காளிபிளவர் பரோட்டா

தேதி: November 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. காளிபிளவர் - 1 சின்ன பூ (துருவியது)
2. பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
3. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
4. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
7. தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
8. உப்பு
9. கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
10. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
11. கோதுமை மாவு - 2 கப்


 

கோதுமை மவை உப்பு கலந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.
காளிபிளவர், உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, தூள் வகைகள் எல்லாம் சேர்த்து கலக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, இந்த கலவையை போட்டு நன்றாக வதக்கவும்.
காளிபிளவர் பாதி வதங்கியதும், தண்ணீர் தெளித்து மூடி போட்டு நன்றாக வேக விடவும்.
தண்ணீர் சுத்தமாக வற்றி கலவை திக் ஆனதும் எடுக்கவும்.
வழக்கமாக சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டி, உள்ளே சிறிது காளிபிளவர் கலவை வைத்து மூடி, மீண்டும் சப்பாத்தி போல் (சற்று கனமாக) தேய்த்து, மேலே நெய் தடவி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும். (நெய்'க்கு பதிலாக எண்ணெயும் தேய்கலாம்)


மேலும் சில குறிப்புகள்


Comments

இதுக்கு என்ன side dish நல்லaa இருக்கும் வாணி?onion raithaa?im gng 2 try tday....

தயிர், சர்க்கரை போட்ட தயிர் (லஸ்ஸி) நன்றாக இருக்கும். ஆலு பரோட்டா போல தான். விரும்பினால் தேக்காய் சட்னி ட்ரை பண்ணுங்க. :) செய்து சாப்பிட்டு எப்படி இருந்துசுன்னு சொல்லுங்க தோழி.

-- வனிதா

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று மதியம் காலிபிளவர் பரோட்டா செய்தேன் வனிதா, நல்லா இருந்தது.side dish இல்லாமலேயே சாப்பிட சுவையாக இருந்தது.கொஞ்சம் புதினாவும்,lemon juice ம் சேர்த்தேன்.அவருக்கும் புடிச்சிப் போச்சு.

மிக்க நன்றி தோழி. இது போன்ற பின்னூடங்களே இன்னும் செய்ய ஆர்வத்தையும், புதிதாக சில யோசனைகளையும் தருகின்றது. நீங்கள் சொன்னது போல் நான் செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,இன்றிரவு டின்னருக்கு உங்கள் காலி பிளவர் பரோட்டவும்,வேர்க்கடலை சட்னியும் செய்தேன்.டேஸ்ட் பண்ணியதிலேயே சுவையாக உள்ளது
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா சொன்னா சரியா தான் இருக்கும். மிக்க நன்றி, இன்னும் நிறைய குறிப்புகள் செய்து இன்னும் சந்தோஷ படுத்துங்கோ என்னை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா