பெண்களே உஷார் !!!

வந்துவிட்டேன் மீண்டும் சில முக்கியமான தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்ள..... இத்தகவல் நிச்சயம் தோழிகளுக்கு பயன்படும் என்றே என் நேரத்தை இதற்கு ஒதுக்கி வந்தேன்.

சமீபத்தில் காதுக்கு வந்த சில சம்பவங்கள் தான் என்னை இத்தலைப்பை எழுத தூண்டியது.

1. ஒரு பெண்ணுக்கு கல்லூரி காலத்தில் இருந்து தொந்தரவு தந்த ஒரு ஆண், அப்பெண் திருமணம் ஆன பிறகும் அவரை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார். பெண்ணின் கணவருக்கு இது தெரிந்தும் குடும்ப கவுரவம் என்று காரணம் சொல்லி காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க அச்சம்!!!

2. ஒரு பெண்ணுக்கு திடீரென ஒரு அழைப்பு.... நான் காவல் துறையில் இருந்து அழைக்கிறேன், நாங்கள் கைது செய்த நபர் உங்கள் பெயரை சொல்கிறார் என்று. விசாரணை என்ற பெயரில் அந்த நபர் தொலைப்பேசியிலேயே இப்பெண்ணின் முழு தகவல் (வீட்டு முகவரி உட்பட) அனைத்தையும் கேட்டுவிட்டு வைத்து விட்டார். தாமதமாக சந்தேக பட்டு விசாரித்த போதே அப்பெண்ணுக்கு அழைத்தவர் உண்மையான காவல் துறை அதிகாரி இல்லை என்று தெரிகிறது. கணவரிடம் சொல்ல பயம், புகார் தரவும் அச்சம்!!!

- இது போல் பல சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம். முதலில் சொன்ன கதையில் அந்த ஆண் பணத்துக்காக அப்பெண்ணின் கணவர் உட்பட அனைவரையும் மிறட்டுகிறார். இரண்டாவது சம்பவத்தில் கணவர் கோவக்காறர் என்று மனைவி உண்மையை சொல்ல பயம்!!! எப்படியோ குற்றம் செய்தவருக்கு இவை சாதகமாகவே அமைகிறது. காரணம்.... எந்த ஒரு குற்றமாக இருந்தாலும் முறையான புகார் இன்றி காவல் துறை நடவடிக்கை எடுக்க இயலாது. ஆண்கள் பெண்களை மிறட்டும் போதே இப்பெண் நடவடிக்கை எடுக்க அஞ்சுவார் என்ற தைரியத்தில் தான் செய்கிறார்கள். ஆக.... பாதிக்கப்படுவது பெண் தான்!!! அவரது வாழ்க்கை தான் !!! இது போன்ற நேரத்தில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:

1. பெண்களே.... முதலில் இது போல் உங்களுக்கு தெரியாத நபரிடம் இருந்து தவறான அழைப்புகள் உங்களுக்கு வந்தாலோ, அடிக்கடி தேவை இல்லாமல் உங்களை அழைத்து தொந்தரவு செய்தாலும், சந்தேக படும்படியான அழைப்புகள் வந்தாலும், முன்பே தெரிந்தவர் யாரும் தொந்தரவு செய்தாலும் முதலில் நீங்கள் செய்ய வேன்டியது அதை உங்கள் கணவரது கவனத்துக்கு கொண்டு செல்வது தான்!!!

2. முன் பின் தெரியாத யாரும் உங்களிடம் உங்கள் முகவரி, உங்களை பற்றிய தகவல், உங்கள் வங்கி தகவல்கள், உங்கள் பிறந்த தேதி என எதை கேட்டாலும் சற்று நிதானமாக அது உண்மையான அழைப்பா என்பதை உறுதி செய்த பின்னே தகவலை சொல்லுங்கள். தகவலை சொன்ன பிறகு தவறான அழைப்பு என்று தெரிந்தால் பயன் இல்லை....

3. அப்படி தாமதமாக அது தவறான அழைப்பு என்று புரிந்தால் யோசிக்க வேண்டாம்... தயவு செய்து கனவரிடம் சொல்லி, உடனே காவல் துறையின் உதவியையோ, அல்லது சம்மந்த பட்ட வங்கியையோ தொடர்பு செய்யுங்கள். இது உங்களுக்கு தக்க பாதுகாப்பை தரும்.

4. இப்போது காவல் துறையில் இது போன்று அலைபேசி, தொலைபேசியில் தொந்தரவு செய்யும் நபர் மேல் நடவடிக்கை எடுக்க, அவரை கண்டு பிடிக்க தனி பிரிவே உள்ளது.... அதனால் தயங்காமல் அவர்கள் உதவியை நாடுங்கள்.

5. கணவரிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை, அதே சமையம் இது போன்ற விஷயங்களை நீங்கள் சொல்லாமல் இருப்பது நாளை அவர் உங்களை சந்தேக பட காரணமாகி விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

6. காவல் துறை உதவியை நாடினால் விஷயம் பப்லிக் ஆகி விடும், கவுரவம் பாதிக்கும் என்ற தவறான கருத்தை மாற்றுங்கள். உங்களுக்கு உதவவே பல சட்டங்கள் உருவாகின்றது. ஆனால் நம் பயம் காரணமாக அவற்றை பயன் படுத்தாமல் விட்டு, கடைசி நேரத்தில் எல்லாம் கை மீறி போன பிறகும் ஆபத்து நெருங்கி விட்ட பிறகும் அழுது புலம்பி பயன் இல்லை.

7. பேசும் நபர் காவல் துறை என்று பொய் சொன்னால் கூட, உங்கள் கணவரிடம் கொடுத்து பேச சொல்லுங்கள்.... இதுவே சிலருக்கு பயத்தை ஏற்படுத்தி அழைப்பை துண்டித்து விடுவார்கள். அப்படியும் அவர்கள் பேசினால் மீன்டும் நீங்களே அழைப்பதாக சொல்லி துண்டித்து விட்டு அவர் சொன்ன தகவல் உண்மை தானா என்று உறுதி செய்து கொன்டு பின் தொடர்பு கொண்டு பேசுங்கள்.

8. சம்மந்த பட்ட குற்றவாளி மீது தக்க நடவடிக்கை எடுக்க நீங்கள் முறையாக செய்யும் புகாரே அவசியம்!!! ஆகவே புகார் தர மறுக்காதீர்கள்.

9. முன் பின் தெரியாதவர்களிடமும், இணைய தளங்களிலும் உங்கள் தொலைப்பேசி எண்களை தயவு செய்து தர வேண்டாம்.

10. கடைகளில் பொருள் வாங்கினால் கூட தொடர்புக்கு உங்கள் கணவரது அலைபேசி எண்ணை மட்டுமே கொடுங்கள்.

1. பெண்களை பயந்தவர்கள் என்று எண்ணி அவர்களை தொந்தரவு செய்யும் ஆண்களை தண்டிக்க நீங்களே உதவ வேன்டும்!!!!

2. இவள் என்ன செய்ய போகிறாள் என்று நினைத்தவரை அச்சப்பட வைக்க தைரியமாக காவல் துறை உதவியை அனுகுங்கள்.

3. உங்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணருங்கள், உங்கள் கணவருக்கும் உணர்த்துங்கள்.

4. பெண்ணே உன் பாதுகாப்பு உன் கையில்!!! பெண்களுக்கு ஏற்படும் சமூக குற்றங்களில் இருந்து உன்னை காப்பாற்றி கொள்ளவும், உன் போன்ற மற்ற பெண்களுக்கு உதவவும் தயக்கம் ஏன்???

5. அச்சத்தை விடுவோம்.... பாதுகாப்பை மனதில் கொள்வோம்!!! நாளைய சமூகம் பெண்ணுக்கு பாதுகாப்பானதாக அமைய உதவுவோம்!!!!

- இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா
எப்பிடியிருக்கீங்க? உடம்பை நல்லபடியா கவனிச்சுக்குங்க. இந்த தலைப்பு ரொம்ப பயனுள்ள தலைப்பு. இந்த மாதிரி விஷயங்களை நீங்க சொன்ன மாதிரி உடனடியா, கணவரிடமோ, திருமணம் ஆகாத பெண்களாய் இருந்தால் அப்பாவிடமோ உடனடியாக சொல்லிடனும்.
நாங்க கரூரில் இருந்தப்ப யாரோ ஒரு ஆள் இப்பிடித்தான் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் போனில் பேசி பேசி தொந்தரவு கொடுத்திட்டு இருந்தான். அவன்கிட்ட சில பெண்களும் மாட்டியிருந்ததும் தெரியவந்ததும் போலிஸ் அவனை கைது பண்ணிட்டதா கேள்விப்பட்டேன்.
அதில் சிலர் விஷயம் ரொம்ப எல்லைமீறிப்போனதும்தான் வீட்டில் சொல்லியிருந்திருக்காங்க.
வீட்டு ஆண்களை எதற்கு டென்ஷன் பண்ணனும்னு மறைக்க நினைச்சவங்களுக்குதான் பிரச்னை அதிகமாயிற்று!

ஹாய் வனி,எப்படி இருக்கீங்க?வீட்டில் எல்லோரும் நலம் தானே?கிடைக்கும் சந்தர்ப்பத்தில் நல்ல விஷயங்களை பகிர்ந்துக் கொள்வது,அல்லது தெரிவிப்பது என்பது என்னை பொருத்தவரை ரொம்ப நல்ல பழக்கம் வனி..எல்லோரும் பயன்படும் விதம் அது அமைய வாய்ப்பு உள்ளது.நீங்கள் அதை செய்வது மிகவும் பாராட்டுக்குரியது.
நீங்கள் சொல்லியுள்ள இந்த விஷயம் நூற்றுக்கு நூறு உண்மைதாங்க.இந்தமுறை நான் ஊருக்கு சென்ற போது நிறைய கேள்வியும் பட்டேன். அதை கண்டும் கொண்டேன்.
ஒரு நாள்,என் வீட்டில் இரவு எல்லோரும் நன்கு அசந்து தூங்கி கொண்டிருந்தோம்.1;30 மணி இருக்கும்.அப்போது ஃபோன் அடிக்க நான் தான் வேகமாக எழுந்து ஃபோனை எடுத்தேன்.
அப்போது ஒரு ஆண் நபர் பேசினார்.
ஹலோ யார் பேசுறீங்க உங்க பேரென்ன? என முதலில் அந்த நபர் கேட்க,நான் தூக்க கலக்கத்திலேயே முதலில் நீங்க யார் பேசரிங்க?என்று கேட்டேன்.உங்க வீட்டில் பெரிய ஆம்பிளைங்க இருக்காங்களா?என கேட்க நானும் இருக்காங்க என்றேன்.
உங்கள் ஃபோனில் காலர் ஐ.டி உண்டா?என கேட்க,அப்போதுதான் எனக்கு உதர ஆரம்பித்து விட்டது.ஆஹா...என சுதாரித்துக் கொண்டு ஃபோன் செய்து விட்டு நீங்கள் யார் என்று சொல்லாமல் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்களே? என கேட்டேன்.ஒரு முக்கியமான விஷயம் பெரிய ஆம்பளைங்களிடம் தான் சொல்லணும்.எனவே இப்போது வந்திருக்கும் நம்பருக்கு கால் செய்ய சொல்லுங்க.ஆமா உங்க பேர் என்ன என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்று கேட்டான்.
வந்ததே ஆத்திரம் என்ன விளையாடுறீங்களா..?என வேகமாக குரல் உயர்த்தவும் ஃபோனை வைத்து விட்டான்.
பட,படவென்று நடுங்க ஆரம்பித்து விட்டது.என் அத்தை முழித்துக் கொண்டு "யார் ஃபோனில்"? என்று கேட்க,ராங்க் நம்பர் என்று அப்போதைக்கு சொல்லி தூங்க சொல்லி விட்டேன்.
(ஆனால் என் தூக்கம் போச்சு..)பொழுது விடிந்ததும் என் மாமியாரின் அண்ணன் எங்கள் வீட்டில் தான் இருப்பார்.
அவரிடமும்,எல்லோரிடமும் விஷயத்தை சொல்ல இது போல் நிறைய வீடுகளுக்கு கால் வருவதாகவும் மிகவும் அசிங்கமாக பேசுவதாகவும்,சொன்னார்கள்.இப்போது நம் வீட்டுக்கும் வந்து விட்டது.நம்பரை கொடு என வாங்கி கொண்டு ஃபோன் வெளியிலிருந்து செய்ய ரெஸ்பான்சே இல்லை.அதன் பிறகு அது போன்ற கால் வரவில்லை.
முதலில் வீட்டில் யார்,யார் இருக்கின்றனர்,காலர் ஐ.டி உண்டா?என்றெல்லம் விசாரித்து விட்டு பிறகு தங்கள் லீலைகளை செய்கிறார்கள்.வயது பெண் இருக்கும் வீட்டில்,அதுவும் சிறு,சிறு ஊர்களிலும் இந்த தவறுகள் அதிகம் நடக்கின்றன.
இப்போது வனி..நீங்கள் ஆரம்பம் செய்ய நான் சொல்லியிருக்கிறேன்.இல்லையென்றால் என்னோடு இந்த விஷயம் இருந்திருக்கும்.இப்போது நிறைய பேருக்கு நல்ல தகவலாக போய் சேரும் என நம்புகிறேன்.வனி,உங்களுக்கு என் வாழ்த்தும் நன்றியும்.
இன்னும் வெளிநாட்டில் கணவர் இருக்க ஊரில் இருக்கும் மனைவிகளுக்கு நேரும் இடைஞ்சல்கள் மற்றும் அவர்கள் வழி தவறுவதும் நிறைய நடக்கின்றன.அதை பற்றியும் மற்றொரு நாள் அலசுவோம் வனி..
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மிக்க நன்றி சாய்கீதா, அப்சரா..... உங்கள் கருத்தை சொன்னதுக்கும், அனுபவத்தை மற்ற தோழிகளிடம் பகிர்ந்து கொண்டதுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்று செக்கப் போய் அலைந்து விட்டு இப்போதே வர நேரம் கிடைத்தது. விளக்கமாக பதிவு போட முடியவில்லை இப்போது. அதனால் நிச்சயம் நாளை வந்து பதிவு போடுகிறேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா நல்லதொரு பகுதி ஆரம்பித்திருக்கிறிர்கள். இன்றைய உலகில் எச்சரிகையாக இருப்பதே நலம்.

என்ன பிரச்சினை என்றாலும் என் அம்மாவிடம் அப்பாவிடம் பேச முடியும் என்ற நம்பிக்கையை நம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். அப்படியென்றால்தான் பிரச்சினை என்று வரும் போது வேறு வழிகள் தேடாமல் நம்மிடம் சொல்வார்கள். நாம் அவர்களுக்கு உதவவும் முடியும்.

கேமரா கண்கள் எங்கிருந்து நம்மை கவனிக்கின்றன என்பதை அறிவது கடினம். சற்று முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டால் சிக்கலில் விழுவதை தவிர்க்கலாம். முக்கியமாக ட்ரெஸ் வாங்கும் போது போட்டுப்பார்த்து வாங்குவோம். ஃஇட்டிங் ரூமில் ஏதேனும் ஓட்டையோ அல்லது சிறிய வட்டமோ எங்காவது தெரிகிறதா என்று பார்த்து இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கண்ணாடிக்கு கூட கண்கள் உண்டு இப்போது. அதாவது பார்க்க சாதாரணமான மிரர் போல இருந்தாலும் மறுபக்கம் இருப்பவருக்கு இந்தப்பகம் உள்ளவற்றை தெளிவாக பார்க்க முடியும். அப்படிப்பட்ட கண்ணாடியை கண்டறிய ஒரு எளிய வழி.
உங்கள் நகத்தால் அல்லது காயினால் கண்ணாடியை தொட்டுக்கொண்டு பார்த்தால் அதன் பிம்பத்திற்கும் விரல்நகத்திற்கும்(அல்லது காயினுக்கும்) இடையே இடைவெளி இருப்பது போல் இருந்தால் பிரச்சினை இல்லை. ஒன்றோடொன்று தொட்டுக் கொண்டிருந்தால் கண்ணாடி விவகாரமானது.

இது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்தது. இரவு ட்யூஷன் முடிந்து வரும் போது ஒருவன் வேண்டும் என்றே என்மீது வந்து மோதினான். அன்று பயத்தில் ஓடி வந்து விட்டேன். வீட்டிலும் யாரிடத்தும் சொல்லவில்லை. ஃப்ரெண்ட்ஸிடம் சொன்ன போது அவர்களும் இப்படி தங்களையும் அவன் தொல்லைப்படுத்துவதாக சொன்னார்கள். சிலர் வீட்டில் சொல்லி கண்டித்தும் அவன் திருந்தவில்லை. அடுத்தநாள் கையில் குடையோடு கிளம்பினேன். இன்னிக்கும் வந்தால் ஒருகை பார்த்து விட வேண்டும் என்ற முடிவோடுதான் போனேன். இவனும் எதிரில் வந்தான். அருகில் முட்ட வருவது போல் வந்ததும் குடையின் பட்டனை அழுத்திவிட்டேன். குடையின் துணியை அதன் டேப்பால் கட்டி வைத்திருந்ததால் நேரே போய் அவனை பதம் பார்த்தது. சுருண்டு விட்டான். குடை போய் பட்ட இடம் அப்படி. அதன் பிறகு அவனை அந்தப்பக்கமே காணவில்லை. என் அண்ணனிடமும் சொன்னேன். அதன் பின் இளைஞர்கள் ஒன்று கூடி கண்காணிக்க ஆரம்பித்தனர். ஆனால் அதன் பின் யோசித்ததில் நான் செய்த முட்டாள்தனம் புரிந்தது. அவன் இதை மனதில் வைத்து மேலும் தொல்லை கொடுத்திருந்தால்? அதன் பின் அண்ணன் அல்லது அப்பா வந்துதான் கூடிக்கொண்டு வருவார்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்புள்ள சாய்கீதா.... நான் நலம். நீங்க நலமா? முதுகு வலி என்று ஏதோ இழையில் பார்த்தேன், பதில் போட முடியாமல் போய் கொண்டே இருந்தது.... மன்னியுங்கள். அதிகமாக கம்ப்யூட்டர் முன் இருக்க வேண்டாம். முடிந்தால் பிஸியோ தெரப்பி அல்லது யோகா போன்றதை பயிர்சி செய்யவும். நல்ல பலன் இருக்கும். நீங்க சொன்ன மாதிரி தொலைப்பேசி இப்போ தொல்லை பேசியா தான் நிறைய இடங்களில் இருக்கு, முக்கியமா பெண்களுக்கு இருக்கு. யாரிடமாவது ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவது தான் பாதுகாப்பு. ஆனால் பெண்கள் பலரும் இப்போது இதை செய்வதில்லை என்பது வருத்தமான விஷயம். உங்க கருத்தை சொன்னதுக்கு ரொம்ப நன்றி சாய்கீதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள அப்சரா.... நான் நலம். நீங்க நலமா? இப்போது சில நாட்களாக இது போன்ற பிரெச்சனைகளை நான் அதிகமாக பார்த்து வருகிறேன். அதுவே நான் இதை இங்கு சொல்ல காரணம். என் தந்தை காவல் துறையில் இருக்கும் காரணத்தால் இது போல் கேஸ் வரும்போது மிகவும் வருத்த படுவார்..... "ஏன்டா யாருமே முறையா புகார் தர மாட்டங்கறாங்க, அவங்க மேல எப்படி ஆக்ஷன் எடுக்க முடியும்??? சும்மா கூப்டு மிரட்டி அனுப்பலாம் அவ்வளவு தான்.... என்ன பயன்??? அவன் இன்னும் கொஞ்சம் நாள் விட்டு மருபடியும் தொடருவான். ஏனோ எல்லாரும் போலீஸ்'னா பயந்துக்கறாங்க."னு சொல்வார். காரணம், எங்க வீட்டில் வளர்த்த விதமே எந்த ஒரு பிரெச்சனை, எந்த ஒரு நல்ல விஷயம் எதுவாக இருந்தாலும் ஒரு நண்பர்களிடம் சொல்வது போல் அப்பா, அம்மா'விடம் தயங்காமல் சொல்வது தான். அப்படி சொல்வதால் தான் இன்று வரை பல ஆண்களின் தொல்லை இல்லாமல் எங்களால் இருக்க முடிந்தது. திருமணம் ஆன பிறகும் வெளிநாட்டில் கணவரிடம் யாராவது தொல்லை தந்தால் உடனே சொல்லிவிடுவேன். அவர் யார் என்ன என்று உடனே விசாரித்து தேவையான பாதுகாப்பை செய்து விடுவார். இதில் தயக்கம் தேவை இல்லை.... நாம் சொன்னால் நான் பயப்பிடுகிறோம் என்றே அவர்கள் நினைப்பார்கள், அதனால் பாதுகாப்பு தருவார்கள்.... சொல்லாமல் இருந்தால் "ஏன் சொல்லாமல் மறைக்க வேண்டும்???" என்ற கேள்வி பல பிரெச்சனைகளை கொண்டு வந்து விடும். உங்க அனுபவத்தை சொன்னதுக்கு மிக்க நன்றி. பலருக்கும் அது பயன்படும். இது போல் அழைப்புகள் வந்தால் உஷாராக இருப்பார்கள். இப்போதெல்லாம் ஆண்கள் பல புது புது வழிகளை கடைபிடிக்கிறார்கள் பெண்களை பற்றிய விவரத்தை அறிய. கொடுமை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள கவிசிவா.... நல்ல ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். இதை நானும் கேள்விபட்டிருக்கேன். எப்போதோ மெயிலில் வந்தது. நானும் இதை ஒவ்வொரு முறையும் பார்ப்பேன். ஆடை ட்ரையல் பார்க்கும் இடத்தில் மட்டும் அல்ல, பொதுவாக ஏதேனும் ஹோட்டல் போன்ற இடத்தில் தங்கினால் கூட இதை பார்ப்பேன். என் கணவர் கூட கேலி செய்வார்.... "ரொம்ப தான் உஷாரு"னு. என்ன செய்ய... வளர்ந்த விதம் அப்படி... எதையும் எந்த இடத்தையும் நம்ப மாட்டேன். ;) உங்களை போல் நானும் கல்லூரி காலத்தில் சற்று துனிச்சலாக கையில் இருக்கும் ஊக்கு () வைத்து பேருந்தில் சேட்டை செய்யும் ஆண்களின் கைகளை பதம் பார்த்தது உண்டு. இப்போது நினைத்தால் பயமாக இருக்கு. ஆனால் அதையும் வந்து அப்பா'விடம் சொல்வேன். அம்மா பயந்து விடுவார், அப்பா "ஏன்டா கண்ணு.... கன்டக்டர் கிட்ட சொல்ல வேண்டியது தானே..."னு சொல்வார். எப்படியோ அப்போது பிரெச்சனை இல்லாமல் இருந்தது நல்ல நேரம் தான். எதுவாக இருந்தாலும் வீட்டில் பெரியவர்களிடம் சொல்லி முறையாக பாதுகாப்பு தேடுவது தான் சரி. உங்க கருத்தை சொன்னதுக்கு மிக்க நன்றி கவிசிவா.

