முருங்கைக்காய் வறுவல்

தேதி: December 1, 2008

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கைக்காய் - விரல் நீள துண்டுகளாக 20
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக அரிந்தது)
பூண்டு - 2 பல் (பொடியாக அரிந்தது)
சோம்புத் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/ 4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 1/2 கப்
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கருவேப்பிலை - 2 கொத்து


 

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் , பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
வெங்காயம், பூண்டு வதங்கியவுடன், சோம்புத் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, முருங்கைக்காய் சேர்த்து நன்றாகப் பிரட்டவும். கருவேப்பிலை ஒரு கொத்தை போடவும். தண்ணீரை ஊற்றி மூடி வைக்கவும்.
10- 12 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து பார்த்தால் முருங்கைக்காய் வெந்திருக்கும்.
இப்போது வாணலியை மூடாமல் ஜல்லிக்கரண்டியால் நன்றாக பிரட்டி விட்டு (5 நிமிடம் போல) தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே தெளியும்வரை வைத்திருந்து இறக்கவும். மேலே ஒரு கொத்து கருவேப்பிலையை தூவவும்.


இதனை பக்க உணவாக உட்கொள்ளலாம். கொஞ்சம் கிரேவியாக வைத்து சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். தயிர்சாதம், சாம்பார் சாதம், ரசம் போன்றவற்றிற்கு நன்றாக இருக்கும்.
முருங்கைக்காய்க்கு பதிலாக உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய், காலிபிளவர் போன்றவற்றை உபயோகித்தும் செய்யலாம். கத்திரிக்காய் செய்யும்போது எண்ணெய் இன்னும் அரை மேஜைக்கரண்டி சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும். தண்ணீரை ஒரு கப் என்று கத்தரிக்காய், காலிஃப்ளவருக்கு குறைத்து ஊற்றவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செய்யறதுக்கு ஈசியாகவும் டேஸ்டியாவும் இருந்தது, நன்றி தேவா.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.