வித்தியாசமான பெயரில் உணவு விடுதிகள்

சென்னை விருகம்பாக்கத்தில் தங்கியிருந்த காலங்களில் நாங்கள் இரவு சாப்பிடுவது 'இரண்டு இட்லி ஒரு வடை'. சாப்பிடும் ஹோட்டல் 'இரண்டு இட்லி ஒரு வடை'. :-) ஆமாம், அந்த கடையின் பெயரே 'இரண்டு இட்லி ஒரு வடை' தான். டிபன் அயிட்டங்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.

வெளியூர் செல்லும் சமயங்களில் எல்லாம் இதுபோல் வித்தியாசமான ஹோட்டல்கள் கண்ணில் படுவதுண்டு. அவற்றை பற்றியெல்லாம் அறுசுவையில் கட்டுரை வெளியிட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. முன்பு ஒரு சில ஹோட்டல்களுக்கு சென்று பேட்டி எடுத்திருக்கின்றேன். பிறகு அதை கட்டுரை வடிவாக்கம் செய்து வெளியிட இயலாமல் போய்விட்டது. மீண்டும் இப்போது அந்த பணியினைத் தொடரலாம் என்று முடிவெடுத்திருக்கின்றேன்.

சமீபத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை என்று ஒரு சுற்று சுற்ற வேண்டியிருந்தது. அப்போது கண்ணில் பட்ட சில கடைகளின் பெயர்கள்.

ஹோட்டல் கெடா விருந்து - ஈரோடு
மரப்பாலம் முதலியார் ஹோட்டல் - ஈரோடு
கொக்கரக்கோ - திருப்பூர் (இது எனக்கு மிகவும் பரிச்சயமான கடை. திருப்பூரில் இருந்த காலங்களில் அடிக்கடி இங்கே செல்வோம்.)
நாலுக்கட்டு - கோவை(முன்பு காயத்ரி பவனாக இருந்தது.)

இதுபோல் நீங்கள் அறிந்த, உங்கள் பகுதிகளில் உள்ள வித்தியாசமான பெயர்கள் கொண்ட ஹோட்டல்கள் பற்றி இங்கே தகவல் கொடுக்கலாம். அவர்களை எல்லாம் பேட்டி கண்டு அறுசுவையில் வெளியிடுகின்றோம். வித்தியாசமான பெயர்கள் என்று மட்டுமில்லாமல், உங்கள் பகுதியில் பிரபலமான ஹோட்டல்கள் பற்றியும் தெரிவிக்கலாம். சில ஹோட்டல்கள் சிறியதாக இருந்தாலும், ஒரு சில உணவுகளுக்கு அந்த ஏரியாவில் மிகவும் பெயர் பெற்றதாக இருக்கும். அதனை இங்கே தெரிவித்தால், அறுசுவை நேயர்கள் அங்கே எப்போதாவது வருகை தந்தால், அந்த ஹோட்டலில் அதை சாப்பிட முயற்சி செய்வார்கள்.

விரைவில் தமிழ்நாடு முழுவதும் அறுசுவை குழு பயணம் செய்யவிருக்கின்றது. அப்போது உங்கள் பகுதி வரும்போது, அது போன்ற உணவு விடுதிகளை கண்டு, பேட்டியெடுத்து இங்கே வெளியிடுகின்றோம்.

அன்பு அட்மின் அவர்களுக்கு,

மதுரையில் மோகன் போஜனாலயா என்ற குஜராத்தி உணவு விடுதி தெற்காவணி மூல வீதியில் இருந்தது. சிறிய ஹோட்டல், உணவு வகைகள் ரொம்ப நன்றாக இருக்கும். இப்போது விலாசம் மாறியிருக்கிறதா என்று தெரியவில்லை. விசாரித்து விட்டு, அப்டேட் செய்கிறேன்.

மதுரை பைபாஸ் சாலையில் கௌரி கிருஷ்ணா ஹோட்டல் - ஓ.கே.

மதுரையில் அம்மா மெஸ், சந்திரன் மெஸ், கோனார் மெஸ் என்று நிறைய ஹோட்டல்கள் - அசைவ உணவுக்காரர்களின் ஃபேவரைட்.

சைவ உணவுக்கு ஸ்ரீராம் மெஸ். சரியான விலாசம் கேட்டு சொல்கிறேன்.(எழுதுகிறேன்).

மதுரை முருகன் இட்லிக் கடையும் ரொம்ப நல்ல ருசியான உணவு கிடைக்கும் இடம். சென்னையிலும் பல இடங்களில் முருகன் இட்லிக் கடை இருக்கிறது. எப்போதுமே நல்ல கூட்டம்.

மதுரை, மேலக் கோபுர வாசல் பகுதியில் டெல்லி வாலா உணவகத்தில் சப்பாத்தி, பூரி வகைகள், இனிப்பு கார வகைகள் நன்றாக இருக்கும்.

இங்கே சென்னையில், வட பழனி முருகன் கோவில் அருகில் - மித்தாய் மந்திர் ஹோட்டல் நன்றாக இருக்கிறது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

காளியாக்குடி ஹோட்டல் @ மயிலாடுதுறை, இங்கு வத்தல் குழம்பு பேமஸ். அப்புறம் கும்பகோணத்தில் அர்ச்சனா ஹோட்டலில் தயிர் வடை சாப்பிட நன்றாக இருக்கும்.

நீங்க சொன்ன ஹோட்டல் பெயர்களில், எனக்கு திருப்பூர் ஹோட்டல் பெயர் ரெம்ப பிடிச்சிருக்கு.
நான் மதுரை, அங்குள்ள பனைமரத்து பிரியானி கடை,இங்கு பிரியானி மிக அருமையாக இருக்கும், மதுரையில், நிறைய கடைகள், பெயர் இல்லாமல் இருக்கிறது, ஆனால், taste இருக்கும்

அட்மின் நீங்க கோவை தலைப்பாகட்டு நாயுடு பிரியாணி கடையை ஏன் விட்டுட்டீங்க?

அட்மின் அண்ணா
அதானே எங்க ஊரு கோயம்பத்தூரு தலப்பா கட்டு பிரியாணிய நீங்க எப்படி மறந்தீக. எங்க faverite டே அது தான்.
அப்பறம் அண்ணா நாங்க அப்பப்ப கேரளா போவோம். அப்ப ஒரு ஹோட்டல் பேர் ரொம்ப புதுசா இருந்துச்சு. என்ன பேருன்னா ஹோட்டல் ஹைவே போலீஸ். எப்டிருக்கு நல்லாருக்கா. ஆனா அந்த ஹோட்டல் எந்த எடத்துல இருக்குன்னு சரியாய் தெரியல. நான் மறுபடியும் போகும் பொது மறக்காம பாத்து சொல்லறன்.
இப்ப நாங்க இருக்கறது உடுமலைபேட்டை-ல அங்க காந்திராம்ஸ்-நு ஒரு ஹோட்டல் அங்க தயூர் வடை, சாம்பார் வடை சூப்பர்-ரா இருக்கும். செந்தில் ஹோட்டல்-ல மஷ்ரூம் fry, மஸ்ரூம் க்ரேவி, முட்டை பரோட்டா சூப்பர் ரா இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
நட்புடன்,
லதாவிநீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

தலைப்பாக்கட்டை மறக்கவில்லை. :-) தலைப்பாக்கட்டு பிரியாணி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. திண்டுக்கல் தலைப்பாக்கட்டுதான் மிகவும் ஃபேமஸ். சமீபத்தில், அதாவது கடந்த இரண்டு வருடங்களில், சென்னையில் திரும்பிய இடங்களில் எல்லாம் தலைப்பாக்கட்டு பிரியாணி என்று பெரிய பெரிய மஞ்சள் வண்ண டிஜிட்டல் பேனர் வைத்து, கடை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கும் திண்டுக்கல் தலைப்பாக்கட்டு பிரியாணி கடைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவர்களின் ப்ராஞ்ச் எனக்கு தெரிந்த அளவில் கோவையில் மட்டுமே உள்ளது. இப்போது சட்ட நடவடிக்கைக்கு சென்றிருப்பார்களோ என்னவோ, திடீரென சென்னையில் உள்ள தலைப்பாக்கட்டு கடைகளின் பெயர்கள் எல்லாம் கொஞ்சம் மாற்றப்பட்டு இருப்பதை சமீபத்தில் கவனித்தேன்.

நான் முன்பு பேட்டி எடுத்ததாக சொன்ன கடைகளில் தலைப்பா கட்டு பிரியாணி கடையும் ஒன்று. கோவையில் எடுக்கவில்லை. திண்டுக்கல்லில் எடுத்தேன். கோவை க்ராஸ் கட் ரோடில் இருக்கும் தலைப்பாக்கட்டு கடையில் திண்டுக்கல்லில் இருப்பது போல் இல்லை என்று சண்டை போட்டு வந்திருக்கின்றேன். :-) இப்போது அந்த இடத்தில் அந்த கடை இருக்கின்றதா என்று தெரியவில்லை. இப்போது க்ராஸ் கட் ரோடு பக்கம் சென்றால் தவறாமல் விசிட் செய்வது வேணு பிரியாணிக்குதான்.

வேணு பிரியாணிக்கு சற்று முன்பு, ஒரு தெருவின் முனையில் காளான் ஃப்ரை, காலிப்ளவர் ஃப்ரை, சாட் ஐயிட்டம்ஸ் எல்லாம் கிடைக்கும். கடையின் பெயர் மறந்துவிட்டது. அதுவும் என்னுடைய ஃபேவரைட் இடம். 100 ஃபீட் ரோட்டில் தம்பி அண்ணன் ஹோட்டலும் பிரபலம் என்று சொல்வார்கள். இதுவரை போனதில்லை.

மதுரை அம்மா மெஸ், கோனார் மெஸ்ஸில் சாப்பிட்டு இருக்கின்றேன். கோனார் மெஸ் கறி தோசை வித்தியாசமாக இருந்தது. நண்பர்கள் ஆஹா ஓஹோ என்று அறிமுகம் செய்தார்கள். அதனாலோ என்னவோ அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றமாயிற்று. விலையும் அதிகம்.:-(

ஈரோட்டில் மாமன் பிரியாணி, வாட்ச்மேன் ஹோட்டல்ஸ் பற்றியெல்லாம் முன்பு கேள்வி பட்டிருக்கின்றேன். இப்போது அவை இருக்கின்றதா என்பது தெரியவில்லை.

உடுமலைப்பேட்டை காந்திராம்ஸ்ல சாப்பிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். அங்க நிறைய ஹோட்டல்ஸ்ல சாப்பிட்டு இருக்கேன். அதெல்லாம் அறுசுவை ஆரம்பிக்கிறதுக்கு முன்ன. அப்பெல்லாம் பேர் நோட் பண்ணினது இல்லை. உடுமலைப்பேட்டை எண்டர் ஆகிறப்ப அனைமலை ஹோட்டல்ஸ்ல (ஆனைமலையோ?!) ரெண்டு மூணு டைம் சாப்பிட்டிருக்கேன். அங்க Finger chicken (சிக்கன் 555 ன்னு சொல்றாங்க!) ரொம்ப நல்லா இருக்கும்.

ஹாய் அட்மின் ரொம்ப நல்ல தலைப்பு, நானே இந்த thread open செய்யலாம் என்று இருந்தேன்,பரவாயில்லை, நான் எனக்கு தெரிந்த, ருசித்த சில உணவு விடுதிகள் பற்றி கூருகிறேன்.
என்னுடைய சொந்த ஊர் திருச்சி,திருச்சியில் இனிப்புடன் ஆரம்பிப்போம் B.Gநாயுடு,அர்ச்சனா sweets ,கிருஷ்ணா sweets .ஐஸ்கிரீம் என்றால் மைக்கல்ஸ் ஐஸ்கிரீம் ரொம்ப சீப் 10 ரூபாயில் 4 அல்லது 5 ஐஸ்கிரீம் சாப்பிடலாம் சுவையும் நல்லா இருக்கும்.பிரியாணி என்றால் இம்பாலா ஹோட்டல்,புகாரி,கிராண்ட் ஹோட்டல்,கொளத்தூர் பிரியாணி கடை..... நோன்பு காலங்களில் அரிஸ்டோ ஹோட்டலில் கிடைக்கும் கைமா சமோசா,இன்னும் கோவை,துபாய் ஹோட்டல் பற்றி அடுத்து கூறுகிரேன் இப்போ என் பொண்ணு தூக்கத்தில் எழுந்து விட்டாள்

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ம்ம்... சாப்பாட்டு மேடர்... அதுவும் வெளிய போய் சாப்பிடும் மேட்டர்!!! வனி வராம இருப்பாளா??? வந்துட்டேன் அண்ணா. எங்க ஏரியா .. (உங்களுக்கு தெரிஞ்ச ஏரியா தான்!!) நளாஸ் ஆப்பகடை ரொம்ப நல்லா இருக்கும். வித விதமான ஆப்பம் கிடைக்கும்ல. ;) எனக்கு ரொம்ப இஷ்டம்.

பக்கத்துல தீம் ரெஸ்டாரன்ட்ஸ் சிலது... "The ROCK"(Velachery), "The Rain Forest"(Adyar), இதெல்லாம் சைனீஸ் தான். ஆனால் அந்த இட அமைப்பு ரொம்ப சூப்பரா இருக்கும்... முக்கியமா குழந்தைகளோட போக நல்லா இருக்கும். :)

பக்கத்துல இனிப்பு கடை... "The Grand Sweets (Adyar)". இங்க சந்திர கலா, சூர்ய கலா'னு நினைக்கிறேன் அந்த பேரும் சுப்பர், டேஸ்ட்டும் சூப்பர்.

அதே மாதிரி "அஞ்சப்பர்"(Velachery)... இங்க பிரியாணி தான் எனக்கு பிடிச்சது. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Velachery Hot Chips'ல மாலை நேரத்தில் பாதாம் பால் ஸ்பெஷலாம்... பலர் சொல்லி கேட்டிருக்கேன், ஆனா இது வரை குடித்து பார்க்கல. அது பக்கத்துல ரொம்ப பெருசாலாம் இருக்காது ஆனா சின்ன ஒரு பரோட்டா கடை உண்டு(பெயர் கவனிக்கல) . அங்க வந்து பலரும் பார்சல் வாங்குவாங்க, அவ்வளவு சூப்பரா இருக்குமாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்