பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா?

இம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.

நம் காணாமல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....

"நகரவாழ்க்கையா ? கிராமவாழ்க்கையா? சிறந்தது எது?".

நம்மில் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி??!!!

கிராமத்தை விட நகரம் சிறந்ததா? அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா? அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.

கிராமத்தில் உள்ளவர்கள் மழைகாக ஏரி,குளம் என்று தூர்வாரி வைப்பார்கள் முனெச்சரிக்கையாக ஆனால் நீங்கள் அதில் வீடு அல்லவா கட்டிவைத்துள்ளீர்கள். நீங்க நகரத்தில் உள்ள பற்றி பேசுகிறீர்கள் ஆனால் திருனெல்வேலி நாகர்கோவில் அருகே ஒரு கிராமத்தில் ISRO உள்ளது அது தெரியுமா? வெளிநாட்டிற்கு போய் வந்த பெற்ர்றவர்களிடம் கேளுங்கள்தான் பார்த்துரசித்த எதையும் முதலில் சொல்லமாட்டார்கள் என் பிள்ளை எவ்வள்வு கஷ்டப்படுது என்று தான் சொல்லுவார்கள் அடிப்படை வசதி இல்லை என்று நீங்கள் தான் சொல்லுகிறீர்கள் அப்படி இல்லை என்று யாராவது கிராமத்திலிருந்து வெளியில் வருகிரார்களா? ஆனால் நிம்மதி வேண்டும் என்று எத்தனை பேர் நகரத்திலிருந்து கிராமத்த்ற்கு வருகிறார்கள் மரங்கள் உள்ள சிட்டி என்று உங்களால் பெங்களுரை மட்டும் தான் சொல்லமுடிகிறது
நகர வாழ்க்கையில் எத்தனை பேர் அடிப்படை வச்திகூட இல்லாமல் இருக்காங்க அது உங்களுக்கு தெரியவில்லையா? வீடு கூட இல்லாமல் பிளாட்பார்மில் இருக்காங்க? அவங்களை விட நாங்கள் எந்தவசதியிலும் குறைவில்லை படுத்தால் நல்ம தூக்கம் வரும் வீண்ப்பேச்சு என்கிறீர்கள் அதில் தான் தெருயாதவர்களுக்கு பெரியவர்கள் எல்லாம் சொல்லிக்கொடுப்பார்கள் எத்தனை நோய்க்கு மருந்து குடுப்பார்கள் இதுஎல்லாம் உங்களுக்கு வீண்ப்பேச்சுகளா நீங்கள் தான் எவ்வளவு குறை இருந்தாலும் அது தான் சிறந்தது என்கிறீர்கள்

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

அன்பு நடுவர் வனிதா, நலம் தானே.. முடிந்த வரை நானும் இப்பட்டி மன்றத்தில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.. வேறு வீடு பார்த்துக்கொண்டு இருக்கும் வேலை.. நேரம் சரியா உள்ளது.. சிறப்பாக பட்டிமன்றம் செல்ல வாழ்த்துக்கள் உங்களுக்கும், இரு அணித் தோழியர்க்கும்...
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

எந்தப் பக்கம் ன்னு திண்டாடிட்டு இருந்தேன். வின்னியக்கா - உங்க குரலை கேட்டதும் முடிவு பண்ணிட்டேன் :) முதல்ல எங்க அணிக்காக சிறப்பாக வாதாடிககொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! அநேகமா கவி சிவா ஓப்பனிங் சிக்சர் அடிச்ச குஷியில பொழுதைப் போக்க ஏதாவது நகரத்திற்கு சென்றிருப்பாங்க. உங்களோட அபயக் குரல் கேட்டு உங்களையும் ப்ரியாவையும் சிட்டியில இருந்து காப்பாத்தி பட்டிக்கு அழைத்துப் போக எங்கூரு ஹெலிகாப்டருடன் (வாடகைக்கு பிடிச்சது தான்)வந்துள்ளேன்.

வனிதா.. நான் கிராமத்தில் (டவுனுக்கு வெளிப்புறத்தில் அமைந்திருந்த ஒரு பட்டி) பிறந்து வளர்ந்து, நகரத்தில் கல்லூரி படிப்பு முடித்து, பின் கிராமத்தை அடிப்படையாக கொண்டு டெவலப் செய்யப் பட்ட நகரத்தில் :) கொஞ்ச நாட்கள் இருந்து, இப்போ இங்கு நகரத்துக்கு அருகாமையில் சப் அர்பன் ஏரியாவில் இருக்கிறேன். உண்மையில் இப்போ விரும்புவது என்ன தெரியுமா? இப்போ இருப்பது போல அடிப்படை வசதிகள் நிறைந்த கிராமம் அல்லது சப் அர்பன் ஏரியாவில் வசிக்கணும். வேலை நகரத்தில் இருந்தாலும் பரவாயில்லை. தேவைப்பட்டால் பொழுது போக்க :) நகரத்திற்கு சென்று கொள்ளலாம். தோட்டம் இருக்கணும் வீட்டை சுத்தி. முடிஞ்சா வின்னியக்கா சொன்ன மாதிரி ரெண்டு மாடு கன்னு வச்சு மேய்க்கணும் (பொழுது போக்கா தாங்க).

மாநகரத்தில் இருந்த காலங்கள் ஒரு மாதிரி நன்றாகத் தான் இருந்தன - காரணம் கல்லூரி. அப்போ தோழிகளுடன் வெளியே சுற்றுவதற்கு, சாப்பிடுவதற்கு என்று பல இடங்கள் இருந்ததால் அந்த சில வருடங்கள் நன்றாகத் தான் இருந்தன. ஆனால் குடும்பம் குட்டிகள் என்று ஆன பின்னே அங்கேயே இருக்க முடியுமா என்று கேட்டால் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம். காரணம் - மக்கள் தொகை மிக அதிகம். வேலைக்கு அந்த போக்குவரத்து நெரிசலில் தினமும் சென்று வருவதே போராட்டம் தான். அப்புறம், இந்த தண்ணிப் பிரச்சனை. என்னால் அந்தப் போராட்டங்களை மறக்கவே முடியாது. இன்னமும் டேப்பை யாராவது சரியாக மூடாமல் போனால் நான் போயி பொறுப்பாக நிறுத்தி விடுகிறேன். pollution. தங்களை சுற்றி மன வேலி போட்டுக்கொள்ளும் அடுத்த வீட்டு மனிதர்கள். க்ரைம் அதிகம். வாழ்வதற்கான செலவு அதிகம். குறை நகரத்து மனிதர்கள் மீது அல்ல. வேலைகளும் சூழலும் அப்படி அமைந்து விடுகின்றன. கிராமங்கள் இயற்க்கை வளம் மிகுந்தவை. அங்குள்ள வாழ்க்கை எளியது. பிள்ளைகள் வளர்வதற்கான வாழ்வதற்கான நல்ல சூழல் கொண்டவை.

உண்மையில் நிறைய பேர் நகரத்திற்கு செல்லுவது கல்வி மற்றும் படித்த படிப்பிற்கேற்ற வேலை வாய்ப்பிற்காகத் தான். அங்குள்ள வசதிகளுக்காக இல்லை. நான் அக்ரி படித்திருந்தால் கண்டிப்பாக கிராமத்தில் செட்டில் ஆகியிருப்பேன். கம்யூட்டர் கல்விக்கேற்ற ஒரு வேலை வாய்ப்பு திட்டம் கிராமத்தில் இருக்குமானால் என் சாய்ஸ் கிராமந்தான். உதாரணத்திற்கு கிராமத்தில் ஒரு டைடல் பார்க் உருவாக்கப்பட்டு அதன் அருகிலே ஒரு கிராமத்திலே வசிக்க முடியும் என்ற சாய்ஸ் இருந்தால் எல்லாரும் சென்னையை விட்டுபோட்டு இந்த டைடல் பார்க்கிற்கு தான் வருவார்கள். இப்போ இன்டர்நெட் உள்ளதால் எங்கிருந்தாலும் எல்லா விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. முன்பு போல கிராமத்திலே குண்டு சட்டியிலே குதிரை ஓட்டி தனித்திருக்க வேண்டியதில்லை.

இங்கு சப் அர்பன் ஏரியா என்றாலும், அடிப்படை வசதிகள் இருக்கின்றன. காயமடைந்தவர்களை தூக்கி வருவதற்கு ஹெலிக்காப்டறேல்லாம் வைத்திருக்கிறார்கள் மருத்துவமனைகளில்!! இங்குள்ளவர்களும் முடிந்தவரை நகரத்துக்கு வெளியே வசிப்பதை தான் விரும்புகிறார்கள். இங்கு போக்குவரத்து நன்றாக வடிவமைக்கப் பட்டு உள்ளதால் வெளியே இருந்து நகரத்தில் வேலைக்கு மட்டும் வந்து விட்டு போக முடிகிறது. இது போன்று நம் ஊரிலும் இருந்தால் எல்லாரும் கிராமத்தில் வாழ்வதையே விரும்புவார்கள். இப்போ நம்ம கிராமங்களும் நல்ல முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. முன்பெல்லாம் நானும் அம்மாவும் அண்டா குடத்தை தூக்கி கொண்டு நடந்து சென்று குடி நீர் கொண்டு வருவோம். இப்போ எங்க வீட்டுக்கே தண்ணீர் வருகிறது. ரோடுகள் நன்றாகப் போடப்பட்டு இருக்கின்றன. கிராமங்களை நோக்கி பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் மருத்துவமனைகள் வர ஆரம்பித்துள்ளன. வேலைவாய்ப்புகளும் தான். கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு தொழிற்ச்சாலை கட்டி வருகிறார்கள். இதெல்லாம் சரியாக நடந்தால் மேலும் சில வருடங்களில் மாநகரத்தை நோக்கின மக்களின் மைக்ரேஷன் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

நகரத்தில்லுள்ளவர்கள் கிராமத்துக்கு செல்வது சிரமம் என்று கூறுவது கிராமத்து மனிதர்களுக்கும் பொருந்தும். கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்த நிறைய அப்பா அம்மாக்கள் தங்கள் கடைசி காலத்தைக் கூட நகரத்தில் கழிக்க முடியாமல் சிரமப் படுவார்கள். நகரத்தில் இல்லாத வசதிகள் அப்படியென்ன கிராமத்தில் இருக்கிறது என்று என்னை கேட்காதீர்கள் - அவர்களை கேட்டுப் பாருங்கள். பதில் வரும். நாம் இள வயதில் சென்று விடுவதால் எல்லாவற்றிக்கும் அடாப்ட் ஆகி விடுகிறோம். கிராமத்தில் நல்ல வசதியாக செட்டில் ஆகிவிட்டவர்களாலும் நகரத்தில் வசிக்க முடியாது. வந்து சில நாட்கள் தங்கி பொழுது போக்கி விட்டுத் தான் போக முடியும். அதற்க்கு மேலே இங்கென்ன இருக்கிறது என்று கேட்டு விட்டு போவார்கள்.

விவசாயத்துக்கு இன்சூரன்ஸ் மட்டும் கிடைக்குமானால் நல்லாயிருக்கும். உண்மையில் மற்ற வேலை வாய்ப்புகள் வளர்ந்ததை போன்று இதனை இந்த காலத்திற்க்கேற்ப டெவலப் பண்ணாமல் விட்டு விட்டார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சியென்பது நகரத்தை வைத்து மட்டும் நிர்ணயிக்கப் படுவதல்ல. Agriculture and allied activities constitute the single largest contributor to the Gross Domestic Product, almost 33% of it (நெட்டிலே படித்தது). ப்ரியா சொன்னதைப் போன்று இயற்க்கை வளம் மிகுந்த கிராமங்கள் (ஊட்டி கொடைக்கானலில் உள்ளன போல) ஈட்டி தரக் கூடிய இன்னொரு முக்கிய வருமானம் - டூரிசம்.

பீஹார் போன்ற மாநிலங்களில் கிராமங்கள் மட்டும்தானா - மாநிலம் முழுவதிலுமே பார்த்தால் வசதிகள் குறைவாகத் தான் இருக்கும். காரணம் - அவர்கள் ஆட்சியாளர்கள் அப்படி. பஞ்சாப் ஹரியானா போன்ற மாநிலங்களின் கிராமங்களை பாருங்களேன். இங்குள்ள கிராமங்களை பாருங்களேன்.

முடிவாக, நகரத்துக்காரர்கள் எல்லாம் பொழுது போக்க கிராமத்துக்கு வருவது போல், நாங்களும் நகரத்துக்கு போயி பொழுது போக்கி ஷாப்பிங் செய்து வருவோம் (பட்டியில் இருந்த போது அப்படித் தான் செய்து கொண்டிருந்தோம், இப்பவும் அது போன்று தான் செய்து கொண்டிருக்கிறோம்). நகரத்தை அதன் வசதிகளை தேவைக்கேற்ப யூஸ் செய்து கொண்டு வாழ்கையை கிராமத்திலே வாழ்வோம்.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

//திருனெல்வேலி நாகர்கோவில் அருகே ஒரு கிராமத்தில் ISRO உள்ளது அது தெரியுமா?//

எங்கள் ஊருக்கு மிக அருகில் இருக்கும் மகேந்திரகிரி பற்றி தெரியாமலா?ஆனால் அப்துல்கலாம் அங்கு வேலைபார்க்கவில்லை…..திருவனந்தபுரம் தும்பாவில் தான் வேலைப்பார்த்தார்.

உடனே தும்பா நகரமில்லை கடல் பகுதி என தர்க்கம் வேண்டாம்(அதன் இயக்கம் அப்படி..).
திருவனந்தபுரம் மாநகரில் இருந்துதான் தும்பாவிலிருக்கும் ISRO இயக்கத்துக்கு எல்லா உதவியும் செய்யப்படுகிறது….:-

//வெளிநாட்டிற்கு போய் வந்த பெற்ரறவர்களிடம் கேளுங்கள்தான் பார்த்துரசித்த எதையும் முதலில் சொல்லமாட்டார்கள் என் பிள்ளை எவ்வள்வு கஷ்டப்படுது என்று தான் சொல்லுவார்கள்//

ஒரு சிலர் அப்படி சொல்லலாம்…ஆனால் பெரும்பாலோர் என் பிள்ளை வெளிநாட்டில் ராஜாபோல் வேலை பார்க்கிறான் என்று மிகவும் பெருமையாக சந்தோஷமாக உறவுகளிடம் ,ஊரில் சொல்லிகொள்வதை பெருமையாய் நினைக்கிறார்கள்……..

இதற்கும் உங்களுக்கு வேண்டுமானால் இது பொருந்தும் என சொல்லாதீர்கள்….நிறைய பேரை பார்த்திருப்பதால்தான் சொல்கிறேன்,…..

ஒருவன் விளையாட்டிலோ,பாட்டிலோ ,நடனத்திலோ திறமை பெற்றிருந்தால் அத உலகிற்கு வெளிகாட்ட ஒரு அரங்கம் தேவைப்படுகிறது…அந்த அரங்கம்தான் நகரம்…….

அமைதியோடு,பிரபலத்தையும் சேர்த்துதான்
“தோன்றிற் புகழோடு தோன்றுக” என்பதைதான் எல்லாருமே விரும்புகிறோம்.

நம் திறமை நம் கிராமத்தில் தெரிந்தால் போதும் என நினைக்காமல் எல்லாரும் பார்த்து பாராட்டவேண்டும் என நினைப்பதால்தான், டிவி நிகழ்ச்சிகளில் கூட கிராமத்திலிருந்துகூடபங்குபெறுகிறார்கள்.
பிள்ளைகளையும் பங்குபெறசெய்கிறார்கள்…

ஏன்,அண்மையில் நோபெல் பரிசுபெற்ற சிதம்பரம் ராதாகிருஷ்ணன் அவர்கள் கிராமத்ததில்
பிறந்து வளர்ந்திருந்தாலும்,இலண்டன் மாநகரில் போய் ஆராய்ச்சி செய்ததால்தான் உலகம் அவரை கண்டு கொண்டது…..!!!
அவரது திறமையை வெளிக்கொணர அவருக்கு தேவையான வசதி அங்குதான் கிடைத்தது.

