பேரிட்சை மில்க் ஷேக்

தேதி: December 1, 2008

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சீட்லெஸ் பேரிட்சைப்பழம் - 15
குளிர வைத்த பால் - 1 கப்
ஜீனி - 2 தேக்கரண்டி
சூடான தண்ணீர் - 1/4 கப்


 

சூடான தண்ணீரில் பேரிட்சையைப் போட்டு மூடி அரை மணி நேரம் ஊற விடுங்கள்.
பிறகு மிக்சியில் ஜூஸ் அடிக்கும் ஜாரில் பேரீட்சையை ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்து, குளிர வைத்த பால், சீனி சேர்த்து நன்றாக அடிக்கவும்
பேரிட்சை மில்க் ஷேக் ரெடி


முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாகும். தொடர்ந்து வாரம் 3 முறை போல் குடித்து வந்தால் முடி கொட்டும் பிரச்சனை இருக்காது
பேரிட்சையை ஊற வைக்காமல் மிக்சியில் போட்டால் நன்றாக அரைபடாது. பேரிட்சை இரும்புச் சத்து நிறைந்தது. எனவே அதனை பாலுடன் உட்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது. இனிப்பு அதிகம் பிடிக்காதவர்கள் சீனியைத் தவிர்க்கலாம். முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள், பேரிட்சையையும், காய்ந்த திராட்சையையும் பாரிட்ஜிலும் சேர்த்து (சீனிக்கு பதில்) சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

hai friend kulanthai night la thoonda yena seiyanum.ava pagalla thoonkita ngtla thoonga matingara.2 am aaguthu.na job ku poren.athanala ava udambum kettu poguthu.ngt la nerathulaye thoonga yena pannanum,en kulanthai ku vayasu 2yrs

தேவா... நலமா இருக்கீங்களா?? ரொம்ப சுவையான சத்தான மில்க் ஷேக் கொடுத்திருக்கீங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தேவா,

நலம்தானே?! சுவையான ஹெல்தி பானம்!. சர்க்கரைக்கு பதில் கொஞ்சம் தேன் விட்டு கலந்து கொண்டேன். நன்றாக இருந்தது தேவா. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

இந்த மில்க் ஸேக் நான் அடிக்கடி செய்யும் ஒன்று சுவை நன்றாக இருக்கும் குழந்தைகளுக்கும் தாராளமாக கொடுக்கலாம்..நன்றி மேம்

வாழு, வாழவிடு..

எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம்! உங்களிடம் கேட்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன். உங்களுடைய ஒரு பதிவு படித்தேன். Dates சாப்பிட்டால் iron சத்து கிடைக்கும் என்று. வெறும் iron tablets சாப்பிட்டால் constipation வரும் என்று பயமாக இருக்கிறது. அதனால் dates வாங்கி தினமும் 4 அல்லது 5 சாப்பிட்டு வருகிறேன். எனக்கு என்ன சந்தேகம் என்றால் இந்த date fruits மிகவும் இனிப்பாக இருக்கிறதே. இது சாப்பிடுவதால் உடம்பு weight போடுமா? would it cause diabetes? எனக்கு ஒரே குழப்பம். :( தயவு செய்து என் சந்தேகத்தை தீர்த்து வெய்யுங்கள்!!

அன்புடன்
உமா

தேவா, எனக்கு இன்னொரு சந்தேகம். எல்லோரும் டேட்ஸில் இரும்பு சத்து இருக்கு இருக்குனு சொல்றோம் ஆனா அதோட டப்பாவில பாத்தா ஒரு நாளைக்கு 2- 3 டேட்ஸ் சாப்பிட்டா ஒரு நாளுக்கு தேவையான இரும்பு சத்தில் 2% கிடைக்கும்னு இல்ல போட்டிருக்கு? அதே 2 - 3 டேட்ஸில் கலோரி பாத்தா நிறைய இருக்கு (சரியா நினைவு இல்ல, ஒரு 200 - 250 கலோரி போட்டு இருந்ததுனு நினைக்கிறேன்..) 2% இரும்புக்கு மலச் சிக்கல் வருமேனு கூட பால் வேற!! பின் என்ன காரணம் நாம் டேட்ஸில் இரும்பு அதிகம்னு சொல்ல?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

எப்படி இருக்கிங்க? உங்களுடைய டேட்ஸ் மில்க் ஷேக் செய்தேன் ரொம்ப யம்மி டெஸ்ட்டா இருந்தது.முடி உதிர்ரது நின்றால் பொதும்.thanks

ஹாய் உமா & ஹேமா,
பேரிட்சையில் கலோரி அதிகம்தான். ஆனால் நாம சுகர் சாப்பிடறதை விட இப்படிப்பட்ட நேச்சுரல் சுகர் உள்ள பேரிட்சை, தேன், Figs சாப்பிடறதால அதிகம் பக்கவிளைவுகள் இல்லை. இதனால் டயபடிக்ஸ் வராது. அதுக்கும் இனிப்பு சாப்பிடறதுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் ஏற்கனவே டயபட்டிக் இருப்பவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கலோரி அதிகமான உணவு வகைகளை அவர்கள் சாப்பிட்டால் அதனை செரிக்க வைக்க இன்சுலினின் செயல்பாடு நார்மலாக இருக்காது. எடை விஷயத்தில் டயட் அது இதுன்னு ஸ்ட்ரிக்டாக இருப்பவர்கள் ஓட்ஸ் பாரிட்ஜில் இனிப்புக்கு பதிலா பேரிட்சையை சேர்த்துக் கொள்ளலாம். இது மருத்துவ ரீதியா எந்த அளவு எப்படி பலன் தரும் என்பதை அனுபவத்தில் கண்டதால் இங்கே எழுதி இருக்கேன். எப்போதும், இப்போதும் எனது பெரிய பிரச்சனையே எனது அடர்த்தியான முடிதான். அந்த அடர்த்தியைக் குறைக்க இன்னும் பிரம்ம பிரயத்தனம் செய்துக் கொண்டு இருக்கேன். Deep U Cut, Step layer cut னு எல்லாம் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். உப்புத் தண்ணீரில் குளித்தாலும் என் முடி கொட்டியதில்லை. தொடர்ந்து அப்படி 4 வருஷம் தலை குளித்தும் கொட்டாத முடி, குழந்தைப் பிறப்புக்கு பிறகு நெடுநாளாக தூங்காததாலும், ஸ்ட்ரெஸாலும் அதிக அளவில் கொட்ட ஆரம்பித்தது. தலையை வாரிவிட்டு சடையின் அடியில் பிடித்து இழுத்தால் நிற்காமல் வந்துக் கொண்டே இருக்கும். நான் கவனிக்கவும் இல்லை. ஒரு நாள் என் கணவர் என் தலையில் வழுக்கையே ஏற்பட்டுவிட்டது என்றார். நம்பவில்லை முதலில். கண்ணாடியில் பார்த்தால், தலையில் சொட்டையே விழுந்து விட்டது. அப்போது நான் அயர்ன் சப்ளிமெண்ட் ( குழந்தை பெற்ற பிறகு கைனி ப்ரிஸ்க்ரைப் செய்வார்கள் ) எடுத்துக் கொண்டிருந்தேன். அதனால் கான்ஸ்டிபேஷன் தொல்லை வராமல் இருக்க சாப்பாட்டு விஷயத்தில் நிறைய பைபர் சேர்க்க வேண்டியிருந்தது. இதில் இன்னும் அயர்ன் எடுத்தால் என் நிலை என்ன ஆவது என்றே புரியவில்லை. பிறகு யோசித்து, முதலில் அயர்ன் டேப்லட்டை நிறுத்தி, அதற்கு பதில் 20 பேரிட்சையை பத்து வீதம் இரண்டு வேளைக்கு சாப்பிட ஆரம்பித்தேன். நான் சாப்பிட்டது பிரெஷ் பேரிட்சை பழங்கள். அது எல்லா இடங்களிலும் கிடைக்காது. எனக்கே ரம்ஜான் நேரம் என்பதால் கிடைத்தது. பிறகு ப்ராசஸ்டு டேட்ஸ்தான் சாப்பிட்டேன். அளவுகளை பத்தாக குறைத்தேன்.

Pitted Dates ஐவிட fresh Dates கிடைத்தால் நிறையவே சாப்ப்பிடலாம். அப்போது மற்ற விஷயங்களில் சாப்பாட்டின் கொழுப்பு அளவைக் குறைத்து இதனை சாப்பிட்டால் டயட் பாதிக்காது. முடி கொட்டி அவஸ்தைப்படுவதற்கு இதனை செய்யலாம். எனக்கு அப்போது எடை கூடவில்லை( இப்போது கேட்காதீர்கள்). கீரை தினமும் ஒரு கட்டு எடுத்துக் கொள்வதும் நல்லது. ஆனால் பேரிட்சைதான் இயற்கை உணவில் முடி வளர பெஸ்ட் என்பேன். எப்போதும் எந்தவிதமான உணவிலும் ஒரு நாளைய தேவைக்கான 100% சத்தை கொடுக்க முடியாது. இது நிச்சயம் முடி வளர்ச்சிக்கு ஹெல்ப் பண்ணும். சாப்பிட ஆரம்பிச்சா உங்களுக்கே தெரியும். தாமதமான பதிலுக்கு மன்னிச்சுக்குங்க. வேலையில் சரி பிசி. அதான் வரமுடியல.
ஜாஸ்மின், உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி.

appadiya? ingu pitted dates thaan kidaikudhu.. adhuve enna vilai paarunga! epadiyo, post-pregnancy try panni pathudalam (ipodhaiku mudi thicka thaan iruku). Thanks for the info Deva!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

எனக்கு இங்க lebanese கடைகள்ள fresh dates கிடைக்கிறது. ரொம்பவும் இனிப்பாக இருக்கு. அதுவும் இது அளவில் கொஞ்சம் பெரியதாக உள்ளது. நம்ப genetically modified strawberry மாதிரி. ஆனால் அவ்வளவு பெரிசு இல்ல. இரண்டு வகையான dates வெச்சி இருக்காங்க. ஒண்ணு அளவில் சிறியதாக இருக்கிறது. கேட்டால் ரெண்டுமே ஒண்ணு தான். It depends on your preference என்று சொல்கிறார் shop keeper. எனக்கு முடி ரொம்ப கொட்டலை. ஆனாலும் i get tired very soon அதனால் தான் iron supplements பதிலா dates சாப்பிடலாம் என்று ஐடியா வந்தது உங்களுடைய முந்தைய பதிவை பார்த்து. இந்த milk shake எனக்கு ஒத்து வராது :( am allergic to dairy food. அதனால fresh dates சாப்டறேன். I think I'll have maximum 4 per day! வெயிட் எரிடுச்சுன்னா குறைக்க தலையால தண்ணி குடிக்கணும் :(

உங்க வேலைக்கு நடுவுல வந்து பதில் போட்டதுக்கு ரொம்ப நன்றி தேவா :)

அன்புடன்
உமா

டேட்ஸ் மில்க் ஷேக் அருமை,டேட்ஸ் சிரப் சேர்த்து பால் சாப்பிடுவது போல் இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த பேரிட்சை மில்க் ஷேக்கின் படம்

<img src="files/pictures/aa348.jpg" alt="picture" />