குழந்தைகளின் நல்வளர்ச்சிக்கு கூட்டுகுடும்பம் சிறந்ததா ? இல்லை தனிக்குடும்பம் சிறந்ததா ?

அன்பு நண்பர்களே ! நிலையான உலக அமைதி வேண்டும் என்றால் அதை நாம் நம் குழந்தையிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் . அந்த வரிசையில் குழந்தை வளரும் விதம் மிக முக்கியம் .அதற்க்கு ஏற்ற சூழ்நிலை கூட்டுகுடும்பதில் தான் உள்ளது என்று நான் நினைக்கிறேன் .உங்களின் அன்பான கருத்துகளை தெரிவிக்கவும் .

கூட்டுக்குடும்பம்னு நீங்க சொல்வது எதனை? மாமனார், மாமியார் கணவரின் அண்ணன், தம்பிகள், அவங்க மனைவிகள், குழந்தைகள் இவர்களுடன் நாமும் சேர்ந்து சந்தோஷமாய் வாழ்வது என்பதா?

என்னைப்பொறுத்தவரை, யாரோட பெற்றோராக இருந்தாலும் சரி அவர்களை நம்முடன் வைத்து பார்த்துக்கனும்.
பெற்றோர்களுக்கோ உடன்பிறந்தவர்களுக்கோ ஏதாவது தேவையென்றால் உதவி செய்யனும்.
ஆனா, கூட்டுக்குடும்பமாய் சந்தோஷமாய் இருக்கனும்னா வீடு மட்டுமல்ல மனமும் தாராளமாய் இருக்கனும் எல்லார்க்கும்.
ஒருத்தருக்கொருத்தர் விட்டுகொடுத்து வாழறதுன்றது இந்த காலத்தில் எல்லாம் ஒத்துவருவதில்லை.
கூட்டுக்குடும்பத்தில் இருந்து ஒருத்தருக்கொருத்தர் மனக்கசப்போடு வாழ்வதற்கு தனிக்குடித்தனமாய் இருந்தும் ஒற்றுமையாய் இருக்கலாம்.
எனக்கு தெரிந்து சில குடும்பங்களில் பிஸினஸ் காரணமாக ஒன்றாக இருக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கக்கூடிய சிலர்,
இரண்டு மருமகள்களுக்குள் பேச்சு வார்த்தையே இல்லை.
அப்படியே சிலர் நன்றாக பழகினாலும் உதட்டளவில்தான் உள்ளது உறவு.
இதுவிஷயமாய் என்னால் சரியான விளக்கத்தினை கொடுக்கமுடியலை.
ஆனா, கூட்டுக்குடும்பத்தில் பெற்றோர்கள் எல்லா மகன்களையும், மருமகள்களையும், பேரக்குழந்தைகளையும் சரிசமமாய் நடத்தினால் கூட்டுக்குடும்பம் இனிய குடும்பம்தான்.
ஆனாலும், என்னதான் அவங்க சரிசமமாய் நடத்தினாலும் அதிலும் குற்றம் குறைகள் பார்த்து மனநிம்மதியை இழப்பவர்கள் அதிகம்.
எல்லாவற்றையும் மீறி வெற்றிகரமான கூட்டுக்குடும்பங்களும் உண்டு.
அப்படிப்பட்ட குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் கொடுத்துவைத்தவர்கள்தான்.
கூட்டுக்குடும்பத்தின் குறைகள், குழந்தையின் தாய்களின் மனநிலையை பாதித்தால் அது கண்டிப்பாக குழந்தைகளின் நலனையும் பாதிக்கும்.
அந்த வகையில் பார்த்தால் தனிக்குடித்தனத்திற்கே எனது ஓட்டு!

Ena karuthu Kuttu kudumbathirkae..........
Kuttu kudumbathilaethan kulathaigaluku thevaiyana narpanbugal valaginrana.......porumai,vittukodukum manapanmai pondravai....

மேலும் சில பதிவுகள்