வாழைக்காய் பச்சடி

தேதி: December 1, 2008

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 1
தயிர் - 1 1/2 கப்
கடுகு - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 5 இலைகள்
உப்பு - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி அரிந்தது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 தேக்கரண்டி


 

வாழைக்காயை தோல் சீவி, ஆவியில் (இட்லித் தட்டிலோ அல்லது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வாழைக்காயை போட்டோ ) 8-10 நிமிடம் வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.
தயிரில் கொத்தமல்லி, வாழைக்காய் மசித்தது, உப்பு சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து, தயிரில் சேர்த்து கலக்கி வைக்கவும். பச்சடி ரெடி.


காரம் தேவையென்றால் ஒரு பச்சை மிளகாயை பொடியாக அரிந்தும் தயிருடன் சேர்க்கலாம். இதே முறையில் வாழைக்காய்க்கு பதில் வாழைத் தண்டு வைத்தும் செய்யலாம். உடலுக்கு மிகவும் நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் தேவசோனா! இன்று உங்கள் வாழக்காய் பச்சடி செய்தேன்
செய்வது மிகவும் சுலபம். வித்தியாசமான சுவை, நன்றாக இருந்தது
நன்றி நல்ல ரேசப்பி தந்தமைக்கு:)
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இந்தக் குறிப்பினை கற்றுக் கொடுத்தது எனது பெரியம்மா பெண். அம்மா மூலம் நானும் தெரிந்துக் கொண்டேன். செய்து பார்த்து சொன்னதற்கு மிக்க நன்றி.