கத்திரிக்காய் முருங்கைகாய் கார குழம்பு

தேதி: November 29, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

1. கத்திரிக்காய் - 2, முருங்கைகாய் - 2 (நறுக்கியது)
2. கடுகு - 1/4 தேக்கரண்டி
3. சீரகம் - 1/4 தேக்கரண்டி
4. உளுந்து - 1/4 தேக்கரண்டி
5. கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
8. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
9. உப்பு - தேவைக்கு
10. வெங்காயம் - 1/2 (a) சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
11. தக்காளி - 1 (நறுக்கியது)
12. கருவேப்பிலை
13. கொத்தமல்லி
14. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
15. புளி கரைசல் - 1/2 கப்


 

எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
சிவந்ததும் தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிரிது ஊற்றி கொதிக்க விடவும்.
தூள் வாசம் போக கொதித்து, கத்திரிக்காய் வெந்ததும், முருங்கைகாய் சேர்த்து வேக விடவும்.
முருங்கை வெந்ததும், புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு குழம்பு பதம் வந்ததும் இரக்கி விடவும்.


இதில் கத்திரிக்காய் இல்லாமல், வெறும் முருங்கை சேர்த்தும் செய்யலாம். நிறைய பூண்டு (8 - 10 பல்) உரித்து வெங்காயம் வதக்கும்போது சேர்க்கலாம். முருங்கை மட்டும் கடைசியாக சேர்த்து வேக விட வேண்டும். நிறைய நேரம் இருந்தால் கசந்து விடும். சூடான சாதத்தில் நெய் சேர்த்து, இந்த குழம்பு ஊற்றி, அப்பளம் (அ) உருளைக்கிழங்கு பொரியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று இந்த குழம்பு செய்து பார்த்தேன். பல வருடங்களுக்கு பிறகு என்னுடைய அம்மா வைக்கும் குழம்பு போலவே இருந்தது. இந்த ரெஸிபி கொடுத்தமைக்கு நன்றி. பாராட்டுக்கள்.

~ Anu.

Be the best of what you are and the Best will come to you :)

Be the best of what you are and the Best will come to you :)

இது என் அம்மா செய்யும் குழம்பு. எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. செய்து பார்த்து பதிவு போட்டமைக்கு மிக்க நன்றி தோழி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த கத்திரிக்காய், முருங்கைக்காய் காரக்குழம்பு ரொம்ப சூப்பரா இருக்கு.செய்வதற்கு ரொம்ப எளிமையாவும் இருக்கு. ரொம்ப நன்றி வனிதா!

மிக்க நன்றி கீதா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா கத்தரிக்காய்,முங்கைக்காய் காரக்குழம்பு செய்தேன் நல்லா இருந்தது,எங்கம்மாவும் இப்படிதான் செய்வாங்க,சின்ன வெங்காயம் போட்டு செய்தேன் நல்லா இருந்தது.நன்றி.

சின்ன வெங்காயம் தான் நல்ல ருசி தரும் :) மிக்க நன்றி கவி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா எப்படி இருக்கீங்க நலமா? உங்க குறிப்பில் இருந்து செய்யக்கூடியவற்றை செய்து பதிவும் கொடுத்துவிட்டேன். ஆனால் உங்களுக்கு பின்னூட்டம்தான் அப்பப்போ தரமுடியவில்லை. 5நாளாக இன்ட்ர்நெட் வேலை செய்யவில்லை. சில குறிப்புக்கள் படம் எடுத்திருக்கிறேன். இந்த முருங்கைக்காய் கத்தரி குழம்பு வார விடுமுறையில் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. வெங்காயதக்காளி தொக்கு,சுவையாக இருந்தது. நான் செய்த (உஙகளுடைய)அத்தனைகுறிப்புகளுமெங்கள் வீட்டில் பிடித்திருந்தது. நன்றாகவும் வந்திருந்தது. அன்புடன் அம்முலு.

நான் நலம் அம்முலு. உங்களது பின்னூட்டம் பார்க்க சந்தோஷமாக இருக்கு. எப்படியும் பின்னூட்டம் தர நினைத்தீர்களே... அதுவே மிக்க மகிழ்ச்சி. நன்றி அம்முலு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

netru intha kulambeh seitthu paartthen migavum arumai..naan poondu,vendakkai,kilangu ellam sertthu kulambhu vaitthen migavum arumai..en kanavar 3 murai saapittar..super..koottanjoru pagutiyil unga peyar illaiyeh...

அன்பு தோழி இந்திரா... செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி. படிக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. கூட்டாஞ்சோறு பகுதியில் என் பெயர் vanitha vilvaaranimurugan என்று இருக்கும். நான் சமையல் குறிப்புகள் வனிவசு என்ற பெயரில் கொடுத்து வருகிறேன். மீண்டும் என் நன்றிகள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா