கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மசாலா

தேதி: December 1, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கத்திரிக்காய் - கால் கிலோ
உருளைக்கிழங்கு - இரண்டு
தயிர் - ஒரு கோப்பை
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - தலா ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சத்தூள் - கால்த்தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி


 

உருளைக்கிழங்கை வேகவைத்து நீளதுண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கத்திரிக்காயை நான்காக நறுக்கி அதில் ஒரு தேக்கரண்டியளவு உப்பைச் சேர்த்து பிசிறி அரைமணி நேரம் ஊறவைக்கவும், பின்பு நன்கு கழுவி நீரை பிழிந்துவிட்டு ஈரம் போக ஒற்றி எடுக்கவும்.
சற்று குழிவான சட்டியில் எண்ணெயை ஊற்றி அதில் கிழங்கை இளஞ்சிவப்பாகவும் கத்திரிக்காயை அது வேகும் வரையும் சிறிது சிறிதாக்ப் போட்டு பொரித்து எடுக்கவும்.
பிறகு அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு சிவந்தவும் இஞ்சி பூண்டைப் போட்டு தொடர்ந்து எல்லாப் பொடிகளையும் போட்டு வதக்கவும்.
பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி,பச்சைகிளகாய்,கொத்தமல்லியில் பாதி மற்றும் உப்பைச் சேர்த்து வதக்கி தயிரை ஊற்றி நன்கு கலக்கவும்.
மசாலா நன்கு கெட்டியானவுடன் முதலில் கிழங்கைப் போட்டு கிளறிவிட்டு தொடர்ந்து கத்திரிக்காயைச் சேர்த்து மெதுவாக கிளறவும்.
அடுப்பை சிம்மில் ஒரு ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்கி கொத்தமல்லியை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
இந்த சுவையான மசாலா வீட்டு வீஷேசங்களில் விருந்தினரிடம் நல்ல வரவேற்பை பெறும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் மனோகரி மேடம் எப்படி இருக்கீங்க? இந்த குறிப்பு பிரின்ட் செய்துவிட்டு மறந்துவிட்டேன்.காலையில்(இன்று) செய்துபார்த்தேன்.நன்றாக வந்திருக்கு.நன்றி மேடம்.அன்புடன் அம்முலு

அன்புச் சகோதரி அம்முலு எப்படி இருக்கீங்க? இந்த குறிப்பின் உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோசமாய் இருக்கின்றது. நன்றி.

உங்களுடய கத்தரி உருளை மசாலா ரொம்ப நன்றாக இருந்தது.செய்வதற்க்கு மிகவும் சுலபமாகவும் சுவையில்(rich taste) அருமையாக இருந்தது.இந்த குறிப்பு தந்ததிற்கு நன்றி.

ஹலோ காயத்திரி டியர் எப்படி இருக்கீங்க? இந்த குறிப்பை பற்றி மிக சரியாக சொன்னீங்க ,அதனால் தான் விருந்துக்களிலும் இந்த குறிப்பை செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தேன்.தங்கள் பின்னுட்டத்திற்கு மனமார்ந்த நன்றி.

நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? உங்களுடைய பதில் கிடைத்ததில் மிகவும் சந்தோஷம். இப்பொழுதுதான் உங்களுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. உங்களுடைய குறிப்பும் உங்களைப் போலவே sweet & simple. நன்றி

மனோகரி அக்கா எப்படி இருக்கீங்க? எங்க ஞாபகம் எல்லாம் இருக்கா?

நேற்று வீட்டிற்கு வந்த நண்பர்களுக்கு இந்த குறிப்பை செய்தேன். நீங்க சொன்னது போலவே பெரிய ஹிட் ஆயிடுச்சு. அருமையான குறிப்பை குடுத்த உங்களுக்கு என் நன்றி. இதனாலோ என்னவோ நேற்று நீங்க அறுசுவையில் ஒரு பதிவு போடுவதுபோல் கனவு கண்டேன்:)

மனோகரி மேடம் 2008 பின் குறிப்பு எதும் குடுக்கவில்லயே தாங்கள் குறிப்பு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் .இன்னும் குறிப்புக்களை தாருங்கள்