உடையை தேர்வு செய்யும் விதம்.

உடையை தேர்வு செய்வது என்று பார்த்தோமானால் நம்நாட்டின் பாரம்பரிய உடையானாலும் சரி வெளிநாட்டவரின் உடையானாலும் சரி அவற்றை தேர்வு செய்து உடுக்கும் விதத்தில் தான் அதன் அழகும் நம் அழகும் வெளிப்படும். உடையை தேர்வு செய்யும் பொழுது இந்த உடை நம் உடல் அமைப்பிற்க்கு ஏற்றதா, நம் நிறத்திற்க்கு ஏற்றதா, என்று நன்கு பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.
இப்பொழுதும் நான் சில பெண்களை பார்க்கின்றேன், பெரும்பாலும் இந்திய பெண்கள் தங்கள் உடையின் சரியான அளவை தேர்வு செய்வதில்லை.அது ஏன் என்று தெரியவில்லை இவ்வாறு எனோ தானோ என்று உடுத்துவதால் எவ்வளவு அழகான தோற்றத்தை இழக்கின்றோம் என்று அவர்கள் உணருவதில்லை.
உடை வாங்க்ப் போகும் பொழுது இரவு நேரத்தில் சென்று வாங்குவதை பெரும் பாலும் தவிர்த்து விடுவது நல்லது.
அதேப் போல் நல்ல மனநிலையில் இருக்கும் பொழுது தான் உடைவாங்கப் போக வேண்டும். அப்பொழுது தான் பணம் விரையமில்லாமல் நல்ல தரமாக தேர்வு சேய்து வாங்க முடியும். இல்லை யென்றால் ஏதோ வந்தோம் பார்த்தோம் வாங்கினோம் என்று இருக்கும்.
என்னை பொருத்தவரையில் நான் இந்த விஷேச தள்ளுபடியில் கிடைக்கும் உடைகளை வாங்குவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். அவற்றால் எவ்வளவு பணம் நட்டம் என்று வாங்கிய பிறகு தான் தெரியும். உடைகளைத் தவிர்த்து மற்ற படி எல்லாப் வீட்டு உபயோகப் பொருட்களையும் இந்த மாதிரி விலை தள்ளுபடி சமயத்தில் வாங்கினால் அதிக லாபம் அடையலாம்.
உடை வாங்கும் பொழுது முதலில் விலையைப் பார்த்து விட்டு தான் உடையை தேர்வு செய்ய வேண்டும்.காரணம் அப்பொழுது தான் குழப்பம் ஏற்ப்படாமல் எளிதில் தேர்வு செய்துவிடலாம்.அதிக விலையில் தான் நல்ல தரமான உடைகிடைக்கும் என்பதை நான் ஒருபொழுதும் ஒத்துக் கொள்ள மாட்டேன்.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். நம்முடைய உடையும் அதை உடுத்தியிருக்கும் பாங்கும் தான் நம் தரத்தை காட்டவேண்டுமே தவிர துணியின் விலையால் நம் தரத்தை காட்டவேண்டிய அவசியமில்லை. அதனால் எந்த பயனும் ஏற்படாது.
விலை மலிவான ஒரு காஞ்ஜி காட்டன் புடவை தரும் கம்பீரம் பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையால் பெற முடியாது என்பது என் கருத்து.இவ்வாறு உடையை தேர்வு செய்து வாங்குவது கூட ஒரு அழகுதான் என்று அவற்றை எவ்வாறு வாங்குவது என்ற எனது ஒருசில அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைததற்க்கு நன்றி கூறி முடிக்கின்றேன். நன்றி.

உங்கள் கருத்து மிகவும் சரி.
ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் நிறைய முறை தள்ளுபடி சமயத்தில் வாங்கிய உடைகள் அனைத்தும் ஒன்றிரண்டு முறையே உபயோகித்துள்ளேன். அதன் பிறகு அவற்றை உபயோகிக்க பிடிக்காது. ஏனென்றால் அவை விலை மலிவு என்று மட்டுமே, ஏதோ ஒன்று என்று வாங்கியவையாக இருக்குமே ஒழிய, full satisfication இல்லாமல் வாங்கியவையாக இருக்கும். ஆனாலும் அந்த தவறை இப்போதும் செய்கிறேன். என் கணவர் எப்பொழுதும் வாங்கும் முன் இதை சொல்வார். ஆனாலும் அப்பொழுது கேட்காமல் பிறகு அவரிடம் சொல்வேன், "நீங்க சொன்னது சரி தான்" என்று.

உங்க கருத்தை படித்தவுடன் இது நினைவுக்கு வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள் தோன்றியது.

நன்றி.

நன்றி...

மேலும் சில பதிவுகள்