முருங்கைக்காய் பொரியல்

தேதி: December 3, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

முருங்கைக்காய் - 2
வெங்காயம் -1
தக்காளி -1
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 2
சீரகம் - கால் ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இணுக்கு


 

முருங்கைக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி உப்பு போட்டு வதக்கவும்.
முருங்கைக்காய் சேர்க்கவும். பிரட்டி மூடி போடவும்.
தேங்காயை வத்தல் சீரகம் சேர்த்து பரபரவென்று அரைத்து வைக்கவும்.
முருங்கைக்காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய் போட்டு கிளறி வேண்டுமானால் மல்லி இலை தூவி இறக்கலாம்.
சுவையான முருங்கைக்காய் பொரியல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்