எவையெல்லாம் சிற்றுண்டி?

எவையெல்லாம் சிற்றுண்டி வகையைச் சேர்ந்தவை? இந்த பகுதியில் எவற்றைப் பற்றியெல்லாம் கேள்விகள் கேட்கலாம்?

எவையெல்லாம் சிற்றுண்டி என்று வரையறுப்பது சற்று சிரமம். கேசரியை சிற்றுண்டியில் சேர்ப்பதா? இனிப்பு வகைகளில் சேர்ப்பதா? என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தே உள்ளது. பஜ்ஜி, போண்டா வகைகளும் காரத்தில் சேருமா, சிற்றுண்டியில் சேருமா என்பது போன்ற சந்தேகங்கள், வகைப் பிரித்தலின் போது நிறையவே தோன்றும். பொதுவில், சிறிய அளவில் உண்ணக்கூடிய உணவுகளை சிற்றுண்டி என்று அழைக்கின்றோம். நமது இந்திய உணவுப் பழக்கத்தில் காலையும், மாலையும் அதிகமாக சிற்றுண்டி உணவை எடுத்துக் கொள்கின்றோம். சாத வகைகள், பலகாரங்களைத் தவிர்த்து, காலை மாலை வேளைகளில் சாப்பிடும் அனைத்து உணவு வகைகளைப் பற்றியும் இங்கே கேள்விகள் கேட்கலாம். தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். விவாதங்கள் செய்யலாம்.

மேலும் சில பதிவுகள்