தோழீகள் பற்றி பேச இந்த தலைப்பு

ஹாய் தோழீஸ் எல்லாரும் எப்படி இருகிங்க. உங்களுக்காக ஒரு புது தலைப்பு. நம்ம அம்மா பற்றி பேசியாச்சி, கனவன் மனைவி பற்றி பேசியாச்சி, ஊர் பற்றி பேசியாச்சி, சரி தோழன் தோழீ பற்றி பேசுவோமே. நமக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் ஒரு உன்மையான தோழி கிடைப்பது மிக கடினம். அப்படி பட்ட ஒரு தோழமை அனுபவம் உங்களுக்கு இருந்தால் இங்கு வந்து பேசுங்கள். பள்ளிகூடத்தில் படிக்கும் போது உள்ள தோழமை, காலேஜ் படிக்கும் போது உள்ள தோழமை, வேலை பார்க்கும் போது உள்ள தோழமை, பக்கத்து வீட்டு தோழமை இப்படி உங்கள் அனுபவங்களை வந்து பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தோழமையால் கிடைத்து சந்தோசம் துக்கம் அனைத்தையும் பற்றி பேசலாம் வாங்க.

ஹாய் அருசுவை தோழீஸ் எல்லாரும் வந்து சொல்லுங்கப்பா உங்க தோழமை பற்றி. ஒரு காதல் காதலி கிடைப்பது கூட கடினம் இல்லை, ஆனால் ஒரு உன்மையான தோழமை கிடைப்பது மிக மிக கடினம். அனைவருக்கும் எத்தனையோ அனுபவம் தோழமையால் ஏற்பட்டு இருக்கும் அத பற்றி பேச கூப்பிடால் யாரும் வர வில்லை. தோழமை பற்றி பேச வேண்டும் என்று சொல்ல உடன் நல்லது மட்டும் தான் பேச வேண்டும் என்று நினைக்க வேண்டாம். தோழமையால் உங்களுக்கு ஏற்பட்டம் பிரச்சை கூட வந்து சொல்லலாம், மற்றவங்க அத படித்து கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்பாங்களா அதற்க்காக தான் இந்த தலைப்பு. வாங்களேன் பேசலாம்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனியா,
வார விடுமுறை தினம் அல்லவா? அதனால தோழிகள் குடும்பத்துடன் பிசியா இருப்பாங்க.நானும் வெளியில் கிளம்ப வேண்டும்.வேலைகள் அதிகம் உள்ளது.பொறுமையாக நாளை பதில் போடுகிறேன்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

hi soniya i am new one,unmayana thozi kidaipathu migaum kadinamthan.ennudaya athai ponnuthan antha thozi.ethaniyo kashtangal vandhathu enakku aarudhal solli manadhidam koduthathu avalthan.

life is short make it sweet.

ஹை சோனியா, தோழிகள் பற்றி சொல்ல நிறைய்ய இருக்கு.என் பையன் தூங்கிண்டிருக்கான்.எழுந்டிருக்கும் வரை முடிந்ததை சொல்கிரேன்.ஓ.கே. வா?பெரிய்ய்ய பதிவுதான், திட்டாதீஙக.

நான் நாகர்கொவிலில் 5th வரை, ஒரு ஸ்கூலில், படித்தேன். பின்பு, வேரு ஸ்கூல் வந்தேன்.அங்கே, என் பக்கத்தில் இருன்த பெண்,எனக்கு தோழியானாள்.ஆனால்,1 வருடம்தான்.பின்பு,அவள் வேரு ஊருக்கு சென்றுவிட்டாஅள்.7th வேரு ஸ்கூல் வந்தேன் அங்கும், என் பக்கத்தில் உட்கார்ன்த பெண் தோழியானாள்.7th,8th,9th,10th சேர்ன்தே படித்தோம்.நான் பழகிவிட்டால் மிகவும் உன்மயாக பாசமாக இருப்பென். ஒரு நாள்,உடம்பு சரியில்லாமல், ஸ்குல் செல்லவில்லை.அடுத்தனாள், முதல் பீரியட் ஜியாமெட்ரி டெஸ்ட்.னான் அன்த தோழிடம் போய் கேட்டேன்.அது எடுக்கும்பொது வரவில்லை என்று, அவள் சொல்லித்தரவில்லை. நான் அழுது விட்டென். பின்பு, இன்னொரு பெண்ண் சொல்லித்தன்தாள்.நானும் fஉல் மார்க் எடுத்துவிட்டென். ஆனால், சரி நான் இருப்படுபோல் அவல் என்னிடம் இல்லை போல என்ரு என் மனதில், ஏனோ, முன்பிருன்த பாசம் குரைன்துவிட்டது போல.ஆனால் பேசுவது, பழ்குவது குரையவில்லை.11th க்கு திரும்பவும் வேரு ஸ்கூல், சென்று விட்டேன்.பிறகு காலேஜ் வேறு வேறு.அவள் எனக்கு. லெட்டெர் போட்டாள்.nee,இன்த காலேஜில் சேர்வாஇ என்றுதான், நான் இஙு சேர்ன்தேன் என்று. திரும்பவும், லெட்டெரில் பேசிக்கொன்டொம்.பிறகு,லெட்டெர்-ம் நின்று பொனது. நாஙள் சென்னை, வன்தோம், அவலுக்கு அட்ரஸ் எழுதி லெட்டெர் போட்டேன்.பதிலில்லை.சிறிதுகாலம் கழித்து, அவள், கல்யான இன்விடஷன் வன்தது. என் அப்பா, வெளியூர் என்ப்ஹ்தால் அனுப்பவில்லை. பின்பு நானும் இன்விடேஷன் ஔப்பினென்.அவளும் வரவில்லை. இப்பொழுது,8 வர்ஷத்துப்பிரகு,என்னவரின் தோழன் பேஸ்புக்-கில் போட்டோ அனுப்பிருக்கார், பாரு என்று சொன்னார்.அப்பொழுது எதேச்சையாக, என் தோழியின் பெயர்போட்டு தேடினேன், எதிர்பாராவிதமாக, அவள் போட்டோவுடன் அவளைக்கண்டுபிடித்து, அவளுக்கு மெயில் அனுப்பினால், அவளும் என்னைத்தேடியதாகச்சொன்னாள்>அப்புரம் என்ன, தினமும், மெயிலில் பெசிக்கொள்கிரோம்.அப்படியே என்னுடன் காலேஜில் படித்த 4 தோழிகளயும் கன்டு பிடித்துப்பெசியதில் மிக்கமகிழ்சி.அதிலும் 3 பெர் இங்குதான்(யு,எஸ்-இல்)இருக்கிரார்கள்.

பொறுமையாகப்படித்த தோழிகளுக்கு நன்றி.

தோழி

எனக்கு பொதுவாக நட்பு வட்டாரம் என்பது மிக குறைவு. அதிகம் பேருடன் நன்கு பேசி கலந்தாலும், நமக்கென ஒரு தோழி என்பது இருக்கும். பள்ளி, யூஜி ல கிடைத்தவர்களின் கான்ட்டேக்ட் அதிகமாக இல்லை ப்ரீத்தி என்பவளை தவிர.. பிஜி யில் என்னுடன் படித்த ராஜி .. இன்றும் ஏதாவது மனக்ஷ்டம் என்றால் நான் ஷேர் செய்யும் நபர்களில் அவளும் ஒருத்தி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


நேக்கு நெறைய பேர் இருக்கா!

மொதல்ல சீனியர். சீதாம்மா,
2. ஜெ மாமி
3 ஆமினா
4 ராதா
5 பவித்ரா
6 கீதா
7 கோமதி (a) கோமு
8 ரம்யா
9 ஆனந்தி
10 செண்பகா
11 நவீனா குட்டி

தோழர்கள்
1 அட்மின்
2 தவமணி
3 ஆஷிக்
4 ஷேக்

மற்றும் அறுசுவைல இருக்கறவா எல்லாரும்!

&
என் குடும்ப உறுப்பினர்கள்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

//அத பற்றி பேச கூப்பிடால் யாரும் வர வில்லை.//

இப்படி சொல்லி சொல்லியே சோனியா எல்லாரையும் மெரட்டி கூப்பிட்டு காரியத்தை சாதிக்குது பா .நானும் சோனியா ஒப்பன் பண்ண இழையில் முழுவதும் பார்த்துட்டேன். இப்படி ஒரு மிரட்டல் இல்லாம இருக்காது!
அதுனால தான் என்ன ஆனாலும்,அடுப்புல சட்டில எது கருகுனாலும் பரவாயில்லைன்னு வந்து பதில் போடுறேன். இல்லைனா “அரட்டைனா மட்டும் ஒடனே போறீங்க. இங்கே ஒரு சின்ன பொண்ணு கத்திட்டு இருக்கேன். யாரும் வர மாட்டிங்கிறாங்க” அப்படின்னு அழுக ஆரம்பிச்சுருவாங்க:)

//கனவன் மனைவி பற்றி பேசியாச்சி, ஊர் பற்றி பேசியாச்சி, சரி தோழன் தோழீ பற்றி பேசுவோமே//
தோழிகள் பற்றியும் பேசியாச்சே:)

சுந்தரி ஒரு த்ரெட் ஓபன் பண்ணிர்ந்தாங்க. அதுல என் தோழி பற்றி பேசிட்டேன். என் கருத்தை அங்கே படிச்சுக்கோங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மாமி, என்னை மறந்துட்டீங்கல்ல, நான் உங்க தோழி கிடையாதுல்ல. நான் இனிமேல் உங்க கூட பேச மாட்டேன் :(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்னையிலயிருந்து இன்னைக்கு வரைக்கும் என்னோட ஆத்மார்த்தமான ஒரே தோழி மீரா என்கிற மீரு. என் பள்ளித் தோழி. நான் சென்னை வந்தபிறகு எனக்கு லெட்டர் எல்லாம் போடுவா. அப்புறம் கொஞ்ச கொஞ்சமா கான்டாக்ட் விட்டு போச்சு. ஆனா மனசளவில உள்ள நெருக்கம் மட்டும் குறையல. இப்பவும் என் பாட்டி வீட்டுக்கு நான் போக ஒரே காரணம் அவள்தான். எங்களுக்குள் போன் காண்டாக்ட் கூட கிடையாது, இருந்தாலும், இப்போதும் நான் அவர்கள் வீட்டுக்கு போனால் அவர்கள் உறவினர்கள் சுற்றி நின்று பாசமுடன் உபசரிப்பார்கள். அடுத்த பிறவியிலும் அவளே என் தோழியாக வரவேண்டும் என்பது என் ஆசை. என் ஒரே வருத்தம். அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை :( அவள் கருப்பு அதனால் வரும் வரன்கள் அத்தனையும் தட்டிக்கழித்துவிடுகின்றனர். அவளை மனைவியாக அடையக்கூடியவர் புண்ணியம் பண்ணவராக இருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அவளிடம் இருந்த முதல் ரேங்கை யாராலும் கொள்ளையடிக்க முடியவில்லை. படிப்பில் படு சுட்டி. அவகூட என்னை எப்படி தோழியா சேர்த்துகிட்டான்றதுதான் இன்னைக்கு வரைக்கும் புரியாத புதிர் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரொம்ப நீளமா பெடுத்துனா நம்ம ’’தலை’’ கழியோட ஆத்துக்கே வந்துடுவார்.

மாமாவும் யாராவது வந்தா நாம்பளும் சேந்துகலாம்னு காத்துண்டுருக்கார்.

அதான்...................ஹிஹிஹி.....................

(பேரை வுட்டதுக்கு இன்னா பில்டபெல்லாம் கொடுக்க வேண்டிருக்கு)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்