வேறு சம்பவங்கள் இருந்தாலும் வந்து பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே.... அது மற்ற பெண்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கையாகவும், குற்றங்களை பற்றியும் ஒரு தகவல் தரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,உடம்புக்கு என்ன?செக்கப்புக்கு அலைந்து கொண்டு வந்ததாக சொன்னீர்களே?தவறாக நினைக்க வேண்டாம்.ஏதேனும் விசேஷமா?அல்லது ஏதேனும் உடல் நிலை சரியில்லயா?உடம்பை கவனித்துக் கொள்ளவும்.மீண்டும் வருவேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

anbe sivam
வீட்டில் தனியாக இருக்கும் இல்லத்தரசிகளுக்கு..

வீட்டிற்கு முன் பின் தெரியாத எவரும் வந்தால் கதவை திறக்காமல் விசாரித்து அனுப்புவது பாதுகாப்பானது.
தண்ணீர் வேண்டுமென கேட்டு கொண்டு வருவதற்குள் கதவை சாத்தி கத்தியை காட்டி மிரட்டி பணம் நகைகளை கொள்ளை அடிப்பது மட்டுமன்றி கொலை செய்துவிடும் கயவர்கள் இந்நாட்டில் உண்டு. பத்திரிகைகளில் படித்திருக்கிறோம்.
எனவே பெண்களாகிய நாம் அதீதமான எச்சரிக்கையுடன் இருப்பது
பாதுகாப்பானது.
எதுவானாலும் அப்பாவிடமோ, கணவரிடமோ சொல்லிவிடுவது நல்லது.
பெண்கள் முதலில் பயத்தை விட்டொழிக்க வேண்டும். எனக்கு இருட்டு என்றால் பயம்.. ஹி ஹி. :-) ஆனால் என்னிடம் வாலாட்டிய ஆண்களுக்கு தக்க தண்டனை கொடுக்க பயந்ததில்லை.
ஸ்கூலுக்கு பஸ்ஸில் போகும் போது சில்மிஷம் செய்த சில ஆட்களுக்கு " பின்" ட்ரீட்மென்ட், ஹீல் செப்பலால் ஓங்கி ஒரு மிதி முழங்கையால் விலாவில் குத்து இன்னும் பல..
அதனால் பயப்படாமல் அவர்களை பயப்படுத்துவோம்.
நாமெல்லாம் சக்தியின் வடிவம்.

anbe sivam

மேலும் சில பதிவுகள்