பருப்பு ரசம்

தேதி: December 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. துவரம் பருப்பு - 1/4 கப்
2. புளி - 1 நெல்லிக்காய் அளவு
3. மிளகாய் வற்றல் - 2
4. தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
5. பூண்டு - 4 பல் (தட்டியது)
6. கருவேப்பிலை, கொத்தமல்லி
7. உப்பு
8. ரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க


 

பருப்பை வேக வைத்து அந்த தண்ணீர் 2 கப் எடுத்து வைக்கவும்.
புளியை 1 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
இதில் மிளகாய் வற்றல், உளுந்து, கடலை பருப்பு சேர்த்து சிவக்க விடவும்.
இப்போது அதில் நறுக்கிய தக்காளி, தட்டி வைத்த பூண்டு சேர்த்து பிரட்டவும்.
தீயை சுத்தமாக குறைத்து ரசப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.
உடனே பருப்பு தண்ணி, புளி தண்ணி, உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் எடுக்கவும்.


பொடி சேர்த்து நிறைய நேரம் தீயில் இருக்க கூடாது, கறுகிவிடும். விரும்பினால் சிறிது பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். உடனே பருப்பு தண்ணீர் சேர்க்கவும். ரசம் நுரைக்க ஆரம்பித்ததும் எடுக்கவும். ரொம்ப கொதிச்சா ருசி கெட்டுவிடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நானும் இதுபோல்தான் பருப்பு ரசம் வைப்பேன்.நன்றாக இருந்தது.

சவுதி செல்வி

நன்றி செல்வி... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா உங்க புருப்பு ரசம் தான் இன்னைக்கு.நல்லா இருந்தது.நான் இதில் புளி மட்டும் போடலை.நல்லா இருந்தது.
வனிதா அந்த போட்டோவில் இருந்தது நிஜமாவே நீங்க இல்லையா? ஓகே,ஸ்ருதி நல்லா இருக்காங்க நான் கேட்டேனு சொல்லுங்க. உங்க பொண்ணு பேரு யாழினிதானே எப்படி இருக்காங்க.

மிக்க நன்றி கவி. புளி சேர்க்காம ரசமா?! இதுவரை நான் செய்ததில்லை. :( எப்படியோ பிடிச்சா சரி. ஸ்ருதியிடம் சொல்லிவிட்டேன். யாழினி நலம். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பருப்பு ரசம் இப்பதான் வைத்து சாப்பிட்டு வர்றேன். நல்லா இருந்தது .நாங்களூம் இதேமுறையிதான் செய்வோம். ஆனா கடலைப்பருப்பு போட்டு தாளித்தது இதுவே முதல்முறை.
ரசப்பொடியிலேயே பெருங்காயம் இருந்தால் ,பெருங்காயம் தாளிக்க தேவையில்லைதானே?
குறிப்பிற்கு நன்றி வனிதா!

தேவையில்லை கீதா. நான் அரைக்கும் ரசப்பொடியில் பெருங்காயம் சேர்ப்பதில்லை. அதான் விரும்பினால் சேர்க்க சொன்னேன். மிக்க நன்றி கீதா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, எங்கே ஆளைக் காணவில்லை?. சுவையான பருப்பு ரசம் செய்தேன். உடனேயே முடிந்துவிட்டது. நான் வழமையாக கை உரலில் இடித்து செய்வேன். இம்முறை உங்கள் முறையில் எப்பவோ வாங்கிய ரசப் பொடியையும், பெருங்காயமும் சேர்த்துச் செய்தேன். அனைவருக்கும் பிடித்துக் கொண்டது. மிக்க நன்றி

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வனி பருப்பு ரசமும் பீன்ஸ் பிரட்டலும் அருமை.

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிக்க நன்றி அதிரா. இந்த பதிவில் இருந்தும் கொஞ்சம் உங்க தமிழ் கத்துக்கறேன். :)

மிக்க நன்றி இலா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா இன்று நான் பருப்பு ரசம் வைத்தேன் மிகவும் நன்றாக இருந்தது, இதுவரையிலும் தனிப்பருப்பு ரசம் வைத்தது இல்லை

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

வனிதா இன்று நான் பருப்பு ரசம் வைத்தேன் மிகவும் நன்றாக இருந்தது, இதுவரையிலும் தனிப்பருப்பு ரசம் வைத்தது இல்லை

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிக்க நன்றி மஹா. :) நீங்கள் முதன் முதலில் என்னுடைய சமைத்து அசத்தலாம் பகுதியில் தான் கலந்து கொள்கிறீர்கள் என நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vanakkam, enakku tirumanamaagi ippetaan 3 months aaguthu. En Lifeleh netru muthal muthalil intha paruppu rasam vaithen. SUPER!! nandragha vanthathu.. en kanavar migavum arumaiyaagah vullathu endraar..2 tadvai saappittar..intha rasattirkku naan vendakkai muttai poriyalum & porittha appalamum seithen.. nandri..

அன்பு இந்திரா... புதிதாக திருமணம் ஆனவரா?? சமையல் கத்துக்க இப்ப தான் ஆசை அதிகமா இருக்கும், உங்கள மாதிரி தான் இருந்தேன் நானும். உங்க பின்னூடத்துக்கு மிக்க நன்றி. :) ரொம்ப சந்தோஷமா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா