பூண்டு அரைத்த குழம்பு

தேதி: November 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

1. பூண்டு - 15 பல்
2. வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
4. புளி - நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து கரைக்கவும்)
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
7. கருவேப்பிலை, கொத்தமல்லி
8. உப்பு

எண்ணெயில் வறுத்து அரைக்க:

1. மிளகாய் வற்றல் - 5
2. தனியா - 1 தேக்கரண்டி
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. மிளகு - 1/2 தேக்கரண்டி
5. சோம்பு - 1/4 தேக்கரண்டி
6. பூண்டு - 5 பல்
7. கருவேப்பிலை - கொஞ்சம்


 

எண்ணெய் விட்டு காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய அனைத்தையும் வறுத்து, தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பின் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து நன்றாக குழைந்து வரும்படி வதக்கவும்.
இதில் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, புளி கரைசல், தண்ணீர் தேவைக்கு ஊற்றி குழம்பு பதத்திற்கு கொதிக்க விடவும்.


அரைத்து வைப்பதும், மிளகும் தான் இதன் ஸ்பெஷல். தேவையானால் அரைப்பதற்கு பதில் 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லி தூள், 1/2 தேக்கரண்டி மிளகு தூளை தக்காளி வதக்கிய பின் சேர்த்தும் செய்யலாம். பூண்டு அரைத்து ஊற்றாவிட்டாலும் பரவாயில்லை.

மேலும் சில குறிப்புகள்


Comments

The kuzhambhu is too good... My husband liked it very much... Thank you...

Ithu sappathiku match aaguma?

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வானிவாசு. நேத்து உங்களின் பூண்டு அரைத குழம்பு செய்தேன் அருமையான சுவை சொல்ல வார்தையே இல்லை வானி

மிக்க நன்றி. உங்க பதிவு படிச்சு புதுசா தெம்பு வந்த மாதிரி இருக்கு. அத்தனை சந்தோஷம். எனக்கும் இது மிகவும் பிடித்த குழம்பு வகை. உடம்புக்கும் ரொம்ப நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா
அரைத்த பூண்டு குழம்பு ரொம்ப நல்லாயிருந்தது. பூண்டும்,மிளகும் அரைக்கும் போதே கமகமன்னு வாசனை ... கொஞ்சம் சுண்ட வைத்து boxil போட்டு வச்சிருக்கேன். தினமும் கொஞ்சம் சாதத்தில் போட்டு சாப்பிட.;-)

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

பிடிச்சுதா கிருத்திகா?! :) சந்தோஷம். மிக்க நன்றி. பத்திரமா வச்சிருந்து சாபிடுங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா இந்த குழம்பை செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நானும் ரெண்டு, மூனு நாளைக்கு வைத்திருந்து சாப்பிட்டேன்:)நன்றி உங்களுக்கு.

மிக்க நன்றி வின்னீ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம் புளி கரைசல் தண்ணிர் எவ்வளவு தேவைபடும்.

அன்புடன்
பவானி

பவானி...1 கப் நீர் ஊற்றி கரைங்க. தேவைப்பட்டா அதன் பின் சேர்த்துக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா