காது குத்து

நான் ஒரு ஸ்ரீ லங்கன்.எனது கணவர் ஒரு இந்தியன்.எங்கள் ஊரில் ஆண் குழந்தைக்கு காது குத்துவது இல்லை.என் கணவர் வீட்டில் காது குத்த வேண்டும் என சொல்கிறார்கள் .எனக்கு இதில் விருப்பம் கிடையாது.கிராமத்தில் தான் காது குத்த வேண்டுமாம்.கிராமத்தில் காது குத்துவது save ah?இன்றும் ஆண் குழந்தைக்கு காது குதுவர்களா சென்னையில்?காது குத்தினாலும் எங்கு குத்துவீர்கள்?சென்னையில் ஓர் கிராமத்திற்கு சென்று kathu kuthuveerkal??அந்த கிராமத்தில் ரெஸ்ட் ரூம் குட இல்லை என்று சொல்கிறார்கள்?So angu kathu kuthuvathu pathukapanatha?Pls help me

athellam onnum prachanaiye illa pa . enga ur kuda kiramam than en 2 pillangalukkum anga poithan kuthittu vanthom .village people romba dalantanavanga than pa valikkama avlavu azaga kuthiduvanga kavalaiye padathinga. kathukuthirathu akkupanjor related irukkunu solluvanga .don t worry ithu oru prachinaiye illa.

all is well

அன்பு சுகன்யா,

//என் கணவர் வீட்டில் காது குத்த வேண்டும் என சொல்கிறார்கள் .எனக்கு இதில் விருப்பம் கிடையாது.// என்பதோடு மட்டும் கேள்வியைக் கேட்டு இருக்கலாம். ;)

எனது மாமாவுக்கும் (மட்டுநகர் - இலங்கை) காது குத்தித்தான் இருந்தார்கள். அது அந்தக் காலம். அப்போ எல்லா இடமுமே கிராமம்தானே! பிரச்சினையாகியதாகத் தெரியவில்லை. இப்போதும் கிராமத்தில் உள்ள பெண்கள் இதற்காக நகருக்கு வருவது இல்லை.

இப்போ உங்கள் முக்கியமான பிரச்சினை அது இல்லை. குத்துவதா இல்லையா என்பதை உங்கள் கணவரோடு கலந்து பேசி முடிவு செய்யுங்கள். காது குத்தாவிட்டால் 'பிரச்சினை' வருமா இல்லையா என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குழந்தை வளரும் போது துளை தானாகவே அடைபட்டுவிடும். பலருக்கு அடையாளம் கூட இராது.

இன்னொரு விஷயம், இப்போ வேண்டாம் என்னும் நீங்களே நாளை உங்கள் பையன் வளர்ந்து 'காது குத்த வேண்டும்,' என்றால் (கேட்காமலே குத்திக் கொண்டு வந்து நின்றாலும் நிற்பார். இப்போ அதுதான் ஃபஷன். ) என்ன செய்வீர்கள்!! வேண்டாம் என்பீர்களா?

‍- இமா க்றிஸ்

இது சம்பந்தமா அறுசுவையில ஏற்கனவே பேசி இருக்கோம்னு நினைக்கிறேன். பெண்கள் எல்லாம் சேர்ந்து ஆண்களுக்கு காது குத்துறது பத்தி பேசுறதால, ஒரு ஆண்தான் அந்த வர்க்கம் சார்பா சரியான கருத்து சொல்ல முடியும்ங்கிறதால, இந்த பதிவு கொடுக்க வந்துட்டேன்.

கருத்து சொல்றதுக்கு முன்னே ஒரே ஒரு நினைவுறுத்தல் - இது 2010.

காது குத்தினா அது அக்குபஞ்சர் மாதிரி, அதுல ஏதோ எபெக்ட்ஸ் இருக்குதுன்னு சொல்வாங்க.. அப்படின்னு நிறைய பேர் கதையெல்லாம் சொல்வாங்க..

இந்த "அப்படின்னு சொல்வாங்க.. " பதில்தான் நாட்டுல நிறைய ஆட்களை கெடுத்துக்கிட்டு இருக்கு. எதைக் கேட்டாலும் ஒரு ஸ்டாண்டர்டு பதில்.. "அப்படின்னு சொல்வாங்க.. அப்படின்னு சொல்வாங்க.. " யார் சொன்னாங்கன்னு கேட்டாலும் அதுக்கு பதில் இருக்காது. ஏன் சொன்னாங்கன்னு கேட்டாலும் அதுக்கு பதில் இருக்காது. ரொம்ப கேட்டா, "பெரியவங்க சொல்லி இருக்காங்க.. அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு.." வாயை மூடிடுவாங்க. நாமதான் பெரியவங்க பேரைச் சொன்னாலே அடுத்த வார்த்தை பேச முடியாம ஆஃப் ஆயிடுவோமே..

