பிரச்சனைக்கு தீர்வு advice pls.......

வணக்கம் தோழிகளே

எனக்கு நெருக்கமான தோழி ஒருத்தி அவளின் பிரச்சனைக்கு என்னிடம் தீர்வு கேட்டாள்.எனக்கும் என்ன முடிவெடுப்பது என்று குழப்பமாக இருப்பதால் தயவு செய்து உதவவும்.

அவளுக்கு திருமணமானதில் இருந்தே அவளது புகுந்தவீட்டில் ஒரே பிரச்சனைதான்.ஏகப்பட்ட கொடுமைகளை அனுபவித்துவிட்டாள்.அவள் தனிக்குடித்தனம் இருந்தாலும் அவளது கணவர் steady கிடையாது.எந்த பிரச்சனையிலும் இங்கயா அங்கயா என்று முடிவெடுக்க முடியாமல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிவிடுவார்.கடைசியில் பாதிக்கப்படுவது என் தோழியாகத்தான் இருக்கும்.

அவளது மாமியார் வீட்டில் பிரச்சனையாகி அவளை அவர்கள் வீட்டிற்க்கு இனிமேல் வரவே வேண்டாம் என்று கூறிவிட்டனர். அவளும் கிட்டத்தட்ட 2 வருடமாக அவர்கள் வீட்டிற்க்கு செல்வதில்லை.அவளது கணவர் மட்டும் ஒரிருமுறை சென்றுள்ளார்.ஆனால் அவளது கணவர் இந்த இடைப்பட்ட காலத்தில் என் தோழியின் பெற்றோர் வீட்டிற்க்கு ஒருமுறை கூட போனதில்லை(அவர்கள் வீட்டில் நடந்த முக்கியமான function கூட attend பண்ணவில்லை).

இப்போது திடீரென அவளது கணவர் அவளை தன் பெற்றோர் வீட்டிற்க்கு வரச்சொல்லுகிறார். அவளோ என்ன செய்வது என்று மிகவும் குழம்பியுள்ளாள். அந்த வீட்டிற்க்கு திரும்பவும் செல்ல அவள் மனதளவில் தயாராக இல்லை.என்ன செய்வது என்று என்னிடம் ஆலோசனை கேட்கிறாள். அவளது கஷ்டங்கள் எல்லாம் தெரிந்த எனக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.நான் அவளது நிலமையில் இருந்தால் கண்டிப்பாக போகமாட்டேன்.
அவளுக்கு என்ன சொல்ல தயவு செய்து உதவவும்.

நன்றி
திவ்யா

திவ்யா, பிரச்னை என்னவென்று எங்களுக்குத் தெரியாத நிலையில் ஆலோசனை சொல்வது முடியாது. சரியுமல்ல.

அவர்தான் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்க வேண்டும். குடும்பத்தை ஒன்றுசேர்க்க இது நல்ல வாய்ப்பு என்றால் சேர்வதே நல்லது.

sorry mrs.hussain எனக்கு இரண்டு நாளாக அறுசுவை open ஆகாததால் பதில் அளிக்க முடியவில்லை.

அவர்கள் வீட்டில் அவளை ஒரு சகமனுஷியாகவே கருதுவதில்லை.வார்த்தையாலேயே கொல்வார்கள்.இத்தனைக்கும் இவர்கள் போவதாகவே இருந்தாலும் ,இவர்களின் வருகையில்
அவளது மாமியார் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஒன்றும் விருப்பமில்லை.அவர்களுக்கு தேவையெல்லாம் மகனின் பணம் தானே தவிர மருமகளோ, ஏன் மகனோ கூட இல்லை.
அதனால் தான் என் தோழி மிகவும் பயப்படுகிறாள்.அவளை பொறுத்தவரை அது ஒரு வீடே இல்லை வெறும் போர்களம் தான்.அதில் அவளொரு நிராயுதபானி (கணவரும் அங்கு
சென்றால் அவளை கண்டுகொள்ளவே மாட்டார்).

இவ்வளவு தூரம் பயங்கரமான ஒரு இடத்திற்க்கு அழையா விருந்தாளியாக போக வேண்டுமா என்பது தான் அவளின் மிகப்பெரிய கேள்வி.

தயவு செய்து பதில் அளிக்கவும்.

நன்றி

திவ்யா

மேலும் சில பதிவுகள்