//குடும்பம் குட்டிகள் என்று ஆன பின்னே அங்கேயே இருக்க முடியுமா என்று கேட்டால் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம்…//
குடும்பம்,குட்டிகள் ஆனப்பிறகுதான் அவர்களுக்கு சிறந்த வாழ்க்கை வசதிகளை கொடுக்க கிராமம் விட்டு நகரம்,ஏன் நாடு விட்டு நாடு போகிறோம்……..நீங்கள் சொல்கின்ற சிறந்த கிராம வாழ்க்கையைவிட்டு……
நம் வாழ்க்கை சிறக்க எல்லா வசதிகளும் அங்கேயே கிடைத்தால்,நாம் இங்கே இருக்க வேண்டிய அவசியமே இல்லையே……நமக்கெல்லாமென்ன நம் கிராமத்தைவிட நாம் இருக்கும் வெளிநாடுகள் மீது தீராத காதலா…இல்லை அவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற பரந்தமனப்பான்மையா..!!

//உண்மையில் நிறைய பேர் நகரத்திற்கு செல்லுவது கல்வி மற்றும் படித்த படிப்பிற்கேற்ற வேலை வாய்ப்பிற்காகத் தான். அங்குள்ள வசதிகளுக்காக இல்லை//

அதைதான் படிப்பு,வேலை இல்லாமல் வசதிகள் வருவதில்லை…..வாழ்க்கையின் எல்லா வசதிகளும்
படிப்பும்,வேலையும் தானே கொடுக்கிறது…..!!

படிப்பும்,கல்வியும் நாங்கள் வசதிகளை கொடுக்கும் வரமாகத்தான் அர்த்தம் கொள்கிறோம்

//வேலை நகரத்தில் இருந்தாலும் பரவாயில்லை. தேவைப்பட்டால் பொழுது போக்க :) நகரத்திற்கு சென்று கொள்ளலாம்//
//நான் அக்ரி படித்திருந்தால் கண்டிப்பாக கிராமத்தில் செட்டில் ஆகியிருப்பேன். கம்யூட்டர் கல்விக்கேற்ற ஒரு வேலை வாய்ப்பு திட்டம் கிராமத்தில் இருக்குமானால் என் சாய்ஸ் கிராமந்தான்//

…அப்படி…..இருந்திருந்தால்………இப்படி இருந்திருந்தால்....?????....!!!! அது இல்லாததுதான் பிரச்சனையே…..

நமக்கு தேவையான எல்லாம் கிராமத்தில் கிடைத்தால்,அப்படி நமக்கு எல்லா வசதி,வாய்ப்புகளை கிராமம் கொடுத்தால் அது நகரமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றுதானே அர்த்தம்..உங்களணி பாணியில் சொன்னால்…முன்னேறிய கிராமம்…

//Agriculture and allied activities constitute the single largest contributor to the Gross Domestic Product, almost 33% of it (நெட்டிலே படித்தது).//

நானும் பத்திரிக்கையில் ஒரு செய்தி படித்தேன்…அது உங்கலின் பார்வைக்காய் இங்கே போட்டிருக்கிறேன்..:-

** 10 ஆ‌ண்டுக‌ளி‌ல் இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை!

இரா.செழியன்
திங்கள், 13 ஏப்ரல் 2009( 12:45 IST )

நாட்டின் மொத்த வருமானத்தில், விவசாயத்தின் பங்கு 1951-இல் 55 சதவிகிதமாக இருந்த நிலைமை மாறி, 1991-இல் 31 சதவிகிதம், 2001-இல் 26 சதவிகிதம், 2008-இல் 17 சதவிகிதம் என ஆகிவிட்டது, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல!

இந்தியாவின் மொத்த வருமானம் 8 சதவிகிதம், 10 சதவிகிதம் என உயர்ந்து வந்த காலத்தில்கூட, விவசாயத் துறையின் வளர்ச்சி ஒரு சதவிகிதத்தை ஒட்டிய மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
நாட்டின் வருமானம் பெருகினாலும், கிராமப் பொருளாதாரம் புறக்கணிக்கப்பட்டு, விவசாயத் துறை பெருகிவரும் வேதனையின் நிலையான உறைவிடமாக ஆக்கப்பட்டு விட்டது.**

மேலே சொன்னதுதான் நான் படித்த செய்தி..உண்மையான விவசாயிகளின்/விவசாயத்தின் நிலை இப்படிதான் இருக்கிறது… எதிரணித்திதோழிகளே…!!

//நகரத்தை அதன் வசதிகளை தேவைக்கேற்ப யூஸ் செய்து கொண்டு வாழ்கையை கிராமத்திலே வாழ்வோம்.//
அப்போ நகர வசதிகள் இல்லாம முழுமையாய் கிராமத்தையே நம்பி வாழமுடியாது என ஒத்துகொண்டதற்கு நன்றி…

என் பதிவுகள் எல்லாமே ஒரு கருத்துபரிமாற்றம்தான்…அது உங்கள் கருத்துகுழந்தைகளை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்…

.இதோடு என் பதிவு முடிகிறது...:-

அன்பு நடுவருக்கும்,பட்டிமன்றத்தில் பங்குகொண்ட,இதை பார்வையிட்ட எல்லாருக்கும் என் நன்றியும் வணக்கமும்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

விவசாயத்தை பற்றி நீங்கள் சொல்லுவது சரியென்றாலும் எண்ணிக்கை மிகவும் அதிகமாக தோன்றுகிறது எனக்கு. இப்போது ஒரு தொழில் கவனிக்கப்படாமல் இருக்கிறதென்றால் எப்பவுமே அது அப்படித் தான் இருக்கும் என்றில்லை. எங்கள் உறவினர் ஒருவர் அக்ரி ஆட்களிடம் பேசி விவசாயத்திலும் சில புதுமைகளை புகுத்தி நல்ல வருமானம் கண்டு வருகிறார். எமக்கும் பின்னாளிலே சைடிலே விவசாயம் செய்யும் எண்ணமுள்ளது (சிரிக்கக் கூடாது - சீரியஸாக சொல்லுகிறேன்). என் தோழியின் அப்பா இவ்வாறு தான் செய்து வருகிறார் - கிராமத்திலே இருந்து தன் படிப்பிற்கேற்ற வேலையுடன் விவசாயமும். அவர்கள் வீடு இருக்கும் சூழல் மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் கிராமம் என்றாலே விவசாயம் என்று மட்டும் தான் அடையாளம் காண்கிறீர்கள். எங்கள் பட்டியில் இதர தொழில் செய்து நிறைய பேர் இன்று வரை ஓரளவிற்கு நல்ல நிலையிலே உள்ளனர். வெளியே சிலர் வந்தாலும், பெரும்பான்மையோர் அங்கே தான் உள்ளனர் - நல்ல நிலையிலே. எல்லா வசதிகளையும் படிப்பும் வேலையுந்தான் கொடுக்கும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்க்கு புத்தியும் உழைப்பும் அதிர்ஷ்டமுமிருந்தால் போதும்.

வாழ்வதற்கு சிறந்தது எது என்று தானே தலைப்பு? அதன்படி, கிராம வாழ்க்கை சிறந்தது என்று தான் சொல்கிறோம் - நகரம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லையே. தேவைக்கேற்ப நகரத்தில் உள்ள வசதிகளை பெறக் கூடாது என்று எதுவும் இல்லையே? நீங்களும் கிராமத்தில் இருந்து வரும் அரிசி, காய்கறிகள் வேண்டாம் என்றும் சொல்லவில்லையே?

அடிப்படை வசதிகளை பெற்று முன்னேறிய கிராமத்துக்கும் நகரத்துக்கும் வித்தியாசம் இல்லையா? நடுவரே - விளக்கம் தேவை ப்ளீஸ்.

