வெங்காய தக்காளி கார சட்னி

தேதி: November 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

1. வெங்காயம் - 3
2. தக்காளி - 2
3. பூண்டு - 4 பல்
4. மிளகாய் வற்றல் - 4
5. பெருங்காயம் - சிறிது
6. உப்பு
7. எண்ணெய்
8. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
9. கொத்தமல்லி - சிறிது


 

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும், கொத்தமல்லி இலை, பெருங்காயம் சேர்த்து பிரட்டவும்.
இதை உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு தாளித்து சேர்க்கவும்.


இட்லி, தோசை'க்கு ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

வெங்காய தக்காளி கார சட்னி,ரொம்ப நல்ல இருந்தது, உடனே எல்லாம் காலி, நன்றி!

மிக்க நன்றி மாலி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா