தேதி: April 22, 2010
நியூஸ் பேப்பர் ஸ்டிக் - 16
ஆரஞ்சு கலர் ஸ்டிக் - 9
வெள்ளை கலர் - 6 மொத்தம் 16 தேவை
சிறிய அட்டை
க்ளு
கத்திரிக்கோல்
செய்தித்தாளை சுருட்டி குச்சிப் போன்று செய்து கொண்டு, மேற்கூறிய எண்ணிக்கையில் குச்சிகளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். விரும்பினால் செய்தித்தாள் குச்சிகளில் கலர் அடித்துக் கொள்ளவும்.

ஒரு அட்டையில் சிறிய வட்டம் வரைந்து அவற்றை வெட்டி எடுக்கவும். அந்த வட்டத்தின் உள்ளே சிறிய வட்டம் வரைந்து அதனையும் வெட்டி எடுத்து விடவும்.

ஒன்பது ஆரஞ்சுநிற ஸ்டிக்கை வெட்டிய அட்டையில் வட்டமாக வைத்து படத்தில் உள்ளது போல் மடித்து ஒட்டிக் கொள்ளவும்.

பிறகு வெள்ளைநிற ஸ்டிக்களில் சிறிது பசை தடவி ஒன்றுக்குள் ஒன்று விட்டு ஒட்டி விடவும்.

இப்போது ஒட்டி வைத்திருக்கும் ஆரஞ்சு ஸ்டிக்கின் அடியில் ஒரு வெள்ளை ஸ்டிக்கின் நுனிப்பகுதியை வைத்து ஒட்டவும். அடுத்து இரண்டாவது ஆரஞ்சு ஸ்டிக்கின் மேலே வெள்ளை ஸ்டிக்கை கொண்டு வரவும். ஒட்ட தேவையில்லை.

கூடையின் அடிப்பகுதிக்கு 4 அல்லது 5 வரை சுற்றலாம். வேண்டிய அளவுக்கேற்ப இதனை மாற்றி கொள்ளலாம்.

இதுப்போல் ஒவ்வொரு ஆரஞ்சு ஸ்டிக்கிலும் மேலும், கீழும் வரும்படி வேண்டிய அளவுகள் பிண்ணி கொண்டு வரவும்.

கடைசியில் மீதமிருக்கும் ஆரஞ்சு ஸ்டிக்கில் ஒன்றை மட்டும் விட்டு விட்டு, மற்றதை சிறிது அளவு இடைவெளி விட்டு நறுக்கி விடவும். நறுக்கின ஸ்டிக்கை மடித்து ஒட்டவும்.

எஞ்சியிருக்கும் ஒரு ஸ்டிக்கை கைப்பிடி போல் மடித்து மறு முனையில் ஒட்டவும். இப்போது அழகான பேப்பர் பூக்கூடை தயார்.

இந்த பூக்கூடையில் உள்ளே பூக்களை வைத்து அலங்கரிக்கவும். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் குறிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கும் திருமதி. ரேணுகா அவர்கள், இந்த பேப்பர் பூக்கூடை குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார்.

இது போல் விரும்பிய வடிவில் பூக்கூடை செய்து கொள்ளலாம்.

Comments
ரேணு... ரொம்ப சூப்பர். :)
ரேணு... ரொம்ப சூப்பர். :) பேப்பரில் இன்னும் என்னென்ன செய்து காட்ட போறீங்கன்னு பார்த்துட்டு இருக்கேன்....
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி மிக்க நன்றி
வனி மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு. பாருங்க பேப்பர்க்கு எங்கயும் அலைய வேண்டாம் தானே அதான் பேப்பர் கிராப்டா பன்றேன்.:) இந்த கூடை கோகுலுக்கு ரெம்ப பிடிக்கும்.இப்ப அதுல பூ இல்லை அவன் டாய்ஸ் தான் இருக்கு:)
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
பேப்பர் பூக்கூடை
அழகாக செய்து இருக்கீங்க.பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
very nice
ipadi pa ipadiyellam yosikireenga
just fantastic ippave paper ellathayum ready panni vachirukken
expecting more from you
என்றும் அன்புடன்,
கவிதா
ரேணு
அழகாக இருக்கு ரேணு. எனக்கும் பேப்பர் க்ராப்ட் பிடிக்கும். தொடர்ந்து உங்கள் குறிப்புகளை எதிர்பார்க்கிறேன். ;)
- இமா க்றிஸ்
ரேணுகா
சூப்பர்.
ம்ம்ம்ம்.... ஈஸ்ட்டர் முன்னாடி வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்...
இதோ செய்ய உட்கார்ந்துட்டேன்...
ரேணு, நலமா?
ரேணு, நலமா? உங்க வொர்க் சூப்பர்!
ஆசியா அக்கா, இமா, தேன்மொழி, அஸ்மா ,uk5mca
ஆசியா அக்கா நலமா? இங்கு எப்ப வறீங்க?உங்கள் கருத்து மிக்க நன்றி.
ஹாய் uk5mca(உங்க பேரு கொஞ்சம் சொல்லுங்க) எப்படி இருக்கீங்க?உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.செய்ததும் போட்டோ அனுப்பி வைங்க.
இமா நலமா? என்ன இமா இப்பெல்லாம் உங்க கிராப்ட்டை கானாம்?கொஞ்சம் அனுப்புங்க.ரெம்ப நன்றி இமா உங்க கருத்துக்கு,நானும் அடிக்கடி அனுப்ப பார்க்கிறென்.
தேன்மொழி நான் இப்ப செய்தேன்.ஈஸ்டர் பற்றி தெரியலப்பா,தெரிந்திருந்தா முன்னாடி அனுப்பி இருப்பேன் உங்கள் கருத்துக்கு நன்றி.செய்ததும் படம் அனுப்பி வைங்க.
அஸ்மா நான் நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க?உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி அஸ்மா.
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
பூக்கூடை
ஹாய் ரேணுகா, உங்க கிராப்ட் ஒர்க் எல்லாமே சூப்பர். பேப்பர் வைச்சு பறவைக்கூண்டு, ரோஸ், பூக்கூடைனு விதவிதமா செஞ்சி காண்பிச்சிருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு. ரேணுகா இதுல வெள்ளை கலரனு சொல்லியிருக்கறது ஃபேப்பரிக் பெயிண்டா?
ஹாய் வினோஜா - பூக்கூடை
ஹாய் வினோஜா எப்படி இருக்கீங்க?
உங்க பாராட்டுக்கு ரெம்ப நன்றிப்பா. ஆமாம் பேப்பரிக் பெயிண்ட் தான்,கலர் அடிச்சு நல்லா காயவைத்து யூஸ் பண்ணினேன்.
கூடை செய்து முடித்து விட்டும் ஒரே கலர் புல்லா அடிக்கலாம்.ஆனால் அதில் 2 கலர் யூஸ் பண்ண கஷ்டம்.
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
கலக்கலே ரேணு....,
ஹாய் ரேணு, எப்படி இருக்கீங்க..?
வீட்டில் அண்ணன்,கோகுல் நலம் தானே...?
சூப்பரா செய்து இருக்கீங்க ரேணு.பார்த்த உடன் யாரும் பேப்பரில் செய்தது என்று சொல்ல மாட்டார்கள்.கலக்கிட்டீங்க போங்க.
என் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் பல பல ரேணு....
ம்ம்ம் சரி...சரி...அடுத்த உங்கள் குறிப்பை ஆவலோடு எதிற்பார்க்கின்றேன்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
Super akka
ஸூபர் அக்கா ... Good work keep it up!!!
~Harini Gayathri Rengaraj...
அப்சரா வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் ரெம்ப நன்றி
அப்சரா இங்கு அனைவரும் நலம்.அங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க அண்ணனை கேட்டதா சொல்லுங்க.
உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் ரெம்ப நன்றி அப்சரா.அடுத்ததும் ரெடி பன்னிட்டென்.நாளைக்கு தான் அட்மினுக்கு அனுப்பனும்.
அப்சரா நீங்க எதிர்பார்த்த கிராப்ட் எப்படியும் அடுத்த
வாரம் செய்து அனுப்பிடுவேன் என்று நினைக்கிறேன்.பார்க்கலாம்
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
ஹாய் ஹரினி
ஹாய் ஹரினி எப்படி இருக்கீங்க?உங்கள் வாழ்த்துக்கு ரெம்ப நன்றிப்பா
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
renukaa akkaa ungKaL handwork
renukaa akkaa ungKaL handwork naaRaaKa uLLathu.VAzthuthuKaL.jasmine
Jasmine - thankyou
Thankyou so much Jasmine.
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
ரேணு ரொம்ப நல்லா இருக்கு,
ரேணு ரொம்ப நல்லா இருக்கு, நான் என் பொண்ணு தூங்கும்போது செய்துபார்க்கலாம் என்று இருக்கிரேன்.ஒரே ஒரு doubt orange stickக்கு orange colour paperல் செய்ய வேண்டுமா or orange colour paint அடித்து கொள்ளலாமா?
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL
ஹாய் சொஹரா
ஹாய் சொஹரா எப்படி இருக்கீங்க? பொண்ணு எப்படி இருக்கா?
ரெம்ப நன்றிப்பா.செய்து பாருங்க நல்லா வரும்.ஆரஞ்சு கலர் பெயிண்ட் பன்னினது தான் அது.கலர்பேப்பரில் பன்னினால் கலர் அடிக்கிற வேலை மிச்சம்.
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
kavitha
என் பெயர் கவிதா
மேடம் இமேஜ் அட்டாச் செய்ய முடியவில்லை
என்ன செய்வது?
என்னை உங்கள் தோழியாக ஏற்று கொள்வீர்களா?
என்றும் அன்புடன்,
கவிதா
unga koodai nalla irundichi.
unga koodai nalla irundichi. nanum aeiyuthu parthen. arumayaga vanthathu. anal perusaga siyuthu vitten. nandri ma..
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta