இப்போ புதுமையா பழமையை பத்தி பேசலாமே...
நிறைய பழமொழிகள் பத்தி கேள்விபட்டு இருப்போம். அதோடு உன்மையான அர்த்தம் தெரியாமலே பயன்படுத்துவோம்ல... உன்மையான அர்த்தம் என்னென்னனு தெரிஞ்சவங்க சொல்லாமே. நானே ஆரம்பிக்கறேன்
* அடிதடி உதவுரமாரி அண்ணந்தம்பி உதவ மாட்டாங்க...
வழக்கத்துலே நாம அண்ணா தம்பியை தான் நினைக்றோம்.ஆனா உன்மையில்... இறைவனுடைய "திருவடி" உதவுவதை போல வேறொன்றும் உதவாது என்பது தான் பொருள்.
ம்ம்ம்ம் ஆர்ம்பிங்க.....
Dear vanitha... start... panunga ;-)
வனிதா... நீங்க start பன்னுனாதான் நல்லா இருக்கும்... ஆரம்பிங்க ;-)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ஊசி காதுல ஒட்டகம் நுழையிர
ஊசி காதுல ஒட்டகம் நுழையிர மாதிரினு சொல்லுவாங்க உண்மையவே ஊசின்னா ஒரு கதவு ரொம்ப சின்னது.அந்த கதவ 6 மணிக்கு close பண்ணிடுவாங்கலாம்.அதனால ஓட்டகத்துக்கு கஷ்டமாம் அந்த கதவுகுல்லாக நுழைய
புதுமை பழமை
"பந்திக்கு முந்து, படைக்கு பிந்து"
இதன் அர்த்தம் பந்திக்கு முன் தீ, படைக்கு பின் தீ என்பது தான். ஆனால் நம்ம மக்கள் பழமொழி ல கூட நம்பல சாப்பாட்டுராமன் ஆக மாற்றி விட்டார்கள்.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
பழமொழி- ஆன் மூலம் அரசாளும்
பழமொழி- ஆன் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம பொருள்-ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மலம்[பவித்திரமான]
all is well
Hi paathima
ஹாய் பாத்திமா.. பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ க்கு இது தான் அர்த்தமா ? .. நான் வேற மாரி கேள்விபட்டு இருக்கேன்.
இது வலது கையை குறிப்பதாகவும் .. படைக்கு தேவைப்படும் வில்லில் அம்பு எய்த ஏதுவாக வலது கையை பின்புறமும், பந்திக்கு வலது கையை சாப்பிட முன்புறமும் பயன்படுத்துவதைத் தான் கூறுவதாக நான் படித்துள்ளேன். எப்டியோ ஒரே பழமொழிக்கு ரெண்டு அர்த்தம் கண்டுபிடிச்சாச்சு போங்க. ;-)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
றம்யா நல்ல தலைப்பு
பாத்திமா,றம்யா, பந்திக்கு முந்து................என்பதற்கு உங்கள் இருவர் அர்த்தமும் புதுவிதமாக உள்ளது.அட அதுவும் நல்லாய் தான் இருக்கின்றது.
நான் இவ்வளவு நாளும் எண்ணிக்கொண்டிருப்பது பந்திக்கு முந்து (சாப்பாட்டிற்கு முந்து)படைக்கு பிந்து (அடிதடிக்கு போகாமல் நலபில்லையாட்டம் இரு) என்பதாகும்.
றம்யா நல்ல தலைப்பு ஆரம்பித்துள்ளீர்கள்.புதுப்புது விடயங்கள் வெளிவரும்போல் உள்ளது.கலக்குங்க.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
தை பிறந்தால் வழி பிறக்கும்
தை பிறந்தால் வழி பிறக்கும், நெல் அருவடை செய்த பின்பு வழி இறுகும் நடப்பதற்கு
இப்போது அடுத்த பழமொழி
நன்றி சத்யா , யோகராணி ( hi...yaa என் பெயரின் உச்சரிப்பு நன்றாக உள்ளதே ;-))
சரி.. இப்போது அடுத்த பழமொழி. 6 லும் சாவு 100 லும் சாவு என்பது ஒரு கதை. கருணனிடம் கடவுள் கிருஷ்ணன், நல்லவர்களாகிய பாண்டவர்களுடன் இணைந்து கொள் என்று கூறியதற்கு, கருணனோ பாண்டவர் ஐவருடன் ஆறாவதாக சேர்ந்தாலும் எனக்கு சாவு உண்டு.. கவுரவர்களுடன் ( கவுரவர்கள் மொத்தம் 100 பேர்) சேர்ந்தாலும் எனக்கு சாவு உண்டு. எனவே செஞ்சோற்று கடனை தீர்க்க நண்பன் துரியோதனன் உடனே இணைகிறேன் என்று கூறிய போது விட்ட டயலாக் தான் இது ;-).. அப்றம் இது ஒர்க் அவுட் ஆகலனு நம்ம லார்டு ப்ளான் பண்ணி (like vadivel ;)) குண்டலம், கவசம் வாங்கியது தனி கதை.
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரம்யா
ரம்யா... நல்ல ஒரு தலைப்பு!! வாழ்த்துக்கள். என்னை அன்போடு அழைத்தமைக்கு மிக்க நன்றி :). பதிவுகள் முழுக்க படிச்சேன், முக்கியமா அடி ஒதவுர மாதிரி, படைக்கு பிந்து, இந்த இரண்டுக்கும் குடுத்த விளக்கம் சூப்பர். எனக்கு இதெல்லாம் தெரிஞ்சுக்க ரொம்ப பிடிக்கும், ஆனா எனக்கு அர்த்தம் தெரியாது :(. அதனால் உங்களுக்காக நான் யாரிடமாவது கேட்டு தெரிஞ்சதை நிச்சயம் பதிவு செய்யறேன். கண்டிப்பா தவறாம பதிவுகளை படிக்கறேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி வனி
நன்றி வனி... ;-) தவறாமல் படிங்க.. நல்ல தலைப்பு கொடுக்க முயற்சி பண்றேன்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)