பாப்பாவுக்கு வளையல்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

நான் தற்போது யுஎஸ் -ல் இருக்கிறேன், என் 8 மாத செல்ல மகளுக்கு தங்க வளையல் வாங்கணும், இங்கு எங்கே வாங்குவது, அல்லது எதாவது இணைய தளத்தில் வாங்க முடியுமா? தெரிந்தவர்கள் இணைய தளமுகவரி கொடுங்களேன் ப்ளீஸ்..... நானும் நம்ம ஊர் சரவணா ஸ்டோர்ஸ், GRT, இன்னும் சில தளத்திலும் தேடினேன், ஆனால் எதுவும் சரியா கிடைக்கல, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க

அநேக அன்புடன்
ஜெயந்தி

மன்னிக்கவும் எனக்கு நீங்கள் கேட்கும் இணைய தள முகவரிகள் பற்றி சரிவர தெரியவில்லை, ஆனால் இங்கு (நியூஜெர்ஸி) நிறைய நகை கடைகளே இருக்கிறது, எனவே நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கூறினால் அங்குள்ளவர்கள் அதை பற்றி தெளிவாக விளக்க முடியும்..அல்லது உங்களுக்கு யாராவது நண்பர்கள், உறவினர்கள் இங்கு இருந்தால் வாங்கிவர சொல்லுங்கள்..மேலும் இணையதளத்தில் நகை வாங்குவது அவ்வளவு சரியாக எனக்கு தெரியவில்லை..உங்களுக்கு அவசியம் வேண்டுமெனில் இதை பற்றி தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள்,பொருத்திருங்கள்...

ஹாய் santho ,

நான் உங்க பதிவுகளை படிச்சிருக்கேன், உங்க பையன் சந்தோஷின் துடுக்குதனத்தை நான் படித்து ரசிச்சிருக்கேன், எனக்கு பதில் கொடுத்ததற்கு முதலில் என் நன்றி.... நான் north கரோலினா,charlotte-ல் இருக்கேன், இங்கு நம்ம அறுசுவை தோழிங்க யாராவது இருக்கீங்களா? இங்குள்ள கடைகளில் கிடைப்பதாக தெரியலை... ஊரில் இருந்தும் யாரையாவது வாங்கிட்டு வர சொல்லலாம், ஆனால் முதல் முதல்ல பாப்பாவுக்குன்னு வளையல் வாங்குவதால் நாமளே டிசைன் பார்த்து வாங்கலாமே-ன்னு தான் ஒரு சென்டிமென்ட்,மற்ற தோழிகளும் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்

அநேக அன்புடன்
ஜெயந்தி

ஜெயந்தி தங்க வளையல் வாங்க இந்த இணைய

தளத்தில் போய் பாருங்கள்.

http://www.totaram.com/

தங்கவளையல் வாங்க www.sktm.in போய் பாருங்கள் உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
சுஜிபாலாஜி

ஹாய் ஜெயந்தி!
எப்பிடியிருக்கீங்க? குழந்தைக்கு வளையல் வாங்குவது நல்ல விஷயம். ஆனா அதனை நீங்க இருக்கும் இடத்தில் பக்கத்தில் கடைகள் இருந்தால் அங்குபோய் வாங்குவதுதான் நல்லது.
இணையதளம் மூலமாய் நகை வாங்குவது சரியானதல்லன்னு எனக்கு தோணுது.
நேரில் போகும்போது நகை டிசைன்கள் நிறைய பார்த்து வாங்கலாம். நகையின் தரத்தினையும் கேட்டு அறியலாம்.
குழந்தை கையில் போட்டுப்பார்த்தும் செலக்ட் செய்யலாம். மேலும் நம் தோழிகள் யாரும் இணையதள மூலமாக நகை வாங்கியுள்ளார்களா என்பதனை உறுதிசெய்துகொண்டு வாங்குங்கள்.

meeks: எனக்காக பதிவு போட்டதற்கு முதலில் என் நன்றிகள்,நான் ஏற்கனவே totaram.com -ல் பார்த்து விட்டேன் ஆனால் அதில் கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கு, அதான் அதில் பார்க்கலை

சுஜிபாலாஜி: எனக்காக பதிவு போட்டதற்கு முதலில் என் நன்றிகள், நீங்க அனுப்பின சைட்-ல் பார்த்தேன், அதில் குழந்தைகள் செக்க்ஷனே இல்ல, மற்ற படி கலெக்ஷன்ஸ்-லாம் நல்லா இருக்கு ....

சாய்: நான் நலம் நீங்களும் நலம் தானே? எனக்காக பதிவு போட்டதற்கு முதலில் என் நன்றிகள், ஏற்கனவே சந்தோ-வும் சொல்லி இருந்தாங்க, இப்ப நீங்களும் சொல்றதை பார்த்தா நெட்-ல் வாங்குவது ரிஸ்க்-னு தான் எனக்கும் படுது.... நீங்க சொன்ன கருத்துக்கள் நூறுக்கு நூறு உண்மை, எல்லாமே கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயங்கள்.....நாங்க இருக்கும் இடத்தில் கோல்ட் jewel கிடைப்பதாக தெரியல, அப்படியே இருந்தாலும் கண்டிப்பாக வளையல் இருக்க போவதில்லை..... அப்படின்னா வெளிநாட்டு வாழ் தோழிகள் எல்லாம் ஊருக்கு போறப்ப தான் வாங்குவீங்களா? நான் இந்தியா போறதுக்கு இன்னும் ஒரு வருஷத்துக்கு மேல ஆகும், மற்றவர்களிடம் வாங்கி வர சொல்வதிலும் எனக்கு இஷ்டம் இல்லை, அதுவரை கவரிங்-ல் தான் வண்டி ஓட்டனும் ......

http://www.goldpalace.com/Merchant2/merchant.mvc?

http://www.meenajewelers.com/22Kt_Gold/Baby_Jewelry/Baby_Bangles/

மேலும் சில பதிவுகள்