தாலாட்டுப் பாடல்கள்

குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்கள் தமிழில் வேண்டும். உதவுவீர்களா?

நீங்கள் கேட்டது தாலாட்டுப்பாடல்கள் அடங்கிய குறுந்தகடா(CD) அல்லது எழுத்து வடிவ பாடல்களா(Lyrics) என்பதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கின்றது. நீங்கள் பாடப்போகின்றீர்கள் என்றால் இணையத்திலேயே நிறைய தாலாட்டுப் பாடல்கள் கிடைக்கும். தமிழ்நேசன் இணையத்தளத்தில் ஒரு தொகுப்பு உள்ளது.

<a href="http://www.tamilnation.org/culture/music/thaalatu.htm" target="_blank"> தாலாட்டுப் பாடல்கள் </a>

அதுசரி.. இந்தப் பாடல்களின் அர்த்தம் ஒன்பது மாதக் குழந்தைக்கு புரியவா போகின்றது?! வெறும் லோ..லோ..லோலா..லாயி... போதாதா? :-)

இருப்பினும் இந்தக் காலத்தில் தாலாட்டுப் பாடல்கள் பாட விரும்பும் உங்களை கண்டிப்பாய் பாராட்டியே ஆகவேண்டும்.

நன்றி, அட்மின். நான் கேட்டது எழுத்து வடிவ பாடல்கள்தான். மீண்டும் நன்றி, அட்மின்.

அன்பு வினோதாவிற்கு எனக்கு கூட தங்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பம் தான் ஆனால் முடியாதே. காரணம் நான் பாடிய தாலாட்டு பாடல்கள் எல்லாம் திரைப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் தான். அதிலும் குறிப்பாக மூன்றாம் பிறையில் இடம் பெற்ற கண்ணே கலைமானே என்ற பாடலைதான் அடிக்கடி பாடுவேன். என் குழந்தைகளை விட என் கணவர் முதலில் தூங்கிவிடுவார். காதில் தலையணைய்யை பொத்திக் கொண்டு போர்வையால் போர்த்திக் கொண்டு. அந்த அளவிற்க்கு இருக்கும் என் குரல் வளமையும், பாட்டின் இனிமையும். நீங்கள் கூட இந்த பாட்டை பாடி பாருங்களேன் உங்கள் குட்டி பாப்பா கூட இனிமையாக துங்கும்.

நன்றி Manohari.
உங்கள் ஆலோசனையின்படி கண்ணே கலைமானே பாடலை பாடி வருகிறேன். குழந்தையை விட கணவர் முதலில் தூங்கிவிடுகிறார்.

பரவாயில்லை உங்களுக்கும் என்னைப் போலவே அனைவரையும் தூங்கச் செய்யும் திறமை இருக்கின்றது. எதர்கும் சற்று மெதுவாகவே பாடுங்கள் பிறகு உங்கள் கணவரை காலையில் வேலைக்கு எழுப்ப கஷ்டமாகி விடப் போகின்றது.

மேலும் சில பதிவுகள்