கேப்பை கூழ்

தேதி: December 1, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

1. கேப்பை மாவு (ராகி / குரக்கன் / கேழ்வரகு) - 1 கப்
2. உப்பு
3. அரிசி நொய் - 1/4 (அ) 1/2 கப்
4. தயிர்
5. சின்ன வெங்காயம் (அ) மாங்காய்


 

கேப்பை மாவை தோசை மாவு பதத்துக்கு கரைச்சு, ஒரு இரவு, ஒரு பகல் அப்படியே புளிக்க விடுங்க.
அரிசி நொய் இல்லாதவங்க, புழுங்கல் அரிசி'யை மிக்ஸி'யில் ஒன்னுரெண்டா ஒடைச்சுக்கலாம். சில நேரத்தில் அரிசி ஊற வைத்து, காய வைத்து உடைக்கவும் செய்யலாம்.
பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும், நொய் சேர்த்து வேக விடவும்.
நொய் வெந்ததும், சிறுந்தீயில் புளித்த மாவை ஊற்றி கிளரிகொண்டே இருக்கவும்.
போட்ட உடனே கலர் மாரும், வெந்துவிட்டது என நினைசிடாதிங்க. கைல தண்ணி தொட்டுகிட்டு, கூழை தொட்டு பாருங்க, கையில் ஒட்டாம வந்தா கூழ் முழுசா வெந்துடுச்சுன்னு அர்த்தம்.
இந்த பதத்துல எடுத்து விட வேண்டும்.
இதை அப்படியே கரைத்தும் குடிக்கலாம் (சுடு கூழ் என்று சொல்வார்கள்) ஆனால் அது அத்தனை ருசி அல்ல.
கூழை ஆர வைத்து பானை (அ) பிரிஜில் வைத்து மறு நாள், இதில் தயிர், உப்பு, சேர்த்து கரைத்து வைக்கவும்.
இத்துடன் மாங்காய் மிளகாய் வற்றல் (அ) மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒன்றிரெண்டாக இடித்து சாப்பிடலாம் (அ) மோர் மிளகாய் வருத்து வைக்கலாம் (அ) சின்ன வெங்காயம் (அ) பிஞ்சு பச்சை மிளகாய் (அ) எலுமிச்சை ஊறுகாய்.... ம்ம்... ருசியான கேப்பை கூழ் தயார்.


தயிர் சேர்க்க விரும்பாதவங்க வெரும் தண்ணீர் ஊற்றி கரைச்சுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா, வெயிலுக்கு ஜூஸ், சாலட், ஐஸ்கிரீம் என செஞ்சு ஒரே போர், நம்ம நாட்டு வழக்கப்படி ஏதாவது செய்யலாம்னு பார்த்தா, உடனே கூழ் செய்யர குறிப்பு கிடைச்சது, இப்பத்தான் பார்த்தேன். இன்னைக்கு செய்யப்போரேன். செஞ்சிட்டு உங்களுக்கு பார்சல் பண்ரேன். நன்றி.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மிக்க நன்றி. எங்க அம்மாக்கு வெய்யில் கொஞ்சம் அதிகமானாலும் கூழ் தான் காலையில். நான் சாப்பிட்டதில்லை, ஆனால் இவருக்கும் பிடிக்கும் என்பதால் செய்வது மட்டும் உண்டு. இது எங்க கிராமத்து முறை. அவசியம் செய்து எப்படி இருந்ததுன்னும் சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா