தேதி: November 30, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
1. சிறுபருப்பு - 1 கப்
2. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, எண்ணெய் - தாளிக்க
3. வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
4. தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
5. மிளகாய் வற்றல் - 2
6. கருவேப்பிலை, கொத்தமல்லி
7. உப்பு
8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் மிளகாய் வற்றல், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு சிறுபருப்பில் சேர்க்கவும்.
இதை குக்கரில் 2 விஸில் வைத்து எடுக்கவும்.
பின் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் எடுக்கவும்.
தண்ணீர் அதிகம் கூடாது, சற்று கெட்டியாக இருக்க வேண்டும். சப்பாத்தி'க்கு எளிதில் செய்ய கூடிய பக்க உணவு இது. சுவையாக இருக்கும். காரம் வேண்டுமானால் மிளகாயை கரண்டியால் நசுக்கி விட்டு கொதிக்க வைக்கவும்.
Comments
வனிதா!
காலையில் சப்பாத்திக்கு அவருக்கு கொடுத்தனுப்ப தால் பண்ணினேன். ரொம்ப சிம்பிளா, டேஸ்ட் நல்லாவும் இருந்தது!
நன்றி!
நன்றி சாய் கீதா
நன்றி சாய் கீதா... இந்த முறை நீங்க தான் அசத்தல் ராணி போல... ;) உங்க பின்னூட்டம் தான் எனக்கு அதிகம். உங்களை போல் அனுபவம் உள்ளவர் தரும் பின்னூட்டம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சப்பாத்தி தால்,
இன்று செய்தேன்பா.நல்ல இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
நன்றி ஆசியா
மிக்க நன்றி ஆசியா. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
வனிதா சப்பாத்திதால் செய்தேன் நல்லா இருந்தது,ஏற்கனவே ஸ்பினாச் ஆலு கிரேவில சொல்லிட்டேன் இருந்தாலும் நன்றி.
நன்றி
மிக்க நன்றி கவி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா