பெண் பிள்ளைகளுக்கு கோழி இறைச்சி மற்றும் முட்டை

எனது மகளுக்கு 3 வயதாகிறது. பெண் பிள்ளைகளுக்கு கோழி இறைச்சி மற்றும் முட்டை அதிகம் கொடுக்க கூடாது என்று சொல்கிறார்கள். கோழிக்கு hormone injection அடிப்பதாகவும் இதனால் பெண் பிள்ளைகள் விரைவில் வயதுக்கு வருவதாகவும் சொல்கிறார்கள். இது உண்மையா? வாரத்தில் எத்தனை முட்டைகள் கொடுக்களாம்?

ஹாய் லலிதா!
நீங்க சொல்லியிருக்கும் விஷயத்தினை நானும் கேள்விப்பட்டேன். ஒரு புக்கிலும் படித்தேன்.
அது உண்மைதான். ஆனா, ப்ராய்லர் கோழி, ஃப்ரோஷன் கோழிதான் அப்படி. ஆனா, நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டையெல்லாம் ரொம்ப நல்லது.
நாட்டுக்கோழி முட்டை என்றால் தாராளமாய் தினமும் ஒன்று தரலாம். பொதுவாக பண்ணையில் வளர்க்காமல் வீட்டில் வளர்க்கும் கோழி இறைச்சி, கோழி முட்டைதான் நல்லது.

ஹாய் லலிதா! இந்த வெப்சைட்டில் போயி பாருங்க தெரியும்? உங்க பயம் அதிகம் ஆனா என்னை திட்டக் கூடாது... ஓக்கேயா?

சாய்கீதாக்கா நலமா? இப்ப முதுகு வலி எப்படி இருக்கு?

http://eegarai.darkbb.com/-f14/--t14201.htm

http://eegarai.darkbb.com/-f14/--t14132.htm

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

பிரபா அக்கா நீங்க கொடுத்த தளத்தில் குழந்தைகளுக்கென தனியாக குறிப்பிடவில்லையே!!

சாய்கீதா அக்கா குழந்தைகளுக்கு தினமும் ஒன்று கொடுக்கக் கூடாதா?

தோழி லலிதா அவர்கள் கேட்ட பிறகே இதை தீவிரமாக யோசிக்கிறேன், தேடுகிறேன், ஆலோசனைகள் கேட்கிறேன்!!

யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும். ஏனெனில் என் குழந்தை தினமும் ஒரு முட்டை சாப்பிடுகிறாள். சாப்பாடு சாப்பிடப்படுத்தும் அவள் முட்டையை மட்டும் விரும்பி சாப்பிடுகிறாள். எனவே இதை பற்றி தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

சுபா எப்படி இருக்கீங்க? நீங்களும், குழந்தையும் நலமா?

பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி முட்டை மற்றும் இறைச்சியைப் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. சாய்கீதா சொல்வது போல் நாட்டுக் கோழி முட்டை, free range/ organic chicken/வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் போன்றவற்றின் முட்டைகளை பயமில்லாமல் சாப்பிடலாம்.

மேலும் சில பதிவுகள்