சில வகை வேலைக்காக நகரத்திற்கு சென்று தான் ஆக வேண்டும். அறிவியல் ஆராய்ச்சி செய்ய கிராமத்தில் இருந்தால் முடியாது. அதற்காக எல்லாருமே நகரத்தில் தான் வாழ வேண்டும் என்ற அவசியமில்லை. உண்மையில் இருக்கும் இடத்தில் கிடைக்கூடிய சுய வேலை வாய்ப்பினை அடையாளம் காணத் தவறி கார்பரேட் நிறுவனங்களை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். மேலும் இப்போ உள்ள recession காரணமாக சீனாவில் ரிவர்ஸ் மைக்ரேஷன் (நகரத் தொழிலார்கள் கிராமத்தை நோக்கி நகருதல்) நடந்து கொண்டிருப்பதாக செய்திகளிலே வந்தது. நம் ஊரில் இன்னமும் அந்த நிலைமை வரவில்லை.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

கிராமங்கள் வாழ்க்கை சிறந்தது என்றால் பின்னர் ஏன் நகரங்கள் உருவாகின. நீங்க சொல்லும் படியே தான் கிராமத்தில் இருந்து நகரங்கள் உருகின அது ஏன்? கிராம வாழ்க்கை சிறப்பாக இருந்திருந்தால் நகரங்கள் உருவாகி இருக்க காரணமிருந்திக்காது. ஆரம்பத்தில் கால்குலேட்டர் பின் முன்னேறி முன்னேறி கம்யூட்டர் இன்னும் முன்னேறுவோம்.அதற்காக கால்குலேட்டர் யாரும் யூஸ் பண்ணமாட்டேன் என்று சொல்லவில்லை, அதை விட எல்லாவற்றிலும் முன்னேறி இருக்கும் கம்யூட்டர் தான் ஒருமனிதனின் தேவைகளை பூர்த்தி செய்து சிறப்படைய செய்கிறது. அது போல தான் கிராமங்களில் சில நன்மைகள் இருப்பதால் அதை வைத்தே அவர்கள் வாழ்க்கை சிறப்பாக உள்ளது என்கிறார்கள்.//கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்த நிறைய அப்பா அம்மாக்கள் தங்கள் கடைசி காலத்தைக் கூட நகரத்தில் கழிக்க முடியாமல் சிரமப் படுவார்கள். நகரத்தில் இல்லாத வசதிகள் அப்படியென்ன கிராமத்தில் இருக்கிறது என்று என்னை கேட்காதீர்கள் - அவர்களை கேட்டுப் பாருங்கள்// நான் சொன்ன விளக்கம் பொருந்தும் என நினைக்கிறேன். வேலை வாய்ப்புக்காக மட்டும் நகரம் அல்ல,நகரங்களின் சிறப்புகள் ஏராளம். நம் இடத்திற்கே வந்து நம்முடைய தேவைகளை நிறைவேற்றுகிறது.
எனவே கிராமத்திலுள்ளவர்கள் கூட உலகிற்கு பிரபலமாக காரணமாக இருந்து, நாட்டின் வளர்ச்சில், புகழ்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் நகரமே வாழ்க்கைகு சிறந்தது என கூறி விடை பெறுகிறேன்.

with love

மூன்று நாள் விடுப்புக்கு பின் மீண்டும் வந்துவிட்டேன். அனைவருக்கும் வணக்கம். சந்தனா நான் நகரத்துக்குத்தான் போயிருந்தேன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க? உண்மைதான் சிங்கை மாநகருக்குதான் சென்றிருந்தேன்.
எதிரணியினர் சொன்ன அத்தனை வசதிகளையும் கொண்ட ஒரு நகரம் . ஆனால் அங்கிருக்கும் பெரியவர்களிடம் பேசியபோதுதான் அவர்களின் ஏக்கம் புரிந்தது. இது பட்டிமன்ற வாதத்துக்காக நான் எழுதியது அல்ல. எனக்கு தெரிந்த ஒரு தோழியின் அம்மாவுடைய வார்த்தைகள். இன்னிக்கு இந்த ஊரில் எல்லா வசதியும் இருக்கும்மா ஆனால் நாங்கள் அன்று வாழ்ந்த கம்போங் வாழ்க்கையின் (மலாயில் கம்போங் என்றால் கிராமம் என்று பொருள்) சுகமும் நிம்மதியும் இப்போது இல்லை. மனசு ஏங்குதும்மா அதனால வசதிபடும் போது மலேசியாவில் கிராமத்தில் இருக்கும் உறவினரோடு போய் தங்கி வருவேன் அப்படீன்னாங்க. சொல்லும் போது அவர்கள் ஏக்கம் கண்ணில் தெரிந்தது. நகரங்களில் கிடைப்பது புற இன்பம். கிராமங்களில் கிடைப்பதே உண்மையான அக இன்பம். அதுவே நிரந்தரம்.

இளவரசி எங்கள் ஊர் குமரி மாவட்டத்தில்தான் உள்ளது. மாமியாரிடம் இந்த குறிப்பை சொல்லி கேட்டுப் பாருங்கள் சொல்வார்கள் "அருமையான நல்ல ஊர்". இந்த ஊரில் நம்மை கடிக்கும் கொசு கண்டிப்பாக இல்லை. விளக்கின் அருகே சுற்றும் சிறு பூச்சிகள் உண்டு. ஆனால் கடிக்கும் கொசு மட்டும் இல்லை. எல்லாம் தோப்புகளிலும் வயல்களிலும்தான் இருக்கின்றன :-).

இப்போது நான் வசிப்பது நகரத்திற்கு அருகே உள்ள சப் அர்ப் ஏரியாதான். காட்டின் நடுவே எனலாம். வீட்டின் பின்னால் காடுதான். அந்த ரம்மியமான சூழல் மனதுக்கு கொடுக்கும் நிம்மதி கான்க்ரீட் காடுகளில் இல்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் நாம் விரும்புவது நிம்மதியான நோய் நொடியற்ற வாழ்க்கை மட்டுமே. அந்த நிம்மதியான சுகமான வாழ்க்கை கண்டிப்பாக நகரத்தை விட கிராமங்களில் அதிகம் என்பதே என் வாதம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கிராமம் தான் சொல்லிக்கொண்டு நகரத்தில் ஏன் இருக்கனும், எதிரணியினரே?????? நீங்க எல்லாரும் கிராமத்தில் இருந்திருந்தால் இப்படி கம்யூட்டரில் பட்டிமன்றத்தில் வாதாடி இருக்கமுடியுமா? என்னதான் கிராமம் முன்னேறி உள்ளது என்றாலும் நீங்க இப்ப நகரத்தில் அனுபவிக்கும் அனைத்து வசதி வாய்ப்புடன் கிராமத்தில் இருக்க முடியுமா?
கிராமமே சிறந்தது என்பவர் கிராமத்தில் இருந்து கொண்டு வாதாடி ஒத்துபோகும், கிராமத்தில் இருந்தோம், இருக்க ஆசை இதை வைத்துக்கொண்டு சொன்னால் சரிபடாது நடுவரே!!! இவர்கள் மட்டும் நகரத்தில், வெளிநாட்டில் சவுக்கியமாக வாழ்வார்களாம். மற்றவர்களுக்கு கிராமமே சிறந்தது என்பது நியாயமா? நடுவரே வாருங்கள் வந்து நீதி சொல்லுங்கள்.
எதிரணி பிரியா,நாம எதிரணி தான் எதிரிகள் அல்ல.கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறோம் அவ்வளவு தான் ஓகே வா.

அன்புடன்,
சுபத்ரா.

with love

சுபத்ரா எந்த காலத்தில் இருக்கீங்க? கிராமங்களிலும் கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் வந்திடுச்சுங்கோ.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வந்திருச்சுப்பா, ஆனா கிராமங்கள்(இலும்) என்ற அளவு தான். கணினி பயன்பாடு,படிப்பறிவு, ஏற்கனவே விவாதித்தது போல் மற்றத்துறைகள் எல்லாம் கிராமங்களிலும் இப்போ தான் சிறிது சிறிதாக வளர்கிறது. இன்று நாம் விவாதித்தோமானால் நகரங்களில் பெரும்பாலானோர் உபயோகபடுத்து அளவு,கிராமங்களில் கிடையாது.
எனவே கண்டிப்பாக எப்படி பார்த்தாலும்,எல்லாவகையிலும் நகரமே சிறந்தது.

with love

மேலும் சில பதிவுகள்