அரைகுறை தகவல் பரிமாற்றம் - இதுதான் மூலப்பிரச்சனையே.. நிறைய பேருக்கு ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்கக்கூட நேரம், மனசு இருக்குறதுல்லை.. கேட்டவங்களுக்கு சரியான, உண்மையான பதில் கொடுக்கவும் ஆட்கள் இருக்கிறது இல்லை. பெரும்பாலும் கேள்வி ஞானம்தான். "அப்படின்னு சொல்வாங்க.." புராணம்தான்.

காது குத்துவதோட ஒரே பயன், நீங்க தோடு, வளையம்னு மாட்டி, கழட்டிக்கலாம். கம்ப்யூட்டர்ல ஸ்க்ரூ போட ஹோல்ஸ் வச்சிருக்க மாதிரிதான் இதுவும். மத்தப்படி அக்குபஞ்சர் எல்லாம் ஒண்ணும் இல்லை. வெறும் பஞ்சர்தான். ஒரு ஓட்டை. நீங்க காது குத்துற இடத்துல நரம்புகள் கூட கிடையாது.

//குழந்தை வளரும் போது துளை தானாகவே அடைபட்டுவிடும். பலருக்கு அடையாளம் கூட இராது.//

இதுக்கு எதுக்கு குத்தணும்? :-)

//நாளை உங்கள் பையன் வளர்ந்து 'காது குத்த வேண்டும்,' என்றால் (கேட்காமலே குத்திக் கொண்டு வந்து நின்றாலும் நிற்பார். இப்போ அதுதான் ஃபஷன். ) என்ன செய்வீர்கள்!!//

அது பையனோட விருப்பம் இல்லையா.. அவன் காது, அவன் குத்திக்கிறான். அவனோட விருப்பம் இல்லாம, இப்ப அவனை அழவிட்டு, நார்த்தை முள்ளை வச்சு குத்தி, அவன் வாயில சீனியை அள்ளி திணிக்கிறது எந்த விதத்துல நியாயம்?

எந்தவொரு செயலுக்கும் தேவை இருக்கணும், ஒரு காரணம் இருக்கணும். இந்த காது குத்து விசயத்துல ஒரே ஒரு காரணம், தோடு மாட்டுறதுதான். அதை ஆண்கள் செய்யப் போறது இல்லேங்கிறப்ப எதுக்கு குத்தணும்?

ஆண்களுக்கு காது குத்துறதால ஒரு பலனும் இல்லை. ஆனால், காது குத்தி காயம் வந்து, நிறைய பேருக்கு பெரிய பிரச்சனைகள் வந்திருக்கு. நெட்ல தேடுனீங்கன்னா நிறைய கேஸ் பார்க்கலாம்.

கேள்வி கேட்டுள்ள சகோதரிக்கு: இங்க நாங்க கொடுக்கிற பதிலை வச்சு நீங்க எதுவும் முடிவு பண்ணப் போறதில்லேங்கிறது நல்லாவே தெரியும். வீட்டுல உங்க கணவர் முடிவு பண்ணிட்டதால அதுதான் நடக்கப் போகுது. :-) வலி இல்லாம காது குத்தறதுக்கு இன்னைக்கு நிறைய வழிகள் இருக்கு. அதுல எதாவது ஒண்ணை செய்ய சொல்லுங்க.. சின்ன பையனோட வலியை, அழுகையை குறைச்ச புண்ணியம் கிடைக்கும்.

இது இன்னும் தேவை இல்லாத சம்பரதாயம் தான். முதல்ல ஒரு ஓட்டைய போட்டு மெல்லிய கம்பி போடுவாங்க, அதனால் ஓட்டை அடைந்து போகும், கம்மல் உள்ளே நுழையாது. அப்புறம் மீண்டும் ஒரு குத்து குத்துவாங்க கம்மல் போட. கேட்டா முதல்ல அத்தை வாங்கி தரும் அந்த கம்பி தான் போடணும், அது தான் முறை'னு சொல்வாங்க. பஞ்சர் ஆவது அவங்க காதில்லையே... யாரோ பெத்தது தானே ;) சாஸ்தரம்'னு நமக்கு காது குத்துவாங்க. ஒன்னும் சொல்றதுகில்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் கிராமம் என்று சொன்னது piercing gun ethum இல்லாத இடம் என்று mean பண்ண தான்.கிரமத்த தப்பா சொல்லணும் என்று சொல்ல la.பாபு அண்ணா சொன மாதிரி பையன் வளர்ந்து தானே காது குத்தினா அதுக்கு நான் ஏதும் பண்ண முடியாது அது அவன் இஷ்டம் இல்லையா?Anyhow நாங்கள் காது குத்துறது இல்லல என்று decide பணிடோம்.பதில் அனுப்பின சுந்தரமதி,இமா,வனிதா அண்ட் பாபு அண்ணாக்கு நன்றிகள்.பாபு அண்ணா உங்க பதிலை படிசிட்டு ஏன் husbanum காது குத்த வேணாம் எண்டு சொலிட்டார்.thaks.

மேலும் சில பதிவுகள்