' அஜித்துக்கே 'வரலாறு' இருக்கும் பொழுது,
என்ன? நடுவரே நம் பூமி,அதை பற்றிய வரலாறு இந்த பூமியில் பிறந்த,பிறக்க போகும் அனைவரும் தெரிந்திருக்க வேண்டாமா!!!

இந்த காலக்குழந்தைகள் வேற ரொம்ப அறிவாளியா இருக்காங்க (நம்ம சந்தோஷ் மாதிரி) "அம்மா...அம்மா இந்த உலகம் எப்படி உருவாச்சி? ன்னு" கேட்டா என்ன சொல்லுவீங்க நடுவரே???......

இந்த தலைப்பு குறித்து உங்கள் குடும்பத்தில் ஏன் குழப்பம் என எனக்கு தெரியவில்லை. "வரலாறு" என்றாலே என்ன அர்த்தம்? ( எனக்கே தெரியாதுங்கறீங்களா!)

*அப்படி ஒரு படம் இல்லைன்னா பின்வரும் சந்ததியினரும் சரி,ஏன் நாமே இந்த உலகம் இதில் ஒவ்வொன்றும் உருவான விதம், காரணம்,அக்காரணங்களால் அமைந்த பெயர்கள், எதையுமே அறிந்திருக்க முடியாதே?

* எல்லாவற்றிற்கும் ஒரு ஆதியும் அந்தமும் உண்டு, அதேப்போல் வரலாறு பற்றி தெரியவில்லைஎன்றால் நமக்கு ஆதியே தெரிந்திருக்காதே!!!

* எத்தனை எத்தனை அற்புதங்கள் உருவான கதை, உண்டாக்கியவர்கள், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் கண்டறிந்த அறிவியல் பொக்கிஷங்கள் பற்றியெல்லாம் எப்படி தெரிந்திருப்போம்?

வரலாறு இல்லனைன்னா இதையெல்லாம் தெரிஞ்சுக்க வேற பேரு வச்ச ஒரு "பாடம்" தொடங்கிடுவாங்க......இந்த காலத்தில்...

பழைய காலத்தில... அது அப்படியிருக்குமாம், இது இப்படியிருக்குமாம் - ன்னு சொல்ல கதைகள் கூட இல்லாமல் போய்விடும் நடுவேரே!

அதனால எல்லாமே புதுசா மாறிட்டுவரும் இந்த கலிகாலத்துல "வரலாறு" ஒன்னாவது பழசா இருக்கட்டுமேன்னு சொல்லி, தேவையான ஒன்னு தேவையில்லை சொல்ல யாரும் வரமாட்டங்க போலிருக்கு... சட்டு புட்டுன்னு எங்க அணிக்கு சாதகமா தீர்ப்பை தயார் பண்ணுங்கன்னும் சொல்லி.......வணக்கம் கூறி விடை பெறுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

கண்டிப்பாக தேவை.எனக்கு முன் கூறியவர்கள் போலவே வரலாறு இல்லையேல் நாம் நம் முன்னோர்கள் பற்றி எப்படி தெரிந்திருக்க முடியும்,நம் குழந்தைக்கும் இவர்களை (பல தலைவர்கள்,மன்னர்கள்,இலட்சியவாதிகள்) போல் ஆகவேண்டும் ,அல்லது இவரை போல் இருக்க கூடாது என்றல்லாம் எடுத்துக்காட்டு கூறுகிறோம் அல்லவா, படிக்க சிறிதுக் (வருடங்கள்) கஷ்டம் எனினும் சுவாரசியமானது, முக்கியமானது.

ராஜ் டிவியில் தினமும் செய்தியில் "அப்படியா" என்று வரலாற்றில் உள்ள சிலவற்றை பற்றி நாம் அறிந்திறாதது கூறும் போது கேட்க ஆவலாக இருக்கும்.

அதானால் நடுவரே வரலாறு அவசியம் என கூறி விடை பெறுகிறேன்.

மீண்டும் சிறிது கருத்து சேகரித்து வருகிறேன்.
சுபத்ரா.
with love

with love

நடுவர் சந்தோ அவர்களுக்கு வணக்கம். நல்ல தலைப்போடு வந்திருக்கீங்க.... வாழ்த்துக்கள். ஆனா எனக்கு தான் எந்த கட்சின்னு குழப்பம். :(( கொஞ்சம் அவகாசம் கொடுங்க.... முடிவு செய்துட்டு வந்துடறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் ஆளாய் வந்து எனக்கு ஆதரவு கொடுத்ததற்கு மிகவும் நன்றி...ரொம்ப பேசணும்னு இருந்தால் வந்து பேசிருங்க இலா, அப்புறம் இதுவிட்டு போச்சு அது விட்டுபோச்சுனு நினைப்பீங்க..உங்க பாயிண்ட்ஸ் எல்லாம் கேட்க ரொம்ப எதிர்பார்த்துட்டு இருக்கேன், ஏமாத்திறாதீங்க, அப்புறம் அழுதுருவேன்...
அன்புடன்
தாமரை

வரலாறு பற்றி நினைச்சாலே சில பேருக்கு தலைவலி வரும், எந்த வருஷம் எது நடந்ததுனு ஞாபகம் வச்சு ஒரு 5மார்க் வாங்குறதுக்குள்ள உங்க படிப்பே வேண்டாம்னு கத்தனும்போல இருக்குனு என் தோழி ஒருத்தி அடிக்கடி சொல்லிட்டே இருப்பா,அதுதான் இப்போ எனக்கு ஞாபகம் வருது.. தங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி,சீக்கிரம் வந்து தங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள், வரவேற்று காத்திருக்கிறேன்..
அன்புடன்
தாமரை

வணக்கங்கள், இன்றைய மனிதர்களின் வாழ்க்கை நாளைய வரலாறுனு சொல்லி வரலாறு அவசியம் தேவைனு சொல்லி இருக்கிறீர்கள், 22ஆம் தேதிக்கு பின் வந்ததும் தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்..ஆவலுடன் காத்திருக்கிறேன்..நன்றி மேடம்..
அன்புடன்
தாமரை

மேலும் சில பதிவுகள்