உதவி Please...

என் மகளுக்கு 5 மாதம் முடிந்து 6 நடகிறது.இபோது பால் மட்டும் தான் கொடுக்கிறேன்.காய்கள் வேக வெத்து அந்த தண்ணிர் குடுக்கலாமா? என்ன உணவுகள் குடுக்கலாம்? உங்களது அனுபவங்களை பகிந்து கொள்ளவும் என் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஆறு மாதம் வரை தாய் பால் மட்டும் போதும். அதற்கு பின் சத்து மாவு கொடுக்கலாம். மேலும் தெரிந்து கொள்ள இந்த லின்க்கை பார்கவும். http://arusuvai.com/tamil/node/14968
இதில் திருமதி தளிகா அவர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி விளக்கமாக சொல்லிருக்கிறார்.

ஹாய் ஷர்மிலாமாஜ் ,குழந்தைக்கு 6 மாதத்தில் இருந்து கொடுக்கும் உணவு
1 . ப்ரூட் ஜூஸ் (ஆப்பிள் ,ஆரஞ்சு,சத்துகொடி ) கொஞ்சம் சூடு காட்டி கொடுக்கவும்.
2 . காய்கறி சூப் (கேரட் ,பீன்ஸ் , உருளைக்கிழங்கு ,பச்சை பட்டாணி ,காளிபிலேவர் ,பிட்ரூட்) கொடுக்கலாம்.
3 . முட்டை வேகவைத்து தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.
4 . முழு ஆப்பிள்லை வேகவைத்து தோலை நீக்கி அப்படியே ஊட்டிவிடவும் .
5 . காய்கறி கலவை (கேரட் ,பீன்ஸ் , உருளைக்கிழங்கு ,பச்சை பட்டாணி ,காளிபிலேவர் ,பிட்ரூட்) வேகவைத்து மிக்சியில் அடித்து ஊட்டிவிடவும் .
6 . கடையில் கிடைக்கும் பார்லி பிஸ்கட் வாங்கி பால் கலந்து கொடுக்கலாம்.

நடு நடுவே தாய்பால் .நல்ல ஆரோக்கியம்

நானும் சொல்லனும்னு நினைத்தேன்.
நீங்க தைரியமா தளிகா மேடத்தோட குழந்தை வளர்ப்பு-ல இருக்கிற மாதிரி ஃபாலோ பண்ணலாம்.

Don't Worry Be Happy.

இந்த அருமையான லிங்கை கொடுத்த தங்களுக்கு எனது மனமார்ந்த
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

sharmila

அருசுவை தோழிக்கு வணக்கம்,எனது கேள்விக்கு பதில்தந்தற்கு தங்களுக்கு எனது மனமார்ந்த
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

sharmila

மேலும் சில பதிவுகள்